அவனின் டீ-ஷர்ட்டை இறுக பற்றியவாறே, அவன் மார்பில் அவள் முகம் புதைத்திருக்க, எங்கே அந்த காட்சியை ஆரண்யா பார்த்துவிடுவாளோ என்று நினைத்த கவின், “ஷால் வீ டேக் செல்ஃபி” என்று கூறி அங்கிருந்து அவளை அழைத்துசென்றிருந்தான்.
சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வால் ஆரம்பத்தில் ரிஷப் நந்தனுமே கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.
பயத்தில் அவள் உடல் நடுங்குவது அவனுக்கும் புரிய, முதலில் தயங்கிய அவன் கரங்கள் பின் அவளை தன்னவள் என்ற உரிமையோடு கட்டியணைத்திருந்தன.
அவள் அணைத்தது கூட தெரியாமல் அவன் மார்பில் முகம் புதைத்தபடியே அவள் நின்றிருக்க, பின் காதலோடு அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து முத்தமிட்டிருந்தான் ரிஷப் நந்தன்.
அதுகூட தெரியாத அளவிற்கு அவன் அரவணைப்பிற்குள் மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள் இதழினி.
அவனின் அரவணைப்பு பயந்திருந்த அவளுக்கு ஆறுதலை தந்திருந்ததோடு, தாயின் அரவணைப்பிற்குள் இருப்பது போன்ற உணர்வையும் அவளுக்கு ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு இந்த அணைப்பிற்குள் இப்படியே இருந்துவிடகூடாதா என்று ஏக்கம் வேறு அவளையும் மீறிகொண்டு அவளுக்குள் எழத்தான் செய்தது.
அந்த நிலவொளி வெளிச்சத்தில் சில்லென்ற காற்று மேனியை தீண்ட அவன் அணைப்பின் கதகதப்பில் தன்னை மறந்து அவள் நின்றுகொண்டிருக்க, அவளை அணைத்திருந்தவனும் இமைகளை மூடியபடியே அந்த இரம்மியமான சூழ்நிலையை இரசித்து கொண்டிருந்தான்.
இப்படியே இருவரும் எவ்வளவு நேரம் நின்றிருந்தனரோ முதலில் சுயத்திற்கு திரும்பியது என்னவோ இதழினிதான்.
தான் இருப்பது அவன் அணைப்பிற்குள் என்பது அப்போதுதான் அவளுக்கு புரிய, சட்டென்று அவனிடமிருந்து விலகி நின்றவள், அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
வேக எட்டுகளுடன் அவனிடமிருந்து நகர்ந்தவள் அவர்களுக்கு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த ஆரண்யாவையும் இழுத்துகொண்டே வீட்டை நோக்கி செல்ல,
ஆரண்யாவோ, “அக்கா. கவின்-க்கா..” என்றாள் அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே.
அவளின் வார்த்தை எதையும் காதில் வாங்காமல் விறுவிறு-வென கேட்டை திறந்து உள்ளே சென்று கதவையும் சாற்றி தாழிட்டவளுக்கு இன்னமுமே கை,கால் களிலிருந்த நடுக்கம் குறைந்த பாடில்லை.
“நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க இதழினி..?” என்று தன்னையே கேட்டுகொண்டவளுக்கு இன்னமுமே புரியவில்லை தான் எப்படி இவ்வளவு நேரம் அவன் அணைப்பிற்குள் இருந்தோமென்று.
எரிந்து கொண்டிருந்த கேண்டிலை ஊதி அணைக்கும் போது காதருகே கேட்ட சத்தம், அதன் பின் என்ன நடந்தது, அவன் அரவணைப்பிற்குள் தான் எப்படி சென்றோம் என்று எவ்வளவு யோசித்தும் அவளுக்கு விளங்கவில்லை.
அத்தோடு அவனோடு அப்படி இருந்ததை யாராவது பார்த்திருப்பார்களா..? என்ற பயம் வேறு அவளுக்குள்.
அவள் நிலை இப்படியென்றால் ஆரண்யாவிற்கோ ஏன் வீட்டிற்குள் வந்தோம் என்றிருந்தது.
அவர்கள் கார் கிளம்புவதை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு வந்த ஆரண்யா, “ஏன்-க்கா இப்படி பண்ணீங்க..?” என்று கேட்ட போது, இதழினியோ அவளை கொலைவெறி தாக்குதலோடு பார்த்தாள்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..? முன்ன பின்ன தெரியாதவங்கள இப்படிதான் வாய்-அ பிளந்துகிட்டு பார்த்துட்டு இருப்பியா..?” என்றவள் முடிக்கவில்லை.
“அவங்களதான் எனக்கு தெரியுமே-க்கா“ என்றாள் சின்னவள்.
அவளை நினைத்து, “கஷ்டம்” என்று வாய்க்குள்ளே சொல்லிகொண்டவள்,
“இங்க பாரு ஆரண்யா.. இங்க நீ பார்த்தது நடந்தது எதை பத்தியும் யார் கிட்டயும் சொல்ல கூடாது. மீறி சொன்ன அது நமக்குதான் பெரிய பிரச்சனையாகும். புரியுதா..?” என்று கேட்டவளை பார்த்து,
புரிகிறது என்பது போல் தலையை அசைத்தவள், “அக்கா… நிஜமாலுமே அவங்க இரண்டு பேரும் கவினும், ரிஷப்-பும் தன..?” என்று எதற்கும் ஒரு முறை கேட்டவள்,
“அவங்க கூட எப்படி-க்கா உங்களுக்கு பழக்கம்..? உங்க பர்த்டே-க்கு வீடு தேடி வந்து விஷ் பண்ணியிருக்காங்கன்னா.. நீங்க மூணு பேரும் அந்த அளவுக்கு குளோஸ் ஆ..?” என்று விழிகள் விரிய கேட்டவள்,
“நெக்ஸ்ட் டைம் அவங்கள பார்க்க போகும் போது என்னையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களா..?” என்று தாரிகா போலவே ஆரண்யாவும் சொல்ல,
“டைம் ஆகுது தூங்கு ஆரண்யா..” என்றவள் மேற்கொண்டு அவளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் படுக்கையில் சென்று படுத்துகொள்ள, அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஆரண்யாவும் அதன் பின் எதுவும் அவளிடம் கேட்கவில்லை.
படுக்கையில் படுத்திருந்த இருவருக்குமே சற்று முன் நடந்த நிகழ்வை நினைத்து உறக்கம் வரவில்லை.
கவின்-ஐ பார்த்த சந்தோஷத்தில் ஆரண்யாவிற்கு உறக்கம் வரவில்லை என்றால்.. இதழினிக்கோ சற்று முன் நடந்த நிகழ்வின் அதிர்ச்சியால் உறக்கம் வர இல்லை.
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்த இதழினி மூன்று மணிக்கெல்லாம் எழுந்து குளித்து தன் அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
சீக்கிரமாகவே எழுந்து விட்டிருந்ததால் அன்றைக்கான மதிய உணவையும் அவளேதான் ரெடி செய்திருந்தாள்.
எழுந்த ஒவ்வொருவரும் அவளுக்கு பிறந்தநாள்வாழ்த்து சொல்லிவண்ணம் இருக்க, ஏனோ அவளுக்குதான் பிறந்தநாளில் விருப்பமே இல்லாமல் இருந்தது.
பிறந்தது முதல் கஷ்டங்களோடு மட்டுமே வளர்ந்திருந்தவளுக்கு இந்த பிறந்தநாளெல்லாம் தேவையில்லாத நாளாகத்தான் தோன்றியது. அதனாலே பெரிதாக இதிலெல்லாம் அவள் ஆர்வம் காட்டுவதில்லை.
இலக்கியா சொன்னதற்காக மட்டும் அவள் கொடுத்த புத்தாடையை உடுத்திகொண்டு எப்போதும் செல்லும் பெருமாள் கோவிலுக்கு சென்றாள்.
எப்போது கோவிலுக்கு சென்றாலும் மனநிம்மதியோடு வழிபாடு செய்பவளுக்கு அன்று நிம்மதிக்கு பதிலாக பதற்றம் தான் அதிகமாக இருந்தது.
ஏனென்று தெரியவில்லை ஒரு வித பயம், பதற்றம் அவள் மனம் முழுவதும் நிரம்பியிருந்தது.
அது நேற்று இரவு நடந்த நிகழ்வின் தாக்கமா..? இல்லை இனி நடக்கபோவதற்கான அறிகுறியா..? என்று தெரியவில்லை.
இந்த பதற்றத்திலே எப்போது ஐந்து விளக்குகளை ஒரே தீக்குச்சியில் ஏற்றுபவள், இன்று ஒரு விளக்கை ஏற்றுவதற்கே பத்து தீக்குச்சிகளை விரயம் செய்திருந்தாள்.
விளக்கும் ஏற்றும் போது விரல் நுனியை வேறு சுட்டுகொண்டாள். அதுவே அவள் மனதிற்குள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்திருந்தது.
இதில் மூலவரை கும்பிட்டுவிட்டு வெளியேறும் போது அவள் ஆடை வேறு எதிர்பாரா விதமாக கம்பியில் மாட்டி கிழிந்திருக்க, கண்களை மூடி “பெருமாளே..” என்று சொன்னவளுக்கு பதற்றத்தில் இன்னும் அதி வேகத்தில் இதயம் துடித்தது.
கோவிலிருந்து மனநிம்மதி இல்லாமலேயே வீட்டிற்கு திரும்பியவளுக்கு வாசலிலேயே ஆரண்யா போனில் காட்டிய செய்தியை பார்த்தும் இன்னும் பேரதிர்ச்சிதான்.
“அக்கா.. இது நாம தன..?” என்று பயத்தோடு கேட்டவளின் வார்த்தைகள் எதுவுமே இதழினியின் காதில் விழவே இல்லை. அந்த அளவிற்கு அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்துபோயிருந்தாள் இதழினி.
அவள் கொடுத்த போனை கையில் வாங்கி பார்த்து கொண்டிருந்த இதழினியின் கைகள் பயத்தில் நடுங்கியதோடு அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடி கொண்டிருக்க, ஆரண்யாவின் கண்களுமே கலங்கி விட்டிருந்தது.
எந்த அவமானம், அசிங்கம் தன் வாழ்க்கையில் நடந்துவிட கூடாதென்பதில் இத்தனை காலங்கள் அவள் கவனமாக இருந்தாலோ அது இன்று அவள் வாழ்வில் நடந்திருக்க மொத்தமாக உடைந்துபோயிருந்தாள் இதழினி.
எது நடந்துவிடகூடாதென்பதில் கவனமாக இருந்தாளோ அதெல்லாம் இன்று அவனால் அவளுக்கு நடந்தேறியிருந்தது.
ஆம் அவனின் ஃபாள்ட் மற்றும் ஸ்டுடியோ-விற்கு முகத்தை மூடியபடி அவள் செல்லும் வீடியோகாட்சிகளும், நேற்று இரவு கவின் பியர் பாட்டில் ஓப்பன் செய்ததும், அவளின் பிறந்தநாள் கொண்டாட்டமும், அவன் அணைப்பிற்குள் அவள் இருந்த புகைப்படங்களும்தான் அனைத்து நியூஸ் சேனல்களிலும் ஹாட்-டாப்பிக்கா ஓடிக்கொண்டிருந்தது.
இதில் இதுதான் டிவின் பிரதர்ஸ்-ன் உண்மை முகமா..? இப்படித்தான் நள்ளிரவில் நடுரோட்டில் பெண்களுடன் மதுவிருந்தோடு பிறந்தநாள் கொண்டாடுவதா...? அடிக்கடி அவர்களின் ஸ்டுடியோ மற்றும் பிளாட்டிற்கு முகத்தை மறைத்த படி சென்று வரும் அந்த பெண் யார்..? இந்த பெண்களுக்கும் டிவின் பிரதர்ஸ்கும் என்ன சம்மந்தம்..? இவர்களுக்கு இடையே இருப்பது என்ன மாதிரியான உறவுமுறை..? என்று ஒரு பக்கம் கார சாரமான விவாதங்கள் வேறு நடந்துகொண்டிருக்க, அதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பெண்கள் இருவரின் முகமுமே கலவரமாகித்தான் போனது.
காலையில் எப்போதும் போல் ரீல்ஸ் பார்ப்பதற்காக இலக்கியாவின் போனை எடுத்த ஆரண்யாவிற்கு முகநூலில் காத்திருந்த அதிர்ச்சிதான் இந்த செய்திகள்.
இது உண்மையா என்றறிவதற்காக போனில் லைவ் நியூஸ் வைத்தவளுக்கு அதிலிருந்த செய்திகள் யாவும் பேரதிர்ச்சியைதான் ஏற்படுத்தியிருந்தன.
இதை தமக்கையிடம் சொல்வதற்காக அவளை தேடியபோதுதான் அவள் கோவிலுக்கு சென்றிருப்பதாக இலக்கியா சொல்ல, அவள் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்தவள் வாசலிலேயே இதழினியிடம் விஷயத்தையும் தெரியபடுத்தியிருந்தாள்.
நள்ளிரவு நேரத்தில் எடுக்க பட்ட புகைப்படங்கள் என்பதால் பெரிதாக பெண்கள் இருவரின் முகமும் தெளிவாக தெரியவில்லையென்றாலும் இவர்கள் இருவரையும் வைத்து அவர்கள் இருவரையும் பெண்பித்தனாக்க முயற்சித்து கொண்டிருந்ததன மீடியாக்கள்.
அவர்கள் குறித்த விவாதங்களால் சோஷியல் மீடியாக்கள் கூட பற்றி எரிந்து கொண்டிருக்க, இது எதுவுமே தெரியாமல் உறங்கி கொண்டிருந்தனர் ரிஷப் நந்தனும், கவினும்.
இன்று அவள் பிறந்தநாள் என்பதால் அவளை வெளியில் அழைத்து செல்லும் பொருட்டு அன்று இருவருமே ஸ்டியோவிற்கு செல்லவில்லை.
இரவு வெகுதாமதமாக உறங்கியதால் அவர்கள் இப்போதுவரையுமே உறங்கிகொண்டுதான் இருந்தனர்.
இதில் இருவரும் செல்போனை வேறு சைலண்டில் போட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட இருவரும் கணிவிழிப்பதற்கே மணி பத்தை தாண்டியிருந்தது.
ஷாம்பியனை அருந்தியவாறு அவளுக்கு போன் செய்வதற்காக போனை கையில் எடுத்தவன் அப்போதுதான் அவனுக்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கால்களையும் மேசேஜ் களையும் கவனித்தான்.
அவன் குறித்த செய்திகளையும், அந்த புகைப்படங்களையும் பார்த்தவன் அடுத்து அழைத்தது என்னவோ இதழினியிடம் இருக்கும் தன் போனிற்குதான்.
இரண்டு மூன்று ரிங்கிலேயே மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டிருக்க, “இதழ்..” என்றான் சற்று பதற்றத்துடனே ரிஷப் நந்தன்.
அவனின் இதழ் என்ற அழைப்பிலேயே அழைத்திருப்பது யார் என்று கண்டுகொண்ட ஆரண்யா,
“சார்.. அக்கா.. பாய்சன் சாப்டா சார்.. பக்கத்துல உள்ள ஜி.ஹெச்-லதான் அட்மிட் பண்ணியிருக்கோம்” என்று அழுகுரலில் சொன்னவள் அழைப்பையும் துண்டித்திருக்க, ரிஷப்பிற்கோ ஒன்றுமே விளங்கவில்லை.
“ஷிட்” என்று முன்னுச்சியை கோதிவிட்டு கொண்டவனுக்கு அப்படியொரு கோவம் இந்த கேடு கெட்ட சமுதாயத்தை நினைத்து.
என்ன தான் இருவரின் புகைப்படமும் தெளிவாக தெரியாவிட்டாலும், அவள் வீட்டினர் மற்றும் அவள் சம்மந்தபட்டவர்கள் நிச்சயம் அவளை அடையாளம் கண்டுவிடுவார்கள்.
ஏன் இந்த மீடியா உலகத்தில் அவளை மோப்பம் பிடித்துகொண்டு வருதொன்றும் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லையே… என்றெல்லாம் நினைத்தவள் போனை ஆரண்யாவிடம் கொடுத்துவிட்டு நேராக தன் அறைக்குதான் சென்றாள்.
இத்தனைக்கும் இங்கு நடப்பது எதுவுமே அவள் வீட்டினருக்கு தெரியாது.
அறைக்குள் சென்று தாழிட்டுகொண்டவள் முகத்தை மூடிகொண்டு கதறி அழுதாள்.
சோஷியல் மீடியாக்கள் முழுக்க அவனோடு அவள் இருக்கும் புகைப்படங்கள் வலம் வந்த வண்ணம் இருக்க இதையெல்லாம் எப்படி சரிசெய்வதென்று அவளுக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் தான் விஷயம் அறிந்து தாரிகாவும் அவளுக்கு அழைத்திருக்க, இதழினிக்குதான் அவளின் அழைப்பை ஏற்க மனம் இல்லை.
இதெல்லாம் தன் குடும்பத்தாருக்கு தெரிய வந்தால் அடுத்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு தன்னால் என்ன பதில் சொல்லமுடியும்..? என்று நினைக்கும் போதே அவளுக்குள் இன்னும் பயம் தான்.
இப்படியொரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வதற்காகவா அனுதினமும் அவள் பிரம்மமுகூர்த்ததில் விளக்கேற்றி வழிபட்டாள்.
இனி அறிந்தவர் தெரியாவர் பார்வையையெல்லாம் அவளால் எப்படி எதிர்கொள்ள முடிடியும்..? அவர்கள் கேட்கும் கேள்விக்கு அவளால் என்ன பதில் சொல்லமுடியும்..? என்றெல்லாம் யோசித்தவளுக்கு இது ஒன்றுதான் தீர்வாக பட்டது.
ஒரு முடிவு எடுத்தவளாய் வழிந்தோடிய கண்ணீரை புறங்கையால் அழுந்த துடைத்தவளின் பார்வையில் இலக்கியாவின் மருந்து மாத்திரைகள் கண்ணில் பட, அடுத்த கணமே அவை அனைத்தையும் காலி செய்திருந்தாள் இதழினி.
உட்கொண்ட மாத்திரைகளில் விளைவால் அவளுக்கு கண்களை இருட்டிக்கொண்டு வர, படுக்கையில் சுருண்டு விழுந்திருந்தாள்.
அறைக்குள் சென்றவள் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் கதவை திறக்காமல் இருக்க, பின் ஆரண்யாதான் விஷயத்தை இலக்கியாவின் காதிற்கு கொண்டு சென்றாள்.
“இத ஏண்டி முதல்லே சொல்லல..” என்று அந்நேரத்திலும் அவள் தலையில் குட்டு வைத்தவர்,
“இதழினி.. கதவ தொற..” என்று கதவை தட்டிய போதும் அவள் கதவை திறக்கவே இல்லை. பின் சண்முகம்தான் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்றார்.
அறைகுறை மயக்கத்தில் கிடந்தவளை பார்த்த மாத்திரத்திலேயே இலக்கியா, “இதழினி.. ஏண்டி இப்படி பண்ன..?” என்று அடித்து கொண்டு அழ, அவள் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் கூட அங்கு திரண்டுவிட்டிருந்தனர்.
பின் விரைவாக அவளை பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அவளுக்கான முதல் உதவி சிகிச்சையும் அளிக்க ஆரம்பித்திருந்தனர் மருத்துவ குழு.
வயிற்றில் உள்ளவைகளை வெளிகொண்டு வரும் பொருட்டு மூக்கு துவாரம் வழியாக நீண்ட டியூப்-பை மருத்துவர் சொருக, அந்த அறைகுறை மயக்கத்திலும் அவள் மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை.
நாசி சுவாரத்திற்குள் சொருகும் டியூப் மூளைக்குள் சொருகுவது போல் அவளுக்கு இருக்க, மேற்கொண்டு அதை சொருக விடாமல் கைகளால் தடுத்தவள்
“என்ன சாகவிடுங்க.. எனக்கு வாழ சுத்தமா விருப்பம் இல்ல” என்று முனக.
பின் அங்கிருந்த செவியர்தான் அவள் கரங்களை இறுக பற்றி தடுத்ததோடு,
“சாகணும்னா எதாவது லாரி, பஸ் முன்னாடி விழுந்து செத்து தொலைக்க வேண்டியதுதன… எதுக்கு இப்படி வந்து எங்க உயிர வாங்குற” என்று மானவாரியாக அவளை திட்ட ஆரம்பித்திருக்க, அந்த அறைகுறை மயக்கத்திலும் அதெல்லாம் அவள் காதில் விழவே செய்தது
கையை பிடித்துகொண்ட பின்னும் டியூபை சொருக விடாமல் அவள் தலையை ஆட்ட,
“இந்தா பொண்ணே நீ இப்படியே பண்ணிட்டு இருந்த மூக்குல மட்டும் இல்ல வாயில, வயித்துலயும் கூட டியூப் போட்டு விட்டுடுவேன்” என்று செவிலியர் பயமுறுத்த, அதன் பின் அவள் ஏன் தலையை ஆட்ட போகிறாள்.
நாசிக்குள் நீண்ட டியூப்-பை சொருகியபடியே இருக்க அவளுக்குதான் உமட்டிக்கொண்டு வந்தது.
இந்த நரகவேதனைக்கு அந்த அவமானமும் அசிங்கமும் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றியது அவளுக்கு.
வயிற்றில் இருந்த மொத்ததையும் எடுத்த பின் தான் தன்னையும் மறந்து கண்ணயர்ந்திருந்தாள் இதழினி.
அந்த நேரத்தில்தான் ரிஷப் அவளுக்கு போன் செய்திருந்தது கூட.
என்னதான் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் குறைந்தது இரண்டு நாட்களாவது அவள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்த நேரத்தில் தான், திடுமென அவளை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்ற மற்ற நால்வருமே அதிர்ந்துதான் போயினர்.




