அதன் பின் வந்த நாட்களில் கூட வீட்டில் பொய் சொல்லிவிட்டுதான் ஆன்லைன் வகுப்பிற்காக அவனின் ஸ்டுடியோ இல்லையென்றால் அவனின் பிளாட் என்று சென்று வந்த வண்ணமாக இருந்தாள் இதழினி.
அப்படி செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைதான் அவளுக்கு.
சில சமயங்களில் அவளின் சித்தப்பா நான் அழைத்து சென்று விடுகிறேன் என்பார். அவரை சமாளித்துவிட்டு கிளம்பினாலோ நான் துணைக்கு வருகிறேன் என்று இலக்கியா கிளம்பி நிற்பாள்.
அதையும் இதையும் சொல்லி அவர்களை சமாளித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்புவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகிவிடும்.
இதில் அவனும் தன் பங்கிற்கு அவளை வைத்து செய்ய பெண்ணவள் பாடு பெரும் கஷ்டமாகிதான் போனது.
அப்படி வந்து செல்லும் போதெல்லாம் அவளுக்கு சைவ உணவையே ஏற்பாடு செய்திருந்தான் ரிஷப் நந்தன்.
விருப்பமில்லையென்றாலும் அவனின் கட்டாயத்திற்காக மட்டுமே உண்டாள்.
ஓரளவு கவினிடம் பேச ஆரம்பித்தவள், அவனிடம் மட்டும் சற்று தள்ளியே இருந்து கொண்டாள்.
அவள் தள்ளி இருந்தாலும் அவன் அவ்வப்போது அவளை சீண்டவே செய்தான். இருந்தும் அதையெல்லாம் அவள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
வார இறுதி நாட்களில் ஆன்லைன் வகுப்பு இல்லை என்பதால் தான் வர மாட்டேன் என்றும் தனக்கு போன் செய்யவேண்டாம் என்றும் இதழினி கவினிடம் சொல்லி சென்றிருக்க, அவளை பார்க்காமல் அவளிடம் பேசாமல் ரிஷப் நந்தனுக்குதான் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.
அவளை பார்க்காமல் அவளிடம் பேசாமல் சனிக்கிழமையை எப்படியோ ஓட்டிவிட்டவனால் ஞாயிற்று கிழமையை இரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை.
இதில் கவின் வேறு அவனது குடும்ப பிஸ்னஸ் மீட்டிங் என்று வெளியில் சென்றிருக்க, தனியாக பிளாட்டில் இருந்தவனுக்கு முழுக்க முழுக்க அவள் நினைவுதான்.
இதுமாதிரி கிடைக்கும் விடுமுறை நாட்களில் உறங்கி கழிப்பதுதான் ரிஷப் நந்தனின் வழமை.
இமைகளை மூடினாலே கண்முன் அவள் முகம் விரிந்து இருக்க, இதில் எங்கிருந்து அவனால் நிம்மதியாக உறங்க முடியும்.
பால்கனிக்கு சென்று நின்று பார்த்தான்.. காலார நடந்தும் பார்த்தான்… பாடல்கள் கேட்டு பார்த்தான்.. ஏன் அவனுக்கு பிடித்தமான மியூசிக் கூட கம்போஸ் செய்து பார்த்தான்.
மூங்கிலுக்கும் காற்றுக்கும் இடையில் நூலிழையில் நுழைந்து காணம் பொழியும் மெல்லிய இசை போல் அவனுக்கும் அவனிடமிருந்து பிரிக்கமுடியாத இசைக்கும் இடையில் புகுந்து அவனை அவளுடையதாக்கி கொண்டிருந்தாள் அவள்..
என்ன செய்த போதும் அவன் மனம் இறுதியாக அவளிடமே சென்று நிற்க, தூரத்தில் இருந்தாவது அவளை பார்க்கலாம் என்ற முடிவோடு கார் கீயை கையில் எடுத்தான் ரிஷப்.
ஆனால் அங்கு தன் காரை யாராவது அடையாளம் கண்டுவிட்டால் அது வேறு மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்துமே என்று நினைத்தவன் பின் அந்த எண்ணத்தையும் மாற்றி கொண்டான்.
நினைத்த நேரத்திற்கு தன்னவளை சென்று பார்க்க முடியாமல் தடுக்கும் இந்த செல்வாக்கு, புகழ் மீது முதன் முறையாக அவனுக்கே எரிச்சல் தான் வந்தது.
அவளை எப்படி பார்ப்பதென்று ஷாம்பியனை அருந்தியவாறே யோசித்து கொண்டிருந்தவனின் பார்வையில் அந்த காஃபி கப் பட, மெலிதாக சிரித்து கொண்டவன் அடுத்து அவளுக்குதான் அழைத்திருந்தான்.
இரண்டு நாட்கள் வரமாட்டேன் என்று சொல்லிய பின்னும் அவன் போனில் அழைத்திருக்க, அவன் அழைப்பை பார்த்த மாத்திரத்திலே அவளுக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது.
யாருக்கும் தெரியாமல் போனை எடுத்துகொண்டு பாத்ரூமிற்குள் ஓடியவள், “எதுக்கு சார் இப்போ போன் பண்றீங்க..?” என்றாள் எடுத்த எடுப்பிலேயே.
ஆனால் அவனோ “ஃபளாட்டு-க்கு வா” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருக்க,
“இவன…” என்று கோவத்தில் பற்களைதான் அவளால் கடித்துகொள்ள முடிந்ததே தவிர வேறெதும் செய்ய முடியவில்லை.
அங்கு செல்வதற்கு அவளுக்கும் விருப்பமில்லைதான்… அதேநேரம் செல்லாமலும் அவளால் இருக்க முடியாதே. அவள் போனும், அந்த போட்டோவும் இன்னும் அவன் கையில் இருக்க, அவளால் எப்படி அவனை எதிர்த்து நிற்க முடியும்.
எப்போதும் போலவே மேம் அழைப்பதாக பொய் சொல்லிவிட்டு கிளம்பியவளுக்கு கேப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க, முகத்தை மூடியபடியே கேப்பில் ஏறிக்கொண்டாள்.
அதீத கோவத்தோடு தன் முன் வந்து நின்றவளை பார்த்து, கூலாக அவன் “ஹாய் இதழ்..” என்க,
மேலாடையின்றி இடையில் தொடை தெரியும் அளவிற்கு ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தவனை பார்த்ததும் இதழினி கொஞ்சம் தடுமாற்றம்.
“இவன் வேற எப்பப் பார்த்தாலும் ரம்பா கணக்கா தொடை-அ காட்டிக்கிட்டே இருக்கான்.. இத மட்டும் எதுக்கு போட்டு இருக்கான்.. இதையும் அவுத்துபோட்டுட்டு அம்மனக்கட்டையா திரிய வேண்டியதுதன.?” என்று மனதிற்குள் அவனை வசைபாடியவள்,
“சார்.. ஷர்ட்-லாம் போடவே மாட்டீங்களா..?” என்று கேட்டே விட்டாள் அவனிடம்.
அவளின் கேள்வியால் தன்னையே ஒருமுறை பார்த்துகொண்டவன்,
“ஏன்… நான் இப்படி இருக்கறதுல உனக்கு என்ன பிராப்ளம்..?” என்று கேட்டவன், பின் அவளை ஆழ பார்த்து “கட்டிபுடிச்சிக்கணும் போல இருக்கா..?” என்று குதர்க்கமாக கேட்டு வைக்க,
அவளுக்கோ ஏண்டா அவனிடம் கேட்டோம் என்றாகிவிட்டது.
பின் அவனை பார்க்காமலேயே “இப்போ எதுக்கு சார் என்ன கூப்டீங்க..? நான் தான் தெளிவா சொல்லிட்டுதன சார் போனேன் எனக்கு போன்-லா எதுவும் பண்ணாதீங்கன்னு.. வீக் டேஸ்-ல இங்க வந்துட்டு போறதுக்கே நான் உயிர கையில புடிச்சிகிட்டு வந்து போறேன். இதுல நீங்க நினைச்ச நேரத்துக்கு போன் பண்ணி கூப்பிடுறீங்க..? உங்களுக்கு என்ன சார் உங்க போன் தன வேணும்.. எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுத்துடறேன். என்ன விட்டுடுங்க சார்.. எங்க வீட்டுக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா என்ன காலேஜ்-க்கு அனுப்பமாட்டாங்க” என்று வந்த கோவத்தில் மனதிலிருந்த ஆதங்கத்தையெல்லாம் அவள் கொட்டி தீர்த்துகொண்டிருக்க,
அவனோ “ஹே குள்ளச்சி.. அன்னைக்கு உங்க காலேஜ் கேன்டீன்-ல ஏதோ ரொம்ப ஸ்பெஷல்-னு சொன்னியே..? என்ன அது..?” என்றான் சம்மந்தமே இல்லாமல்.
‘ஏண்டா.. அப்போ இவ்வளோ நேரம் நான் தம் கட்டி பேசுனது எதுவுமே உன் காதுல விழல.. அப்படித்தானே’ என்பது போல் அவனை பார்த்தவளுக்கு எங்கு சென்று முட்டிகொள்வதென்றே தெரியவில்லை.
தான் பேசுவதை காதில் வாங்க கூடாதென்ற முடிவோடு இருப்பவனிடம் போய் இனி பேசுவதில் எந்த பயனும் இல்லை என்றுதான் அவளுக்கும் தோன்றியது.
அதனாலே அவன் கேள்விக்கு “ஃபில்டர் காஃபி சார்” என்று சுரமே இல்லாமல் சொன்னவள், “இத போன்-லே கேட்டு இருக்கலாம் இல்ல சார்” என்றாள் வருத்தம் தொணித்த குரலில்.
“யா.. ஃபில்டர் காஃபி..” என்று தனக்கு தானே ஒரு முறை சொல்லி கொண்டவன், பாதி குடித்து முடித்திருந்த ஷாம்பியன் கிளாசை டீபாய் மீது வைத்த விட்டு
“அத எப்படி போடுறது..?” என்று ஆர்வமாய் கேட்க, “இது வேறயா..?” என்று உள்ளுக்குள் சலித்துகொண்டவள், பின் அதன் செய்முறையையும் சொல்ல ஆரம்பித்தாள்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்தவன், “எனக்கு இப்பவே அத குடிக்கணும் போல இருக்கு. ஸோ… சீக்கரம் போய் மேக் பண்ணிட்டு வா” என்றவன் ஆள்காட்டி விரலால் கிச்சன் இருக்கும் இடத்தையும் சுட்டி காட்ட அவள் தான் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
“அடேய் காட்டு பயலே.. நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா..? உன் இஷ்டத்துக்கு வேலை வாங்குற..? ஏண்டா இந்த காஃபி-அ போடவாடா என்ன அரைமணிநேரம் டிராவல் பண்ணி வர வச்ச….? என் போன் மட்டும் என் கைக்கு வரட்டும் அன்னைக்கு இருக்குடி உனக்கு எல்லாத்துக்கும் சேர்த்து” என்று உள்ளுக்குள் அவனை திட்டியவள், வேறு வழியின்றி கிச்சனுக்குள் சென்றாள்.
அவனை திட்டிகொண்டே காஃபியை போட்டு எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தவள், “இப்போ நான் போகட்டுமா சார்..?” என்றாள்.
ஆனால் அவனோ அவள் வார்த்தையை கொஞ்சமும் காதில் வாங்காமல் காஃபி கப்பை நாசி அருகே கொண்டு சென்று அதன் நறுமணத்தை முகர்ந்து, “குட் ஸ்மெல்” என்றதோடு அதை அருந்தவும் செய்ய,
“எங்கயாவது போ-ன்னு சொல்றானா பாரு.. சரியான கல்நெஞ்சகாரன்” என்று உள்ளுக்குள் அவனை திட்டியபடியே நின்றுகொண்டிருந்தாள் இதழினி.
அவன் வாழ்நாளில் காஃபி என்ற ஒன்றையே இது நாள் வரை அவன் அருந்தியது கிடையாது.
காரணம் அவனின் தாயார் மருத்துவர் என்பதால் பொதுவாகவே அவர்கள் வீட்டில் டீ, காஃபி-க்கு பதில் பழச்சாறும், பாலும் தான்.
அதுவுமே அவனுக்கு பிடிக்காதவைகள் தான்.
எப்போது தானாக அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தானோ அன்று முதல் அவனின் எனர்ஜி டிரிங் ஷாம்பியன் மட்டும் தான் .
இன்று கூட அவளை இங்கு வர வைக்கதான் அவன் இந்த காஃபியை காரணமாக பயன் படுத்தியது கூட.
இப்போது அவன் குடிப்பது கூட அவள் போட்டு கொண்டு வந்தற்காக மட்டுமே.
பெயருக்கென்று ஒரு வாய் குடித்தவனுக்கு உண்மையிலேயே அதன் சுவை பிடித்துதான் போனது.
கண்களை மூடி இரசித்து அவன் குடித்து கொண்டிருக்க,
“குடிக்கிறான் பாரு.. நல்லா மாடு கழனி தண்ணி-அ குடிக்கற கணக்கா..” என்று உள்ளுக்குள் திட்டிகொண்டவளின் மனம் அதை அப்படியே கற்பனை செய்து பார்ககவும் தவறவில்லை.
அதை கற்பனை செய்துபார்த்தவளுக்கு அந்த இரணகளத்திலும் சிரிப்புதான் வந்தது.
சிரிப்பை அடக்க முடியாமல் ஒருகட்டத்தில் தன்னையும் மீறி கொண்டு அவள் பக்கென்று சிரித்துவிட, அந்த சத்தம் கேட்டு ரிஷப் நந்தனும் கண்களை திறந்திருந்தான்.
ஏங்கே சிரிப்பதை பார்த்துவிட்டால் காரணம் கேட்டு துளைத்தெடுத்து விடுவானோ என்று பயந்தவள், சட்டென்று சிரிப்பை விழுங்கி கொண்டதில் அவளுக்கோ எச்சில் புரையேறி விட்டது.
விடாமல் அவள் இருமிக்கொண்டே இருக்க, “என்னாச்சி டி..?” என்று கேட்டவாறே அவள் அருகில் சென்றவன், அவள் தலையை தட்டி கொடுத்தபோதும் அவள் இருமல் நின்ற பாடில்லை.
தொண்டையை பிடித்தபடி இருமியவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி போல் கொட்ட, அவள் நிலையை பார்த்தவனுக்கோ கை, கால்கள் ஓடவில்லை.
அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அவன் தவித்துகொண்டிருக்க, அவளோ தண்ணீர் வேண்டும் என்பது போல் கட்டைவிரலை உயர்த்தி ஜாடை செய்தாள்.
அவள் சைகை புரிந்தவன், “ஒன் மினிட்..” என்றவாறே சுற்றும் முற்றும் பார்த்தவன், டீபாய் மீதிருந்த கிளாசை எடுத்துவந்து அவளிடம் கொடுக்க, அவளும் இருமல் நிற்பதற்காக ஒரே மூச்சில் அதிலிருந்ததை குடித்து முடித்திருந்தாள்.
இருமல் நின்றபின்தான் அவளுக்கு உயிரே வந்தது போல் இருந்தது.
“ஆர் யூ ஓகே..?” என்றவனின் கேள்விக்கு ஓகே என்பது போல் மேலும் கீழுமாய் தலையை அசைத்தவாறே, வழிந்தோடிய கண்ணீரை ஷாலால் துடைத்துவிட்டவள் அப்போதுதான் நாவிலிருந்த வித்தியாசமான சுவையும், கையிலிருந்த கிளாசிலிருந்து வந்த வாடையும் கவனித்தாள்.
தண்ணீர் இப்படி இருக்காதே.. என்று யோசித்தவாறே அவனை பார்த்தவள்..
தன் கையில் இருந்த கிளாசை சுட்டி காட்டி “இது… இதுல என்ன இருந்துது..?” என்று கேள்வியாய் வினவ.
அவனோ “ஷாம்பியன்” என்றான் கூலாக.
அவன் கூறியதை கேட்டு நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தவளுக்கு இப்போது அருவெறுப்பில் உமட்டிகொண்டுதான் வந்தது..
கையிலிருந்த கிளாசை கீழே போட்டவள், அன்று போல் விறுவிறுவென வாஷ்பேஷனிடம் சென்று, குடித்ததை வெளிக்கொண்டு வரும் பொருட்டு விரலை வாய்க்குள் விட்டாள்.
என்ன முயன்றும் குடித்தது வராமல் போகவே நான்கைந்து முறை வாயை கழுவினால். இருந்தும் அந்த சுவை அவள் நாவை விட்டு போகவே இல்லை.
வந்த கோவத்திற்கு அவன் முன் சென்று நின்றவள், “நான் உங்ககிட்ட தண்ணீ-தன கேட்டேன். இருமலுக்கு யாராவது ஷாம்பியன் குடிப்பாங்களா..?” என்று கோவம் நிறைந்த குரலில் கேட்க, அவனோ அவள் கோவத்தையெல்லாம் பெரிதாக எடுத்துகொள்ளவே இல்லை.
“ஏன் நீ தான் இப்ப குடிச்சியே.. நல்லாதன இருக்க.. இருமல் நின்னுடுச்சி தன” என்றான் சர்வசாதரணமாக.
அவள் இருந்த நிலையை பார்த்தவனுக்கு தண்ணீர் தேடி கிச்சனுக்கு செல்லும் அளவிற்கெல்லாம் பொறுமை இல்லை.
அவனை பொருத்தமட்டில் அவளின் இருமலை நிறுத்த வேண்டும். அதற்கு லிக்யூட்-ஆக எதை கொடுத்தால் என்ன..? அதனாலே தண்ணீரை விடுத்து கண்ணில் பட்ட ஷாம்பியனை எடுத்து கொடுத்தான்.
இதில் எந்த தவறும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை. அவனை பொறுத்தமட்டில் அவனுக்கு அவள் செய்தது உதவி மட்டுமே.
“ஏன் தான் என்ன இப்படி டார்ச்சர் பண்றீங்களோ.. அன்னைக்கு என்னன்னா ஏகாதசி அதுவுமா என்ன பிரியாணி சாப்பிட வச்சி என் விரதத்த கெடுத்தீங்க.. இன்னைக்கு துளசி தீர்த்தம் குடிக்கற என்ன போய் ஷாம்பியன் குடிக்க வச்சியிருக்கீங்க.. நான் என்ன பாவம் பண்ணேன் உங்களுக்கு. எதுக்காக என்ன இப்படி வச்சி செய்றீங்க..? போச்சி.. என் லைஃப்-ல இனி என்ன லாம் நடக்கபோகுதோ..? பெருமாளே..“ என்று அன்று போலவே அவள் புலம்ப ஆரம்பித்திருக்க,
“ஆரம்பிச்சிட்டாளா..?” என்று வாய்க்குள் முனுகியவாறே இடுப்பில் கைவைத்தபடி அவளை பார்த்துகொண்டிருந்தான் ரிஷப்.
அவள் புலம்பியபடியே இருக்க, அவளாக முடிப்பாள் என்று சில கணங்கள் அமைதிகாத்தவனுக்கு இப்போதைக்கு அவள் முடிக்கபோவதில்லை என்றுதான் தோன்றியது.
“இவள…” என்று முனகியவாறே இரண்டெட்டில் அவளை நெருங்கியவன், அவள் புலம்புவதை நிறுத்தும் பொருட்டு சட்டென்று ஒரு கையால் அவளின் இருகன்னங்களையும் அழுந்த பற்றியிருந்தான்.
அவனின் திடீர் செயலால் மேற்கொண்டு பேசமுடியாமல் அதிர்ந்து போனவள், மிரண்டு போய் அவனை விழிகள் விரித்து பார்த்தாள்.
தன்னை அதிர்ந்து பார்ப்பவளை பார்த்து “மவளே இப்போ பேசுடி..” என்றவன் சொல்ல,
“அடேய் காட்டுபயலே எப்படிடா பேச முடியும்..? நீ கை-அ எடுத்தாதணடா பேச முடியும்” என்று உள்ளுக்குள்தான் அவளால் அவனை திட்டிமுடிந்ததே தவிர, நிஜத்தில் அவளால் வாயை கூட திறக்க முடியவில்லை.
அவள் கன்னங்களை அவன் அழுந்த பற்றியிருந்ததில் அவளின் இதழ்கள் குவிந்த வண்ணம் இருக்க, இதில் எங்கிருந்து அவளால் பேச முடியும்.
அவன் கையை தட்டிவிட முயன்றவளின் கரங்கள் அவன் பார்த்த அனல் பார்வையில் அமைதியாகிவிட
“இப்போ எதுக்குடி.. தையா.. தக்கா-ன்னு குதிச்சிகிட்டு இருக்க.. இருமலுக்கு தண்ணீர் மட்டும்தான் குடிக்கணும்னு இல்ல.. லிக்யூட்-அ எத குடிச்சாலும் இருமல் நிக்கும். விக்கிகிட்டு சாகாம என் ஷாம்பியன்-அ கொடுத்து உன்ன நான் காப்பாத்தியிருக்கேன். அதுக்கு நீ தேங்க்ஸ் சொல்லனாலும் பரவாயில்ல.. இப்படி நான் ஸ்டாப்-ஆ புலப்பாத.. மண்டைக்குள்ள இரயில் ஓடுற மாதிரி இருக்கு.. இப்ப என்னடி உனக்கு பிரச்சனை..? பிரியாணி, ஷாம்பியன் குடிச்சதால நீ செத்தா போய்ட்ட.. உயிரோட தன இருக்க..?’’ என்றவன் அதட்டி கேட்டதில் அவளுக்கோ உடல் தூக்கிவாரி போட்டது.
“இன்னொருதடவ இந்த மாதிரி என் முன்னாடி நான் ஸ்டாப்-ஆ புலம்புன..” என்றவாறே, அவள் முகம் நோக்கி அவன் குனிய அவளோ பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
அந்த ஏ.சி அறையிலும் பயத்தில் அவள் நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பியிருக்க, அதை கவனித்தவனோ இதழ் குவித்து வாயிலிருந்த காற்றை ஊத, அவனின் மூச்சுகாற்று தீண்டியதில் அவளுக்கோ மெய் சிலிர்த்து விட்டது.
இருந்தும் விழிகளை திறக்காமல் அவள் கண்களை மூடியே இருக்க, அவளின் முகத்தை இத்தனை நெருக்கத்தில் பார்த்தவனின் கோவமெல்லாம் இப்போது எங்கு சென்று ஒளிந்ததென்றே தெரியவில்லை.
அவளின் நெற்றி பரப்பில் அடர்ந்திருந்த பேபி ஹேர் மீது மீண்டும் இதழ் குவித்து வாயிலிருந்த காற்றை அவன் ஊத, அப்போதும் அவள் கண்களை திறக்கவே இல்லை.
அணுஅணுவாய் அவளை இரசித்து கொண்டிருந்தவனின் பார்வை இறுதியாகதான் முத்தம் கொடுப்பது போல் குவிந்திருந்த அவளின் சிவந்த அதரங்களின் மீது படிந்து நின்றது.
அவளின் சிவந்திருந்த அதரங்களை பார்த்த மாத்திரத்திலேயே அவள் அதரங்களில் அழுத்தமாக முத்தம் மிட வேண்டும் போல இருந்தது ரிஷப் நந்தனுக்கு.
தன் இதழ்களை ஈரப்படுத்தி கொண்டவனுக்கு என்ன முயன்றும் அவள் அதரங்கள் மீதிருந்த தன் பார்வையை எடுக்கவும் முடியவில்லை அவளிடமிருந்து விலகவும் முடியவில்லை.
இதில் அவளிடமிருந்து வந்த சாண்டில் பவுடர் வாசனை வேறு அவன் ஹார்மோன்களை ஏற்றிவிட்டு கொண்டிருக்க, அவனின் இதயமும் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்திருந்தது.
அவன் மூச்சிகாற்று வேறு அதீத உஷ்ணத்தை உமிழ்ந்து கொண்டிருக்க, இதற்கு மேலும் தன்னால் தன்னை கட்டுபடுத்த முடியாத நிலைதான் ரிஷப் நந்தனுக்கு.




