Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
(5.0)

அத்தியாயம் - 9

January 13, 2026
சந்தோஷ் குணா
5.0(1 reviews)
8 min read
அத்தியாயம் - 9
Hero - Music Director, Heroine - Music student

பயத்தில் நா உலர்ந்து மேலன்னத்தில் ஒட்டிகொள்ள, விழிகள் நிரம்பிய கண்ணீருடன் அவனை பார்த்தாள் இதழினி.

அவனோ தன் கூரிய விழிகளால் அவளை கூர்ந்து நோக்கியவாறே, “நிஜமா நீ யார் கிட்டயும் சொல்ல..?” என்றவனின் வார்த்தையிலிருந்த கம்பீரமும், கோவமும் அவளுக்குள் ஒரு வித பயத்தை ஏற்படுத்ததான் செய்தது.

எச்சிலை கூட்டிவிழுங்கியபடி, இல்லை என்பதுபோல் தலையை அசைத்தவளுக்கு அப்போதுதான் இது குறித்து தாரிகாவிடம் பேசியது நினைவிற்கு வந்தது.

“சார்… நான் என் ஃப்ரண்ட் தாரிகா-கிட்ட மட்டும்தான் சார் சொன்னேன். பெருமாள் சத்தியமா அவள தவிர வேற யார்கிட்டயும் நான் சொல்லல சார்.” என்றவளின் முகம் மாறித்தான் போனது அவனின் கனல்பார்வையை பார்த்து.

“ஸோ… நீயே ஒத்துக்கற இந்த நியூஸ்பேப்பர்-ல உள்ள கண்டென்ட் உன்னோடது தான்னு” என்றவன் கேட்ட தோணியில் அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

“சொல்லணும்னு எதையும் சொல்லல சார்.. உங்க மேல உள்ள கோவத்துல எல்லாத்தையும் சொல்லிட்டேன். தப்புதான் சார். மன்னிச்சிடுங்க. இனிமே சொல்ல மாட்டேன்” என்றவள் இருகரம் கூப்பி அழுதுகொண்டே அவனிடம் மன்னிப்பு  கேட்க,

ஒற்றை காலை படுக்கைமீது ஊன்றி தொடையில் கை குற்றி அவளை அனல் பார்வை பார்த்தவன்,

“கோவத்துல என்ன வேணும்னாலும் சொல்லுவியோ..?” என்றவனின் கேள்விக்கு அவள் கண்ணீர் மல்க அவனை பார்த்தாள் என்னை விட்டுவிடுங்கள் என்பது போல்.

“எப்படி எப்படி.. பொண்ணுங்க நிழல கூட விட்டு வைக்காத அளவுக்கு நாங்க காமகொடூரனுங்க. அப்படித்தானே”  என்று கேட்டபடியே அவன் மேலும் அவளை நெருங்க, அவளோ இருகைகளாலும் ஷாலை இறுக்கபிடித்தபடியே “சா.. சாரி.. சார்.. சாரி சார்” என்று அழுதாள்.

“காம கொடூரன் என்ன பண்ணுவான்னு தெரியுமா..?” என்று கேட்டவன் சற்றும் அவள் எதிர்ப்பார்க்கா வண்ணம் தான் அணிந்திருந்த டீ-ஷர்ட்டை கழற்றி வீசியதோடு.. பாண்ட் பட்டன் மற்றும் சிப்பையும் அவிழ்க்க, அவன் செயல் அவளுக்கு மட்டுமல்ல அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த கவினுக்குமே அதிர்ச்சிதான் இவனா இப்படி என்று.

அடுத்து என்ன நடக்கும் என்று யூகித்தவளோ, “அண்ணா.. அண்ணா… பிளீஸ் அண்ணா… என்ன விட்டுடுங்கண்ணா… உங்க தங்கச்சி-யா நினைச்சி என்ன விட்டுடுங்கண்ணா.. பிளீஸ்” என்று கதறி அழுதவள்,

சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த கவினையும் பார்த்து, “அண்ணா… அண்ணா.. நீங்களாவது இந்த அண்ணனுக்கு சொல்லுங்களேன்” என்று கெஞ்ச,

அவளின் அண்ணன் என்ற அழைப்பை சகித்து கொள்ள முடியாமல் “ஏய்..” என்று ரிஷப்நந்தன் கத்திய கத்தில் இதழினிக்கோ தூக்கிவாரி போட்டு விட்டது.

“யாருக்கு யாருடி அண்ணன்..?” என்று கேட்டவாறே வலுக்கட்டாயமாக அவள் கரத்தை இறுக பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் சட்டென்று அவள் இதழ்களில் தன் இதழை பதித்திருக்க, அவனின் இந்த செயல் அவளை மட்டுமல்ல கவினையுமே அதிர்ச்சிகுள்ளாக்கத்தான் செய்தது.

எவ்வளவு போராடியபோதும் அவளால் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொள்ளவே முடியவில்லை.

நீண்ட இதழ் யுத்தத்திற்கு பின்னே அவள் இதழ்களுக்கு அவன் விடுதலை கொடுக்க, விட்டால் போதுமென்று விழுந்தடித்துகொண்டு படுக்கையிலிருந்து எழுந்தவள், சோஃபாவில் கிடத்த தன் பேக்கையும் எடுத்து கொண்டு வாயிற்புறத்தை நோக்கி ஓட,

“போ.. போய் கோவத்துல இதையும் சொல்லு.. நாளைக்கு நியூஸ்பேப்பர்-ல கொட்ட எழுத்துல வரணும். சரியா...?” என்றான் ரிஷப் நந்தனும் அவள் காதிற்கு விழும்படி சற்று சத்தமாகவே.

அவன் சொன்னது காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்காமல் அவசரஅவசரமாக கதவை திறந்து கொண்டு வெளியேறியவளுக்கு பயத்தில் மூச்சிவிடவே சிரமமாகத்தான் இருந்தது.

என்னவோ தனக்கு நேர்ந்த அவலத்தை இந்த உலகமே பார்த்தது போல், தலையை தாழ்த்தியபடி வழிந்தோடிய கண்ணீரை துடைத்துகொண்டே லிஃப்டை நோக்கி ஓடியவள், எதிரில் வந்துகொண்டிருந்த அந்த ஆளை கவனிக்கவே இல்லை.

இடித்ததற்காக அவனிடம் மன்னிப்பு கூட கேட்காமல் ஓடிச்சென்று அவள் லிஃப்டு-க்குள் நுழைய, அவளை பார்த்தபடியே ரிஷப் நந்தனின் பிளாட் கதவை தட்டினான் இயக்குனர் பரஞ்சோதியின் மேனேஜர் செல்வா.

உள்ளிருந்து “கம் இன்” என்ற சத்தம் கேட்டு, கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த செல்வா-வை பார்த்த மாத்திரத்திலேயே ரிஷப் நந்தனின் முகம் மாறிப்போனது.

இவன் எதுக்கு இங்க வந்தான் என்பது போல் ரிஷப் இப்போது கவினை பார்க்க,

நான் பார்த்துகொள்கிறேன் என்பது போல் கவின் அவனை பார்த்து கண்ணசைக்க, வந்தவனை பார்க்க கூட பிடிக்காமல் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான் ரிஷப்.

ரிஷப்-பை பார்த்தவாறே கவின் காட்டிய இருக்கையில் அமர்ந்த சிவா-வின் பார்வை ஒரு கணம் தன்னை கவனிக்காமல் அமர்ந்திருந்த ரிஷப் நந்தன் மீது படித்து மீள, அதை கவினும் கவனிக்கவே செய்தான்.

“என்ன செல்வா இங்க வரைக்கும்..? என்று கேட்டபடியே அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தான் கவின்.

“அதான் சார்.. நம்ம பரஞ்ஜோதி சார் நடத்திட்டு வர அனாதை இல்லத்தோட சேரிட்டி ஃப்ண்ட்-க்காக எப்பவும் போல இந்த தடவையும் நீங்கதான் ஒரு மியூசிக் கான்செர்ட் நடத்தி தரணும். அதான் டேட் கேட்டுட்டு வர சொல்லி என்ன அனுப்பியிருக்காரு” என்று தான் வந்த காரணத்தை செல்வா சொல்ல,

“என்ன செல்வா சார்…? நான் தான் நேத்தே தெளிவா போன்-ல சொல்லிட்டேனே இனி அவருக்காக எந்த மியூசிக் கான்சர்ட்டும் நாங்க பண்ண போறது இல்லன்னு” என்றான் கவினும் பதிலுக்கு.

“இப்படி சொன்ன எப்படி கவின் தம்பி.. பழசயெல்லாம் நீங்களும் கொஞ்சம் நினைச்சி பார்க்கணும் இல்லையா..? சார் மட்டும் அன்னைக்கு அவர் படத்துல உங்களுக்கு சான்ஸ் கொடுக்கலனா.. நீங்க சினிஃபீல்டு குள்ள வந்திருக்கதான் முடியுமா..? இல்ல இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கதான் முடியுமா..?” என்று கேட்டதோடு கூடவே ஒரு நமட்டு சிரிப்பையும் செல்வா உதிர்க்க, ரிஷப்-பிற்குதான் பொறுமை எல்லை தாண்டியிருந்தது.

“அதையெல்லாம் நினைச்சி பார்த்ததாலதான் வாசல்லே நிக்க வச்சி விரட்டாம உன்ன உக்கார வச்சி பேசிக்கிட்டு இருக்கோம்” என்று கோவத்தில் பற்களை கடித்தப்படி ரிஷப் சொல்ல,

“என்ன தம்பி வார்த்தையெல்லாம் தடிக்குது..?” என்று ரிஷப்பை பார்த்து கேட்டவன், கவின் புறம் திரும்பி,

“என்ன கவின் தம்பி உங்க ஃப்ரண்ட்-க்கு மரியாதையா பேச வராதா..?” என்று முடிக்கவில்லை, அதற்குள் அவன் சட்டை காலரை கொத்தாக பற்றிய ரிஷப் அவனை வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, கவினும் அவனை தடுக்கவில்லை.

கவினை பொறுத்தமட்டில் செல்வாவிற்கு இது வேண்டும் என்றுதான் தோன்றியது. ஏனெனில் அவனும் ஒருவாரகாலமாக இதுகுறித்து எவ்வளவோ செல்வாவிடம் பேசி பார்த்துவிட்டான். இருந்தும் இன்று மீண்டும் வந்து டேட் கேட்டால் யாருக்குதான் கோவம் வராது.

அவனை இழுத்து சென்று வெளியில் தள்ளிய ரிஷப், “இந்த மரியாதை போதுமா..?” என்று கேட்டு கதவையும் அவன் முகத்தில் அறைவதுபோல் டொம்மென்று சாற்ற, செல்வாவின் முகம்தான் அவமானத்தில் கன்றி போனது.

“இவனுங்களுக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாதாமா..? மைண்ட்-அ அப்செட் பண்ணறதுக்குனே கிளம்பி வராணுங்க..” என்று எரிச்சல்பட்டவனின் மனதை மாற்றும் விதமாக கவின் “சிகரெட்” என்று கேட்டவாறே ஒற்றை சிகரெட்டை அவன் முன் நீட்ட,

ரிஷப்போ, “ஏற்கனவே உள்ள புகைஞ்சிகிட்டுதான் இருக்கு” என்றான் தனக்கு வேண்டாம் என்பது போல்.

பின் அந்த சிகரெட்டை பற்ற வைத்து இரண்டு மூன்று பஃப் இழுத்த கவின், “சில் டார்லிங்.. அவன்லாம் ஒரு மேட்டரே இல்ல… குழந்தைகள வச்சி சேரிட்டி ஃபண்டுன்னு ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கறவனுக்காகலாம் நீ ஏன் உன் மூட்-அ ஸ்பாயில் பண்ணிக்கற..?” என்றவனின் கேள்வியும் ரிஷப்பின் மனதிற்கு சரியென்று பட,

கவினின் விரலிருந்த சிகரெட்டை பிடுங்கி தன் இதழ் மீது வைக்கப்போனவனின் கரம் அப்படியே நின்றுவிட்டன, சற்றுமுன் அவளுக்கு கொடுத்த முத்தத்தை நினைத்து.

“என்னாச்சி..?” என்று கேட்ட கவினை பார்த்து ஒன்றும் இல்லை என்பது போல் அவன் தலையை அசைக்க, அப்போதுதான் அவன் இதழ் ஓரத்தில் இருந்த இரத்தகறை கவினின் கண்களுக்கு பட்டது.

“ஹே.. இரு..” என்றவாறே அதை சிண்டு விரலில் வழித்தெடுத்து ரிஷப்-பிடம் காட்டியவன், “நீ யா டார்லிங் இப்படி..? ஐம் ரியலி ஷாக்கிடு. பொண்ணுங்க கிட்ட பேசவே பிடிக்கலன்னு சொல்லிட்டு சுவிங்கம் மாதிரி அந்த பொண்ணு லிப்-அ மொன்னு இருக்க போல..” என்று கவின் அவனை கலாய்க்க,

“ஸ்டாப்பிட் கவின்” என்றான் ரிஷப்.

“அன்னைக்கு நீ அந்த பொண்ண பார்த்த பார்வையிலே தெரிஞ்சிது உனக்குள்ள பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சிடுச்சின்னு. டேய்.. உண்மை-அ சொல்லு புடிச்சிதன அவள கிஸ் பண்ண..?” என்க,

அவனோ, “ஹே பட்டாம் பூச்சும் இல்ல கரப்பான் பூச்சும் இல்ல.. கோவத்துல நடந்த ஆக்சிடண்ட் அது அவ்வளோதான்” என்று தன் செயலுக்கு ரிஷப் விளக்கம் கொடுத்த போதும் கவின் அவனை விடவே இல்லை.

“அண்ணா-ன்னு சொன்ன கோவத்துல நடந்த ஆக்சிடண்ட்தன அது..?” என்று கவினும் அவனை பிடிக்க,

“ஹே ஐம் ஜஸ்ட் வார்ன் ஹெர்” என்றான் சிகரெட்டை புகைத்தவாறே ரிஷப்.

“வார்ன் பண்ண மாதிரி தெரியல டார்லிங்… அண்ணான்னு சொன்னா இப்படித்தான் கிஸ் பண்ணுவேன்னு சிஸ்டருக்கு வார்னிங் கொடுத்தமாதிரி இருந்துச்சி” என்றான் வேண்டுமென்றே அவனை சீண்டும் விதமாக கவின்.

கவின் அவ்வாறு கூறியதை கேட்டு பதிலுக்கு அவனை முறைத்தவன்,  “அதென்ன திடீர்னு சிஸ்டர்..?” என்க.

“ஆமாம்.. உன்னோட கேர்ள் ஃபர்ண்ட் எனக்கு சிஸ்டர் முறை தன” என்று சொல்லிவிட்டு கீழ் அதரங்களை கடித்துகொண்டு கவின் அழகாய் சிரிக்க,

அவன் தலையிலே ஓங்கி ஒரு குட்டு வைத்தான் ரிஷப்.

அவன் குட்டு வைத்த இடத்தை தேய்த்துவிட்டபடி ஏண்டா என்பது போல் கவின் அவனை பார்க்க,

“அப்பப்ப இப்படி ஒன்னு கொடுத்தாதான் அடிக்கடி கற்பனை உலகத்துல மூழ்கி போற உன் மூளை கற்பனை உலகத்துலேந்து கொஞ்சம் வெளியில வரும்” என்று அதற்கும் விளக்கம் கொடுத்தவன்,

சிகரெட்டை புகைத்தவாறே பால்கனி நோக்கி செல்ல,

“ஆ.. நானும் பார்க்கதானே போறேன்.. இது என் கற்பனையா.. இல்ல.. உன் வாழ்க்கையோட நிஜமான்னு. எத நீ ஆக்சிடண்ட்-னு சொன்னியோ அந்த ஆக்சிடண்ட் கூடிய சீக்கரத்துலே சுவீட் இன்சிடன்ட்-ஆ மாறத்தான் போகுது டார்லிங்” என்றவன் கத்தி சொல்ல, ரிஷப்போ பால்கனியின் சுற்று கம்பியில் கைகளை ஊன்றியவாறு பரந்து விரிந்திருந்த அலைகடலையே பார்த்து கொண்டிருந்தான்.

வீடுவந்து சேர்ந்தபின்னும் அவளுக்கு நடுக்கம் குறைந்த பாடில்லை.

வீட்டுற்குள் நுழையாமல் நேராக தோட்டத்திற்கு சென்றவள் கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை இறைத்து தலைக்கு ஊற்றியபின் தான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தாள்.

நடுங்கியபடி உள்ளே வந்தவளின் உடல் நெருப்பாய் கொதிக்க, பின் இலக்கியாவும் ,ஆரண்யாவும் தான் அவளின் தலையை துவட்டி, உடை மாற்றி விட்டனர்.

உடலை குறுக்கிகொண்டு நடுங்கியவாறே அவள் படுத்திருக்க, இலக்கியாவிற்குதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எதனால் இவளுக்கு இப்படி ஆனது என்று அவரும் அவளிடம் ஆயிரம் முறையாவது கேட்டு பார்த்திருப்பாள். ஆனால் இதழினி வாயை திறக்கவே இல்லை.

தனக்கு நேர்ந்த அவலத்தை பற்றி அவளால் எப்படி வெளியில் சொல்ல முடியும்.

அதனால் தான் வீட்டிற்கு வரும் வழியில் நாய் துரத்தியதில் கீழே விழுந்ததில் அடிப்பட்டதாகவும் சொன்னவள் அதன் பின் எதற்காகவும் வாயை திறக்கவே இல்லை.

இரண்டு மூன்று பாரசிட்டமால் மாத்திரையை கூட விழுங்கி பார்த்துவிட்டால் இருந்தும் ஜீரம் குறைந்த பாடில்லை.

நடந்த நிகழ்வை நினைக்க நினைக்க உள்ளுக்குள் அவளுக்குள் நடுக்கம் கூடியதே தவிர குறைந்த பாடில்லை.

நடந்த நிகழ்வுகள் எதையும் அவளால் ஜீரணித்துகொள்ளவே முடியவில்லை.

ஆண்களிடம் நின்று பேசுவதற்கே விரும்பாதவளால் எப்படி இப்படி நிகழ்வை சர்வசாதரணமாக எடுத்துகொள்ள முடியும்.

பின் இலக்கியாவும் தன் பங்கிற்கு கைவைத்தியங்களை செய்து பார்த்தாள்.

எதற்கும் அசராமல் ஜீரம் இருக்கவே, அடுத்து பக்கத்தில் உள்ள மெடிக்கலுக்குதான் அவளை அழைத்து சென்றாள் இலக்கியா.

அவர்கள் கொடுத்த மருந்தின் உதவியால்தான் அன்று இரவு அவள் சற்று கண் அயர்ந்தது கூட.

எப்போதும் பத்து மணிக்கு மேல் கண்விழிக்கும் ரிஷப் அன்று ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்திருந்தான்.

இத்தனைக்கும் நேற்று இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன் அதிகாலை போல தான் லேசாக கண் அயர்ந்தான். இருந்தும் ஏனோ ஏழு மணிக்கெல்லாம் விழுப்பு தட்டிவிட்டது.

இதற்கு மேல் உறக்கம் வரப்போவதில்லை என்று தோன்றவே தன்னை அணைத்தபடி படுத்திருந்த கவினின் தூக்கத்தை கலைக்காமல் அவனை தள்ளி படுக்க வைத்தவன் நேராக குளிர்சாத பெட்டையை நோக்கிதான் சென்றான்.

எப்போதும் போல் குளிர்சாதன பெட்டியை திறந்து ஷாம்பியனை எடுத்தவனின் கண்கள் ஒரு கணம் அதன் பக்கத்தில் இருந்த கூலிங் பியர் மீது பட்டு விலகவே செய்தது.

ஷாம்பியனை சிறிதளவு கிளாசில் ஊற்றி பால்கனிக்கு சென்றவன் அலைகடலை இரசித்தவாறே அதை இரசித்து குடிக்கவும் ஆரம்பித்தான்.

அலைகடலுக்குள் இருந்து மெல்ல மெல்ல சூரியன் தலை காட்டிக்கொண்டிருக்க, கீழ்வானமே செவ்வானமாக சிவந்து போயிருந்தது.

சிலர் அந்த இரம்மியமான காட்சியை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டிருக்க, வெகு சிலரோ வியர்க்க விறுவிறுக்க வாக்கிங், ஜாகிங் செய்து கொண்டிருந்தனர்.

சில இளைஞர்கள் குழுவாக த்ரோபால் விளையாடிக்கொண்டிருக்க, அவர்களையும் வேடிக்கை பார்த்த படி ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது.

அந்த காலை வேளையிலும் அந்த இடம் ஓரளவு ஜனரஞ்சமாகத்தான் இருந்தது.

அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடியே ஷாம்பியனை அருந்திமுடித்தவன், அடுத்து குளியலறைக்குதான் சென்றான்.

குளித்து முடித்து அவன் வெளியில் வந்த போது கூட கவின் உறங்கி கொண்டுதான் இருந்தான்.

இடையில் டவலோடு நிலை கண்ணாடி முன் சென்றுநின்றவன், தன் பிம்பத்தை பார்த்தவாறே டிரையர் கொண்டு தலைமுடியை காயவைத்து கொண்டிருக்கும் போதுதான் அவன்  கண்கள் அவனின் சிவந்திருந்த அதரங்கள் மீது பட, அவன் கரமோ டிரையர்-ஐ ஆஃப் செய்திருந்தது.

தன் அதரங்களையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு நேற்று நடந்த நிகழ்வு கண நேரத்தில் கண் முன்னே வந்து செல்ல,

“ஷிட்” என்றவாறே முன்னுச்சியை கோதிவிட்டு கொண்டவனுக்கு இப்போது வரையுமே புரியவில்லைதான்..

என்னதான் நடந்த நிகழ்வு குறித்து கவினிடம் அதையும் இதையும் அவன் சொல்லி சமாளித்திருந்தாலும் அவனுக்கே தெரியவில்லைதான் தான் ஏன் அவளிடம் அவன் அவ்வாறு நடந்து கொண்டோம் என்று.

ஏன் எத்தனையோ முறை கவினை பார்க்க வரும் பெண்கள் அவனிடம் அத்துமீறும் போதுகூட சுள்ளென்று ஏதாவது சொல்லிவிட்டு விலகி நின்றுகொள்பவன் எப்படி அவளிடம் இந்த அளவிற்கு அத்துமீறினான் என்பதுதான் இப்போது வரையும் அவனுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கேள்வியும் கூட.

அதேசமயம் அவளிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்காக அவன் மனம் வருத்தமெல்லாம் கொள்ளவில்லை. அவனை பொறுத்த மட்டில் அவள் செய்த தவறுக்கு அவன் செய்த செயல் நியாயம் அவ்வளவே.

அதேநேரம் இலக்கியாவின் பிடிவாதத்திற்காக சுடுதண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு துடைப்பதற்காக நிலைக்கண்ணாடி முன் சென்று நின்றவளும் தன் பிம்பத்தையேதான் பார்த்து கொண்டிருந்தாள்.

நேற்று தனக்கு நேர்ந்த விபரீதம் கண நேரத்தில் அவள் கண்முன்னே வந்து செல்ல, மீண்டும் அவள் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்திருந்ததோடு, கண்களிலிருந்து கண்ணீரும் வழிந்தோடியது.

அதிலும் தன் சிவந்த அதரத்தின் ஓரத்தில் அவனால் ஏற்பட்டிருந்த காயத்தை பார்த்தவளுக்கு மேலும் கண்களை கரித்துகொண்டுதான் வந்தது.

தன் பிம்பத்தை பார்க்க தனக்கே அறுவெறுப்பாக இருக்க முகத்தை மூடிகொண்டவளுக்கு கத்தி அழ வேண்டும் போல இருந்தது. இருந்தும் அழ முடியாத சூழ்நிலை அவளுக்கு.

அப்படியே அவள் அழுவதை யாராவது பார்த்துவிட்டால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு அவளால் என்ன பதில் சொல்ல முடியும்.

அப்படியே நடந்ததை சொன்னால் தவறு இவள் மீது உள்ளது போல் அல்லவா அவளின் கல்லூரி படிப்புக்கு முற்று புள்ளி வைப்பார்கள்.

அடுத்து அவசரஅவசரமாக திருமணம் என்ற பெயரில் யாரையாவது அவள் தலையில் கட்டி வைப்பார்கள்.

பெரும்பாலும் இது போல் பாதிக்கபடும் பெண்களுக்கு இந்த சமூகம் காலம் காலமாக கொடுக்கும் தண்டனை என்னவோ இதுதானே.

இதில் அவள் மட்டும் விதிவிலக்கா.. என்ன..? எங்கே வெளியில் சொன்னால் தனக்கு பிடித்தமான இசையில் சாதிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தினால்தான் இப்போதுவரையுமே அவள் எதையும் சொல்லாமல் இருக்கிறாளே தவிர அவன் மீதான பயத்தினால் அல்ல.

அனைத்தையும் உள்ளுக்குள்ளே வைத்து புழுங்கி கொண்டிருப்பவளுக்கு நெஞ்சே வெடித்து விடுவது போல இருந்தது.

8 minreading time
1comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels