ஒரு முடிவெடுத்தவனாய் அவள் முகம் நோக்கி மேலும் அவன் குனிய, அவனின் உஷ்ண மூச்சிகாற்றின் தீண்டலால் அவளுக்கு கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன.
பயத்தின் உச்சத்தில் தன்னைச்சையாக அவள் கைகள் அவனின் ஆடைகளற்ற திண்ணியமார்பில் கை வைத்து அவனை தள்ள, அப்போதுதான் அவனின் மற்றொருகரம் அவளின் இடையை சுற்றி வளைத்திருப்பதையே கவனித்திருந்தாள் இதழினி.
திடுமென விழிகளை திறந்தவளுக்கு இத்தனை நெருக்கத்தில் அவனை பார்த்ததும் இன்னும் பயம் தான்.
பயத்தில் பட பட வென இமைகளை மூடி அவள் திறக்க, அவனோ விழிகள் நிறைய காதலோடு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன இப்படி பார்க்கிறான்..? ஒருவேளை பாஞ்சாலும் பாஞ்சிடுவானோ…? பெருமாளே…” என்று உள்ளுக்குள் பதறியவள் பின், “ச்.. ச்சீ.. ச்சீ அவன் தான் கே-வாச்சே..” என்று சொல்லி எப்போதும் போல் தன்னை தைரியப்படுத்தி கொண்டாள்.
உண்மையில் சொல்லபோனால் அவளின் கூற்றுப்படி அவன் ஒரு கே என்பதால் நிச்சயம் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள மாட்டான் என்ற தைரியத்ததில் தான் ஆன்லைன் வகுப்பிற்காகவும், அவன் அழைக்கும் போதெல்லாம் மறுக்காமல் இதழினி இங்கு வந்து செல்வது.
இப்போது கூட தன்னை பயமுறுத்ததான் அவன் இப்படியெல்லாம் தன்னிடம் நடந்துகொள்கிறான் என்பது அவளின் கணிப்பு.
அவளை பார்த்தபடியே மேலும் அவளை அவன் தன்னோடு அணைத்திருக்க, இப்போது இருவருக்கும் இடையில் நூலளவு இடைவெளி கூட இல்லை.
அந்த அளவிற்கு அவன் உடலோடு அவள் உடலை நெருக்கமாக அணைந்திருந்தான் ரிஷப் நந்தன்.
அவனின் அணைப்பால் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்த உணர்வுதான் பெண்ணவளுக்கு.
அவன் தேகத்திலிருந்த உஷ்ணம் அவள் ஆடையையும் தாண்டி அவள் மேனியை தீண்டியிருக்க, உள்ளுக்குள் என்னவென்றே சொல்லமுடியாத ஒரு உணர்வு தான் அவளுக்கு. இதில் பயம், படபடப்பு, பதற்றம் என்று அத்தனையும் வேறு அவளை தொற்றிகொண்டிருந்தது.
இதில் அவன் வெற்று மார்பில் கையை வைத்திருந்தவளுக்கு அவனுக்குள் தாறுமாறாக துடித்து கொண்டிருக்கும் இதய துடிப்பை நன்றாகவே உணர முடிந்தது.
“ஐய்யயோ இப்ப எதுக்காக இவன் இதயம் இவ்வளோ ஃபாஸ்ட்-ஆ துடிக்குது.. மூச்சி காத்து வேற பலமா அடிக்குது.. நிஜமாலுமே எதாவது பண்ணிடுவானோ…” என்று உள்ளுக்குள் பயந்தவாறே எச்சிலை கூட்டி விழுங்கிகொண்டவள் மிரண்டு போய் அவன் விழிகளையே பார்த்திருக்க,
பயத்தில் அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவன் காதிற்கும் நன்றாக கேட்கவே செய்தது.
தன்னை மிரண்டு பார்ப்பவளின் விழிகளை பார்த்தவாறே, “கிஸ் பண்ணிடுவேன்னு இப்படி வார்னிங் மெசேஜ்-லாம் கொடுத்துட்டு இருக்க மாட்டேன். லிப் டூ லிப் அடிச்சிட்டு போய்ட்டே இருப்பேன். புரியுதா..?” என்றவன் கேட்க, அவளோ புரிந்தது என்பது போல் தலையை மட்டும் மேலும் கீழுமாய் ஆட்ட, அதன் பின்னே தன் அணைப்பிலிருந்து அவளுக்கு விடுதலை கொடுத்தான் ரிஷப் நந்தன்.
காதல் இல்லாதபோது அவளிடம் அத்துமீறியவனால் காதல் வந்த பின் அவளிடம் அத்துமீற முடியவில்லை.
அத்தோடு ஏங்கே உணர்வசப்பட்டு தான் ஏதாவது செய்ய போய் அதன் பின் அவள் இந்த பக்கமே வராமல் போய்விட்டால்.. அதனாலே அவள் மீதான தன் உணர்வுகளையெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுபடுத்திகொண்டே அவளிடமிருந்து விலகியிருந்தான் ரிஷப்.
என்னதான் அவளை விட்டு விலகி நின்றுகொண்டாலும் இப்போது வரையுமே அவனால் அவனை சமன் செய்ய முடியவில்லை.
பின்னுச்சியை கோதிவிட்டவாறே இருக்கையில் சென்று அவன் அமர, அவளுக்கோ உள்ளுக்குள் இன்னும் நடுக்கம் குறைந்தபாடில்லை.
இதில் நிற்கமுடியாமல் அவள் கால்கள் துவள, வெகு சிரமப்பட்டே பக்கத்திலிருந்த இருக்கையை பற்றிகொண்டு நின்றுகொண்டிருந்தாள்.
சிகரெட்டை பற்ற வைத்து இரண்டு மூன்று பஃப் இழுத்தபின்தான் அவனும் ஓரளவு சகஜத்திற்கு திரும்பியிருந்தான்.
“சிட்” என்பது போல் எதிரிலிருந்த இருக்கையை அவன் காட்ட, அவள் இருந்த நிலமைக்கு மறுக்காமல் உடனே அமர்ந்து கொண்டாள் இதழினியும்.
“சரி சொல்லு.. எதுக்கு சிரிச்ச..?” என்று அவனே ஆரம்பிக்க, அவளுக்கோ அவன் கேள்வியால் திக்கென்ற உணர்வு தான்.
“ஐய்யய்யோ.. அப்போ நான் சிரிச்சத இவன் பார்த்துட்டானா..? இப்ப என்ன சொல்லி நான் இவன சமாளிக்கிறது..?” என்ற உள்ளுக்குள் புலம்பியவள்,
“நான் எப்போ சார் சிரிச்சேன்..?” என்றாள் நான் சிரிக்கவே இல்லை என்பது போல்.
உள்ளிழுத்த புகையை வெளிவிட்டவாறே ஆஷ்டிரேவில் சிகரெட்டை நுனியை அழுத்தி அணைத்தவன்,
“உங்க காலேஜ் ஃபங்கஷன்-ல…. எனக்கு பின்னாடி உன் பிரண்ட் தாரிகா-கூட பேசி சிரிச்சிட்டு இருந்தியே..” என்று அடையாளத்தோடு அவளுக்கு அவன் நினைவுபடுத்த, அவளுக்கும் அந்த நிகழ்வு நினைவிற்கு வரவே செய்தது.
அத்தோடு அந்த நிகழ்வை நினைவு கூர்ந்த மாத்திரத்திலேயே அவள் இதழ்களில் இளநகை தோன்றி மறைய, அதை ரிஷப் நந்தனும் கவனிக்கவே செய்தான்.
அதேசமயம் அதை எப்படி அவனிடம் சொல்வதென்ற சங்கடம் வேறு அவளுக்கு. காரணம் அன்று அவள் நகைப்பிற்கு காரணமே அவன் தானே. சம்மந்தபட்டவனிடமே அதை எப்படி அவளால் சொல்ல முடியும்.
எதுவும் சொல்லாமல் அவள் கைகளை பிசைந்தவாறே இருக்க, பின் அவன் தான் “வீட்டுக்கு போகணும்-ன்ற எண்ணம் இல்லையா இதழ்..?” என்றான் சொன்னால்தான் நீ வீட்டுக்கு போக முடியும் என்பது போல்.
“சார்.. அது… “ என்று சங்கடத்தோடு இழுத்தவள், பின் “சொன்னா.. நீங்க தப்பா எடுத்துக்கமாட்டீங்களே..” என்றவளை பார்த்து அவன் இல்லை என்பது போல் தலையை மட்டும் அசைத்தான்.
“சார் ஆக்சுவலி உங்களபத்திதான்…” என்றவள் ஆரம்பிக்க,
“ஏய் என்ன பத்திலாம் கூட நீ டிஸ்கஸ் பண்ணுவியா..?” என்று விழிகளில் ஆச்சரியத்தோடு கேட்டவனுக்கு உள்ளுக்குள் அப்படியொரு சந்தோஷம் அவள் தன்னை பற்றியெல்லாம் பேசுவதை நினைத்து.
ஏதோ தான் மட்டும் தான் சதா அவளையே நினைத்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்திருந்தவனுக்கு அவள் தன்னை பற்றி மற்றவர்களிடம் பேசுவது கூட மிகப்பெரிய விஷயமாகத்தான் இருந்தது. அதனால் தான் இந்த அளவிற்கு அவன் இப்போது சந்தோஷபடுவது கூட.
அவன் கேள்விக்கு சங்கடத்துடனே தலையை மேலும் கீழுமாய் அசைத்தவள், “ஆக்சுவலி தாரிகாவுக்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்கும் சார். அவதான் சொன்னா…” என்றவள் இழுக்க,
அவனோ “ஏன் இதழ்-க்கு என்ன பிடிக்காதா..?” என்றான் அவள் மனதில் தனக்காக இடம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு.
விழிகளில் ஒருவித ஆர்வத்தோடு அவன் அவளையே பார்த்திருக்க, அவளால்தான் அவன் கேள்விக்கு சட்டென்று ஒரு பதில் சொல்ல முடியவில்லை.
இப்படியொரு கேள்வியை கேட்பானென்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.
என்னதான் அவனை அவளுக்கு பிடிக்காது என்றாலும் அதை எப்படி அவன் முகத்துக்கு நேராக அவளால் சொல்ல முடியும்.
அதனாலே “உங்க சாங்ஸ் ரொம்ப புடிக்கும் சார்.” என்று சமாளிக்க,
“ம்க்கும்.. இதுக்கு என்ன புடிக்காதுன்னு டைரக்ட்டாவே சொல்லியிருக்கலாம்” என்று வாய்க்குள் முனுமுனுத்துகொண்டவன்,
“அப்டியா… தேங்க்ஸ்” என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி சொன்னவன்.
“தாரிகா என்ன சொன்னா..?” என்று அடுத்த என்ன என்பது போல் அவன் கேள்வியெழுப்ப,
கண்களை மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சி விட்டவள் அதன் பின்னே இமைகளை திறந்து “ஃபங்கஷனுக்கு வந்திருந்த உங்கள சைட் அடிச்சிகிட்டே… நீங்க கிடைக்க எந்த பொண்ணுக்கு கொடுத்து வச்சியிருக்கோன்னு ஏக்கமா சொன்னா சார்” என்று ஒரே மூச்சில் சொல்லிமுடித்தவளின் இதழ்களில் குறுநகை மின்ன,
அவனுக்கோ புரியவில்லை இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று.
அதனாலே “அவ கரெக்ட்டா தன சொல்லியிருக்கா.. என்ன மாதிரி ஒருத்தன் கிடைக்க எந்த பொண்ணா இருந்தாலும் கொடுத்து வச்சியிருக்கணும் தன.?” என்று தாரிகா சொன்னதையே அவனும் சொல்ல, அவளோ அன்று போலவே இன்றும் வெடித்து சிரித்துவிட்டாள்.
அன்று போல் அவள் சிரிப்பை இரசிப்பதா.. இல்லை அந்த சிரிப்பிற்கான காரணத்தை பற்றி யோசிப்பதா என்றே அவனுக்கு தெரியவில்லை.
எதுவும் சொல்லாமல் அவன் அவளையே பார்த்திருக்க, கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்து முடித்தவள்,
“சார் நீங்க கே-ன்றது தெரியாம அவதான் எதோ உளறுறானா.. நீங்களுமா..? நீங்க கிடைக்க கவின்சார் தன சார் கொடுத்துவச்சியிருக்காரு” என்றவளை, “என்னது நான் கே-வா..?” என்பது போல் அதிர்ந்து போய் பார்த்தான் ரிஷப் நந்தன்.
“சார் அவ அப்படி சொன்னதுக்கு நான் பதிலுக்கு சிரிச்சனே தவிர நீங்க கே-ன்ற விஷயத்த அவகிட்ட மட்டும் இல்ல யார்கிட்டயுமே நான் சொன்னது இல்ல சார். சத்தியமா சார்” என்றாள் என்னமோ அவன் அதற்குதான் அவளை அதிர்ந்துப்பார்க்கிறான் என்பது போல்.
‘சரிதான்’ என்று வாய்க்குள் முனுமுனுத்துகொண்டவன், “ஆமா.. நான் இப்படி-ன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று அவளையே அவன் கேட்டபோது,
“ஆக்ச்சுவலி நீங்க அன்னைக்கு உங்களுக்கு எல்லாமே கவின் சார் தான்னு சொல்லும் போதுகூட எனக்கு புரியல சார். அப்புறம் பிரின்சி ரூம்-ல…” என்று இழுத்தவளால் மேற்கொண்டு எதையும் சொல்ல முடியாமல் விழிகளையும் தாழ்த்திகொண்டாள்.
அவளால் சொல்ல முடியாவிட்டாலும் அவனுக்கு புரிந்தது அவள் எங்கு தன்னை கே-என்று முடிவு செய்தாள் என்று.
“அப்போதான் சார் நீங்க கே-ன்றது எனக்கு புரிஞ்சிது. ஆக்சுவலி நீங்க ஒரு கே-ன்றதாலதான் நானும் இங்க எந்த பயமும் இல்லாமல் வந்துட்டுபோறது கூட” என்று வார்த்தைக்கு வார்த்தை அவள் அவனை கே-ன்று சொல்ல அவனுக்கோ எங்கு சென்று முடிக்கொள்வதென்றே தெரியவில்லை.
‘அடிப்பாவி இவ்வளோ நாள் நீ என்ன இப்படி நினைச்சிட்டுதான் இங்க வந்துட்டு போறீயா..?’ என்று உள்ளுக்குள் புலம்பியவனால் தான் அப்படி இல்லையென்று நிரூபிக்க முடியாத சூழ்நிலை.
ஏதோ ஆரம்ப காலகட்டத்தில் அவளிடம் ரூட்-ஆக நடந்துகொண்டதற்காக அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றுதான் இத்தனை நாட்கள் அவன் நினைத்திருந்தானே தவிர தன்னை பற்றி அவள் வேறு விதமாக கணக்கு போட்டு இருப்பாள் என்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
அத்தோடு கவினுக்கும் அவனுக்கும் இடையேயான அழகான ஆழமான ஆத்மார்த்தமான நட்பிற்கு அவள் இப்படியொரு பெயர் வைத்திருப்பாள் என்று கனவிலும் அவன் நினைக்கவே இல்லை.
அத்தோடு தான் அப்படி இல்லையென்று எங்கிருந்து ஆரம்பித்து எப்படி அவளுக்கு விளக்குவதென்று அவனுக்கு தெரியவில்லை.
அன்று அவளிடம் அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் இன்று அவனுக்கு எதிராய் அவள் அடிகோடிட்டு காட்ட இதில் எங்கிருந்து எதை வைத்து அவனால் தன்னை அவளிடம் நிரூபிக்க முடியும்.
அப்படியே அனைத்தையும் எடுத்து சொன்னால் பிரின்சிபல் அறைக்குள் தான் பார்த்தது குறித்து கேட்பாளே.. அதற்கு அவனால் என்ன பதில் சொல்லமுடியும்..? என்ன இருந்தாலும் இதில் கவினின் மானமும் அடங்கியிருக்கிறதே..
சம்மந்தபட்டவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவன் குறித்த அந்தரங்களை இன்னொருவரிடம் சொல்வது சரியன்று என்று அவன் மனதிற்கு பட எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான் அவன்.
பின் அவள்தான் “சார்..” என்று அவனை அழைத்தாள்.
என்ன என்பது போல் அவன் அவளை பார்க்க, “ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?” என்றவளை பார்த்து,
‘இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு..?’ என்பது போல் அவளை பார்த்தவன் ‘சொல்’ என்பது போல் கைஜாடை செய்ய,
“என்ன தான் உங்களமாதிரி உள்ளவங்களுக்கு ஆதரவா சட்டம் இருந்தாலும்.. இதெல்லாம் இயற்கைக்கு புறம்பானது சார். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழற வாழ்க்கைக்கு பேர்தான் சார் இல்லறவாழ்க்கையே தவிர இப்டி ஆணும் ஆணும் சேர்ந்து வாழறது இல்ல சார்.” என்றவளை கன்னத்தில் கைவைத்தப்படி அவன் பார்த்திருக்க,
“எனக்கு தெரிஞ்சி கவின் சார் உங்கள மாதிரி இல்லன்னுதான் தோணுது. ஏன்னா அவருக்கு பொண்ணுங்க மேல இண்ட்ரஸ்ட் இருக்கறத நானே பார்த்திருக்கேன்” என்றாள் அன்று அவன் அறையிலிருந்து அரைகுறை ஆடையோடு வெளிவந்த பெண்ணை மனதில் வைத்து.
“ஸோ.. நீங்க உங்க விருப்பத்துக்காக அவரோட லைஃப்-அயும் சேர்த்து கெடுக்குறீங்களோன்னு தோணுது சார்.” என்று இத்தனை நாட்கள் தன் மனதிற்குள்ளே வைத்திருந்ததை அவள் வெளிப்படையாக அவனிடமே சொல்லியிருக்க,
‘யாரு.. நான் அவன் லைஃப்-அ கெடுக்கறனா..? அந்த நாய்தான் மொத்தமா என் லவ்-அ குதறி வச்சியிருக்குது’ என்று மனதிற்குள் நினைத்தவன் இப்போது கூட வாயை திறக்கவே இல்லை.
“இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல சார்.. ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.. பொண்டாட்டி, குழந்தைங்கன்னு லைஃப்-அ என்ஜாய் பண்ணி வாழுங்க சார்” என்று செய்யாத தவறுக்கு அவனுக்கு அவள் அட்வைஸ் வேறு கொடுக்க, ‘எல்லாம் என் நேரம்’ என்பது போல் கீழ் அதரங்களை கடித்தபடி அவளையே பார்த்துகொண்டிருந்தான் ரிஷப் நந்தன்.
“நான் சொன்னத பத்தி யோசிச்சி பாருங்க சார். நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பும் போதுதான் கவினும் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்பதை அறியாமல் “டார்லிங்” என்றவாறே நேராக ரிஷப்பிடம் சென்றவன் அவனை கட்டியணைத்து கொண்டதோடு, “மிஸ் யூ பேபி” என்றவாறே அவன் கன்னத்தில் முத்தமிடவும் செய்ய, ரிஷப்பின் பார்வையோ இப்போது இதழினியை பார்த்தது.
அவளோ கீழ் அதரங்களை கடித்து சிரிப்பை விழுங்கியபடியே அங்கிருந்து வெளியேறி இருந்தாள்.
பதிலுக்கு எதுவும் பேசாமல் ரிஷப் அமைதியாக இருக்க, அவன் மடியில் தலைசாய்த்து படுத்துகொண்ட கவினோ,
“என்னாச்சி டார்லிங்..?” என்க,
நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினான் ரிஷப்.
அனைத்தையும் கேட்டு முடித்தவன், “நானாவது சந்தேகம்தான் பட்டேன். இப்ப பாரு சிஸ்டர் உன்ன கே-ன்னு கன்ஃபார்ம்மே பண்ணிட்டாங்க” என்று சொன்னதோடு இல்லாமல் எழுந்தமர்ந்து அவனை பார்த்து சத்தம் போட்டு சிரிக்க,
“செய்யறத எல்லாம் செஞ்சிட்டு சிரிப்பா சிரிக்கற..” என்றவாறே கொலைவெறி தாக்குதலோடு அவன் மீது பாய்ந்த ரிஷப் கவின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட அவனும் பதிலுக்கு குத்துவிட தவறவில்லை.
ஒருவரையொருவர் மாற்றி மாற்றி தாக்கிகொண்டதில் இருவருமே ஒருகட்டத்தில் டயர்ட் ஆகி விட இருவருமே படுக்கையில் சென்று பொத்தென்று விழுந்து விட்டனர்.
மூச்சி வாங்கியபடி விட்டத்தையே இருவரும் பார்த்தபடி படுத்திருக்க,
கவின் தான், “நான் சிஸ்டருக்கு எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணி புரியவைக்குறேன் டார்லிங்” என்று மூச்சிவாங்கியபடியே சொன்னவன், அவளுடன் பேசுவதற்காக தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுக்க,
அவன் கையிலிருந்த போனை வெடுக்கென்று பிடுங்கியிருந்தான் ரிஷப் நந்தன்.
ஏண்டா என்பது போல் கவின் அவனை பார்க்க,
“நான் கே-ன்றதால தான் மேடம் இங்க பயப்படாம வந்துட்டு போறாங்களாம். இத அவளே சொன்னா… இப்போ மட்டும் அது உண்மை இல்லன்னு அவளுக்கு தெரிஞ்சிது அவ இந்த பக்கமே வரமாட்டா..” என்றான் மூச்சிவாங்கியபடியே அவளை கணித்து.
ஆம் இந்த ஒரு காரணத்திற்காகத்தான் அவளிடம் கூட அவன் அமைதி காத்தது. அதனால்தான் இப்போது கூட உண்மையை சொல்லவிடாமல் கவினை அவன் தடுப்பது.
“எனக்கு தினமும் அவளை பார்க்கணும்.. அவ கூட இருக்கணும்.. அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும். ஸோ இப்போதைக்கு அவளுக்கு எந்த உண்மையும் தெரியவேண்டாம் கவின்” என்று விட்டத்தை பார்த்தபடியே முடிவாய் சொன்னவனை, எழுந்தமர்ந்து பார்த்த கவின்,
“அப்போ என் ஹெல்ப் உனக்கு இப்போ தேவையில்லையா..?” என்று கேட்க,
“நீ ஜட்டி போட்டாலே எனக்கு பெரிய ஹெல்ப் தாண்டா” என்று ரிஷப் சொன்ன தோணியில், கவினோ வெடித்து சிரித்துவிட்டான்.




