Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
(5.0)

அத்தியாயம் - 6

January 07, 2026
சந்தோஷ் குணா
5.0(1 reviews)
10 min read
அத்தியாயம் - 6
Hero - Music Director, Heroine - Music student

பயத்தில் கைகளை பிசைந்தவாறே அவள் அமர்ந்திருக்க, பற்றவைத்த சிகரெட்டை புகைத்தவாறே அவளுக்கு எதிரில் அமர்ந்தவன் தன் பார்வையால் அவளை அளக்கவும் ஆரம்பித்திருந்தான்.

வகுடெடுத்து அவள் பின்னியிருந்த பின்னல் இடைத்தாண்டி அவள் மடியில் இளைப்பாறி கொண்டிருந்தது.

அவள் இருக்கும் மாநிறத்திற்கு காலர் வைத்த அந்த கருமைநிற அரைக்கை சல்வார் கூட பொருத்தமாகதான் இருந்தது.

பள்ளிமாணவிகள் போல் ஷாலை மடித்து இருபுறமும் அவள் பின் செய்திருக்க இன்றைய நவநாகரீக உலகத்தில் இப்படியும் ஒரு பெண்ணா என்ற ஆச்சரியம்தான் ரிஷ்ப் நந்தனுக்கு.

ஐபுரோ கூட டிரிம் செய்யப்படாத அவள் முகத்தில் செயற்கையான ஒப்பனைகள் எதுவும் இல்லை என்பதை பார்த்த மாத்திரத்திலேயே அவன் விழிகள் கண்டுகொண்டு விட்டன.

சிறிய அளவிலான கோபுரபொட்டு, சிவப்புநிற கல் மூக்குத்தி. நானும் தங்கம்தான் என்பது போல் அவ்வப்போது மின்னிகொண்டிருந்த சிறய அளவிலான ஜிமிக்கி இதுவே அவளை பேரழியாக காட்ட போதுமானதாக இருந்தது.

அவளின் நெற்றி பரப்பு, காதோரம் மற்றும் பின்னங்கழுத்து பகுதியில் படர்ந்திருந்த அதிகப்படியாக பேபி ஹேர்களை கவனித்தவனின் விழிகள், அவள் கையின் மேற்பகுதி, கை மற்றும் கால் விரல்களிலிருந்த முடிகளையும் கவனிக்க தவறவில்லை.

“மழைக்கு கூட இவ பார்லர் பக்கம் ஒதுங்கினது இல்ல போல” என்று உள்ளூர நினைத்துகொண்டவனின் பார்வை அவள் மீதேதான் நிலைத்திருந்தது.

அதேநேரம் இங்கிருந்து எப்படி கிளம்புவது என்று யோசனையோடே விழிகளை தாழ்த்தியபடி அவள் அமர்ந்திருக்க,

“நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே..?” என்று கேட்டு அவளை தன்னை பார்க்க வைத்தான் ரிஷப் நந்தன்.

என்ன கேள்வி போல் என்பது அவள் அவனை பார்க்க,

“ஆர் யூ வெர்ஜின்..?” என்று அவனே தன் கேள்வியை அவளுக்கு நினைவும் படுத்த, அவளுக்கோ அவன் மீது கோவம்தான் வந்தது. காரணம் இது அவள் பெண்மை சம்மந்தபட்ட கேள்வியல்லவா.

இந்த கேள்விக்கு எந்த தன்மானமுள்ள பெண்ணால்தான் பதில் சொல்லமுடியும்..?

அவன் கேள்விக்கு பதில் சொல்லி தன் பெண்மையை இழிவுபடுத்த அவள் விரும்பவில்லை.

இதுவே இது ஒரு பொது இடமாக இருந்திருந்தால் இந்நேரம் அவன் கேட்ட கேள்விக்கு அவள் செருப்பு  தக்க பதிலை தந்திருக்கும்.

ஆனால் அவள்தான் இங்கிருந்து தப்பித்து செல்ல கூட வழியில்லாமல்அவனிடம் அடைபட்டு இருக்கிறாளே.

கோவத்தில் ஏதையாவது அவள் செய்ய போய் அது அவளுக்கே வினையாக மாறிவிட்டால் அற்காகத்தான் இதழினி இப்போது அமைதிகாப்பது கூட.

“பெருமாளே… இவன சீஃப்கெஸ்ட்-ஆ இன்வைட் பண்ண வந்ததுக்கு எனக்கு இப்படியொரு சோதனையா..?” தன் பிரச்சனையை கடவுளிடம் அவள் முறையிட்டு கொண்டிருக்கும் போதுதான்.

“இதுதான் உனக்கு ஃப்ஸ்ட் டைம்-ஆ..?” என்றான் மீண்டும் அவனே.

“என்ன ஃப்ஸ்ட் டைம்..?” என்று புரியாமல் அவள் விழித்துகொண்டிருந்த தருவாயில்தான்,

கதவை திறந்துகொண்டு வெளியில் வந்த அந்த பெண் “ஹாய் ஹனி” என்றவாறே துள்ளல் நடையுடன்அவனை நோக்கி செல்ல,

“வழி அந்த பக்கம்” என்று தன்னை நெருங்கவிடாமல் தடுத்தவன், ஐநூறு ரூபாய் கத்தையை அவளை நோக்கி வீச, அவளும் அதைஇலாவகமாக கேச் பிடித்திருந்தாள்.

கேச் பிடித்தவளின் பார்வை அப்போதுதான் அங்கிருந்த இதழினியை கவனித்தது.

அந்த பெண் அவளை மேலும் கீழுமாக பார்த்திருக்க, திருப்பி அந்த பெண்ணை பார்க்க, இதழினிக்குதான் சங்கடமாக இருந்தது. காரணம் அந்த பெண் அணிந்திருந்த ஆடை அப்படி.

அரைநிர்வாண ஆடையில் அந்த பெண் இருக்க, “இதுக்கு இவ டிரஸ் போடமலே இருந்திருக்கலாம்” என்று தான் தோன்றியது இதழினிக்கு.

இதழினியையே சில கணங்கள் பார்த்திருந்தவள் “யார் இவ.. கிளீனிங் அண்ட் வாஷிங்காக வந்திருக்காளா..? என்றுகேட்டதோடு சிரிக்கவும் செய்ய இதழினிக்குதான் ஒரு மாதிரியாகி போனது.

அவள் முகம் மாறுவதை கவனித்தவன், “கழுத்த புடிச்சி வெளியில தள்ளுனாதான் போவியா..?” என்று கேட்ட தோணியில் அந்த பெண் அடுத்த கணமே சத்தமில்லாமல் இடத்தை காலி செய்திருக்க,

அவனை போலவே இடையில் ஷாட்ஸ் மற்றும் கையில் மதுகுவளையை பிடித்தபடி அப்போதுதான் அந்த அறையிலிருந்து வெளிவந்தான் ரிஷப்பிற்கு அனைத்துமான அவனின் தோழமை கவின்.

“ஹேப்பி பர்த் டே டார்லிங்” என்றவாறே பின்னாலிருந்து ரிஷப்-பின் கழுத்தை வளைத்து அணைத்தவன், ரிஷப் கன்னத்தில் முத்தமிடவும் செய்ய, “தேங்க்ஸ் டார்லிங்” என்றவாறே ரிஷ்ப்-ம் கவின் கன்னத்தில் முத்தமிட,

இங்க என்னடா நடக்குது என்பது போல் அவர்களையே வாயை பிளந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தாள் இதழினி.

அவன் முத்ததால் குதூகலமான கவின் மீண்டும் ஒரு முறை அவனை இறுக்கமாக அணைத்துவிட்டு, கையிலிருந்த மதுவை ஒருவாய் குடித்துவிட்டு “சியர்ஸ் டார்லிங்” என்று ரிஷப்பிடம் கொடுக்க, அதை வாங்கிகொண்டவனும் “சியர்ஸ்” என்றவாறேமதுபானத்தை அருந்தினான்.

பின் “கம் டார்லிங்” என்றவாறே கவினின் கரத்தை பற்றி தன் மடிமீது அவனை படுக்கவைத்த ரிஷப், அவன் சிகையையும் அழகாய் கோதிவிட,

அதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த இதழினிக்கோ“டேய் நான் ஒருத்தி இங்க இருக்கேண்டா“ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

“நைட் நல்லா தூங்குனியா..?” என்ற கவினின் கேள்விக்கு.

“ப்ச்..” என்று சலித்துகொண்டவன், “நீ பக்கத்துல இல்லாம எனக்கு எப்படி டார்லிங் தூக்கம் வரும்..?” என்றான்.

“சரி விடு இன்னைக்கு நைட் சேர்ந்து தூங்கிகலாம்” என்று சொல்லிவிட்டு கவின் கண்சிமிட்ட, பதிலுக்கு அவனும் கண்சிமிட்டி சிரித்தான்.

“சொல்லு பர்த்டே பேபி.. இன்னைக்கு என்ன பிளான்..?” என்று ரிஷப்பின் விரலுக்கு நெட்டுமுறித்தவாறே கவின் கேட்க,

“நான் என்ன பிளான் போட..? நீதான் ஆல்ரெடி பிளான் போட்டு வச்சிருக்கியே.. தோ வந்து ரொம்ப நேரமா வெயிட்பண்ணிட்டு இருக்கா” என்றவன் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவளை காட்ட, அப்போதுதான் அவளை கவனித்தான் கவின்.

எழுந்து அமர்ந்து அவளை மேலும் கீழுமாய் அவன் பார்க்க, அவனைப்போலவே அரைகுறை ஆடையுடன் இருந்தவனை பார்க்க இதழினிக்கு சங்கடமாகத்தான் இருந்தது.

“ஹே டார்லிங்.. நேத்து வேணாம் வேணாம்-னு ஓவரா பிகு பண்ணிட்டு.. இப்போ நீயே வா…..” என்று கேட்டு ரிஷப்பின் வயிற்றில் குத்தியவன், “எஞ்சாய் எஞ்சாய்..” என்று சொல்லிவிட்டு இருவரையும் பார்த்து மார்க்கமாய் சிரிக்க, இதழினிக்குதான் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

“ஏய் கவின் டோண்ட் பிளே வித் மீ..” என்று ஆள்காட்டி விரலை நீட்டி அவனை எச்சரித்தவன்,

“அவதான் தெளிவா சொல்றாளே பெருமாள்தான் அனுப்பனான்னு.. நீ சொல்லாம பெருமாள் எப்படி அனுப்புவான்..?” என்று கவினை பிடித்தான்.

“பெருமாளா..?” என்று புருவம் சுருக்கி சில கணங்கள் யோசித்த கவின், “நோ வே  டார்லிங்… எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. நான் பெருமாள் கிட்ட ரீனா-வ மட்டும்தான் புக் பண்ணேன். அதுவும் உன் பர்த்டே-க்காக.. உனக்காக… பட் நீ நாட் இன்ட்ரஸ்ட்-னு சொன்னாதால தான் நான்…” என்றவன் அப்போதுதான் பேந்த பேந்த விழித்தப்படி தங்களையே பார்த்துகொண்டிருந்தவளை கவனித்தான்.

யாரென்றே தெரியாத ஒருத்தி முன்னிலையில் இதை பெற்றியெல்லாம் பேசுவது சரியன்று பட மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டான் கவின்.

நிச்சயம் பெருமாள் இவளை அனுப்பியிருக்க வாய்ப்பிலை என்பதில் கவினுக்கு துளியளவும் சந்தேகம் இல்லை.

ஏனெனில் சற்று முன் தான் போனில் அந்த புரோக்கரிடம் அவன் பேசியது கூட.

பிறகு எப்படி இவள் என்று யோசித்தவனுக்கு புகழென்னும் உச்சத்தில் இருக்கும் இருவரையும் கீழே இறக்க யாரேனும் போடும் சதிதிட்டமா..? மீடியாக்களின் சூழ்ச்சியா….? என்று யூகித்தவன்

அவளிடமே “உண்மை-அ சொல்லு.. நீ யாரு..? புரோக்கர் பெருமாள்-அ உன்ன இங்க அனுப்புனான்..?” என்று கேட்டபோது,

மலங்க மலங்க விழித்தப்படி இல்லை என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள் இதழினி.

“ஏய் கவின் இவ பொய் சொல்றா.. அவன் பெருமாள்-னு சொன்னா” என்று அடித்து சொன்னவன், “ஹே நீ பெருமாள்னு-தன சொன்ன என் கிட்ட” என்க,

இதழினிக்கு அப்போதுதான் விஷயமே புரிந்தது. தான் பயத்தில் பெருமாளே என்று சொன்னதை அவன் தவறாக புரிந்துகொண்டான் என்று. இது அவளுக்கு புரிந்தால் போதுமா அவனுக்கு புரிய வேண்டுமே..

“சொல்லுடி” என்றவன் அதட்ட,

“சார்.. சார் நீங்க அடிச்சிடுவீங்களோன்ற பயத்துலதான் நான் பெருமாளேன்னு கடவுள் பேர்-அ சொன்னேன். எனக்கு பெருமாள்-ன்னு யாரையும் தெரியாது சார்.. தெரியாது” என்றவள் பயந்தபடியே சொல்ல, இருவருக்கும் அப்போதுதான் புரிந்தது பெருமாள் என்ற பெயரால் வந்த குழப்பத்தை.

புரோக்கர் பெருமாள் அனுப்பிய ஆள் என்று நினைத்துதான் அவன் அவளிடம் அவ்வாறெல்லாம் நடந்து கொண்டது கூட. இருந்தும் அதையெல்லாம் அவளுக்கு விளக்க அவன் விரும்பவில்லை.. அது அவனுக்கு அவசியமும் அற்றது.

என்னதான் பெயர் குழப்பம் தீர்ந்தாலும் வந்திருக்கும் இவள் யார்..? என்ற கேள்வி ரிஷப்பின் மனதை குடையாமல் இல்லை.

புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகளுக்கா பஞ்சம். தெரிந்தவர் தெரியாதவர் மீடியாக்கள் என்று செல்லும் இடமெல்லாம் அவர்களை துரத்தும் கண்கள் ஏராளாம்.

அதனால் தானே தங்களுக்கு உதவியாக மேனேஜர் கூட வைக்காமல் அவர்களாகவே அனைத்து வேலைகளையும் பார்த்து கொள்கிறார்கள்.

யோசிக்க யோசிக்க அவனுக்கு தலையே வெடிப்பது போல் இருக்க,

“அப்போ நீ யாருடி..? மீடியாவா..? என்ன வேவு பார்க்க வந்தியா..? எங்க கேமரா வச்சியிருக்க..?” என்று கேட்டவாறே வேக எட்டுகளுடன் அவளை நெருங்கியவன், அவள் ஷாலை கொத்தாய் பற்ற, இதழினிக்கு உடலே நடுங்கிவிட்டது.

“சார்.. சார்… நான் மீடியா-லா இல்ல சார்.. மியூசிக் காலேஜ் ஸ்டூடண்ட்.” என்றவள் அழுதுகொண்டே சொல்ல, அப்போதுதான் கவினுக்கு நினைவு வந்தது.

“டார்லிங்.. டார்லிங்…” என்றவாறே ஓடிச்சென்று ரிஷப்பின் கரத்தை பற்றியவன், “லீவ் ஹெர் ரிஷப். நான் தான் அவள வர சொன்னேன்” என்க, அதன் பின்தான் அவள் ஷாலிலிருந்து கையை எடுத்திருந்தான் ரிஷப்.

அதீத நடுக்கத்தால் அவள் கால்கள் நிற்க முடியாமல் தடுமாற இருகைகளாலும் ஷாலை இழுத்துபிடித்துகொண்டு அமர்ந்தவள் தேம்பி அழவும் ஆரம்பித்திருந்தாள்.

“வாட் த **** கவின்..” என்று கோவமாய் அறை அதிர கத்தியவன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் வர சொல்லலன்னு சொன்ன.. இப்ப நான்தான் வர சொன்னன்னு சொல்ற… என்ன விளையாடுறீயா நீ..?” என்று கோவத்தில் ரிஷப் கத்த,

“டார்லிங்.. டார்லிங்… ஐ வில் எக்ஸ்பிளைன்..” என்றவாறே அவனை அணைத்து கொண்ட கவின், “ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்..” என்று கூறியவாறே அவன் முதுகை வாஞ்சையாக வருடவும் செய்ய, ரிஷப் நந்தன் அப்போதுதான் ஓரளவு சமாதானமானான்.

சாமாதானமானவனை இருக்கையில் அமர்த்தி அவனுக்கு பிடித்தமான ஷாம்பியனை கிளாசில் ஊற்றி கொடுத்தவன், அதன் பின் தான் அழுதுகொண்டிருந்தவளிடம் சென்றான்.

“ஹலோ மிஸ்..” என்றவனின் குரல் கேட்டு அழுதுகொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவளின் கல்லூரி பெயரை சொல்லி, “ஆண்டுவிழாவுக்காக டேட் கேட்டு வந்திருக்கீங்க இல்லையா..?” என்றவனின் கேள்விக்கு ஆமாம் என்பதுபோல் அவள் தலையை மட்டும் மேலும் கீழுமாய் ஆட்ட, அதை ரிஷப் நந்தனும் கவனிக்கவே செய்தான்.

“தப்பு என்னோடதுதான். உங்களுக்கு அப்பாயிண்பெண்ட் கொடுத்தது நான் தான். ரிஷப்-க்கு இத பத்தி எதுவும் தெரியாது. ஐம்.. ஐம் ரியலி சாரி என்று நெஞ்சில் கைவைத்து தன் மன்னிப்பை அவன் தெரிவிக்க, அதன் பின் தான் இதழினியின் முகத்தில் ஒருவித தெளிவு பிறந்தது.

கவின் கேட்டுகொண்டதற்கினங்க எழுந்து இருக்கையில்அமர்ந்தவள் அதன் பின் மறந்தும் ரிஷப் நந்தன் புறம் திரும்பவே இல்லை.

ஆனால் ரிஷப் நந்தனின் பார்வை அவள் மீதேதான் நிலைத்திருந்தது.

கவின் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்ட ரிஷப், “ஏண்டா..” என்று அவனை கடிந்து கொண்டானே தவிர, தன் செயலுக்காக வருந்தி அவளிடம் மன்னிப்பெல்லாம் கேட்க வில்லை. அது அவனின் குணாதிசியம் இல்லை என்பதால் கவினும் மன்னிப்பு கேட்க சொல்லி அவனை வற்புறுத்தவில்லை.

கவின் கொண்டு வந்து கொடுத்த காஃபி கப்பை பெயருக்கென்று வாங்கிகொண்டவள், ஒரு வாய் கூட அதிலிருந்து குடிக்கவே இல்லை.

இவ்வளவு நடந்தபின்னும் விழாவிற்கு வர முடியாது என்று சொன்னால் அது நன்றாக இருக்காது என்று கவின் சொன்னதற்காக மட்டும், இருவரும் ஆலோசித்து அடுத்தவாரத்தில் ஒரு நாளை தேர்வு செய்து சொல்ல, அவளோ

“நான் கிளம்பறேன் சார்” என்றாள் கவினை மட்டும் பார்த்து.

“ஒன்ஸ் அகைன் ஐம் சாரி” என்று நடந்தவைகளுக்காக மீண்டும் மன்னிப்பு கேட்டவன்,

“உங்க நேம்..?” என்க.

“இதழினி” என்றும் சொல்லும் போதே அவள் அதரங்கள் நடுங்க, ஷாம்பியனை அருந்திகொண்டிருந்த ரிஷப் நந்தனின் விழிகளோ நடுங்கிய அவளின் அதரங்களின் மீதுதான் படிந்திருந்தது.

இன்னும் அவள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருக்க பின் கவின் தான், “டார்லிங் உன்னாலதான் இதழினி ரொம்ப பயந்து போயிருக்கா.. ஸோ கண்டிப்பா நீ அவளுக்கு  ஆட்டோகிராஃபும் அவ கூட செல்ஃபியும் எடுத்தே ஆகணும்” என்று சொல்ல,

“இல்ல சார் எனக்கு எதுவும் வேண்டாம். நான் கிளம்பறேன்” என்றவாறே இருக்கையிலிருந்து எழுந்தவள் கீழே கிடந்த தன் பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்ப,

“ஆனா எனக்கு வேணுமே” என்றான் ரிஷப் நந்தன்.

அவனை புரியாமல் கவின் பார்க்க, “என்னோட ஆட்டோகிராஃப் அண்ட் செல்ஃபி வேண்டாம்னு சொல்றவங்கள நான் நியாபகம் வச்சியிருக்கணும் இல்லையா..?” என்று கேட்டவாறே இருக்கையிலிருந்து எழுந்தவன்,

தன்னுடைய பர்சனல் டைரியை எடுத்து வந்து, “ஆட்டோகிராஃப்” என்றவாறே அவளிடம் நீட்ட, அவளோ சங்கடமாய் கவினை பார்த்தாள்.

அவன் மெதுவாய் அவளை பார்த்து தலையை அசைக்க, அதன்பின் தான் அவன் டைரியில்விரல்கள்நடுங்க இதழினி என்ற தன் பெயரை எழுதினாள்.

பின் ரிஷப் நந்தன் செல்போனை உயர்த்தி பிடித்து செல்ஃபியும்எடுக்க, இதழினியோகேமராவை பார்க்க பிடிக்காமல் விழிகளை தாழ்த்திகொண்டாள்.

அந்த அப்பார்ட்மெண்டிலிருந்து வெளியில் வந்த பின் தான் இதழினிக்கு உயிரே வந்தது போல் இருந்தது.

அந்தஅளவிற்கு அல்லவா அவன் அவளுக்கு பயம் காட்டியிருந்தான்.

அவர்கள் டேட் கொடுத்த விஷயத்தை தாரிகாவிற்கு போன் செய்து சொன்னவள், கல்லூரிக்கு கூட செல்லாமல் நேராக வீட்டிற்குதான் சென்றிருந்தாள்.

காரணம் இப்போதுவரையுமே அவளுக்குள் இருந்த பயமும் பதட்டமும் குறைந்த பாடில்லை.

நடந்தவைகளை நினைக்க அவளையும் மீறிக்கொண்டு அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடின.

அந்த கவின் மட்டும் அவனை தடுத்திரா விட்டால் அவள் நிலமை என்ன என்பதை அவளால் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.

உடல் நலம் சரியில்லை என்று இலக்கியாவிடம் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டவள் தான், மதிய உணவிற்கு கூட அவள் வெளியில் வரவே இல்லை.

தான் இருக்கும் நிலையில் இன்று முடியாது என்பதால் இரண்டு வகுப்புகளுக்குமே விடுமுறை விட்டுவிட்டாள் இதழினி.

இலக்கியாவின் வற்புறுத்தலுக்காக மட்டும் இரண்டு வாய் இரவு உணவு உண்டவள், உறக்கம் வராமல் படுக்கையில் உழன்று கொண்டிருக்கும் போதுதான்,

“அக்கா.. தாரிகா அக்கா உன்ன பார்க்க வந்திருக்காங்க” என்று ஆரண்யா சொல்லஇதழினியும் அவளை பார்க்க வெளியில் வந்தாள்.

“ஹே சூப்பர் டி. கலக்கிட்ட” என்று இதழினியை பார்த்த மாத்திரத்திலேயே தாரிகா அவளை கட்டியணைத்து கொண்டு தன் சந்தோஷத்தை வெளிபடுத்த, இதழினிக்கோ தாரிகா மீது கோவம் தான் வந்தது.

அந்த கோவத்தின் வெளிபாடாய், தரதரவென அவளை வெளிவாசலுக்கு இழுத்து சென்றவள், “எருமை மாடு.. உன்னால தாண்டி இன்னைக்கு எனக்கு அவ்வளோ அவமானம், அசிங்கம்” என்றதோடு அவள் கையில் தன் பலம் கொண்டவரை குத்தவும் செய்ய.

”ஆ வலிக்குதுடி” என்றவாறே அவளிடமிருந்து விலகி நின்று கொண்டவள், “அப்படி என்னதாண்டி ஆச்சி..?” என்றாள் அவள் குத்திய இடத்தை தடவிகொடுத்தபடி.

“என்ன ஆச்சா..?” என்று கேட்டு அவளை முறைத்தவள், “அவன பார்த்த அந்த நொடியே ஃபிக்ஸ் பண்ணிட்டேன். இனி அவன் சாங்ஸ் எதையும் கேட்க கூடாது வயலின்-ல வாசிக்ககூடாதுன்னு” என்றவளை அப்படி என்ன அங்க நடந்திருக்கும் என்ற யோசனையோடே தாரிகா அவளை வெறித்து பார்த்தாள்.

“பெரிய அழகன் அவன் இவன்னு அன்னைக்கு புகழ்ந்தியே.. அவன் உண்மையான சுயரூபம் என்னன்னு உனக்கு தெரியுமா..? அவன் ரூம்ல நான் என்னெல்லாம் பார்த்தேன்னு உனக்கு தெரியுமா..?” என்று கேட்டு தாரிகாவை பார்த்தவள் அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவளிடம் கூறவும் ஆரம்பித்திருந்தாள்.

அனைத்தையும் கேட்டுமுடித்த தாரிகாவோ, வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு மென்று விழுங்கியவாறு அவளை பார்க்க,

“இதுல சிரிக்க என்ன இருக்கு..?” என்றாள் கோவத்துடனே இதழினி.

“இல்லடி.. பழைய பஞ்சாங்கம் உன்ன போய் அவன் கால் கேர்ள்-ன்னு நினைச்சிட்டான் பாரு” என்று சொல்லிவிட்டு தாரிகா வெடித்து சிரிக்க,

“என் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா..?” என்று கேட்டவள் அவள் முதுகிலும் சுள்ளென்று ஒன்று வைக்க தவறவில்லை.

வலித்தாங்க முடியாமல் “ஆ” என்று நெளிந்தவள், “ஏண்டி என்ன இவ்வளோ அடி அடிக்கிறீயே அவனுக்கும் நாலு கொடுக்க வேண்டியதுதானே” என்று தாரிகா அவளை பிடிக்க,

“ஆ.. அடிச்சியிருப்பேன்.. காலேஜ்-காகத்தான் அமைதியா இருந்துட்டேன்” என்று தாரிகாவை சமாளித்தவளுக்குதான் தெரியும் பயத்தில் நடுக்கத்தில் அவள் கை கால்கள் ஆடியஆட்டத்தை.

“கவின் சார்-அ பார்த்தியா..?” என்றவளின் கேள்விக்கு

“ஆ.. அந்த பொறுக்கியும் அங்கதான் இருந்தான். இவ்வளோ பிரச்சனைக்கும் காரணமே அவன் தான் தெரியுமா..?” என்றவள் ஆதங்கபட்ட போது.

“தப்பு உன் பக்கமும் இருக்குடி.. நீ மட்டும் எடுத்த எடுப்பிலே ஐ.டி கார்ட்—அ காட்டியிருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது” என்றவளின் வார்த்தைகளிலிருந்த உண்மை இதழினிக்கும் புரியதான் செய்தது.

இருந்தும், “ஏன் யார் என்னன்னு தீர விசாரிச்சா அவன் தலையில இருக்க கிரீடம் கீழயா விழுந்திடும்..” என்று ஆதங்கபட்டு கொண்டவள்,

“சரியான பொம்பள பொறுக்கிடி அவனுங்க.. பொண்ணுங்க நிழல கூட விட்டுவைக்காத அளவுக்கு காம கொடூரனுங்க” என்று கோவத்தில் கத்தியவளுக்கு அவன் தன்னை கேட்ட கேள்விகளை நினைத்து இன்னும் அவன் மேல் கோவம்தான் வந்தது.

“ச்சீ.. என் லைஃப்-ல இப்படி ஒரு ஆம்பளை-அ நான் பார்த்ததே இல்ல.. வாய தொறந்தாலே கெட்ட வார்த்தைதான். அந்த வாயால அவன் பாடுன பாட்டையா இவ்வளோ நாள் இரசிச்சோம்னு நினைக்கும் போதே எனக்கு காதெல்லாம் கூசுது தாரிகா.” என்று காலை முதலே மனதிற்குள் அடக்கிவைத்திருந்த கொதிப்பையெல்லாம் அவளிடம் கொட்டிதீர்த்த பின்தான் இதழினியின் மனம் ஓரளவு நிம்மதி அடைந்தது.

“உன் கோவமெல்லாம் ஓகேதான்டி..” என்றவள், “அவங்ககூட ஆட்டோகிராஃப், செல்ஃபி..” என்று இழுத்த தாரிகா இதழினி பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.

சில கணங்கள் இருவரிடமும் அமைதி நிலவ, பின் இதழினிதான் “ஆமா.. நீ எப்படி இங்க வந்த..? வீட்-ல விடமாட்டங்கன்னு சொன்ன..?”

“இப்ப மட்டும் என்ன விட்டாங்களா.. என்ன… ? கிழவிக்கு இஞ்செக்ஷன் வாங்குற சாக்குல என் அத்த பையன்தான் பைக்-ல கூட்டிட்டு வந்தான்” என்றவள் அப்போதுதான் அவர்களுக்கு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தவனை அவளுக்கு அறிமுகபடுத்தினாள்.

பெயருக்காக மட்டும் அவனை பார்த்து புன்னகைத்தவள் அந்நேரம் அறிந்திருக்கவில்லை அவனால் அவளுக்கு ஒரு பூகம்பம் காத்து கொண்டிருக்கிறது என்று.

பின் அவளின் பாட்டி குறித்தும் இதழினி விசாரிக்க தவறவில்லை.

நாளையும் தன்னால் வரமுடியாது என்று சொன்னவள் விழா குறித்த ஏற்பாடுகள் சிலவற்றையும் இதழினியிடம் சொல்லிவிட்டுதான் அங்கிருந்து கிளம்பினாள்  தாரிகா.

10 minreading time
1comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels