“அவ வரட்டும் சார்.. நாம உள்ள போகலாம்” என்று அவர்களை அழைத்து சென்ற கல்லூரி முதல்வர் அவர் அறையில் அவர்களை அமரவைத்து உபசரித்ததோடு, கல்லூரியின் அருமை பெருமைகளை ஆஹா..! ஒஹோ..! என்று புகழ்ந்து தள்ள, அதை வேறு வழியில்லாமல் கேட்டு கொண்டிருந்தனர் இருவரும்.
இதில் நேரம் காலம் தெரியாமல் கவின் வேறு “டார்லிங்” என்று அவன் காதை கடித்து, சிண்டுவிரலை உயர்த்தி தன் அவசரத்தை தெரிவிக்க,
ரிஷப்போ “இப்பதனடா வந்தோம்..” என்றான் அவனுக்கு மட்டும் கேட்கும் படி அதிர்ச்சியாய்.
“அதுவும் இப்பதான் வருது.. நான் என்ன பண்ண..?” என்று அவனும் விடாமல் சொல்ல.
“எங்க போனாலும் உனக்கு கறக்கர வேலை தானா..? அடக்கிக்கோ” என்றான் பற்களை கடித்தப்படி ரிஷப்.
“இத எப்படி அடக்கறது..?” என்று கவினும் நெளிந்தவாறே கேட்க,
இருவரையும் கவனித்த முதல்வரோ, “எதாவாது வேணுமா சார்..? என்று கேட்டதுதான் தாமதம்,
“நீட் ரெஸ்ட் ரூம்” என்ற கவின் பழக்கதோஷத்தில் சிண்டுவிரலை உயர்த்தி காட்ட, அவன் சிண்டுவிரலை காட்டியதை பார்த்து கல்லூரி முதல்வருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. இருந்தும் அவர்கள் முன் அவர் சிரிப்பை விழுங்கி கொள்ள,
அவன் செயலை பார்த்து “மானத்த வாங்குறானே..” என்று தலையில் அடித்து கொண்ட ரிஷப்,
“அத மடக்கிதான் தொலையேண்டா” என்று வாய்க்குள் முனகியவாறே நீட்டியிருந்த அவன் சிண்டுவிரலை மடக்கி விட்டான்.
பின் வாட்ச்மேனை அழைத்து கவினை ரெஸ்ட் ரூமிற்க்கு அழைத்து போக சொன்ன முதல்வர்,
வருகைபுரிந்திருந்த மேலும் சில விருந்தினர்களை வரவேற்பதற்காக அவனிடம் சொல்லிவிட்டு வெளியேறியவர் இதழினியை தொடர்பு கொண்டு கேபினுக்கு வர சொல்லிவிட்டுதான் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
“ஏய்.. அவர் வந்த உடனே உன்னதாண்டி கேட்குறாரு.. சீக்கரம் போ இதழினி.. அப்புறம் பிரின்சி கத்தபோகுது..” என்று தாரிகா எவ்வளவு சொன்னபோதும் இதழினி முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாள்.
“இனி வந்திருக்கிற கெஸ்ட்-அ வெல்கம் பண்றதும் பண்ணாததும் உன் இஷ்டம் இதழினி” என்றவள் அந்த ரோஜா பூங்கொத்தை அவள் மடியில் வைத்துவிட்டு ரிசப்ஷன் கமிட்டியை கவனிக்க செல்ல, இதழினிக்குதான் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அதேநரம் அவளை போனில் தொடர்புகொண்ட கல்லூரி முதல்வரோ, “என்ன இதழினி கெஸ்ட் எவ்வளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..? சீக்கரம் என் கேபின்-க்கு வா” என்று சொல்லி விட்டு வைக்க, மடியிலிருந்த பூங்கொத்தை சங்கடமாக பார்த்தவளுக்கோ “எனக்கு மட்டும் ஏன் இப்படி..?” என்ற நிலை தான்.
“பெருமாளே” என்றவாறே முகத்தை மூடிக்கொண்டவளுக்கு அவன் ஏன் இப்போது சம்மந்தமே இல்லாமல் தன்னை அழைக்கிறான் என்பதுதான் சுத்தமாக விளங்கவில்லை.
அவர்களை பார்க்க பிடிக்காமல் தான் அவள் இங்கு வந்து அமர்ந்து கொண்டது கூட..
ஆனால் இப்போது கல்லூரி முதல்வரே தொடர்புகொண்டு அழைக்கும் போது செல்லாமல் இருப்பது சரியன்று அவள் மனதிற்கும் பட,
“இந்த பூங்கொத்த கொடுத்துட்டு உடனே அங்கிருந்து கிளம்பிடணும்” என்ற முடிவுடனே முதல்வரின் கேபினை நோக்கி நடந்தாள் இதழினி.
எப்படியும் பிரின்சி அருகில் இருக்கும் போது அவனால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தோடே “மே ஐ கம் இன் மேம்” என்றவளின் தைரியம் எல்லாம் சல்லிசல்லியாக நொறுங்கிதான் போனது அந்த அறைதனில் அவனை தவிர வேறு யாரும் இல்லாததை கண்டு.
“ஐய்யோ… என்ன வரசொல்லிட்டு இந்த குந்தானி பிரின்சி எங்க போச்சி..?” என்று தன்னை தானே கேட்டு கொண்டவளுக்கு அவனை பார்த்த மாத்திரத்திலேயே உள்ளுக்குள் உதற ஆரம்பித்துவிட்டது.
“இதழினி அப்டியே.. அப்பீட்டாய்க்கோ..” என்றவாறே அங்கிருந்து நகரமுற்பட்டவளை தடுத்து நிறுத்தியது என்னவோ,
“எங்க போற..? உள்ள வா..” என்றவனின் கம்பீர குரல் தான்.
“ஐய்யோ.. பார்த்துட்டானே..” என்று உள்ளுக்குள் சிணுங்கியவள், உள்ளே செல்ல மனமில்லாமல் தயங்கிய படி வாசலிலேயே நின்றிருக்க,
அமர்ந்தநிலையிலே அவளை திரும்பி பார்த்தவன், “சொன்னது உன் காதுல விழலையா..? உள்ள வந்து தொல..” என்க, அவனின் மரியாதையற்ற வார்த்தையே அவளை நெம்பி உள்ளே தள்ளியிருந்தது.
புடவையில் இருந்தவளை மேலும் கீழுமாய் அவன் பார்க்க, அன்றைய நிகழ்வின் தாக்கத்தால் அவனை பார்க்க முடியாமல் தலையை தாழ்த்திகொண்டாள் இதழினி.
அவள் உடுத்தியிருந்தது சாதாரண புடவையே என்றாலும் அந்த சாதாரணமே அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.
அவளையே சில கணங்கள் ஆழப்பார்த்திருந்தவன், “கையில என்ன..?” என்று கேட்டபோதுதான் நினைவு வந்தவளாய் அந்த பூங்கொத்தை அவனை பார்க்காமலேயே அவன் முன் நீட்ட,
“ஒரு கிஸ்-கே புரோபோசல்-ஆ..?” என்றவன் கேட்ட கேள்வியில் அவளோ விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
தன்னை அதிர்ந்து பார்ப்பவளை பார்த்து அவன் என்ன என்பது போல புருவமத்தியை உயர்த்த,
“ம்ஹீம்” என்று அவசரஅவசரமாக தலையை இடவலமாக அசைத்தவள், “வெ.. வெ… வெல்கம் சார்.” என்றாள் கஷ்டப்பட்டு.
“ஓ.. அப்படி தெளிவா சொல்லி கொடு. எனக்கு கன்ஃப்யூஸ் ஆகுது இல்லையா..?” என்று கேட்டவாறே அவள் கொடுத்த பூங்கொத்தை வாங்கி மேஜை மீது வைத்தவன்,
“பதிலுக்கு நானும் உனக்கு ஒன்னு கொடுக்கவா..?” என்க, அவளோ அன்றைய நிகழ்வை மனதில் வைத்தகொண்டு
“எனக்கு எதும் வேண்டாம் சார்.” என்றாள் அவசர அவசரமாக.
“ரியலி” என்று கேட்டவன், தன் பாக்கெட்டிலிருந்த ஐ.டி கார்டை எடுத்து அவள் முன் நீட்ட, அவளுக்கு இன்ப அதிர்ச்சிதான் தொலைந்ததாக நினைத்த ஐ.டி கார்ட் அவன் கையில் இருப்பதை பார்த்து.
என் ஐ.டி எப்படி அவனிடம்..? என்று யோசித்தவளுக்கு அது புரிய அதிக நேரமெல்லாம் மெனக்கெடவில்லை.
அவனை முறைத்தவாறே வெடுக்கென்று அவன் கையிலிருந்து பிடுங்கி கொண்டவள் அவனுக்கு நன்றியெல்லாம் சொல்லவில்லை. அதை அவனும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை போலும்.
கால் மேல் கால் போட்டவாறு ஜாம்பமாக அமர்ந்தபடி அவன் போனை நோண்டி கொண்டிருக்க, அடுத்து என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவில்லை.
இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்றாலோ வந்திருக்கும் கெஸ்ட்-ஐ தனியாக விட்டுவிட்டு செல்வது அவ்வளவு சரியன்று என்பதால் அங்கேயே நிற்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
இந்த பிரின்சி எப்போ வருமென்று நொடிக்கொருதரம் அவள் வாயிலை பார்த்தவாறே நின்றுகொண்டிருக்க, அவனோ கைபேசியை நோண்டிகொண்டிருந்தான்.
பின் அவள் தான் “சார்.. நான் வேணும்னா போய் பிரின்சிபல் மேம்-அ” என்றவள் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் முன்பே,
“நோ… நோ.. எங்கயும் நீ போக தேவை இல்ல.. ஃப்ங்ஷன் முடிஞ்சி நான் இங்க இருந்து கிளம்பற வரைக்கும் நீ என் கூட தான் இருந்தாகணும்..” என்று கட்டளை போல் செல்போனை நோண்டியபடியே அவன் சொல்ல, அவன் வார்த்தைகளால் அவளுக்குதான் தூக்கி வாரி போட்டது.
“நான் ஏன் இவன் கூடவே இருக்கணும்…? என்னால முடியாது..” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள்,
அதை மறுக்கும் விதமாக, “சார் உங்க கூடவே இருக்க நான் ஸ்டூடண்ட் சேர் பர்சன் இல்ல..” என்றாள் தெள்ள தெளிவான குரலில்.
“யா..” என்று அதை அமோதிப்பது போல் அவன் இழுக்க, அவளுக்கோ உள்ளுக்குள் அப்படியொரு சந்தோஷம். ஆனால் அந்த சந்தோஷத்தையும் சில கணங்களுக்குமேல் நிலைக்க விடவில்லை அந்த கிராதகன்,
“பட்… நீ தன என்ன மீட் பண்ணி டேட் கேட்ட.. அப்போ இங்க இருந்து நான் கிளம்புறவரைக்கும் நீ தான் எங்களுக்கு ஃபுல் ரெஸ்பான்சுபுள்” என்று அடுத்து அவள் கேள்வி கேட்கா வண்ணம் அவள் வாயை மொத்தமாய் அவன் அடைக்க, பாவம் இதழினிதான் பேச்சற்று போனாள்.
பேச்சற்று நிற்பவளை ஓரப்பார்வையால் ஒரு பார்வை பார்த்தவன், “ஏன் நீ ஃபோர் டேஸ்-ஆ காலேஜ் வரல” என்க,
‘நான் வரலன்னு இவனுக்கு எப்படி தெரியும்..?’ என்று கேட்க துடித்த நாவை சிரமபட்டு அடக்கிகொண்டவள்,
“ஃபீவர் சார்.” என்றாள் எங்கேயோ பார்த்தபடி.
பதிலுக்கு “ஓ” என்றவாறே முன்னுச்சியை கோதிவிட்டுகொண்டவன், “ஃபீவர் எப்படி..? நான் கிஸ் பண்ணதாலயா..?” என்று சர்வசாதாரணமாக கேட்க அவளுக்குதான் பெரும் சங்கடமாகி போனது.
“ஐய்யோ பெருமாளே.. இப்ப எதுக்கு இவன் அந்த டாப்பிக்-க ஓப்பன் பண்றான்..” என்று வாய்க்குள் முனகிகொண்டவள், அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் சட்டென்று தலையை தாழ்த்தி கொண்டாள்.
அவளின் மௌனமே அவனுக்கான விடையை தந்திருக்க, “ஏன் இதுவரைக்கும் யாரும் உன்ன கிஸ் பண்ணது இல்லையா..?” என்றவனின் அடுத்த கேள்வியால் அவளுக்கு காதுகள் கூசியதோடு, “பெருமாளே..” என்று கத்த வேண்டும் போலவும் இருந்தது.
அவன் கேள்விக்கு எதுவும் சொல்ல முடியாமல் அவள் திணறிக்கொண்டிருக்கும் போதுதான்,
“டார்லிங்” என்று வாயில் நின்றபடி கவின் அவனை அழைக்க, இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவனை பார்த்தான் ரிஷப்.
“ஹே.... கரெக்ட்டான நேரத்துக்கு தான் நீயும் வந்திருக்க… கம் இன் டார்லிங்” என்றவனை அழைக்க, கவினோ ஷர்ட்டின் முன் பகுதியை இழுத்து பிடித்தவாறே அவன் அருகில் வந்து நின்றான்.
அருகில் வந்து நின்றவனிடம், “ஏண்டா.. இவ்வளோ நேரமாவா போவ. அது என்ன யூரின் டேங்-ஆ இல்ல வாட்டர் டேங்-ஆ” என்று கடிந்து கொண்ட ரிஷப்-பை பார்த்து பெயருக்கென்று பல்லை காட்டிய கவின்,
“டார்லிங்” என்று சன்ன குரலில் அவனை அழைக்க,
“வெயிட் டார்லிங் நான் சொல்ல வந்தத முதல்ல இவக்கிட்ட சொல்லிடறேன் இல்லன்னா மறந்துடுவேன்” என்ற ரிஷப் நந்தனோ,
“ஹே.. யூ சீ..“ என்றவாறே அவள் புறம் திரும்ப, “டார்லிங்” என்று மீண்டும் அவனை அழைத்திருந்தான் கவின்.
“வெயிட் கவின்” என்று அவனை பார்க்காமலேயே சொன்னவன், இப்போது அவளை பார்த்து,
“நான் என் மனசுல உள்ளத உன்கிட்ட சொல்லிடறேன்.” என்று ஆரம்பிக்க, இதழினிக்கோ உள்ளுக்குள் பயம் அவன் எதை மனதில் வைத்து கொண்டு என்ன சொல்ல போகிறானோ என்று.
ஒருவேளை அன்றைய நிகழ்வை மனதில் வைத்துகொண்டு காதல் கீதல் என்று எதையாவது உளறப்போகிறானா..? அதனால் தான் வம்படியாக தன்னை இங்கு வரவழைத்தானா..? என்றெல்லாம் யோசித்தவாறே புடவையின் முந்தியை இருகைகளாலும் இறுக்கமாக பிடித்தப்படியே அவள் நின்றிருக்க,
“அன்னைக்கு நமக்குள்ள நடந்தது ஒரு ஆக்சிடண்ட். அவ்வளோதான். அதுக்காக நான் உன் கிட்ட சாரிலாம் கேட்க மாட்டேன். ஏன்னா தப்பு உன் மேலயும் இருக்கு இல்லையா..?” என்று கேட்டவனை, எதே என்பது போல் அவள் பார்க்க,
“அப்புறம் நமக்குள்ள நடந்த அந்த ஆக்சிடண்ட்-அ அட்வாண்டேஜ்-ஆ எடுத்துகிட்டு லவ் பண்றேன்-ன்ற பேர்ல என்ன டிவிட்டர்-ல ஃபாலோ பண்றது, எஃபி-ல டேக் பண்றது, நான் போற இடத்துக்கெல்லாம் என் பின்னாடியே வர்றது, ரீசனே இல்லாம என்ன தேடி என் அப்பார்ட்மெண்ட் வரைக்கும் வர்றது, லவ்-அ அக்சப்ட் பண்ணிக்க சொல்லி அழறது, சூசைட் அட்டண்ட் பண்றது இதெல்லாம் இருக்க கூடாது” என்றவனை பார்த்து ‘ஏண்டா இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல’ என்பது போல் பார்த்தாள் இதழினி.
“இன்கேஸ்.. நீ சூசைட் டிரை பண்ணாலும் சரி எனக்கு உன் மேல லவ்-லாம் வர வாய்ப்பே இல்ல.. ஏன்னா எனக்கு இந்த காதல் கத்திரிக்கா மேல-லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.. அதுலயும் பொண்ணுங்க மேல சுத்தமாவே எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல… ஏன்னா எனக்கு எல்லாமே என் டார்லிங்தான்” என்று தன் கடைவிழிபார்வையால் கவினை சுட்டி காட்டி சொன்னவனையே வேறு வழியில்லாமல் அவள் பார்த்திருக்க,
”என்ன சொன்னது புரிஞ்சுதுதன..?” என்றான் மீண்டும் கேள்வியாய் அவனே.
“எல்லாம் என் நேரம்.” என்று உள்ளுக்குள் நொந்துகொண்டவள், புரிந்தது என்பது போல் தலையை மட்டும் ஆட்டிவைக்க,
“உன் போன் நம்பர்..?” என்றான் ரிஷப்.
“என் நம்பர்.. எதுக்கு சார்…?” என்று தடுமாறியவளை பார்த்து,
“ஒருவேளை இங்க மண்டை-அ மண்டை-அ ஆட்டிட்டு போன்-ல மெசேஜ் பண்ணி டார்சர் பண்ணா பிளாக் பண்ண எனக்கு ஈஸியா இருக்கும் இல்ல“ என்றவனின் மண்டையிலேயே ஓங்கி ஒன்று வைக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
இருந்தும் பல்லை கடித்துகொண்டே தன் பத்து இலக்க போன் நம்பரை கடகடவென அவள் சொல்ல, அதை தன் கைபேசியில் சேகரித்துகொண்டவனோ
அவளை ஆழ ஒரு பார்வை பார்த்தவாறே “குட்” என்றவன், கவின் புறம் திரும்பி “உனக்கும் நான் சொன்னதெல்லாம் புரிஞ்சியிருக்கும்-னு நினைக்கிறேன் டார்லிங்..” என்றவன் அப்போதுதான் அவன் நின்ற நிலையை கவனித்தான்.
டீ-ஷேர்ட்டை இழுத்து இழுத்து விட்டபடி, நெளிந்தபடியே அவன் நின்றிருக்க,
“நீ ஏண்டா… எறும்பு புத்துமேல கால வச்சமாதிரி நெளிஞ்சிகிட்டு இருக்க.. இன்னும் போகலையா..?” என்று ரிஷப் கேட்ட போதுதான் இதழினியும் கவினை கவனித்தாள்.
“அதானே இவன் ஏன் நின்ன இடத்துலே அடிபிரதங்ஷனம் பண்ணிட்டு இருக்கான்” என்று யோசித்தவாறே அவளும் அவனையே பார்த்திருக்க,
ரிஷப்பை நெருங்கி சென்று நின்ற கவினோ, அவனுக்கு மட்டும் கேட்கும் படி சன்ன குரலில் “ஜிப்-ல மாட்டிக்கிச்சி” என்று சிணுங்கியபடி சொல்ல,
அவன் கூறியதை கேட்டு “வாட்..” என்று அதிர்ந்த ரிஷப்நந்தனுக்கோ அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை அதுவும் அவளை பக்கத்தில் வைத்துகொண்டு.
அதேசமயம் இதழினி வேறு, “சார்.. என்னாச்சி.. சார்..? சார்..?” என்று கேட்டவாறே இருவரையும் குறு குறுவென அவள் பார்த்திருக்க, கவினை மறைத்தாற்போல் அவன் முன்னால் சென்று நின்று கொண்ட ரிஷப்-பிற்கு அவளை இங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருந்தது.
“யா.. அது.. அது….” என்று அவசர அவசரமாக பார்வையை அங்கும் இங்குமாக துழாவ விட்டவன் பின் ஏதோ நினைவு வந்தவனாய்,
“என்ன காலேஜ் இது..? வந்த கெஸ்ட்-அ இப்படிதான் வெல்கம் பண்ணுவீங்களா..?” என்று கோவத்தில் அவன் காச் மூச்சென்று கத்த, இதழினிக்கோ ஒன்றுமே விளங்கவில்லை.
“சார்… சார்.. என்னாச்சி…. சார்.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார்..” என்றவள் பதற்றத்துடனே கேட்ட போதுதான்
“வந்த கெஸ்ட்-க்கு குடிக்க எதுவும் தரமாட்டீங்களா..?” என்றான் அவன்.
அதான் கொடுத்தாயிற்றே என்பது போல் மேஜை மீது குடிக்காமல் இருந்த காஃபி கப்பை அவள் பார்க்க, அவள் பார்வையை கவனித்தவன்
“எங்களுக்கு காஃபி பிடிக்காது” என்றான் பட்டென்று.
“சார்.. குடிக்காம சொன்னா எப்படி சார்..? அது ஃபில்டர் காஃபி.. எங்க கேண்டீன் ஸ்பெஷல். ஒரு வாய் குடிச்சி பாருங்க சார்.. ரொம்ப நல்லா இருக்கும் சார். நான் வேணும்னா சூடா…” என்றவள் அவன் பார்த்த அனல் பார்வையில் வாயை மூடிக்கொண்டதோடு,
“சொல்லுங்க சார்.. வேற என்ன உங்களுக்கு பிடிக்கும்..?” என்றவள் கேட்டு முடிக்கவில்லை,
அதற்குள் “அவனுக்கு ஷாம்பியன், எனக்கு கூலிங் பியர்” என்று நிலைமை புரியாமல் சொன்ன கவினை திரும்பி முறைத்தவன்,
“இப்ப இது ரொம்ப முக்கியம்” என்று சொல்லிவிட்டு, திரும்பி அவளை பார்க்க,
அவளோ, “சார் இது காலேஜ்.. இதெல்லாம் இங்க கிடைக்காது.” என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு.
“வேறென்ன கிடைக்கும்..?” என்றவனின் கேள்விக்கு,
“டீ, காஃபி, கூல் டிரிங், ஃப்ர்ஸ் ஜீஸ்..” என்று அடுக்கிக்கொண்டே போனவளை,
“ஹே நிறுத்து..” என்று நிறுத்தியவன், “கொதிக்க கொதிக்க பாயில் வாட்டர் கொண்டு வா” என்க, அவளோ “சார்…” என்றாள் இழுவையாக.
“சொன்னது உன் காதுல விழலையா..?” என்று எரிந்துவிழுந்தவாறே அவள் கரத்தை பற்றி தர தர-வென இழுத்து சென்று வெளியில் விட்டவன்,
“போ.. சீக்கரமா போய் பொறுமையா எடுத்துட்டு வா” என்றதோடு அறைக்கதவையும் டொம்மென்று சாற்ற, அறைக்கதவை ஒரு பார்வை பார்த்தவாறே கேண்டீனை நோக்கி சென்றாள் இதழினி.




