அதுவரையும் அவளின் விழிகளையே பார்த்திருந்தவனின் பார்வை இப்போது அவளின் சிவந்த அதரங்களின் மீது பட, இதற்கு மேல் இவ்வளவு நெருக்கத்தில் இருப்பது இருவருக்குமே சரியன்றுதான் தோன்ற,
உஷ்ண மூச்சிகாற்றை விட்டபடியே அவளை விட்டு அவன் விலகி நிற்க, அவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.
ஆனால் அவனுக்குதான் அவளை விட்டு விலகியபின்னும் தன்னை ஆசுவாசப்படுத்த சில கணங்கள் பிடித்தன.
இருகைகளாலும் முன்னுச்சியை கோதிவிட்டவாறே இருக்கையில் சென்று அமர்ந்தவன்,
“ஓகே நான் போட்டோவ டெலீட் பண்ணிடறேன்..” என்க, அவளுக்கோ அப்போதுதான் மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
அதுவும் சில கணங்கள்தான், “ஆனா அதுக்கு முன்னாடி..” என்று இழுத்தவாறே அவளை பார்த்தவன் தன் வலக்கரம் நீட்டி,
“என் போன் எங்க..?” என்று கேட்க, அவளோ அதான் பக்கத்தில் இருக்குதே என்பது போல் அவனுக்கு அருகாமையில் கிடந்த போனை பார்த்தாள்.
அவள் பார்வையை படித்தவன், "இந்த போன் இல்ல.. என்னோட பர்சனல் ஐ போன்.. அது உங்க காலேஜ்-லதான் மிஸ் ஆகிடுச்சி” என்றவனை
அதுக்கு..? என்பது போல் அவனை புருவம் சுருக்கி பார்த்தாள் இதழினி.
“அன்ட் தென் நான் ஏற்கனவே உன் கிட்ட தெளிவா சொல்லியிருக்கேன்.. உங்க காலேஜ்-லேந்து கிளம்புறவரைக்கும் நீதான் எங்களுக்கு ஃபுல் ரென்ஸ்பான்சிபுள்ன்னு” என்று மீண்டும் அவளுக்கு நினைவூட்டுவதுபோல் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்,
“ஸோ.. நீ என் போன்-அ கண்டுபிடிச்சி கொடு.. நான் போட்டோ-வ டெலீட் பண்ணிடறேன்” என்று கால் மேல் கால்போட்டவாறே சொல்ல,
அவளுக்கோ, “இதென்னடா இந்த இதழினிக்கு வந்த சோதனை” என்ற நிலைதான்.
அத்தோடு எதை எதோடு முடித்துபோடுகிறான் என்று கோவம் வேறு அவன் மீது அவளுக்கு,
“அப்படியே இவர் சின்ன குழந்தை.. இவர் தொலைப்பாராம் அத நான் தேடி கண்டுபிடிச்சி கொடுக்கணுமாம்…? மூஞ்சயும் முகரகட்டையையும் பாரு” என்று உள்ளுக்குள் தான் அவனை திட்டமுடிந்ததே தவிர நேரில் அவளால் அவனை முறைத்து கூட பார்க்கமுடியவில்லை.
“சாரி சார். கண்டிப்பா எங்க ஸ்டூடண்ட்ஸ் யாரும் எடுத்து இருக்க மாட்டாங்க” என்று நம்பிக்கை மிகுந்த குரலில் சொன்னவள்,
“வந்த இடத்துல நீங்கதான் சார் உங்க பொருள்-அ கேர்ஃபுல்லா வச்சியிருந்திருக்கணும். அத விட்டு போட்டோ-வ வச்சி என்ன மிரட்டுறதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல சார். நீங்க அந்த போட்டோவ எங்க வேணும்னாலும் போட்டுக்கோங்க. நான் கிளம்பறேன்” என்று என்னதான் தைரியமாக அவனிடம் சொல்லிவிட்டாலும், எங்கே போட்டோவை இணையத்தில் போட்டுவிடுவானோ என்ற பயம் உள்ளூர அவளுக்குள் இருக்கத்தான் செய்தது.
இருந்தும் அதை வெளிக்காட்டாமல் அங்கிருந்து அவள் கிளம்ப,
செல்லும் அவளையே சில கணங்கள் பார்த்திருந்தவன், “சரி கிளம்பு.. நானும் நியாயமா உன் காலேஜ் மேலே கம்பிளைண்ட் ஃபைல் பண்கிறேன்” என்றான் செல்லும் அவளை தடுக்கும் விதமாக.
தான் நினைத்தது போலவே காலேஜ் பெயரை கேட்ட கணமே அடுத்த அடி எடுத்துவைக்காமல் அவள் நின்றுவிட,
“எனக்கு தெரியாதாடி உன்ன எப்படி ஹேண்டில் பண்ணனும்” என்று தனக்குதானே சொல்லிக்கொண்டவன்,
“என்ன போகலையா..?” என்றான் வேண்டுமென்றே.
அவன் சொல்வது போல் கல்லூரி மீது கேஸ் பைல் செய்தால் அது கல்லூரிக்கும், கல்லூரியின் பெயருக்கும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவளும் அறியாதவள் இல்லை.
கல்லூரிக்கு ஒரு நற்பெயர் கிடைக்கவேண்டும் என்றுதானே இதற்கு முன்னால்கூட அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவள் எதுவும் சொல்லாமல் ஆடியது. அப்படியிருக்க இப்போது மட்டும் அவளால் எப்படி அவனை எதிர்த்து நிற்க முடியும்.
“கேட்குறான் பாரு கேள்வி.. கிளம்பலையான்னு… கால வைக்கற இடமெல்லாம் கன்னிவெடியா வெடிச்சா.. நான் எங்க இருந்துடா கிளம்புறது காட்டு பயலே…” என்று உள்ளுக்குள் அவனை திட்டிகொண்டவள், வேறு வழியில்லாமல் திரும்பி அவனை பாவமாக பார்க்க, அவளின் இந்த அதிரடி முகமாற்றத்தை கண்டு அவனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது.
இருந்தும் அதை மென்று விழுங்கியபடியே, “வாட்..?” என்க.
அவளோ, “இப்ப நான் என்ன தான் சார் பண்ணனும்.” என்றாள் பாவமான குரலில்.
வழிக்கு வந்தியா.. என்பது போல் அவளை பார்த்து மெலிதாய் சிரித்துவைத்தவன், “உன் போன்-அ கொடு” என்க,
அவளோ “என்.. போன் எதுக்கு சார்..?” என்று கேட்டவாறே அவனிடம் தன் போனை கொடுத்தாள்
அவள் போனை வாங்கிகொண்டவனோ, “என் போன்-அ கண்டுபிடிச்சி கொண்டுவந்து கொடுத்துட்டு உன் போன்-அ நீ வாங்கிக்கோ” என்று சொல்ல, அவளுக்கோ தலையில் இடி விழுந்த நிலைதான்.
“ஐய்யோ சார்.. போன் இல்லாம நான் எப்படி சார்..? என்னோட மெயில், டாக்குமெண்ட், நோட்ஸ், ஆன்லைன் கிளாஸ் எல்லாமே இந்த போன்-லதான் சார் இருக்கு.” என்றவள் என்ன சொல்லி கெஞ்சியபோதும் அவன் அவள் போனை கொடுக்கவே இல்லை.
அத்தோடு தன் பக்கத்திலிருந்த போனை எடுத்து அவளிடம் கொடுத்தவன், “இது நான் உன்ன காண்டக்ட் பண்ண மட்டும்” என்று சொல்ல, அவளுக்குதான் சத்தம் போட்டு கத்திவிடலாம் போல் இருந்தது.
“இல்ல சார்.. வேண்டாம்.. வீட்ல பார்த்தா ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க..” என்றவள் மறுத்தபோது கூட,
“மறச்சி வச்சிக்கோ.” என்றான் அவன் கூலாக.
“ஆமாம்டா… முதல்ல உன்கிட்ட இருந்து என்னதாண்டா நான் மறச்சி வைக்கணும்” என்று சொல்ல துடித்த நாவை சிரமபட்டு அடக்கிகொண்டவள், தயக்கத்துடனே தன் கையில் இருந்த போனை பார்த்திருக்க, அவனும் அப்போதுதான் அவள் விரலை கவனித்தான்.
“ஹே குள்ளச்சி..” என்றவாறே எழுந்து சென்று சட்டென்று அவள் கரத்தை பற்றியவன், “மோதிரம் எங்கடி..?” என்று உரிமையோடு அவளை பார்த்து கேட்க, அவள் இதை சற்றும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை.
“ஐய்யோ அத எங்க கழட்டி போட்டண்ணு தெரியலையே..” என்று உள்ளுக்குள் பதறியவள், “அது.. அது… வீட்ல சார்” என்றாள் திக்கி திணறியபடி.
“அடிங்க அத வீட்ல வைக்கவா உனக்கு கொடுத்தேன்.. அதோட காஸ்ட் என்னனு தெரியுமா உனக்கு..? ஆறு லட்சம்… அதுல உள்ள டைமண்ட் காஸ்ட் மட்டும் ஐந்தரை லட்சம்.” என்று அந்த மோதிரத்தை பற்றி சொல்லியவாறே அவளின் மோதிரவிரலை பிடித்து அவன் முறுக்க, அவளுக்கோ அவன் முறுக்கியதில் வலிக்க ஆரம்பித்துவிட்டது.
என்னதான் ஆரம்பத்தில் அந்த மோதிரத்தை அவன் வெறும் பரிசு பொருளாக அறிவித்திருந்தாலும், அதை அவளிடம் கொடுக்கும் போது காதலோடு, தன் காதலின் முதல் அன்பளிப்பாக அல்லவா அவளிடம் கொடுத்திருந்தான்.
அப்படி தன் காதல் அடையாளமாக கொடுத்த மோதிரத்தை அவள் கழற்றியிருக்க, அந்த கோவத்தில் தான் அவன் அவள் விரலை முறுக்கியது கூட.
“எனக்கு எப்படிடா தெரியும் காட்டுபயலே..” என்று உள்ளுக்குள் குமுறியவள்,
“சார்… சார்.. ரொம்ப வலிக்குது சார்..” என்றாள் வலிதாங்க முடியாமல் நெளிந்தபடியே.
“நல்லா வலிக்கட்டு.. அப்போதான் இன்னொரு தடவ கழட்டும் போது இந்த வலி நியாபகத்துக்கு வரும்” என்றவாறே மேலும் முறுக்கியவன்,
“இன்னொரு தடவ நான் பார்க்கும் போது இந்த விரல்ல மோதிரம் இல்லாம இருந்துச்சி…” என்றவாறே சட்டென்று அவள் விரலை தன் வாயருகே கொண்டு சென்றவன்,
“பார்த்த இடத்திலே விரல கடிச்சி துப்பிடுவேன்” என்க, எங்கே அவன் இப்போதே கடித்துவிடுவானோ என்ற பயத்தில் சட்டென்று அவன் பிடியிலிருந்து தன் விரலை அவள் உறுவிக்கொள்ள,
“வீட்டுக்கு போய் அந்த மோதிரத்த போட்டு உன் நம்பர்க்கு எனக்கு போட்டோ எடுத்து அனுப்புற.. இல்ல… நான் உன் வீட்டுக்கு வர வேண்டியதா இருக்கும்” என்றவன் அவள் வீட்டு விலசாத்தையும் கட கட வென சொல்லிவிட்டு,
“அட்ரெஸ் கரெக்ட்டா..?” என்று கேட்க, அவளுக்கோ அதிர்ச்சியில் இதயமே நின்றுவிட்டது இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியுமென்று.
இருந்தும் சரி என்பது போல் தலையை மட்டும் இருபுறமும் ஆட்டியவள், “போட்டோ அனுப்பறேன் சார்” என்றாள் அவன் முறுக்கிய விரலை நீவி கொடுத்தபடியே.
அவள் நீவிவிடுவதை கவனித்தவன், “ரொம்ப வலிக்குதா இதழ்…” என்று அனுசரனையாக கேட்டவாறே, மீண்டும் அவள் கரத்தை பற்ற போக,
எங்கே மீண்டும் தன் கரத்தை பற்றிவிடுவானோ என்ற பயத்தில் “இல்ல சார்..” என்றவாறே அவசரமாக கையை பின்னுக்கு வைத்தபடி இரண்டெட்டு பின்னால் நகர்ந்தவளின் கால்கள் இடறியதில் அவள் கீழே விழ போக, அவள் கீழே விழுந்து விடாவண்ணம் தன் வலிய கரத்தால் அவள் இடையை வளைத்து தன்னோடு அணைத்திருந்தான் ரிஷப் நந்தன்.
அவன் தன்னோடு அணைத்ததில் அவள் முகம் அவன் திண்ணிய மார்பில் மோதி நிற்க, என்ன நடக்கிறது என்ற புரிதலுக்கு வரவே இதழினிக்கு சில கணங்கள் பிடித்துவிட்டன.
“ஐய்யோ பெருமாளே..” என்று உள்ளுக்குள் பதறியவாறே சட்டென்று அவன் திண்ணியமார்பில் கை வைத்து அவனை எட்டி தள்ளியவள், அவனை நிமிர்ந்துகூட பார்க்காமல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக சென்று கதவை திறந்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சிதான் அங்குநின்று கொண்டிருந்த கவினை பார்த்து.
மீட்டிங் முடித்து வந்தவன் அவர்கள் பிளாட் முன் வந்து நிற்கவும் அவள் கதவை திறக்கவும் சரியாக இருந்தது.
அவளை இங்கு பார்த்ததில் கவினுக்குமே சற்று அதிர்ச்சிதான்.
“இவ எப்படி இங்க..? அதுவும் இந்த நேரத்துல..?” என்ற யோசனையோடே, “ஹாய் சிஸ்டர்” என்று கவின் கைகாட்ட, அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் பயத்தில் முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை ஷாலால் துடைத்தபடியே லிஃப்டை நோக்கி விரைந்தாள்.
அவளின் வெளிறி போயிருந்த முகமே அவனுக்கு ஏதோ சொல்ல, “ம்… கண்டிப்பா என்னவோ நடந்திருக்கு” என்று யூகித்தவன், “டார்லிங்..” என்றவாறே உள்ளே நுழைய,
அவனை கவனித்த ரிஷப்போ, “வா டார்லிங்… மீட்டிங் எப்படி போச்சி” என்றான் வெகு இயல்பாய்.
“அதெல்லாம் இருக்கட்டும்…. என்ன பட்ச்சி இந்த நேரத்துல இங்க…?” என்றவன், “என்னடா நடக்குது இங்க..?” என்று மார்பின் குறுக்கே கட்டியவாறு கேட்க,
குளிர்சாதன பெட்டியை திறந்து தனக்கான ஷாம்பியனோடு சேர்த்து கவினுக்கும் கூலிங் பியர் எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தவன்,
“நான் தான் வரசொன்னேன்” என்றவன் தன் மனதில் அரும்பியிருக்கும் காதலை பற்றியெல்லாம் சொல்லாமல், மேலோட்டமாக போன் தொலைந்து போனதை பற்றி பேசுவதற்காக அழைத்தாக சொல்ல,
“டார்லிங் உன் போன் எங்க தொலைஞ்சிது…? அது என் கிட்டதன இருக்கு” என்ற கவின் தன் பாக்கெட்டில் இருந்த அவன் போனை எடுத்து காட்ட,
“ஐ நோ மேன்..” என்று கூலாக சொன்னவன், “இந்த விஷயம் நமக்கு மட்டும் தன தெரியும்” என்றதோடு, இப்போது மந்தகாசமாய் அவனை பார்த்து புன்னகைக்கவும் செய்ய, அவன் சிரிப்பிலேயே கவினுக்கு புரிந்துவிட்டது ஏதோ சம்திங் என்று.
“ஹே… அப்போ தெரிஞ்சேதான் சிஸ்டர்-அ வரவச்சியா..?” என்றவனை பார்த்து ஆமாம் என்பது போல் தலையை மேலும் கீழுமாய் அசைத்த ரிஷப்,
“அவள கட்டிக்கணும்..” என்றான் பின்னங்கழுத்தை வருடிவிட்டவாறே.
அவன் கூறியதை கேட்டு வாயருகே கொண்டு சென்ற பியர் பாட்டிலை குடிக்காமல் கீழ் இறக்கிய கவின் “ஹே என்ன சொன்ன நீ…? கட்டிக்கணுமா….? யூ மீன் கல்யாணம்..?” என்று விழிகள் விரித்து ஆச்சரியமாய் கேட்டவனை பார்த்து
“ம்… ஆமா” என்றான் ரிஷப் நந்தனும் மௌனமாய் சிரித்து கொண்டே.
அவன் கூறியதை கேட்டு சந்தோஷத்தில் ரிஷப்-பை கட்டியணைத்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்த கவின்,
“எனக்கு தெரியும் கண்டிப்பா சார் ஒரு நாள் காதல்-ல விழுவீங்கன்னு… ஆமா உண்மை-அ சொல்லு யாருக்கு கொடுக்கணும்னு சூஸ் பண்ணிட்டுதன நீ பிரைஸ் அனவ்ன்ஸ் பண்ண..?” என்றவனை பார்த்து,
“ச்சீ…” என்று மறுப்பாய் தலையை அசைத்தவன், “ஆனா கொடுக்கும் போது காதலோடதான் கொடுத்தேன்” என்க,
“அதெப்படி டா பிரைஸ் அனவ்ன்ஸ் பண்ணும் போது இல்லாத காதல் பிரைஸ் கொடுக்கும் போது வந்துச்சி..?” என்று கேட்ட கவினை பார்த்து,
“ம்… தெரியலையே..” என்று தோளை குலுக்கியவன்,
“எப்படின்னு தெரியல கவின்.. எல்லாமே ஒரு மேஜிக் மாதிரி இருக்கு. எந்த செகண்ட்-ல அவ எனக்குள்ள வந்தான்னு தெரியல.. நான் அவளுக்குள்ள விழுந்தன்னு தெரியல.. எல்லாமே ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்ட் தான்” என்று சொடுக்கிட்டு சொன்னவனைப் பார்த்து,
“ஏது ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்ட்-லயா..?” என்று கேட்டவன் அவனையும் ஒருமார்க்கமாய் பார்க்க,
“அதென்ன ஃப்ராகஷன் ஆஃப் செகண்ட்-லயான்னு கேவலமா ஒரு லுக் விடுற.. ஒரு செகண்டோட வேல்யூ என்னன்னு தெரியுமா உனக்கு..?” என்று கேட்டவனை பார்த்து,
“தெரியாதுப்பா நான் மேக்ஸ்-ல வீக்” என்றான் சிரித்து கொண்டே கவின்.
“அப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. ஃபிஃப்டினைன் செகண்டோட அந்த ஒரு செகண்ட் சேர்ந்தாதான் ஒன் ஹவர்-க்கே வேல்யூ. பிறப்பும் ஒரு செகண்ட் தான்.. இறப்பும் ஒரு செகண்ட்” என்று சொல்லிகொண்டே சென்றவனை பார்த்து,
தலைக்குமேல் கையெடுத்து கும்பிட்டவன் “யப்பா சாமி.. ஆளவிடு ஒத்துக்கறேன்.. உன் காதல் தெய்வீக காதல் தான்.” என்றவன் சொன்ன தோணியில் ரிஷப் நந்தன் சிரித்துவிட கவினுமே அவன் சிரிப்பில் இணைந்துகொண்டான்.
“எப்டியோ அம்மா ஆசை பட்டபடி ஆறு மாசத்துல உனக்கு கல்யாணம் ஆகிடும்” என்று சந்தோஷ குரலில் சொன்ன கவின்,
“மொத்தல்ல இந்த குட் நியூஸ்-அ அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்” என்று சொல்லியவாறே இருக்கையிலிருந்த எழபோனவனின் கரத்தைபற்றி தடுத்த ரிஷப்,
“டேய் கொஞ்சம் அமைதியா இருடா.. நான் இன்னும் இதழ் கிட்டயே என் லவ்-அ சொல்ல” என்றவனை பார்த்து,
“இதழினி இப்போ இதழ்-ஆயாச்சா..?” என்றான் கேலிகுரலில் கவின்.
தன்னை கேலி செய்பவனை பார்த்து, கொன்னுடுவேன் என்பது போல் ஆள்காட்டி விரலை காட்டி ரிஷப் எச்சரிக்க...
“சரி சரி கலாய்க்கல” என்றவன், “அப்போ இன்னும் உன் மனசுல உள்ளத நீ சிஸ்டர்-கிட்ட சொல்லலையா..?” என்று கேட்டவனை பார்த்து அவன் மறுப்பாய் தலையை அசைக்க,
“அப்புறம் ஏன் சிஸ்டர் அவ்வளோ பதற்றத்தோட போனாங்க..?” என்று புருவம் சுருக்கி ரிஷப்பை பார்த்து கேட்டவன்,
பின் “டேய்…” என்று இழுத்தவாறே ரிஷப்-பை ஒரு மார்க்கமாக பார்க்க,
அவனோ, “தச்சீ… நீ நினைக்கிறமாதிரிலா ஒன்னு இல்ல.. அவ கால் தடுமாறி கீழ விழப்போனா.. நான் விழாம தாங்கி பிடிச்சேன்..” என்றவனை நம்பமாட்டாமல் பார்த்த கவின்,
“லவ் பண்ணாதப்பவே அந்த புள்ள வாய புடிச்சி கடிச்சி வச்சவன் நீ… இப்போ லவ் வந்ததுக்கப்புறம் உன் வாய் சும்மா-வா இருந்திருக்கும்” என்று தன்னை நம்பால் சொன்னவனின் தலையில் சத்தியம் செய்வதுபோல் வேகமாய் அடித்த ரிஷப்,
“ப்ராமிஸ் டா.. நான் அவள எதுவும் பண்ணல… கீழ விழாம தாங்கிதான் புடிச்சேன்.. அதுக்குப்போய் அந்த ஓட்டம் ஓடுறா..?” என்றவன்,
“ம்… இப்படிபட்டவள வச்சிக்கிட்டு நான் எப்படி காதலிச்சி, கல்யாணம் பண்ணி, புள்ளய பெத்து வாழப்போறன்னுதான் தெரியல..” என்று கன்னத்தில் கைவைத்தப்படி ஏக்கப்பெருமூச்சுடன் தன் கஷ்டத்தை சொன்னவனை பார்த்து கவினுக்கு சிரிப்புதான் வந்தது.
இருந்தும் அதை அடக்கியபடியே, “கஷ்டம் தான் டார்லிங்” என்றவன் , “பேசாம நீ நாளைக்கே சிஸ்ரட்-அ பார்த்து புரோபோஸ் பண்ணிடேன்” என்க,
இப்போதைக்கு வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தவன், இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு “அவ மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல டார்லிங். இந்த புரோபசல், சர்பிரைஸ் இதுக்கெல்லாம் அவ மடியற ஆளே இல்ல..” என்றவன் பின் ஏதோ நினைவு வந்தவனாய்,
“நீ ஃப்ஸ்ட் மீட்லே அவள கவனிச்சியா..?” என்று கேட்டவனைப் பார்த்து, நான் என்னத்த கவனிச்சேன் என்பது போல் உதட்டை பிதுக்கினான் கவின்.
“அவ நம்மள ஒரு செலிபிரிட்டியாவே பார்க்கல டார்லிங்… சாதாரணமா பார்த்தா.. ஆனா நான் தான் அவள தப்பா நினைச்சி என்னென்னவோ பேசி அவ மூட்-அ ஸ்பாயில் பண்ணிட்டேன். அவளுக்கு என் மேல எவ்வளோ கோவம் இருந்திருந்தா நீ சொல்லி கூட என்னோட ஆட்டோகிராஃப், செல்ஃபி வேண்டாம்-னு சொல்லியிருப்பா..” என்று நிறுத்தி அன்றைய நிகழ்வை நினைவுக்கூர்ந்தவனுக்கு இப்போது அதை நினைத்து சிரிப்புதான் வந்தது.
“ஆனா அன்னைக்கே அவளோட அந்த ஆட்டிட்டியூட் எனக்கு ரொம்ப புடிச்சியிருந்தது.” என்று இரசணையோடு சொல்லியவனை பார்த்து,
“அதானாலதான் அண்ணான்னு சொன்னதுக்காக உதட்ட கடிச்சி வச்சியா..?” என்று கிடைத்த கேப்பில் அவனை வாறினான் கவின்.
‘ஏண்டா’ என்பது போல் அவனை பார்த்த ரிஷப் நந்தன், பின் என்ன நினைத்தானோ, “ஆனா அன்னைக்கு அவ அண்ணான்னு சொன்னதும் ஒருமாதிரி இரிட்டேட்டாதான் இருந்துச்சி” என்றான் அவன் சொன்னதை ஒத்துகொள்ளும் விதமாக.
“இன்னைக்கு கூட காலேஜ்-ல கவனிச்சியா டார்லிங்..?” என்று ரிஷப் கேட்டு முடிக்கும் முன்பே, “அந்த கிரீன் சல்வார்-அ தன சொல்ற.. செம்மையா இருந்தா இல்ல..” என்று கண்கள் விரிய சொன்ன கவினை பார்த்து, ரிஷப் அனல் பார்வை பார்க்க,
“ஐய்யோ… இவன் எத கவனிச்சியான்னு கேட்டான்னு தெரியலையே.. இப்ப என்ன சொல்லி நான் அவன சமாளிக்கிறது..“ என்று யோசித்தவாறே நெற்றிபொட்டை தேய்த்துவிட்டு கொண்டவன்,
“ஆ.. நீ சிஸ்டர்-அ தன சொல்ற டார்லிங்..” என்றான் தன்னையே முறைத்துகொண்டிருப்பவனை சமாளிக்கும் விதமாக.
“ம்..” என்று இழுத்தவன், “சிஸ்டர்கிட்ட என்ன கவனிச்ச..?” என்று அடுத்த கேள்வி கேட்டு ரிஷப் தன்னை சுற்றிவளைப்பான் என்று கவின் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அது… அது…” என்று திணறியவனின் வயிற்றிலேயே ஒரு குத்துவிட்டவன்,
“மோர் ஓவர் இன்னைக்கு எல்லா கேர்ஸ்-மே நாம டியூன் பண்ண சாங்ஸ்-அ தான் பாடுனாங்க.. வாசிச்சாங்க.. இவள தவிர…” என்று சொல்ல,
விழாவை நினைவுகூர்ந்த கவினுமே, “அட… ஆமா… ஏன் அப்படி..?” என்றான் கேள்வியாய் அவனை பார்த்து.
“ஏன்னு இன்னுமா உனக்கு விளங்கல…?” என்று கேள்வியாய் கவினை பார்த்து கேட்டவன், பின் அவனே அதற்கு பதிலும் சொன்னான் “ஏன்னா அவளுக்கு நம்மள பிடிக்கல” என்று.
“ஹலோ… நம்மள இல்ல உங்கள…” என்று அவன் சொன்னதை திருத்தி சொன்ன கவின்,
“ஏன்னா காலையில நீங்க பேசுன பேச்சு அப்படி.” என்க, அதுவும் சரிதான் என்பது போல் ஆழ்ந்த ஒரு பெருமூச்சை விட்டவனுக்கு தெரியவில்லை அவளுக்கு எப்படி தன் காதலை புரியவைப்பதென்று.
ஏதோ யோசனையோடே ஒரு வாய் ஷாம்பியன் அருந்தியவன்,
“பச்… நானும் இதுலலாம் மாட்ட கூடாதுன்னு ரொம்பவே ஸ்ட்ராங்காதான் இருந்தேன் டார்லிங்.. ஆனா இந்த குள்ளச்சிதான் மொத்தமா எல்லாத்தையும் சொதப்பிட்டா..” என்று முன்னுச்சியை கோதிவிட்டவனின் மனம் மீண்டும் அவளிடமே சென்று நின்றது.
“யூ நோ டார்லிங்.. என்ன வெறுத்து வெறுத்தே அவ என்ன விரும்ப வச்சிட்டா…” என்றவன்,
“நீ அவ கண்ண பார்க்கணுமே…” என்று அவள் விழிகளை ஒரு கணம் நினைவு கூர்ந்தவன்,
“நீ என்னடா காதல் மேல இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்றது..? டேய் நான் உனக்காக தாண்டா பொறந்து இருக்கேன்.. நீ என்ன தாண்டா காதலிக்கணும், என்னதான் கல்யாணமும் பண்ணிகணும்னு வார்னிங் மெசேஜ் கொடுக்கறமாதிரியே இருக்கும்.” என்றவனை
‘நம்ம ரிஷப்பா இப்படியெல்லாம் பேசுறது..?’ என்பது போல் ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தான் கவின்.
அதுவரையும் தன் கையிலிருந்த ஷாம்பியனை டீபாயின் மீது வைத்த கையோடு,
“ஐ நோ கவின்… அவளுக்கு என்ன பிடிக்காது… அவளுக்கு என் மேல கோவம் இருக்கு.. அவ என்ன வெறுக்கறான்னு.. பட் இதெல்லாம் தான் என்ன ரொம்ப இம்ஃப்ரஸ் பண்ணுச்சி” என்று காதல் புன்னகையோடு சொன்னவன், அறிந்திருக்கவில்லை இதையெல்லாம் தாண்டி அவள் அவனை கே(Gay) என்று முடிவுகட்டிருப்பதை.
“அட் த சேம் காஸ்ட்.. கவின்… அவளோட கோவம் எனக்கு ரொம்ப புடிச்சியிருக்கு… அவ என்ன வெறுக்கறத கூட நான் லைக் பண்றேன். அவள காதலிக்கணும்.. கல்யாணம் பண்ணிக்கணும்.. லட்டு மாதிரி இரண்டு குழந்தைங்கள பெத்துக்கணும். காலையில குட்மார்னிங் கிஸ்-ல ஆரம்பிச்சி குட்நைட்-னு கட்டிபுடிச்சி தூங்கவரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அவ கூட வே இருக்கணும்” என்று விழிகள் நிறைய காதலோடு ரிஷப்நந்தன் சொல்லிகொண்டிருக்க, அதையெல்லாம் அவனுக்குதெரியாமல் ஐ-பேடில் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தான் கவின்.
காரணம் இப்படியெல்லாம் ரிஷப் பேசி கவின் பார்த்ததே இல்லை.
அதுவும் ஒரு பெண்ணை பற்றியும் அவள் மீதான காதலை பற்றியும் கவித்துவத்தோடு அழகாக அவன் புலம்புவதை ஒரு அழகியநினைவாக ரெக்காட் செய்தவன் அறியவில்லை பின்நாளில் இந்த வீடியோ ரிஷப்பிற்கு தக்க சமயத்தில் உதவபோவதை.
“ஆக்சுவலி இந்த ஃபீல் எப்படி இருக்கு தெரியுமா டார்லிங்..?” என்று கவினை பார்த்து கேட்டவன்,
“பனிமழையில நனைச்சிக்கிட்டே ஒரு ஃபேம்லி பேக் ஐஸ்கிரீம் சாப்பிடுறமாதிரி இருக்கு....” என்று கண்களை மூடி இரசித்து சொன்னவனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் கவின்.
கன்னத்தில் கைவைத்த படி தன்னையே பார்த்திருந்தவனை பார்த்து, என்ன..? என்பது போல் ரிஷப் புருவமத்தியை உயர்த்த,
“ப்ச்… ஒரே நாள்-ல காதல் கவிஞன் ஆகிட்ட டார்லிங்” என்றவனை பார்த்து ரிஷப் சிரித்து வைக்க,
“சரி அடுத்து என்ன பண்ண போற…?” என்றான் கவின்.
அவன் கேள்விக்கு, “ம்…” என்று கீழ் அதரங்களை கடித்தபடியே இழுத்தவன், “இப்போதைக்கு நினைச்ச நேரத்துக்கு பேசறதுக்காகவும், பார்க்கறதுக்காகவும் அவ போன்-அ வாங்கிட்டு என் போன்-அ அவ கையில கொடுத்திருக்கேன்” என்றவன் சொல்லிமுடிக்கவும், அவள் செல்போன் சத்தமிடவும் சரியாக இருந்தது.




