Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
0

அத்தியாயம் - 32

February 03, 2026
சந்தோஷ் குணா
0
8 min read
அத்தியாயம் - 32
Hero - Music Director, Heroine - Music student

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிருந்தனர்.

ரிஷப் நந்தன் கூற்றுபடி ஹேக்கர்களால் கூட அந்த ஐ.பி அட்ரஸ் லொக்கேஷனை கண்டுபிடிக்க முடியாமல் போக, அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியிருந்தது சைபர் கிரைம்.

அந்த வீடியோ செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஆக்டிவ்-ஆக இருந்த செல்போன் எண்களை அங்கிருந்த செல்போன் கோபுரங்களின் உதவியோடு தேட ஆரம்பித்தினர்.

அப்படி தேட ஆரம்பித்ததில் ஒரு எண் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருக்க, அந்த எண்குறித்த தகவல்களை திரட்ட ஆரம்பித்து சைபர் குழு.

போலியான ஆதாரங்கள் கொண்டு அந்த எண் வாங்கபட்டிருக்க, அவர்கள் முயற்சியும் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லாமல் அங்கேயே தேங்கி நின்றது.

அந்த செல்போனை எண்ணை டிராக் செய்யலாம் என்றாலோ.. அந்த எண் சுவிட் ஆஃபில் இருக்க, அது எப்போது ஆன் ஆகும் என்று காத்திருந்தது சைபர் கிரைம்.

அவர்கள் காத்திருப்பு வீண்போகாமல் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின் இன்று ஆன் ஆகி இருக்க, அது பற்றி சொல்லத்தான் அவர்கள் இருவரையும் ஐ.ஜி அழைத்திருந்தது.

அந்த செல்போன் எண் லொக்கேஷன் அவள் இருக்கும் மும்பை என்று காட்ட, அவளின் பாதுகாப்பு கருதி அன்றே அங்கிருந்து கிளம்பியிருந்தனர் ரிஷப்பும், கவினும்.

அவளுக்கு கொடுத்த வாக்கிற்கு இணங்க, நேராக வீட்டிற்கு செல்லாமல் அங்குள்ள உயர்தர ஹோட்டலிலேயே தங்கிகொண்டனர்.

ஐ.ஜி போன் மூலமாக அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் பேசியிருக்க, அவர்களும் அவர்களுக்கு உதவி செய்தனர்.

அவர்களுடன் சேர்ந்து அந்த செல்போன் எண்ணை வைத்திருப்பவனை டிராக் செய்து கொண்டிருக்கும் போதுதான், அந்த காஃபிஷாப்பிற்கு வெளியில் அமுதனும், இதழினியும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான் ரிஷப் நந்தன்.

பார்த்த மாத்திரத்திலேயே அவன் முகம் மாற, அதை கவினும் கவனிக்கவே செய்தான்.

“யார் டார்லிங் அவன்..? சிஸ்டர் கிட்ட இவ்வளோ குளோஸ்-ஆ இருக்கான்..” என்ற கவினின் கேள்விக்கு தெரியாது என்பது போல் அவன் தலையை அசைக்க, கவினுக்குமே இப்போது இதழினி மீது கோவம் தான் வந்தது.

காரணம் அவள் வீட்டினரிடம் கூட அவள் இந்த அளவு சிரித்து பேசி அவன் பார்த்தது இல்லை.

அவள் கிளம்பும் வரை பொறுமையை இழுத்துபிடித்து கொண்டிருந்த கவின், அவனை மிரட்டுவதற்காக காரிலிருந்து இறங்க போக, அவனின் கரத்தை பற்றி தடுத்திருந்தான் ரிஷப் நந்தன்.

ஏன் என்பது போல் தன்னை பார்த்த கவினிடம் விழிகளாலேயே அவன் பேச, அடுத்த கணமே அங்கிருந்து கிளம்பி ஹோட்டலை அடைந்திருந்தனர் இருவரும்.

அனைவரும் எதிர்பார்த்த போட்டி நாளும் வர, எப்போதும் போல் அவளே அந்த போட்டியிலும் வெற்றி வாகை சூடியிருந்தாள்.

இந்திய அளவில் கல்லூரிக்கு நற்பெயர் வாங்கிகொடுத்தவளை கௌரவிக்க முடிவுசெய்த கல்லூரி நிர்வாகம் அதற்கான விழா ஏற்பாட்டையும் செய்ய ஆரம்பித்திருந்தது.

இன்று கல்லூரி சார்பாக அவளுக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதால் பார்த்து பார்த்து கல்லூரிக்கு கிளம்பினாள் இதழினி.

குளித்து முடித்து வாட்ரோப்பை திறந்தவளின் கண் முன், அந்த லைட் ரோஸ்பிங் கலர் சல்வார் பட, சட்டென்று அன்று அவளிடம் ரிஷப் சொன்னதுதான் அவள் நினைவிற்கு வந்து போனது.

அதேநேரம் அவளையும் அறியாமல் நாணத்தில் அவள் கன்னங்கள் சிவப்பேறவும் செய்தன.

இப்போதெல்லாம் இதழினி இப்படிதான் இருக்கிறாள்.

தன்னை தொடர்பு கொள்ள கூடாது.. தன் முன் வந்து நிற்க கூடாது என்று அவனிடம் சொல்லிவிட்டு, அவள் மட்டும் அடிக்கடி அவன் நினைவுகளை அசைப்போட்டாள்.

ஏன் அன்று நாப்கின் வாங்க மெடிக்கல் ஷாப் சென்றவளின் கண்களில் அந்த காண்டம் பட, அவர்களின் அந்த முதல் சந்திப்புதான் அவள் நினைவிற்கு வந்து போனது.

அன்று அவளை கோவப்படுத்திய விஷயத்தையெல்லாம் இப்போது நினைக்கும் போது அவள் இதழ்களில் குறுநகைதான் மலர்ந்தன.

தன்னையே சுற்றி சுற்றி வரும் போதெல்லாம் அவனை கண்டுகொள்ளாதவள், இப்போதெல்லாம் அதிகம் அவனைபற்றிய சிந்தனையில் தான் இருந்தாள்.

அதேசமயம் இந்த மாற்றமெல்லாம் தனக்குள் ஏன் என்றெல்லாம் அவள் ஆராயவில்லை.

கீழ் அதரங்களை கடித்தபடி அன்றைய நிகழ்வை அசைப்போட்டிருந்தவளின் பார்வையில் அவள் கைகளில் குத்திட்டு இருந்த ரோமங்கள் பட, அது குறித்து அன்றொருநாள் அவன் சொன்னதும் அவள் நினைவிற்கு வரவே செய்தது.

அவன் அவள் அருகில் இல்லையென்றாலும் ஏதாவது ஒன்று அனுதினமும் அவனை அவளுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அந்த நிகழ்வை அசைப்போட்டவள், பின் அந்த சல்வாரை அணிந்து கொண்டுதான் கல்லூரிக்கு சென்றாள்.

இன்றைய நாள் தனக்கான நாள் என்ற சந்தோஷத்தோடு கல்லூரி சென்றவளுக்கு அதிர்ச்சிதான், விழாவிற்கு ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்திருந்த ரிஷப் நந்தனை பார்த்ததும்.

ஆம்.. அவளுக்கு பரிசுகொடுத்து கௌரவிப்பதற்காக கல்லூரி நிர்வாகம் அழைத்திருந்தது என்னவோ அவனைத்தான்.

பரிசை வாங்காமல் தன்னை அதிர்ந்து பார்ப்பவளை பார்த்து அவன் குறும்பாய் கண்ணடிக்க, அவள்தான் மேலும் திணறிப்போனாள்.

கிட்டதட்ட இங்கு வந்து ஆறு மாதங்களுக்கு பின் இன்றுதான் அவனை அவள் பார்க்கிறாள்.

அதுவும் இப்படி திடுமென தன் கண்முன் வந்து நிற்பான் என்று சற்றும் அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

அவனை பார்த்த அதிர்ச்சியில் காரணமே இல்லாமல் அவள் இதயம் அதி வேகத்தில் துடிக்க, மூச்சுவிடுவது கூட அவளுக்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது.

உள்ளுக்குள் பனிசாரல் வீசுவதுபோல் அவள் மனம் முழுவதும் சில்லிட்டு போயிருந்தது.

எப்போதும் அவனை அவள் பார்க்கும் பார்வை மாறி இப்போது அவனை புதுமையாக பார்க்க, அதை அவனும் கவனிக்கவே செய்தான்.

“இதழினி வாங்கிக்கோ” என்று அவள் பக்கத்தில் இருந்த முதல்வர் அவள் காதை கடிக்க, அதன் பின்னே அவளும் அவன் கொடுத்த பரிசை வாங்கிகொண்டாள்.

வாங்கி கொண்டவளின் முன் வாழ்த்து சொல்லும் விதமாக அவன் கரத்தைவேறு நீட்டியிருக்க, அத்தனை பேர் மத்தியில் அவன் கரத்தை பற்றி குலுக்க அவளுக்குதான் ஒருமாதிரியாக இருந்தது.

அவள் அமைதியாகவே நின்றிருக்க, பின் கல்லூரி முதல்வர் தான் “இதழினி” என்று பற்களை கடிக்க, அவனை பார்த்தவாறே நீட்டியிருந்த அவன் கரத்தை பற்றினாள்.

பற்றி அவள் கரத்தை அழுந்த பற்றி அவன் குலுக்க, அவனின் தீண்டலால் அவளுக்குதான் மெய்சிலிர்த்து விட்டது.

சிலிர்த்ததில் அவள் புறங்கைபகுதியில் குத்திட்டு நின்ற ரோமங்களை பார்த்து மெலிதாய் ஒரு சிரிப்பு சிரித்தது கொண்டவன், பற்றியிருந்த அவள் கரத்தில் மென்மையான ஒரு அழுத்ததை கொடுத்த பின்னே அவள் கரத்திற்கு விடுதலை கொடுத்தான்.

விட்டால் போதுமென்று அங்கிருந்து நகரமுற்பட்டவளை, “ஒரு நிமிஷம் இதழினி” என்றவன் தடுக்க, அவனின் செயலால் அவள் தான் உள்ளுக்குள் அதிகம் அரண்டு போனாள்.

“எங்கே இருவருக்கும் இடையேயான உறவை பற்றி சொல்லிவிடுவானோ.” என்ற பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியபடி, விழிகளில் ஒருவித பயத்துடன் அவள் அவனையே பார்த்திருக்க,

அவனோ அவளை பார்த்து கள்ளபுன்னகை சிந்தியபடியே, முதல்வர் கையிலிருந்த மைக்கை வாங்கியிருந்தான்.

மைக்கை கையில் வாங்கியவன் இப்போது அங்கு அமர்ந்திருந்த கவினை பார்த்து, “சொல்லிடலாமா..?” என்று கேட்டபோது அவளுக்கோ இதயமே நின்றுவிட்ட உணர்வுதான்.

இதில் அவள் பயத்தை மேலும் அதிகரிப்பது போல் கவினும் “யா மேன்” என்றான் அவளை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவாறே.

பயத்தில் “பெருமாளே..” என்று உள்ளுக்குள் முனகியபடி அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள,

“அக்சுவலி, நான் இங்க வந்தது” என்று ஆரம்பித்தவன், பாலிவுட்டை கலக்கிகொண்டிருக்கும் பிரபலமான டைரக்டர் பெயரை சொல்லி, “அவரோட படத்துக்கு நாங்கதான் மியூசிக் கம்போஸ் பண்ணபோறோம்” என்று சொல்ல, அவன் கூறியதை கேட்டு அந்த அரங்கமே கைதட்டலால் நிறைந்துதான் போனது.

“இந்த ஃபில்ம்-ல வொர்க் பண்ண எங்களுக்கு நியூ அண்ட் எனர்ஜிடிக் வயலின் ஆர்டிஸ்ட் தேவைபடுறாங்க..” என்றவன் இப்போது கல்லூரி முதல்வரை பார்த்து,

“இஃப் யூ டோண்ட் மைண்ட் மேம்.. நாங்க உங்க ஸ்டூடண்ட்-அ இந்த ஃபில்ம்-ல யூஸ் பண்ணிக்கலாமா..?” என்று அனுமதியை அவளிடம் வேண்டாமல் கல்லூரி முதல்வரிடம் கேட்டிருந்தான் அவன்.

அவனுக்கு தெரியும் எங்கு கேட்டால் அவளால் மறுக்க முடியாது என்று. அதனாலே சம்மதத்தை அவள் பிரின்சியிடம் கேட்டு இருந்தான்.

அவன் கூறியதை கேட்டு மீண்டும் மாணவ மாணவிகள் கரவொலி சத்தம் எழுப்ப, அவள் கல்லூரி முதல்வருக்கோ வாயெல்லாம் பல் தான்.

டிவின் பிரதர்ஸ் இசைகுழுவோடு சேர்ந்து தங்கள் கல்லூரி மாணவி பணியாற்றுவது என்பது  கல்லூரிக்கும், கல்லூரியின் பெயருக்கும் எவ்வளவு பெரிய விளம்பரம் என்பதை அவரும் அறிவார் தான்.

அதனாலே அவளிடம் கூட ஒரு வார்த்தை கேட்காமல் அவர் சம்மதம் தெரிவித்திருக்க, கையோடு எடுத்துவந்திருந்த அக்ரீமெண்ட் பேப்பரை சைன் போடுவதற்காக அவள் முன் நீட்டினான் கவின்.

அதை வாங்கிகொள்ளாமல் அவள் அவனையும் பத்திரத்தையுமே மாறி மாறி பார்த்திருக்க, பின் அவள் கல்லூரி முதல்வர்தான் அந்த பத்திரத்தை வாங்கி அவளை கையெழுத்தும் போட வைத்தது.

அத்தனைபேர் முன்னிலையில் அவளால் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை.

“மேம்.. அப்புறம் கம்போஸிங் முடிய மினிமம் த்ரீ மந்தாவது ஆகும். அந்த த்ரீ மந்தும் அவங்க எங்ககூட ஸ்டுடியோ-லதான் இருந்தாகணும்.” என்றவன் சொல்லவருவதன் அர்த்தம் புரிந்த முதல்வரோ,

“அதென்ன த்ரீ மந்த் சார். கம்போசிங் முடியறவரைக்கும் இதழினி உங்க கூடவே இருக்கட்டும். நான் மேனேஜ்மெண்ட் கிட்ட பேசிக்கறேன். உங்க கம்போசிங் முடியறவரைக்கும் இதழினிக்கு காலேஜ்-க்குள்ள வர அனுமதி இல்ல” என்று அவள் நிலை புரியாமல் சிரித்துகொண்டே முதல்வர் சொல்ல,

“இதென்ன பிரின்சி-ஆ இல்ல பித்துகுளி-ஆ..” என்பது போல அவரை பார்த்தாள் இதழினி.

அத்தனையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு எவ்வளவு அழகாய் காய் நகர்த்திவிட்டான் அவன்.

இனி மூன்று மாதகாலங்கள் அவள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அவனோடு தான் அவள் இருந்தாக வேண்டும். அதற்கு கண்காளிப்பாளராக அவளின் பிரின்சியையே அவன் நியமித்திருந்தது தான் ஹைலைட்டே.

மீண்டும் அவனின் முழு கட்டுபாட்டுக்குள் வந்துவிட்டது போல இருந்தது இதழினிக்கு. அவனிடம் அவளுக்கு பிடிக்காதது கூட இது ஒன்றுதான்.

அனைத்தையும் நினைக்க நினைக்க அவன் மீது அப்படியொரு கோவம் அவளுக்கு பற்றிகொண்டு வந்தது.

அவன் மீதான கோவத்தில் தன்னிடம் பேசவந்த அமுதனிடம் கூட பேசாமல் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.

எப்படியும் அவர்கள் இருவரும் வீட்டிற்குதான் சென்றிருப்பார்கள் என்பது அவள் யூகம்.

அவள் நினைத்தது போலவே ஹாலில் இருவரும் பேசி சிரித்தப்படி அமர்ந்திருக்க,

“என் முன்னாடி வரமாட்டன்னுதன சொன்னீங்க..? அப்புறம் ஏன் வந்தீங்க..?”” என்றாள் எடுத்த எடுப்பிலேயே இதழினி.

“நானா ஒன்னும் உன் முன்னாடி வந்து நிக்கல. உங்க மேனேஜ்மெண்ட் ரெக்வஸ்ட் பண்ணதால வந்தேன். அப்புறம் எனக்கு இங்க ஃபில்ம் கமிட் ஆகியிருக்கு” என்றான் நான் கொடுத்த வாக்குறுதியை நான் மீற வில்லை என்பது போல்.

அவன் கூறியதை கேட்டு “கமிட் ஆகியிருக்கு ஓகே… ஆனா உங்க மியீசிக் டிரூப்-குள்ள என்ன இழுத்தது உங்க பிளான் தன..” என்று அவனை பிடித்தாள் அவள்.

கீழ் அதரங்களை கடித்தப்படி அவளையே பார்த்திருந்தவன், பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை பற்ற வைத்து இரண்டு மூன்று பஃப் இழுக்க, அவனையும் அவன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டையும் மாறி மாறி பார்த்தாள் இதழினி.

இந்த மாதிரி அவனை அவள் பார்த்து வெகு மாதங்கள் ஆகின்றன. ஆனால் இப்போது அதை இரசிக்கும் மனநிலையில்தான் அவள் இல்லை.

“சொல்லுங்க உங்க பிளான் தன..?” என்று மீண்டும் அவள் கேட்டபோது,

அவனோ, “மே பீ” என்றான் அசால்ட்டாய் தோளை குலுக்கிவிட்டு.

அவனின் பதிலால் இன்னும் அவளுக்குள் பற்றிகொண்டு வந்ததது.

“அதான் ஏன்..?” என்று திரும்பி அவனையே கேட்டவள், “என்ன ஏன் எப்பவும் உங்க கன்ட்ரோல்-லே வச்சிக்கணும்னு நினைக்கிறீங்க..?” என்று கேட்டுவிட்டாள் அவனிடமே.

“சிம்புள்…” என்றவாறே ஒற்றை புருவம் உயர்த்தி அவளை பார்த்தவள், “நீ என் பொண்டாட்டி” என்றான் உரிமை மிகுந்த குரலில் ரிஷப்நந்தன்.

அவன் அவ்வாறு கூறியது எரிந்துகொண்டிருக்கும் அவளுக்குள் இன்னும் எண்ணை ஊற்றுவது போல் இருக்க, அவனை முறைத்தவாறே தன் அறைக்கு சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த கவின் “அழப்போறாங்களோ..?” என்க, இல்லை என்பது போல் மறுப்பாய் தலையை அசைத்தவன்,

“வருவா..” என்றான் அவளை கணித்தவன் போல.

அவன் சொன்னது போல சென்ற வேகத்திலேயே அவள் திரும்ப, “ஹே எப்படி டார்லிங்..?” என்றான் ஆச்சரியமாக.

கவினின் கேள்விக்கு பதிலாய் அவன் மெலிதாய் புன்னகை மட்டும் புரிந்த வண்ணம் இருக்க, வேக எட்டுகளுடன் அவனை நெருங்கி வந்தவளோ, அதே வேகத்தில் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தத்தையும் பதித்திருக்க, அவளின் செயலால் ஆண்கள் இருவருமே அதிர்ந்துதான் போயினர்.

அதிலும் ரிஷப் நந்தனின் கருவிழிகள் ஒரு சுற்று விரிந்து இருக்க, “இப்போ கையெழுத்து போடுங்க” என்றவாறே விவாகரத்து பத்திரத்தை அவன் முன் நீட்டியிருந்தாள் இதழினி.

அவள் கூறியதை கேட்டு, “ச்சீ.. நான் கூட அதுக்குள்ள என்னென்னவோ கோடிங் எழுதிட்டேன்” என்று உள்ளுக்குள் சலித்துகொண்ட கவினின் பார்வை இப்போது ரிஷப் நந்தனைதான் பார்த்து அவன் என்ன செய்ய போகிறான் என்று.

அன்று அவன் சொன்னது போலவே, அவள் நீட்டியிருந்த பத்திரத்தை வாங்கியவன், அவளை பார்த்தவாறே அதில் கையெழுத்தும் போட, அவளுக்கோ அவனை வென்றுவிட்ட திருப்திதான்.

அந்த திருப்தியோடே பத்திரத்தை வாங்கி பார்த்தவளின் முகம் மாறியதோடு அவளின் கருவிழிகள் அதிர்ச்சியில் ஒருசுற்று விரிந்துதான் போயின.

அவளின் முகமாற்றத்தை கவனித்த கவினுக்கோ விளங்கவில்லை அப்படி என்ன அவன் அதில் எழுதியிருக்கிறான் என்று.

“என்ன விளையாடுறீங்களா..? ஃபுல் நேம் எழுதாம ஆர்® மட்டும்தான் போட்டுஇருக்கீங்க..?” என்றவள் கோவமாக கேட்டபோது,

அவனோ “ஒரு முத்தத்துக்கு ஒரு லட்டர்தன போடமுடியும்” என்றான் கூலாக.

அவன் கூறியதை கேட்டு, “ஹே செம்ம” என்று கவின் சந்தோஷத்தில் கத்த, அவளோ அடுத்து அவனைத்தான் முறைத்தாள்.

“ஐய்யோ.. நான் இல்லப்பா..” என்றவாறே அவன் முகத்தை திருப்பிகொள்ள, மீண்டும் அவள் பார்வை ரிஷப் நந்தன் புறம்தான் திரும்பியது.

“நீங்க இதெல்லாம் அன்னைக்கு சொல்லவே இல்ல” என்றவள் கேட்டபோது,

அவனோ, “நீயும் கேட்கலையே” என்றான்.

‘அப்போ இன்னும் எத்தனை முத்தம் கொடுக்கணும்’ என்று மனதிற்குள்  அவன் பெயரை ஒவ்வொரு எழுத்தாக அவள் எண்ணிக்கொண்டிருக்க,

“பேலன்ஸ் ஆறு முத்தம் இருக்கு” என்றான் அவனே.

அவன் கூறியதை கேட்டு “ஐய்யோ ஆறு முத்தமா..?” என்று பதறித்தான் போனது பெண்ணவள் மனது.

எதோ ஒரு கோவத்தில்தான் அவள் அவனுக்கு முத்தமிட்டாலே தவிர, மேற்கொண்டு ஆறு முதங்கள் கொடுக்கும் அளவிற்கெல்லாம் அவளுக்கு தைரியமும் இல்லை அதற்கு அவள் பெண்மையும் சம்மதிக்காது..

“போடா நீயும் உன் கையெழுத்தும்..” என்று உள்ளுக்குள் அவனை திட்டியபடியே அங்கிருந்து நகரந்தவளை,

“டீ..” என்று சொடுக்கிட்டு தடுத்திருந்தான் ரிஷப் நந்தன்.

“இப்போ என்ன..?’ என்பது போல் அவள் அவனை திரும்பி பார்க்க,

“நெக்ஸ்ட் டைம் இதே மாதிரி நீ பாட்டுக்கு வந்து பேலன்ஸ் ஆறு முத்தத்தையும் என் கன்னத்துலே கொடுத்துடாத.. ஏன்னா ஒவ்வொரு முத்தத்துக்கும் ஒவ்வொரு பிளேஸ் இருக்கு.. எங்க குடுக்கணும்னுறத நான் தான் டிசைட் பண்ணுவேன். அப்புறம் நீ இப்ப சொல்ற மாதிரி நான் சொல்லலன்னுலா சொல்ல கூடாது. புரியுதா..?” என்று சிரிப்பை விழுங்கிகொண்டு அவன் சொல்ல,

“போடா.. இனி உனக்கு முத்தம் கொடுத்தாதன..” என்று மனதிற்குள் முனகியபடியே தன் அறைக்கு சென்றாள் இதழினி.

அறைக்கு வந்தவளால் இப்போது வரையுமே நம்ப முடியவில்லை.. நானா அவனுக்கு முத்தம் கொடுத்தேன் என்று.. எந்த தைரியத்தில் அவள் கொடுத்தாள் என்பது அவளுக்கே இப்போது புரியாத புதிர் தான்.

“போற போக்க பார்த்தா.. பொண்ணுங்கள எப்படி லாக் பண்றதுன்னு நான் உன்கிட்ட டியூஷன் வச்சிக்கணும் போலவே..” என்ற கவினை பார்த்து கூலாக கண்சிமிட்டி சிரித்தான் ரிஷப் நந்தன்.

8 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →
அத்தியாயம் - 29
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 29

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அவனின் கேள்வியால் கோவமுற்றவள், அந்த கோவத்தோடே தன் தோள் மீதிருந்த அவன் கையை தட்டிவிட்டு, &...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels