Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
(5.0)

அத்தியாயம் - 21

January 26, 2026
சந்தோஷ் குணா
5.0(1 reviews)
8 min read
அத்தியாயம் - 21
Hero - Music Director, Heroine - Music student

வீட்டு வாசலில் தாரிகாவின் ஸ்கூட்டியை பார்த்த மாத்திரத்திலேயே இதழினிக்கு வயிற்றை கலக்கிவிட்டது.

“இப்ப இவ எதுக்கு இங்க வந்தா..? என்னத்த உளறிவச்சியிருக்கான்னு தெரியலையே.. என்ன பதற வைக்கறதுக்காகவே எல்லாரும் வரிசைகட்டி வருவீங்களா..?” என்று மனதிற்குள் புலம்பியபடியே கேட்டை திறந்து அவள் உள்ளே செல்ல, முன் கட்டில் இருந்த கட்டிலில்தான் தாரிகாவும் இலக்கியாவும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அவளை பார்த்த தாரிகாவோ, “ஏய்.. எந்த மேம் வீட்டுக்கு போய்ட்டு வர நீ..?” என்று பார்த்த மாத்திரத்திலேயே கேள்வியெழுப்ப,

இதழினியோ, “சு… சுமதி மேம்” என்றதோடு மேற்கொண்டு எதுவும் கேட்டுவிடாதே என்பது விழிகளாலேயே அவளிடம் கெஞ்ச, தாரிகாவோ புரியாமல் புருவம் சுருக்கி அவளை பார்த்தாள்.

இதில் இலக்கியா வேறு, “நீ இந்த காம்படிஷன்-ல கலந்துக்கலயா தாரிகா..?” என்க,

தாரிகாவோ பதில் சொல்லாமல் இப்போது இதழினியை பார்த்தாள்.

“ஆ.. சித்தி ஒரு காலேஜ்-லேந்து ஒருத்தவங்கதான் கலந்துக்கணும்” என்று அவளுக்கு பதிலாக தானே பதில் சொல்லி சமாளித்தவள்,

இப்போது தாரிகா புறம் திரும்பி “நீ அந்த நோட்ஸ்-காகதன வந்த.. ரெடியாதான் இருக்கு வா..” என்று கையோடு அவளை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றவள், அறை கதவையும் சாற்றி தாழிட்டிருந்தாள்.

அவள் தாழிட்டு முடிக்கும் வரை காத்திருந்த தாரிகாவோ,

“ஏய் என்னடி நடக்குது இங்க..? சித்தி எதோ காம்பெடிஷன் அது இது-ன்னு சொல்றாங்க..? நீ என்னடான்னா ஒரு மாசமா மெடிக்கல் லீவு-ல இருக்கற சுமதி மேம் வீட்டுக்கு போய்ட்டு வர்றன்னு சொல்ற..? உண்மை-அ சொல்லு எங்க போய்ட்டு வரற நீ” என்று கேட்டவளிடம் இனியும் மறைப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்த இதழினி,

“ரிஷப்நந்தன் பிளாட்டு-க்கு” என்றாள் சுரமே இல்லாமல்.

“என்ன..? என்ன சொன்ன..? ரிஷப் நந்தன்-ஆ..? மியூசிக் டைரக்டர் ரிஷப் நந்தனா..?” என்று விழிகள் விரிய ஆச்சரியமாக கேட்ட தாரிகா-வை பார்த்து, இதழினி ஆமாம் என்பது போல் தலையை அசைக்க தாரிகாவால் தான் இன்னமுமே நம்பமுடியவில்லை.

பின் இதழினிதான் கல்லூரி விழாவில் அவன் போன் தொலைந்தாகவும், அதனால் தன் போனை அவன் வாங்கி வைத்திருப்பதாகவும் சொன்னவள்,  பரதம் ஆன்லைன் வகுப்பிற்காக.. காம்படிஷனுக்காக மேம் வீட்டிற்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு தினமும் அவன் பிளாட் அல்லது ஸ்டுடியோவிற்கு சென்று வருவதாக சொல்ல, அதையெல்லாம் கேட்ட தாரிகாவிற்கோ மயக்கம் வராத குறைதான்.

அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துகொண்டு அமர்ந்த தாரிகாவிற்கு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே சில கணங்கள் பிடித்து விட்டன.

“என்னடி சொல்ற..?” என்று மீண்டும் அதிர்ச்சியோடு அவளை பார்த்து வினவியவள், “நிஜமாலுமே டெய்லியும் நீ அவர பார்க்க போவியா..?” என்றவளை பார்த்து அவள் ஆமாம் என்பது போல் தலையை அசைக்க,

“சரி.. உனக்குதான் இன்னைக்கு ஆன்லைன் கிளாஸ் இல்லையே.. அப்புறம் ஏன் இன்னைக்கு அங்க போன..” என்று வினவியவளை பார்த்து,

“ம்… பில்ட்டர் காஃபி போட்டுகொடுக்க” என்று சலிப்பான குரலில் சொன்னவள்,

“இப்படி அவன் கூப்பிடும் போதெல்லாம் நான் அவன் முன்னாடி போய் நிக்கணும்.. இல்ல எதாவது பிளாக் மெயில் பண்ணி என்ன நிற்கவச்சிடுவான்” என்றாள் கடுப்பான குரலில்.

அவள் கூறியதை கேட்டு “பில்ட்டர் காஃபி-யா..?” என்று யோசனையோடே தனக்கு தானே சொல்லிகொண்ட தாரிகா,

“ஏய் இதழினி எனக்கென்னவோ அவர் உன்ன போன்-காக அங்க வரவைக்குறமாதிரி தெரியல” என்றவளை இதழினி புருவம் சுருக்கி பார்க்க,

“அன்னைக்கு நீ வயலின் வாசிக்கும் போது அவர் உன்ன பார்த்த பார்வையே வேற மாதிரிதான் இருந்துச்சி டி… எனக்கென்னவோ அவர் உன்ன லவ்..” என்றவள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் முன்பே,

“ச்சீ… ச்சீ… அவனுக்கு பொண்ணுங்கனாலே சுத்தமா பிடிக்காது. என் கிட்ட கூட இப்பவரைக்கும் ரூட்-ஆதான் நடந்துக்குவான்.” என்று சொன்னவள்,

“அந்த போன் மட்டும் கிடைச்சிட்டா போதும் தாரிகா.. என் மொத்த பிரச்சனையும் சால்வ் ஆகிடும்” என்று ஏக்கபெருமூச்சியுடன் சொன்னவளுக்கு அந்த போனை எங்கு சென்று தேடுவது என்றுதான் தெரியவில்லை.

பின் இந்த விஷயத்தை வேறுயாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தாரிகாவிடம் இதழினி கேட்டுகொண்டபோது,

சொல்ல மாட்டேன் என்றவள், தானும் அவன் போனை கண்டுபிடிக்க உதவுவதாக சொல்ல, இதழினி முகத்தில் அப்போதுதான் ஒரு தெளிவு பிறந்தது.

“தேங்க்ஸ் டி” என்று அவள் கையை பற்றிகொண்டு இதழினி சொன்னபோது, “நம்மகுள்ள என்னடி” என்றவள்,

பின் தயக்கத்துடனே “நாளைக்கு ஒரு நாள் மட்டும் நானும் உன் கூட வரட்டுமாடி.. உனக்கே தெரியும் எனக்கு ரிஷப்-னா எவ்வளோ இஷடம்-ன்னு” என்று நிலைமை புரியாமல் கெஞ்சியவள் இதழினி பார்த்த அனல் பார்வையில் அமைதியாகி போனாள்.

சொன்னது போலவே தாரிகாவும் அவளுடன் சேர்ந்து அவன் போனை தேடியபோது கூட போன் கிடைக்கவில்லை. தொலைந்தால்தானே அது கிடைப்பதற்கு.

ஆன்லைன் வகுப்பிற்காக அங்கு செல்லும் போதெல்லாம் பில்டர் காஃபி போடும் வேலையை வேறு அவள் தலையில் கட்டியிருந்தான் ரிஷப் நந்தன்.

இதில் கவின் வேண்டுமென்றே அவள் முன்னிலையில் அவனை கட்டிபிடிப்பதும், உரசி நிற்பதும், முத்தமிடுவதுமாய் இருக்க பாவம் ரிஷப் நந்தனால் தான் அவள் முன்னிலையில் அவனை எதுவுமே செய்ய முடியவில்லை.

இப்படியே நாட்கள் செல்ல, அன்றும் அவன் ஸ்டிடியோவிற்கு சென்று ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்தவள், வந்த அசதியில் சீக்கரமாகவே படுத்தும் விட்டிருந்தாள்.

நள்ளிரவு நேரத்தில் திடுமென அவள் போன் சத்தமிட, அந்த சத்தம் கேட்டு ஆழந்த உறக்கத்தில் இருந்தவளும் விழித்திருந்தாள்.

விடாது அழைப்பும் வந்த வண்ணமாகவே இருக்க, “இந்த நேரத்துல யாரு” என்று முனகியவாறே போனை கையில் எடுத்தவளுக்கு இதயமே நின்றுவிட்ட உணர்வுதான் திரையில் அவன் எண்ணை பார்த்ததும்.

“இப்ப எதுக்கு இந்த நேரத்துல விடாம போன் பண்ணிட்டே இருக்கான்..?” என்ற பயத்திலேயே சட்டென்று மொபைலை சைலண்டில் போட்டாள் எங்கே சத்தம் கேட்டு பக்கத்தில் படுத்திருக்கும் ஆரண்யா எழுந்துவிடுவாளோ என்று.

பின் போர்வையால் முகத்தை மூடியவள், அதன் பின்னே அழைப்பை ஏற்று காதில் வைத்து, “எதுக்கு சார் இந்த நேரத்துல விடாம போன் பண்ணிட்டே இருக்கீங்க..?” என்று யாருக்கும் கேட்டுவிடாதபடி சன்னகுரலில் வினவ,

மறுமுனையில் இருந்த ரிஷப் நந்தனோ, “ஹேப்பி பர்த்டே இதழ்..” என்றான் சந்தோஷ குரலில்.

அவள் ஐ.டி கார்டில் அன்று பார்த்ததை நினைவில் வைத்திருந்து முதல் ஆளாக அவளுக்கு வாழ்த்து சொல்லியிருந்தான்.

அவன் வாழ்த்தை கேட்ட பின் தான் தன் பிறந்தநாளே அவளுக்கு நினைவிற்கு வந்திருந்தது.

எங்கே அதையெல்லாம் நினைவில் வைத்து கொள்ளும் அளவிற்கா கடந்த சில மாதங்களாக அவள் நிலைமை இருக்கிறது.

“அடேய் காட்டு பயலே… இதுக்காடா விடாம இந்தநேரத்துல போன் பண்ண..? நான் உன்கிட்ட கேட்டனா எனக்கு விஷ் பண்ண சொல்லி..”என்று அதற்கும் அவனை உள்ளுக்குள் திட்டிகொண்டவள்,

“தேங்க்ஸ் சார்” என்றாள் மீண்டும் அவனுக்கு மட்டும் கேட்கும் படி சன்னகுரலில்.

“தேங்க்ஸ்-அ இப்படிதான் சொல்லுவியா..? நேர்ல வந்து சொல்லு” என்றவன் சொல்ல அவளுக்கோ ‘எதே இந்தநேரத்துலயா..?’ என்று தூக்கிவாரிதான் போட்டது.

“இவன் என்ன லூசா..? எந்த நேரத்துல எங்க வரசொல்றான்..?” என்று உள்ளுக்குள் எரிச்சல் பட்டுகொண்டவள்,

“சார்.. இந்த நேரத்துல என்னால எப்படி சார் வரமுடியும்.. நான் வீட்ல இருக்கேன்” என்று பொறுமையை இழுத்து பிடித்துகொண்டு அவள் சொல்ல,

அவனோ, “நான் உன் வீட்டு வாசல்-லதான் இருக்கேன்.. வந்து சொல்லு” என்று கூலாக சொல்ல அவளுக்கோ அதிர்ச்சியில் இதயமே நின்றுவிட்ட உணர்வுதான்.

நெஞ்சை பிடித்தபபடி அவள் அமைதியாக இருக்க, “இப்ப நீ வெளியில வர்றீயா..? இல்ல நான் உள்ள வரட்டுமா..?” என்று கேட்டு மேலும் அவளை அவன் அதிர்ச்சிகுள்ளாக்கினான்,

எங்கே வந்துவிடுவானோ என்று பயந்தவள், “சார்.. சார்… சார்.. நானே வர்றேன் பிளீஸ்..” என்றவள் கெஞ்ச,

“விதி இன் டூ மின்டிஸ்-ல” என்றவன் அதன் பின்னே அழைப்பை துண்டித்திருந்தான்.

போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.. அதேநேரம் எங்கே அவன் உள்ளே வந்துவிடுவானோ என்று பயம் வேறு அவளை கூறுபோட்டு கொண்டிருந்தது.

பின் ஒரு முடிவெடுத்தவளாய் ஆரண்யாவை பார்த்தாள் அவள் நன்றாக உறங்கி கொண்டிருக்க, பூனை போல் அடிமேல் அடிவைத்து அறையை கடந்து ஹால் பகுதிக்கு சென்றாள்.

ஹாலில் சித்தி, சித்தப்பா, ஹரண் உறங்கிகொண்டிருக்க, அவர்கள் உறக்கம் கலையா வண்ணம் சத்தமில்லாமல் அடிமேல் அடிவைத்து கதவைதிறந்து கொண்டு வெளியில் சென்றவளுக்கு,

“அக்கா..” என்ற ஆரண்யாவின் குரலை கேட்டதும் தூக்கிவாரித்தான் போட்டது.

எங்கே தன்னையும் மீறிகொண்டு பயத்தில் கத்திவிடுவோமோ என்று  இருகைகளாலும் வாயை இறுக்கமாக மூடிகொண்டவள் திரும்பி அவளை பார்க்க,

ஆரண்யாவோ தூக்க கலக்கத்தில் தலையை சொறிந்தபடியே நின்றுகொண்டிருந்தாள்.

“எங்கக்கா போற..?” என்று தூக்ககலக்கதிலேயே அவள் கேட்க,

அவளுக்கோ அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

“தூக்கம் வரல டி.. அதான் கொஞ்சம் நடக்கலாமேன்னு.” என்று இழுத்தவள், “நீ.. நீ.. போய் தூங்குடி” என்று சொன்னபோது ஆரண்யாவோ தானும் உடன் வருகிறேன் என்றாள்.

“அவன்தான் என்ன டார்ச்சர் பண்றான்னா நீயும் ஏன்டி உன் பங்குக்கு என்ன டார்ச்சர் பண்ற…?” என்று உள்ளுக்குள் புலம்பியவள் என்ன சொன்னபோதும் உடன் வருவதில் ஆரண்யா பிடிவாதமாய் இருக்க, இதிலே அவன் கொடுத்த கால அவகாசமும் கரைந்து போயிருந்தது.

எங்கே சொன்னது போல் அவன் உள்ளே வந்துவிடுவானோ என்று பயந்தவள், வேறு வழியின்றி அவளையும் அழைத்துகொண்டே கேட்டின் அருகே சென்றாள்.

பயத்தில் சுற்றமுற்றும் பார்த்தபடியே சத்தமில்லாமல் கேட்டை திறந்துகொண்டு அவள் வெளியில் செல்ல,

கவினோ “ஹேப்பி பர்த்டே சிஸ்டர்” என்றவாறே குலுக்கிய பியர் பாட்டிலை ஓப்பன் செய்ய, அவன் செயலால் பெண்கள் இருவருமே பயந்துதான் போயினர்.

பயத்தில் ஆரண்யாவின் தூக்க கலக்கமெல்லாம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை

“அக்கா..” என்று பயந்தவாறே இதழினியின் பின்னால் சென்று அவள் ஒளிந்துகொள்ள, இதழினியோ பயந்ததில் மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கி கொண்டிருந்தாள்.

“ஏண்டா ஆளாளுக்கு என்ன இப்படி படுத்தியெடுக்குறீங்க..?” என்பது போல்  கவினை பார்த்தவளுக்கு இந்த பிறந்தநாள் ஏன் இப்போது வந்தது என்ற நிலைதான்.

இதில் அவள் கஷ்டம் புரியாமல் கவின் வேறு “சர்பிரைஸ் எப்டி இருந்துச்சி சிஸ்டர்...?” என்று வெண்பற்கள் தெரிய சிரித்தபடி கேட்க, அவளுக்கோ “இப்படிதான் சர்பிரைஸ் பண்ணுவாங்களா..?” என்று கேட்டு அவன் காதை திருகி தலையிலேயே கொட்ட வேண்டும் போல இருந்தது.

இருந்தும் எதுவும் சொல்லாமல் கஷ்டப்பட்டு அவனை பார்த்து அவள் சிரித்து மட்டும் வைக்க, அப்போதுதான் அவளுக்கு பின்னால் இருந்த ஆரண்யாவை கவனித்திருந்தான் கவின்.

“அவங்க நம்ம சிஸ்டர்-ஆ..?” என்றவனின் கேள்விக்கு, ஆமாம் என்பது போல் தலையை அசைத்தவள், “ஆரண்யா..” என்று அவளுக்கு மட்டுகேட்கும் படி பற்களை கடித்தவாறே தனக்கு பின்னால் இருந்தவளை இழுத்து பக்கத்தில் நிறுத்த ஆரண்யாவும் அப்போதுதான் தன் முன்னால் நின்றவனை பார்த்தாள்.

நிலவொளி வெளிச்சத்தில் அவன் முகத்தை பார்த்தவளுக்கு அவள் பயமெல்லாம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை, விழிகள் நிறைய ஆச்சரியத்துடன் “அக்கா இவர்.. இவர்..” என்றவளுக்கு சந்தோஷமிகுதியில் மேற்கொண்டு வார்த்தைகள் வரவே இல்லை.

கண்கள் மின்ன தன்னை ஆச்சரியத்தோடு பார்த்திருப்பவளை பார்த்து புன்னகைத்த கவின், “ஹாய்.. ஐம் கவின்” என்று தன்னை அறிமுகபடுத்திகொண்டதோடு அவளை நோக்கி கரத்தையும் நீட்டியிருக்க, ஆரண்யாவால் தான் இதையெல்லாம் நம்பவே முடியவில்லை.

இத்தனை நாட்களாக யாரின் இசையை உருகி உருகி கேட்டாளோ.. யாரை பார்க்க வேண்டுமென்று துடியாய் துடித்தாளோ, அந்த இசைக்கு சொந்தமானவன் இப்போது அவள் எதிரிலேயே நின்றிருக்க அவள் தான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருந்தாள்.

பதிலுக்கு கை கொடுக்காமல் அவள் அவனையே அதிசயமாய் பார்த்திருக்க, பின் இதழினிதான் “ஆரண்யா..” என்று அவள் தோளை இடித்து விழிகளாலேயே நீட்டியிருந்த அவன் கரத்தை சுட்டிகாட்டினாள்.

தன் கரத்தை இதழினியின் நைட்டியில் நன்றாக துடைத்துகொண்டவள், அதன் பின்னே “ஹாய் ஐ ம் ஆரண்யா..” என்றவாறே அவன் கரத்தை பற்றி குலுக்க, இதழினியோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்தாள்.

தமக்கையின் பார்வையை சிறிதும் சட்டைசெய்யாமல் அவனை பார்த்து புன்னகைத்தவாறே அவன் கரத்தை விடாமல் குலுக்கிய வண்ணமாகவே ஆரண்யா இருக்க, பின் இதழினிதான் “மானத்த வாங்குறாளே..” என்று சத்தமில்லாமல் வாய்க்குள் முனுமுனுத்தவாறே இருவரின் கரத்தையும் விலக்கிவிட்டாள்.

“ஆரண்யா… ஹீ ஈஸ் ரிஷப்..” என்று அவர்களுக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தவனை கவின் அறிமுகப்படுத்த,

“ஐய்யோ… ரிஷப் சாருமா..?” என்று விழிகளில் ஆச்சரித்தோடே அவனை பார்த்தவள், ஓடிச்சென்று “ஹாய் சார்..” என்றவாறே அவனை நோக்கி கரத்தை நீட்ட, அவனோ அவள் கரத்தை பற்றாமல் புன்னகைத்தவாறே “ஹாய் ஆரண்யா..” என்றான் கையை அசைத்து.

இதெல்லாம் கனவா..? நிஜமா..? என்பது போல் இருவரையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தவளுக்கு அங்கு இதழினி என்ற ஒருத்தி இருந்ததையே மறந்துதான் போய் இருந்தாள்.

பொதுவாக இந்த நள்ளிரவில் யாரும் விழித்திருக்க மாட்டார்கள் தான்.. இருந்தும் அக்கம் பக்கத்தினர் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே ஒருவித பயத்துடனே இதழினி நின்றிருக்க,

“ஓய்…” என்றவாறே அவள் அருகில் வந்து நின்ற ரிஷப், “ஹேப்பி பர்த்டே” என்றவாறே தன் கையோடு எடுத்துவந்திருந்த ஒற்றை ரோஜாவை அவளிடம் நீட்ட, “தேங்க்ஸ்..” என்று தயக்கத்தோடு ரோஜா-வை வாங்கிகொள்ள,

அவனோ, “கம்..” என்றவாறே அவள் கரத்தை பற்றி சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி அழைத்துசென்றான்.

வலுக்கட்டாயமாக அவன் பின்னால் சென்றவளுக்கு எங்கே இதையெல்லாம் ஆரண்யா பார்த்துவிடுவாளோ என்ற பயம் வேறு.

திரும்பி ஆரண்யாவை பார்த்தாள் அவளோ அதிசயபிறவியை பார்ப்பதுபோல் கவின் பேசுவதை வாயை பிளந்துகொண்டு பார்த்துகொண்டிருக்க, “எருமை எருமை” என்று சத்தமில்லமால் வாய்க்குள் அவளை திட்டிகொண்டாள்.

அவளுக்காக வாங்கி வந்திருந்த கேக்கை கார் பேனட் மீது வைத்தவன், அதலிருந்த கேண்டிலையும் ஏற்க,

“சார் இதெல்லாம் எதுக்கு சார்..? சித்தி சித்தப்பா எழுந்திரிக்கறதுகுள்ள நான் வீட்டுக்கு போயாகணும் சார்.. நான் போறேன்” என்றவாறே அங்கிருந்து நகரவும் செய்தாள்.

செல்லும் அவளின் கரத்தை பற்றி தன் அருகில் நிறுத்தியதியவன், விசில் அடித்து கவினை அழைக்க, “சார் பிளீஸ் சத்தம் போடாதீங்க சார்..” என்றாள் கெஞ்சும் குரலில் இதழினி.

எங்கே அவன் விசில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் யாரவது வெளியில் வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் சுற்றும் முற்றும் அவள் பார்த்திருக்க, கவின் ஆரண்யாவையும் அழைத்து கொண்டு அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

இப்போது கூட ஆரண்யாவின் பார்வை கவின் மீதேதான் இருந்தது.

அவளின் கரத்தை பற்றி கத்தியை அவள் கையில் கொடுத்தவன், “கட் பண்ணு இதழ்” என்க, அவளும் தயக்கத்துடனே கேண்டிலிருந்த நெருப்பை ஊதி அணைத்தாள்.

அதேநேரம் கையிலிருந்த பாப்பர்ஸ்-ன் கீழ்புறத்தை திருகி கவின் அதை வெடிக்க, ஏற்கனவே பயந்திலிருப்பவளுக்கு அந்த சத்தம் மேலும் பயத்தைதான் ஏற்படுத்தியிருந்தது.

அதீத பயத்தில் “பெருமாளே..” என்றவாறே பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ரிஷப் நந்தனின் மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

8 minreading time
1comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels