Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
(5.0)

அத்தியாயம் - 12

January 19, 2026
சந்தோஷ் குணா
5.0(3 reviews)
8 min read
அத்தியாயம் - 12
Hero - Music Director, Heroine - Music student

தாழ்பாள் போடாமல் கதவை மட்டும் சாற்றிவிட்டு வேக எட்டுகளுடன் கவினிடம் வந்து நின்றவன்,

“ஏண்டா.. எங்க வந்து..? அதுவும் கேர்ள்ஸ் காலேஜ்-க்கு வந்து என்ன வேலை பார்த்து வச்சியிருக்க நீ.. அப்பவே உன்ன அடக்குன்னு-தனடா சொன்னேன்..” என்றவன் காட்டுகத்தலாய் கத்த,

“பிளீஸ் டார்லிங் ஏற்கனவே எனக்கு வலியி-ல உயிர் போய்கிட்டு இருக்கு இதுல நீ வேற கத்தாத.. பிளீஸ்” என்று வலியில் முனகியவனை பார்த்து ரிஷப் நந்தனுக்கும் பாவமாகத்தான் இருந்தது.

“அட்லீஸ்ட் இன்னைக்காவது இன்னர் போட்டு தொலைக்க வேண்டியதுதானே..” என்று கேட்டவாறே கவின் முன்னால் முட்டிக்கால் போட்டு ஜிப்பை தொட போக,

“ஆ.. வலிக்குது டார்லிங்..” என்று கத்தினான் கவின்.

“டேய் நான் இன்னும் தொடவே இல்லடா..” என்று கையை விரித்து காட்டியவன்,

“ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம்.. போடாததுக்கு எதுக்குடா போற இடத்துலலாம் பிராண்டட்-ஆ வாங்கி அடுக்கற....?” என்றவன் கேட்ட தோணியில் கவின் பொசுக்கென்று சிரித்துவிட.

“த ச்சீ.. சிரிக்காத நாய..” என்று திட்டினாலும் எப்போதும் போல் அவனுக்கு உதவ ஆரம்பித்திருந்தான் ரிஷப்.

ரிஷப்பிற்கு தெரிந்து பள்ளி காலத்திலிருந்தே கவின் இப்படித்தான்.

“ஏண்டா இன்னர் போட்டால் தான் என்ன..?” என்று கேட்டால்.. வியர்க்கிறது, வெட்டுகிறது, அரிக்கிறது, என்று எதாவது ஒரு சாக்கு சொல்வதோடு இது போல் அவ்வப்போது தர்மசங்கடத்திலும் மாட்டிக்கொள்வான்.

ரிஷப் அவனுக்கு உதவிக்கொண்டிருக்கும் போதுதான்,

“டார்லிங்..“ என்று அவனை அழைத்த கவின், “நம்மள யாராவது இந்த கோலத்துல மட்டும் பார்த்தாங்க அவ்வளோதான்..” என்று அவன் சொன்ன நேரமோ என்னவோ,

அவன் சொன்னது போல் கேண்டின் சென்று கொதிக்க கொதிக்க தண்ணீர் எடுத்து வந்து கதவை திறந்த இதழினிக்கு அதிர்ச்சிதான் அவர்கள் இருவரும் இருந்த கோலத்தை பார்த்து.

“ஆ…” என்று கத்தியவாறே கையிலிருந்த தண்ணீரை கீழே போட்டவள், “ஐய்யோ.. பெருமாளே..” என்றாவாறே முகத்தையும் மூடிக்கொள்ள, அவள் போட்ட சத்தத்தில் ரிஷப் நந்தனுக்குமே தூக்கி வாரி போட்டுவிட்டது.

அந்த பதற்றத்தில் அவன் கைவிரல் தானாக ஜிப்-பை இழுத்துவிட்டதில் கவினின் பிரச்சனையும் முடிவுக்கு வந்திருந்தது.

இதில் கீழே கொட்டிய சுடுதண்ணீர் வேறு அவள் காலில் பட்டதில் எரிச்சல் தாங்க முடியாமல் முகத்தை மூடியவாறே அவள் அங்கும் இங்கும் ஓட,

எங்கே தான் பார்த்ததை தவறாக கற்பனை செய்ததோடு நில்லாமல் வெளியில் சென்று அவள் கத்தி கூச்சல் போட்டுவிடுவாளோ என்று பயந்த ரிஷப்,

“ஹே… கவின்.. முதல்ல அந்த குள்ளச்சி-அ புடிடா.. அவ எதையாவது வெளில போய் உளறி தொலைக்கப்போறா..” என்று கவினை அவசரப்படுத்த, அவனும் ஓடிச்சென்று அவள் வெளியில் செல்லா வண்ணம் வாயிலை தடுத்தபடி நின்றுகொண்டான்.

ஓரளவு எரிச்சல் அடங்கியபின்னே முகத்திலிருந்து கையை எடுத்தவள் இருவரையுமே அருவெருப்புடன் பார்த்தாள்.

எழுந்து அவள் அருகில் வந்த ரிஷப் நந்தனோ, “ஏண்டி குள்ளச்சி.. உள்ள வரும் போது கதவ தட்டிட்டு வரணும்-ன்ற பேசிக் மேனஸ் கூட தெரியாதா.. உனக்கு..?” என்று பற்களை கடித்து கொண்டு கேட்டதோடு, அவள் தலையிலும் நறுக்கென்று ஒரு குட்டு வைக்க, அவன் குட்டிய குட்டில் அவளுக்கு மூளையே கலங்கிவிட்ட உணர்வுதான்.

அந்த வலியின் வெளிப்பாடாய் அவள் கண்கள் கலங்கிவிட, அவன் குட்டிய இடத்தை தடவிக்கொடுத்தவளுக்கு அவன் மீது அப்படியொரு கோவம்.

“ஏது எனக்கு மேனஸ் இல்லையா..? வந்த இடத்துல இவனுங்க பண்ண வேலை மட்டும்..” என்று கோவத்தில் உள்ளூர குமைந்தவளுக்கு, சற்று முன் அவர்கள் இருவரும் இருந்த நிலையை நினைத்த கணமே உமட்டிக்கொண்டுதான் வந்தது.

“ச்சீ.. கருமம்.. கருமம்…. அப்படினா.. இவனுங்க கே(Gay)-வா..? அதனாலதான் எனக்கு காதல் மேல இன்ட்ரஸ்ட் இல்ல.. பொண்ணுங்க மேல சுத்தமாவே இன்ட்ரஸ்ட் இல்லன்னு வந்துலேந்து ஆத்து ஆத்து-ன்னு ஆத்திகிட்டு இருந்தானா..?  எனக்கு எல்லாம் அவந்தான்னு இவன் சொல்லும் போதே நான் கொஞ்சம் சுதாரிச்சி இருந்திருக்கணும்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த கவின் டார்லிங்-ன்னு ஒருமாதிரி சிணுங்கிக்கிட்டே வந்தது கூட இதுக்காகதானா..?” என்றவளுக்கு அன்று அவன் அறையிலிருந்து ஒரு பெண் அரைகுறை ஆடையோடு வெளியேறியதும், அங்கு பார்த்த காண்டம்களும் நியாபகத்திற்கு வர,

“ஓ அப்போ.. இந்த ரிஷப்-தான் கே(Gay) போல.. இந்த கருமத்துக்காகத்தான் இரண்டும் அப்பார்மெண்ட் எடுத்து தங்கியிருக்காணுங்களா....? வந்த இடத்துல அப்படி என்ன அவசரம்..? இந்த எழவுக்கு தான் என்ன சீக்கரமா போய் பொறுமையா வா-ன்னு சொன்னானா..? கருமம் கருமம்” என்று உள்ளுக்குள் ரிஷப் நந்தனை பற்றி ஒரு முடிவையே அவள் எடுத்து முடித்திருக்க,

“ஹேய் குள்ளச்சி..” என்று அவள் முகத்திற்கு முன் சொடுக்கு போட்டிருந்தான் ரிஷப் நந்தன்.

“நானாடா குள்ளச்சி..?” என்று பதிலுக்கு கேட்க துடித்த நாவை சிரமபட்டு அடக்கி கொண்டவள் கலங்கிய விழிகளோடே அவனை நிமிர்ந்து பார்க்க,

“ஏய் தாரிகா-ன்னு…. இங்க நீ பார்த்த எதையாவது வெளியில போய் சொன்ன.. மவளே உன்ன ரேப் பண்ணிடுவான் இவன்” என்றவன் பக்கத்திலிருந்த கவினை  சுட்டி காட்ட,

அவன் வார்த்தைகளை கேட்டு “ஐய்யோ எண்ட அம்மே.. நானா..” என்று மார்பில் கைவைத்து அதிர்ந்த கவின்,

“ஷி லைக் மை சிஸ்டர்” என்று மறுக்க,

“அந்த வாட்ச்மேன்” என்றான் ரிஷப் சற்று முன் கவினை வாஷ் ரூம் அழைத்து சென்ற வாட்ச்மேனை மனதில் வைத்துகொண்டு.

“ச்சீ.. அவன் கிழவன்” என்று முகத்தை அஷ்டகோணலாய் வைத்துகொண்டு கவின் அதற்கும் மறுப்பு தெரிவிக்க,

“அப்போ வேற யாரு..?” என்ற ரிஷப்பின் கேள்விக்கு,

நீ என்பது போல் அவனை நோக்கி விரல் நீட்டிய கவின், “அன்னைக்கு நீதன கிஸ் பண்ண.. அப்போ நீதான் ரேப்பும் பண்ணனும்” என்க,

“த ச்சீ… இந்த குள்ளச்சி-அ போய் நானா..? என்னாலலாம் முடியாது..” என்று ரிஷப் மறுக்க,

“அதான் எனக்கும் தெரியுமே உன்னால முடியாதுன்னு.. ஏன்னா நீதான் கே (Gay)-வாச்சே..” என்று நடந்துகொண்டிருக்கும் களேபரத்தையும் மறந்து பின்பாட்டு பாடிகொண்டிருந்தது இதழினியின் மனம்.

“இதுக்கெல்லாம் நம்ம பவுண்சர் கார்த்திதான் பக்காவா இருப்பான்…” என்று ரிஷப் நந்தன் சொல்ல,

கவினோ “இல்லை இல்ல..” என்றான்.

இப்படி சம்மந்தபட்டவளை முன்னால் வைத்துகொண்டு இருவரும் யார் அவளை ரேப் செய்வதென்று சீட்டு போட்டு பார்த்து கொண்டிருக்க,

“டேய்.. யார்ரா.. நீங்க…? எங்க இருந்துடா… கிளம்பி வந்திருக்கீங்க.. உங்க இஷ்டத்துக்கு என்ன ஏலம் போட்டு இருக்கீங்க” என்பது போல்  இருவரையும் மாறி மாறி பார்த்திருந்தவளுக்கு தெரியவில்லை இந்த பைத்தியங்களிடமிருந்து எப்படி தப்பித்து செல்வதென்று.

மேலும் அவளை சோதிக்காமல், சக விருந்தினருடன் அப்போதுதான் அங்குவந்து சேர்ந்திருந்தார் அவளின் கல்லூரி முதல்வர்.

“சாரி சார்.. நீங்க இங்க வந்த நீயூஸ் ஸ்ப்ரெட்-ஆகி பப்ளிக் நிறைய பேர் இங்க வந்ததால ரோடு ஃபுல்லா டிராஃபிக் ஆகி விஷயம் கமிஷ்னர் வரைக்கும் போயிடுச்சி. அதான் எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டு வர்றதுக்குள்ள லேட் ஆகிடுச்சி” என்று தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை சொன்னவர், அதற்காக அவர்களிடம் மன்னிப்பும் கேட்க,

“இட்ஸ் ஒகே” என்றான் அனைத்திற்கும் பொதுவாக ரிஷப்.

பின் வந்திருந்த சக விருந்தினர்களை அவர்கள் இருவருக்கும் அறிமுகம் செய்தவர், அதன் பின்னே அவர்களை அழைத்துகொண்டு விழா மேடைக்கு செல்ல, இதழினியும் அவன் சொல்லியிருந்தது போல் விதியே என்று அவர்கள் பின்னாலேயே சென்றாள்.

பவுன்சர் புடை சூழ விழா மேடைக்கு இருவரும் என்ட்ரி கொடுத்த கணமே, காத்திருந்த மாணவிகள் அனைவரும் ஒரு சேர, “முகம் காட்டு நீ…” என்று அவனுக்கு பிடித்தமான பாடலை கோரசாக பாட, அதை கேட்ட இருவரின் முகமுமே மலர்ந்துதான் போயின.

நீங்களும் பாடுங்கள் என்பதுபோல் தாரிகா இருவரின் கைகளிலும் மைக்-கை கொடுத்துவிட்டு செல்ல,

சிரித்தபடியே மைக்கை வாயருகே கொண்டு சென்ற ரிஷப்நந்தனோ,“சாரி கேர்ள்ஸ்.. நான் பாட போறது இல்ல..” என்க,

அவன் அவ்வாறு கூறியதை கேட்டு மாணவிகள் மத்தியில் ஏன்…? என்ற கூச்சலும் குழப்பமும் அதிகமாக, பின் அவனே தான் மீண்டும் தொடர்ந்தான்.

“கேர்ள்ஸ் நான் பாட மாட்டன்னுதான் சொன்னேன் ஆனா நீங்க நினைச்சா எங்கள பாடவைக்கலாம்..” என்றவன் க்கு வைக்க, மீண்டும் மாணவிகள் மத்தியில் சலசலப்புதான்.

“ஓகே கேர்ள்ஸ்… நாம ஏன் இந்த ஃபங்கஷன்-அ இன்னும் கொஞ்சம் ஸ்பைசி ஆக்ககூடாது..?” என்று வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்தவனை பார்த்து மாணவிகள் கரவொலி சத்தம் எழுப்ப, “இவளுக வேற..” என்ற எரிச்சல் தான் இதனிழிக்கு.

அவர்கள்களின் கரவொலி சத்தம் நிற்காமல் நீண்டுகொண்டே போக, பின் ரிஷப் தான் கை உயர்த்தி அவர்களை அமைதியாக்கியதோடு,

“போற எல்லா இடத்துலயும் நாங்களே பாடி பாடி எங்களுக்கு போர் அடிச்சிடுச்சி.. ஸோ இந்த தடவ நீங்க பாடுங்க.. நாங்க கேட்கறோம்.. என்றவன், கவினை பார்த்து, “என்ன டார்லிங். உனக்கு ஓகே தன..?” என்று கேட்டவனை பார்த்து, கவின் கட்டை விரலை உயர்த்தி காட்டி தன் சம்மதத்தை தெரிவித்தான்.

“ஸோ.. நீங்க இங்க பாடலாம்.. ஆடலாம்.. என்ன வேணும்னாலும் பண்ணலாம் கேர்ள்ஸ்.. உங்கள்-ல யாரோட பர்ஃபார்மன்ஸ் எங்கள இம்ப்ரஸ் பண்ணி மைக்-அ எடுத்து பாடவைக்குதோ.. அவங்களுக்கு” என்று நிறுத்தியவன், தன் விரலில் அணிந்திருந்த கோல்ட் ரிங்கை கழட்டி தூக்கி காட்டினான் இதை கொடுப்பேன் என்பது போல்.

பெயருக்கென்று வந்திருந்த மற்ற விருந்தினர்கள் இரண்டு வாய் பேசிவிட்டு செல்ல, அதன் பின்னே போட்டி போட்டு கொண்டு மாணவிகள் தங்கள் திறமைகளை மேடையில் காட்ட ஆரம்பித்திருந்தனர்.

பாடல், ஆடல், இசை வாத்தியங்கள் என்று  அனைத்திலும் அவன் இயக்கிய பாடலையும், இசையையுமே மாணவிகள் இசைத்து சென்ற வண்ணம் இருக்க, அனைத்தையும் இரசித்த வண்ணமாகவே அமர்ந்திருந்தனர் இருவரும்.

இதில் சில பெண்கள் அவனுக்கு ரோஜா-பூவும் கிஃப்டும் கொடுத்து சென்ற வண்ணம் இருக்க, அதையெல்லாம் அவர்களுக்கு பின்னால் நின்று பார்த்து கொண்டிருந்த இதழினிக்கோ சிரிப்புதான் வந்தது.

“ம்க்கும்… அவன் உண்மையான அவதாரம் தெரியாம இவளுக வேற ரிஷப்.. ரிஷப்-ன்னு ரோஜாபூவ நீட்டிக்கிட்டு வர்றாளுக.. இதே ஒரு பையன் கொடுத்திருந்தா கூட ஹக், கிஸ் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்று அவன் குறித்து மனதிற்குள் கமென்ட்ரி கொடுத்து கொண்டிருந்தவளுக்கு,

“லவ் யூ ரிஷப்.. வில் யூ மேரி மீ..” என்று ஒரு பெண் தூக்கி பிடித்து காட்டிய பதாகையை பார்த்த கணத்திலேயே பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.

எங்கே யாரும் பார்த்துவிடுவார்களோ என்று கைகுட்டையால் வாயை மூடிகொண்டு அவள் சிரித்த போதும் தாரிகா அவளை கண்டுகொண்டு விட்டிருந்தாள்.

“என்னவோ அவர பார்க்கவே பிடிக்கல.. போகவே மாட்டன்னு சொன்ன.. இப்ப அவர் பின்னாடியே நின்னுட்டு இருக்க.. என்னடி விஷயம்..?” என்று அவள் தோளை இடித்து தாரிகா கேட்டபோது,

“இப்பமட்டும் என்ன ஆசைபட்டா நிற்கறேன்” என்று பதிலுக்கு சொல்ல துடித்த நாவை சிரமபட்டு அடக்கிகொண்டவாறே அவள் நின்றிருக்க மீண்டும் தாரிகாவாவேதான் தொடர்ந்தாள்.

“இப்ப புரியுதா ரிஷப்நந்தன் ஏன் பொண்ணுங்களுக்கு இவ்வளோ இஷ்டம்-னு. ம்…. எவளுக்கு கொடுத்து வச்சியிருக்கோ..?” என்று தாரிகா ஏக்க குரலில் சொன்னதுதான் தாமதம் அதுவரையும் அடக்கிவைத்திருந்த சிரிப்பை வெடித்து இதழினி சிரித்துவிட, பின்னால் கேட்ட சிரிப்பு சத்தம் கேட்டு ஏதேச்சையாக திரும்பி பார்த்த ரிஷப் நந்தனின் விழிகள் அப்படியே நிலைத்துவிட்டன இதழினியின் சிரித்த முகத்தை பார்த்து.

அவன் தன்னை பார்ப்பதை சுதாரித்துகொண்டவள் சட்டென்று கை குட்டையால் வாயைமூடிக்கொண்டு சிரிக்க, அவள் சிரிப்பதை அவள் விழிகள் அவனுக்கு காட்டி கொடுக்க தவறவில்லை.

கோவத்தை மட்டுமே பார்த்திருந்த அந்த விழிகளில் முதன்முறையாக புன்னகையை பார்த்திருந்தவனின் விழிகள் அவள் விழிகளிலே நிலைத்திருக்க,

பின் கவின் தான் “டார்லிங்” என்று தொடையில் தட்டி அவனை சுயத்திற்கு திருப்பினான்.

கஷ்டப்பட்டு தலையை திரும்பிய ரிஷப் நந்தனால் அதன் பின் இசையில் கவனத்தை செலுத்தவும் முடியவில்லை, ஒன்றிபோகவும் முடியவில்லை.

இதுநாள்வரை தனக்கும் இசைக்கும் நடுவில் எதற்கும் இடமில்லை என்ற இறுமாப்போடு இருந்தவனுக்கு இன்று.. இந்த நொடி.. என்ன ஆனதென்றே தெரியவில்லை.

மீண்டும் மீண்டும் அவளின் புன்னகைக்கும் விழிகளை பார்க்க வேண்டும் போல இருக்க, திரும்பி அவளை பார்த்தான் அவள் இருந்த இடம் இப்போது வெற்றிடமாக இருந்தது.

முன்னுச்சியை கோதிவிட்டபடி அமர்ந்திருந்தவனின் காதுகள்தான் தாரிகாவின் வீணை இசையை கேட்டுக்கொண்டிருந்ததே தவிர,

அவன் கண்களோ மௌனமாய் அவளைத்தான் தேடி கொண்டிருந்தது.

பெரும்பாலும் அனைத்து மாணவிகளுமே பாடி, வாசித்து முடித்திருந்தனர்.

இருந்தப்போதும் இதுவரையும் யாரின் இசையும் அவனை மைக்-ஐ எடுத்து பாட அழைக்கவில்லை.

அதற்காக அவர்கள் யாரும் நன்றாக பாடவில்லை, வாசிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது. இசை பயிலும் மாணவிகளுக்கு இசை பற்றி சொல்லிகொடுக்கவா வேண்டும்.

அனைவரும் நன்றாகதான் பாடினார்கள், இசைத்தனர் இருப்பினும் ஏதோ ஒன்று அவனை அவர்களிடமிருந்து தள்ளியே வைத்திருந்தது.

எல்லோரும் முடித்த பின் இறுதியாகதான் தன் வயலினோடு மேடையேறியிருந்தாள் இதழினி அதுவும் வேண்டா வெறுப்பாகதான்.

அவளுக்கு இன்று அதுவும் அவன் முன்னிலையில் வாசிக்க துளியும் விருப்பம் இல்லைதான்.

இருந்தும் கல்லூரி முதல்வர் கேட்டுகொண்டதற்காக மட்டும் மேடையேறி இருந்தாள். காரணம் இது கல்லூரியின் மானம் சம்மந்தபட்ட விஷயம் என்பதற்காக.

‘டிவின் பிரதர்ஸ்-ஐ’ இசைகல்லூரி மாணவிகளால் பாட வைக்க முடியவில்லை என்று பின்னாளில் வெளியில் யாரும் பேசி விடக்கூடாதே.. அதற்காகவே இதழினி மேடையேறி இருந்தாள்.

அவளை வயலினோடு மேடையில் பார்த்தவனின் விழிகளில் ஒரு சின்ன மின்னல் தோன்றி மறையவே செய்தது.

வயலினை இலாவகமாக தோள் மீது வைத்து கண்களை மூடி ஒரு ஆழ்ந்த பெரு மூச்சி எடுத்து கொண்டவள்,

“நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்…” என்று பாடலின் சரணத்திலிருந்து இதழினி வாசிக்க, கவினோ “வாவ்” என்றான் தன்னையும் மீறிகொண்டு.

மேற்கொண்டு கண்களை மூடியபடியே அவள் பாடலை வயலினில் இசைக்க இசைக்க கண்களை மூடி அந்த இசையில் முழுவதுமாய் மூழ்கிபோன ரிஷப் நந்தனால் அதற்கு மேலும் அவனை பிடித்துவைத்திருக்க முடியவில்லை.

காரணம் இதுவரையும் பாடிய, வாசித்த மாணவிகளின் இசையில் இருந்த போட்டியோ, பொறாமையோ அவள் இசையில் துளியளவும் இல்லை.

அவர்களைப்போலவே அவளும் இசையை இசைக்காக மட்டுமே இசைத்தாள்.

இசைக்கு என்ன தேவையோ அதை மட்டும் அழகாய் ஆத்மார்த்தமாய் கொடுத்து அவள் வாசிக்க, அவன் கரமும் அவளை பார்த்தவாறே மைக்-கை கையில் எடுத்திருந்தது.

சரணம் முடித்து அவள் பல்லவி தொடங்க, “சிநேகிதனே… சிநேகிதனே… இரகசிய சிநேகிதனே…” என்று அவனும் அவள் இசைக்கேற்றார் போல் பாட ஆரம்பித்திருக்க,

அவன் குரல் கேட்டு வாசித்தபடியே இமைபிரித்து அவனை பார்த்தாள் இதழினி.

அவனோ வாசி என்பது போல் பாடி கொண்டே கையால் ஜாடை செய்ய, இதழினிக்குதான் நடப்பதெல்லாம் கனவா நினைவா என்பது போல் இருந்தது.

பின் கவினும் தன் கிட்டார் இசையோடு அவர்களுடன் சேர்ந்துகொள்ள, அந்த இடமே இசையால் நிறைந்திருந்தது.

“இதே அழுத்தம் அழுத்தம்

இதே அணைப்பு அணைப்பு..

வாழ்வின் எல்லை வரை

வேண்டும் வேண்டும்…

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்..”

என்று பாடலில் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்காகவே என்பது போல் அவளை பார்த்தபடியே காதலில் இலயித்து அவன் பாடி கொண்டிருக்க, ஏதேச்சையாகத்தான் வயலினை வாசித்தப்படியே அவனை பார்த்தாள் இதழினி.

தன்னை பார்ப்பவளை பார்த்து பாடிக்கொண்டே அவன் அழகாய் புருவ மத்தியை உயர்த்த, அவளோ சட்டென்று பார்வையை மாற்றிகொள்ள, மென் புன்னகையுடனே பாடலை பாடி முடித்தவன், சொன்னது போலவே தன் மோதிரத்தை கழற்றி அவளிடம் கொடுக்க, அவளுக்குத்தான் அதை வாங்க கொஞ்சமும் மனம் இல்லை.

மோதிரத்தை வாங்காமல் அவள் நின்றிருக்க, பின் அவள் கல்லூரி முதல்வர்தான் அவனிடமிருந்து மோதிரத்தை வாங்கி அவள் விரலில் அணிவித்தார்.

8 minreading time
3comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels