Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
0

அத்தியாயம் - 18

January 23, 2026
சந்தோஷ் குணா
0
8 min read
அத்தியாயம் - 18
Hero - Music Director, Heroine - Music student

உடை மாற்றிவந்தவளை பார்த்த இலக்கியா கேள்வி கேட்கும் முன்பே, “சித்தி மேம் வர சொல்லியிருக்காங்க.. நெக்ஸ்ட் மந்த் மியூசிக் காம்பெடிஷனுக்காக அவங்கதான் என்ன டிரெயின் பண்றாங்க.. நான் போய்ட்டு சீக்கரமா வந்துடறேன் சித்தி” என்று இலக்கியாவின் முகத்தை கூட பார்க்காமல் பொய் சொன்னவள், அங்கிருந்து நகரவும் செய்ய,

“துணைக்கு ஹரண்-அ கூட்டிட்டு போறியா இதழினி..” என்றாள் இலக்கியா.

இலக்கியா கூறியதை கேட்டு ஹரணும் ஓடிவந்து “ஆமா-க்கா நானும் உங்க கூட வர்றேன்” என்று அவள் கரத்தை பற்றி கொள்ள,

“என்னது இவனும் கூட வர்றானா… இருக்க பிரச்சனையில நீ வேற ஏண்டா..?” என்று உள்ளுக்குள் சலித்துகொண்டவள்,

“டேய் நெக்ஸ்ட் வீக் லேந்து காலாண்டு ஆரம்பிக்குது இல்ல. ஒழுங்கா போய் படி” என்று கண்டிப்போடு சொன்னவள், இலக்கியா புறம் திரும்பி,

“வேண்டாம் சித்தி.. அவன் படிக்கட்டும். அங்க வந்து எங்க வாய்-அ தான் பார்த்துட்டு இருப்பான்” என்றவள், எங்கே மேற்கொண்டு எதையாவது கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து கிளம்பினாள்.

செல்லும் அவளையே பார்த்து கொண்டிருந்த இலக்கியாவிற்கோ டியூஷன், காலேஜ், காம்பெடிஷன் என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பவளை பார்த்து பாவமாகத்தான் இருந்தது.

அவன் மெசேஜ் அனுப்பியிருந்தது போலவே, பேருந்து நிலையத்தில் அவன் சொன்ன கார் இருக்க, யாரும் பார்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடியே அவள் காருக்குள் ஏறிக்கொள்ள காரும் அங்கிருந்து கிளம்பியது.

அவள் பாதுகாப்பிற்காக அவன் தான் அவள் மறுக்கா வண்ணம் இந்த கேப் ஏற்பாட்டை செய்திருந்தான்.

காருக்குள் ஏறி அமர்ந்தவளுக்கு சற்றுமுன் இலக்கியாவிடம் சொன்ன பொய்யை நினைத்து கண்களை கரித்துகொண்டு வந்தன.

உண்மையில் அவளுக்கும் அங்கு செல்ல விருப்பமில்லைதான். ஆனால் என்ன செய்ய அவளின் சூழ்நிலை அவளை அங்கு செல்ல வைத்திருந்தது.

குழந்தைங்களின் அரங்கேற்றத்தை நெருக்கத்தில் வைத்து கொண்டு அவன் போல் அவளால் பிடிவாதம் பிடிக்கமுடியாதே. அந்த குழந்தைகளுக்காகவும் அவள் யோசித்தாக வேண்டிய கட்டாயம்.

அத்தோடு அதில் வரும் பீஸ் தொகையை வைத்துதான் அடுத்தமாதம் அவளின் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். இப்படி பட்ட சூழ்நிலையில் அவளால் எப்படி அங்கு செல்லாமல் இருக்க முடியும்.

இந்த காரில் செல்வது கூட அவளுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் பஸ் பிடித்து சென்றால் அவன் இருக்கும் இடத்திற்கு போய் சேரவே குறைந்தது ஒரு மணிநேரம் ஆகிவிடும். டியூஷன் பசங்களையும் அவள் பார்த்தாக வேண்டுமே.

அதேசமயம் தினமும் ஆட்டோவில் செல்லும் அளவிற்கு அவளிடம் பணம் ஒன்றும் கொட்டி கிடக்கவில்லையே.

அனைத்தையும் பலமுறை யோசித்து பார்த்தவள் அதன்பின் தான் வேறு வழியே இல்லாமல் இந்த முடிவை எடுத்தது கூட.

இந்த காருக்கான பணத்தை கூட பின்நாளில் எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்றும் மனதில் குறித்து வைத்து கொண்டாள் இதழினி.

ஸ்டுடியோவிற்குள் நுழைந்தவளை பார்த்தவன், “ஹாய் இதழ்..” என்று கையசைக்க, அவளோ பெயருக்கென்று கூட அவனை பார்த்து சிரிக்கவில்லை. உம்மென்றே இருந்தாள்.

கோவத்துடனே கையோடு எடுத்துவந்திருந்த பையை டொம்மென்று வைத்தவள்,

“சார் என் பேர் இதழ் இல்ல இதழினி” என்றாள் இனி தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்பது போல்.

அவளின் பேச்சிலேயே அவள் கோவமாக இருப்பது ரிஷப் நந்தனுக்கும் புரியவே செய்தது.

இருந்தும் “ஆனா இதழினிக்குள்ள தானே இதழ்-ம் இருக்கு” என்றான் அப்படித்தான் உன்னை அழைப்பேன் என்பது போல் அவனும்.

இனி அவனிடம் பேசுவது வீண் என்று நினைத்தவள் அவனிடமிருந்த தன் போனை வாங்கி கையோடு கொண்டு வந்திருந்த ஸ்டேண்டில் பொறுத்தி பரதம் கிளாசையும் எடுக்க ஆரம்பித்தாள்.

முதலில் அவன் முன் ஆட ஒரு மாதிரியாக இருந்தாலும்.. பின் மாணவிகளுக்காக ஆட ஆரம்பித்தாள்.

நானும் டியூன் போடுகிறேன் என்பது போல் பியானம் முன்பு சென்று அமர்ந்தவனின் விழிகள் நிலைத்திருந்தது என்னவோ அவளின் விழிகளில் தான்.

நயனத்திற்கு ஏற்ப விழிகளை உருட்டி புருவத்தை உயர்த்தி அபிநயத்தோடு அவள் ஆடி கொண்டிருக்க, அவனோ அவள் விழியின் ஒவ்வொரு அசைவையும் இரசனையோடு பார்த்து கொண்டிருந்தான்.

வகுப்பு முடிந்தபின் மீண்டும் அவள் முகம் இறுக்கமாக அதையும் அவன் கவனிக்கவே செய்தான்.

அவனிடம் சொல்லாமல் கூட பேக்கை மாட்டிக்கொண்டு அவள் கிளம்ப, “என் போன் என்னாச்சி..?” என்று ஆரம்பித்தான் அவனே.

அவன் குரல் கேட்டு திரும்பி அவனை பார்த்தவள் “தேடிட்டு இருக்கேன் சார்” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னவள், தன்னுடைய சிம்-மை அவனிடம் கேட்டு பார்த்தாள்.

கொடுக்க முடியாது என்பது போல் அவன் உதட்டை பிதுக்க, “அட்லீஸ்ட் ஆன்லைன் கிளாஸ்-க்கு மட்டும் உங்க போன்-அ யூஸ் பண்ணிக்கவா..?” என்றாள்.

“நோ.. நோ… அது என்னோட பிரைவசி நம்பர். அது நான் உன்ன காண்டாக்ட் பண்ண மட்டும்தான்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல அவளுக்கோ முகம் சோர்ந்துவிட்டது.

சோர்ந்து போயிருப்பவளின் முகத்தை கைகளில் ஏந்தி சமாதானப்படுத்ததான் அவனுக்கும் ஆசை. ஆனால் என்ன செய்ய.. அவனும் என்ன வேண்டுமென்றா அவளை இங்கு வரவழைத்து கஷ்டபடுத்துகிறான்.

நினைத்த நேரத்திற்கு அவளை பார்பதற்காக ஒரு காரணத்தையே உருவாக்கியவன், இப்போது தன்னைத்தேடி வந்த வாய்ப்பை அவ்வளவு லேசில் விட்டுவிடுவானா என்ன..?

“நான் கிளம்புறேன் சார்…” என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பும் போதுதான் மூவருக்குமான உணவோடு அங்கு வந்து சேர்ந்திருந்தான் கவின்.

“ஹாய் டார்லிங்..” என்று எப்போதும் போல் ரிஷப்பை கட்டிக்கொண்ட கவின், அப்போதுதான் அங்கிருந்தவளை கவனித்தான்.

“ஹாய் சிஸ்டர்..” என்று அவளை பார்த்து அவன் கையசைக்க அவளோ, “ஹாய்” என்றாள் சுரமே இல்லாமல்.

சாப்பிட்டு விட்டு போகலாம் என்று கவின் எவ்வளவு சொன்னபோதும் வேண்டாமென்று மறுத்தவள் அங்கிருந்து கிளம்புவதில்தான் குறியாக இருந்தாள்.

என்ன தான் அவள் வேண்டாமென்று மறுத்தாலும் அவள் முகத்தில் இருந்த டயர்ட் அவள் எந்த அளவிற்கு களைப்புற்று இருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்ல, அதுவரையும் அமைதியாக பார்த்துகொண்டிருந்த ரிஷப்,

“இப்போ சாப்பிடுறதுல உனக்கு என்ன பிரச்சனை..?” என்று கேட்டவாறே அவள் முன்னால் சென்று நிற்க.

“இப்போ நான் சாப்பிடாததால உங்களுக்கு என்ன சார் பிரச்சனை..?” என்று அவன் வார்த்தையே அவனுக்கு அவள் திருப்பி கொடுக்க, அவளின் இந்த நிமிர்வு இன்னும் அவள் பால் அவனை ஈர்க்கவே செய்தது.

இதுநாள் வரையில் யாருமே அவன் முன்னால் இப்படி நின்று எதிர் கேள்வி கேட்டது கிடையாது. ஏன் கவின் கூட எப்போது அவன் கோவப்பட்டாலும் அவனை சமாதானப்படுத்ததான் முற்படுவானே என்றும் எதிரில் நின்று அவனுக்கு எதிராக ஆர்கியூ செய்ததில்லை.

தைரியமாக தன் முன்னால் நின்று தன்னையே கேள்விகேட்கும் அவளின் திமிர் நிறைந்த கோவம் அவனுக்கு பிடித்திருந்தது.

அவள் விழிகள் முழுவதும் நிறைந்திருந்த திமிர் நிரம்பிய கோவத்தை தன் விழிகளாலே பருகிகொண்டவன்,

“ம்.. கண்டிப்பா எனக்கு பிரச்சனை தான்..” என்று பியர்டை வருடிவிட்டவாறே மேலும் அவளை அவன் நெருங்க, அவளோ பின்னால் இரண்டெட்டு நகர்ந்தாள்.

“பாரு இப்பவே மணி ஒன்பது ஆகுது. எப்படியும் நீ வீட்டுக்கு போய் ரெஃப்ரஷ் ஆகி சாப்பிடுறதுகுள்ள மணி பத்தாகிடும். சாப்ட உடனே டயர்ட்-ல படுத்துடுவ. அதனால உனக்கு டைஜஷன் பிராப்ளம், ஹெல்த் ஈஷ்யூ வர நிறைய வாய்ப்பிருக்கு. நீ பாட்டுக்கு உடம்புக்கு முடியலன்னு காலேஜ்-க்கு லீவ் போட்டுட்டா என் ஐபோன்-அ யாரு கண்டுபிடிச்சி தர்றது..?” என்று கையை விரித்து கேட்டு அவளை அவன் லாக் செய்ய,

“நீயாடா இப்படியெல்லாம் பேசுறது..” என்பது போல் ஆச்சரியமாய் அவனை பார்த்து கொண்டிருந்தான் கவின்.

இந்த உலகத்துல இப்படியொரு சுயநலவாதி-அ நான் பார்த்ததே இல்ல என்பது போல் கேவலமாக அவனை ஒரு பார்வை பார்த்தவள், மேற்கொண்டு அவனிடம் விவாதம் செய்ய விரும்பவில்லை.

கவின் வாங்கி வந்த பார்சலை பிரித்தவள் அது என்ன உணவு என்று கூட பார்க்காமல் அதை எடுத்து உண்ண ஆரம்பித்தாள் அவன் மீதிருந்த கோவ விழிகளை அகற்றாமலேயே.

அவன் மீதான கோவத்தில் உணவை அள்ளி அள்ளி வாயில் திணித்தவள், அதை மென்று கூட விழுங்காமல் அப்படியே விழுங்கினாள்.

ஆனால் அவனோ எப்படியோ அவள் உண்டால் போதும் என்பது போல் மார்பில் கை கட்டியவாறு அவளையே பார்த்து கொண்டிருந்தான் மென் புன்னகையுடன்.

உணவை அள்ளி அள்ளி வாயில் திணித்துகொண்டிருந்தவளின் கைகளில் ஏதோ தட்டுபட, அது என்னவென்று புருவமுடிச்சியுடன் பார்த்தவள்,

“இது… இது… என்ன இது..?” என்று கேட்க,

கவினோ, “சிக்கன் பிரியாணி-ல சிக்கன் தான் இருக்கும்” என்றவன் சொல்லி முடித்ததுதான் தாமதம்,

கையிலிருந்த உணவை டீபாயின் மீது வைத்தவள் ஓட்டமும் நடையுமாக சென்று வாயில் இருந்த உணவை வாஷ்பேஷனில் துப்பியதோடு, விழுங்கிய உணவை வெளி கொண்டு வர என்னென்னெவோ செய்ய, அதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த மற்ற இருவருக்கும் அவள் செயல் சுத்தமாக விளங்கவில்லை.

என்ன செய்தும் வரமால் போகவே, இப்போது கோவமாக அவன் முன்னால் தான் சென்று நின்றாள் இதழினி.

விழிகள் கலங்க தன் முன்னால் வந்து நின்றவனை பார்த்தவன், “என்னடி ஆச்சி..? சாப்பாடு பிடிக்கலையா..?” என்று கேட்டவனை விழிகள் கலங்க கோவத்தோடு பார்த்தவள்,

“இன்னைக்கு ஏகாதசி..” என்று அழுகை அடைக்க சொல்ல,

“அதுக்கு..?” என்றான் அவன்.

“ஐய்யோ ஏகாதசி அன்னைக்கு நான் நான்வெஜ் சாப்பிடமாட்டேன். என் விரதத்துல இப்படி மண்ண அள்ளி போட்டுடீங்களே.. இப்ப உங்களுக்கு சந்தோஷமா..?“ என்று விழிகள் கலங்க அவள் கேட்க, மற்ற இருவருமே அது என்ன ஏகாதசி என்று புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

“போச்சி.. எல்லாம் போச்சி.. பிரம்ம முகூர்த்தம் போச்சி.. ஏகாதசி போச்சி.. என் லைஃப்-ல பெருசா என்னவோ அசம்பாவிதம் நடக்க போகுது. பாட்டி சொன்ன மாதிரி நானும் அவமான பட்டு அசிங்க பட்டு நிற்க போறேன் போல..” என்று அவள் பாட்டுக்கு புலம்ப ஆரம்பிக்க, அவளை எப்படி சமாதானப்படுத்துவதென்று இருவருக்குமே தெரியவில்லை.

“சிஸ்டர் அதெல்லாம் ஒன்னும் ஆகாது..” என்று கவின் சொன்னபோது கூட அவள் புலம்புவதை நிறுத்தவே இல்லை.

லபோ திபோ என்று சொன்னதையே சொல்லி அவள் புலம்ப, ரிஷப் நந்தனால் ஒருகட்டத்திற்கு மேல் அவளின் புலம்பலை சகித்துகொள்ள முடியவில்லை.

இரண்டெட்டில் அவளை நெருங்கியவன் சட்டென்று அவள் இதழ் மீது விரல் வைத்து, “உஷ்” என்க, அவளோ அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

“மவளே மறுபடியும் எதாவது புலம்ப ஆரம்பிச்ச.. இவன் இருக்கான்னு கூட பார்க்க மாட்டேன்” என்று பக்கத்திலிருந்த கவினை சுட்டிகாட்டியவன்,

“கட்டிபுடிச்சி லிப் டூ லிப் அடிச்சிடுவேன்” என்று சொல்ல, அதன் பின் ஏன் அவள் சத்தம் போட்டு மூச்சி கூட விட போகிறாள்.

அவன் செய்தாலும் செய்யகூடியவன் தான். ஏற்கனவே ஒரு முறை அவனிடம் மாட்டிகொண்டதை அவள் ஒன்றும் மறக்க வில்லையே.

இப்போது விழிகள் நிறைய பயத்துடன் அவள் அவனையே பார்த்திருக்க, “டைம் ஆச்சி கிளம்பு” என்றான் ரிஷப்.

பதிலுக்கு சரி என்பது போல் தலையை மட்டும் அவள் ஆட்ட, பின் கவின் தான் அவளின் பேக்கை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.

அதை வாங்கி கொண்டவள் வாயிலை நோக்கி இரண்டடிதான் எடுத்து வைத்திருப்பாள், அதற்குள் “ ஒரு நிமிஷம்” என்று ரிஷப் சொல்ல,

அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டு விட்டது சொன்னது போல் எதையாவது செய்துவிடுவானோ என்று.

பயத்தில் திரும்பி கூட பார்க்காமல் அவள் அப்படியே நின்றிருக்க, ரிஷப் நந்தனே அவள் முன்னால் சென்று நின்றான்.

அவனை பார்த்த மாத்திரத்திலே பயத்தில் அவளுக்கு கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன.

அவளை நெருங்கி நின்றவன், அவள் தோள் மீது கிடந்த ஷால் மீது கைவைக்க போக, ஷாலை இறுகபிடித்துகொண்டவளோ “சார்” என்றாள் கண்ணீர் மல்க.

வலுக்கட்டாயமாக அவள் கையிலிருந்த ஷாலை பிடுங்கியவன், அந்த ஷாலால் அவள் முகத்தை மறைத்து, அதன்பின்னே “இப்போ போ” என்க, அவளோ சிட்டாக அந்த இடத்தை காலிசெய்திருந்தாள்.

அவள் கார் சென்று மறையும் வரை பார்த்திருந்தவனின் முதுகில் தட்டி கொடுத்த கவின், “சரி வா டார்லிங் சாப்பிடலாம்” என்க, ரிஷப்பும் அவனோடு உண்ண சென்றான்.

கவின் பிரித்து கொடுத்த உணவை வாங்காமல், அவள் உண்டு வைத்த மீத உணவை எடுத்து ரிஷப் உண்ண, “பாருடா..” என்றான் கேலியாய் கவின்.

அவள் எச்சில் உணவை உண்டுகொண்டிருந்தவன் ஏதோ நினைவிவந்தவனாய் “டேய் கவின்.. அவ எதோ பிரம்மன், முகூர்த்தம், ஏகாதசி-ன்னு சொன்னளே.. அப்படினா என்ன..?” என்க.

வாயிலிருந்த உணவை மென்று விழுங்கிய கவினோ, “தெரியலையே..” என்றதோடு.. “சிஸ்டர் நான்-வெஜ் சாப்பிட மாட்டன்னு சொல்றத பார்த்தா இதெல்லாம் ஏதோ ஃபாஸ்டிங் டேட் போல இருக்கு..” என்றான்.

“அதென்ன ஃபாஸ்டிங் டேட்..?” என்றான் மீண்டும் ரிஷப் அவனை கேள்வியாய் பார்த்து.

“ப்ச்.. அதாண்டா.. கல்யாணம் ஆனதுக்கபுறம் இந்த அம்மாக்கள் எல்லாம் தன்னோட ஹஸ்பண்ட்-காக சாப்பிடாம இருந்து பூஜை பண்ணுவாங்களே.. சின்ன வயசுல எங்க அம்மா கூட அப்பா-க்காக அடிக்கடி ஃபாஸ்டிங் எடுப்பாங்க. சிஸ்டர் மாதிரியே சம் டேஸ் அவங்க நான்-வெஜ் கூட சாப்பிட மாட்டாங்க” என்று தான் அறிந்த விவரத்தை கவின் சொல்ல,

ரிஷப்பிற்கு தான் இதெல்லாம் கேட்பதற்கு புதிதாக இருந்தது. காரணம் மழைக்கு கூட அவன் கோவில் பக்கம் ஒதுங்கியது கிடையாது. அவனின் பெற்றோர் இருவரும் வேலை வேலையென்று ஓடியதில் வீட்டில் கூட பூஜை, புனஸ்காரங்கள் என்று அவன் பார்த்தது கிடையாது. அத்தனைக்கும் மேல் அவனுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது.

அவனை பொறுத்த மட்டில் செய்யும் தொழிலே தெய்வம் அவ்வளவு தான்.

கவின் கூறியதை கேட்டு, “ஓ..” என்று இழுத்தவன், “ஆனா இவளுக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலையே.. அப்புறம் ஏன் இப்பவே ஃபாஸ்டிங்…?” என்று கவினிடம் கேட்ட போது.

“ம்.. மே பீ.. நல்ல லைஃப் பார்ட்னர் கிடைக்கணும்னு எடுக்கறாங்களோ.. என்னவோ..” என்றவனை முறைத்தான் ரிஷப் நந்தன்.

“அதென்ன நல்ல லைஃப் பார்ட்னர்..?” என்று திருப்பி அவனையே கேட்டவன்,

“இந்த ரிஷப் நந்தன் கிடைக்கன்னு சொல்லு” என்று திருத்தி சொல்ல, அவனை பார்த்து சரி என்பது போல் சிரித்துகொண்டே தலையை ஆட்டிய கவின்,

“டார்லிங் சீரியஸ்லி யூ லவ் ஹெர்..?” என்றான் அவனை ஆழமாக பார்த்து.

கவின் உண்டு முடித்த பார்சல் கவரையும் சேர்த்து குப்பைகூடையில் போட்டுவிட்டு கைகழுவி வந்த ரிஷப்,

 

“உனக்கு ஏன் இப்போ இந்த ஈர வெங்காய சந்தேகமெல்லாம்..?” என்று அவனை பார்த்து கேட்டவன்,

அவனுக்கு சற்று தள்ளி அமர்ந்து “நீ நம்புறீயோ..? இல்லையோ… கற்பனையில அவ கூட குடும்பம் நடத்தி நேத்து தான் எங்களுக்கு செகண்ட் பேபி கூட பொறந்துச்சி..” என்று ரிஷப் வெகு கேஷவலாக சொல்ல

அவன் கூறியதை கேட்டு “வாட்” என்று முதலில் அதிர்ந்த கவின்,

“அடப்பாவி.. கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் அநியாயம் வேண்டாமாடா..? நீ சிஸ்டர்-அ பார்த்தே இரண்டுமாசம் கூட ஆகாது.. அதுக்குள்ல இரண்டாவது புள்ளையா..?” என்று கேட்டு சிரித்தவன்.

“நல்ல பொருத்தம் டா உங்களுக்குள்ள.. நீ கடவுள்-னா யார்ன்னு கேட்கற ஆளு.. அவளுக்கு எல்லாமே பெருமாள் தான். சார்-க்கு ஒரு வேளை கூட நான்-வெஜ் இல்லாம உள்ள இறங்காது. மேடம்-க்கு நான்-வெஜ்-ல பெருசா இன்ட்ரஸ்டே இல்ல… எப்டிடா..?” என்று கேட்டவன்,

“ஆமா டார்லிங்.. கல்யாணத்துக்கு அப்புறம் இந்த ஏகாதசி-யை எல்லாம் எப்படி ஹேண்டில் பண்ண போற..?” என்றவனை பார்த்து,

“இதுல ஹேண்டில் பண்ண என்ன இருக்கு..? அவ இஷ்டப்படி அவ இருக்கட்டும்.. ஆனா ஒன்னு ஃபாஸ்டிங் அது இதுன்னு உடம்ப கெடுத்துகிட்டானா அப்புறம் நான் எதுக்கும் அலோ பண்ணமாட்டேன்” என்றவன் உறுதியான குரலில் சொல்ல

“ஹவ் சுவீட் யூ” என்று அவனை கட்டி கொண்டான் கவின்.

வீட்டிற்கு வந்தவளுக்கு இலக்கியாவும் இரவு உணவை அறைக்கே கொண்டு வந்து கொடுக்க,

“மேம் வீட்லே சாப்டுடேன் சித்தி” என்று நிமிர்ந்து கூட இலக்கியா முகத்தை பார்க்காமல் சொன்னவள் படுக்கையில் சென்று படுத்து கொண்டாள்.

படுத்து கொண்டவளுக்கோ இந்த பொய்யெல்லாம் எங்கு சென்று அவளை நிறுத்தபோகிறதோ என்ற பயம் தான்.

8 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels