இடைவிடாது கதவு தட்டப்பட்டுக்கொண்டே இருக்க, இருக்கையில் அமர்ந்த நிலையில் உறங்கிகொண்டிருந்த ரிஷப்-பிற்கோ உள்ளுக்குள் அத்தனை எரிச்சல் நிம்மதியாக உறங்க கூட விடமாட்டார்களா என்று..
இமைகளை திறக்காமலேயே புருவமத்தியை சுருக்கியவன் “டேய் கவின்.. கவின்” என்று இரண்டு மூன்று முறை சத்தம் போட்டு அழைத்து பார்த்தான்.
அந்த பெயருக்கு சொந்தமானவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, எரிச்சலோடு கண்களை திறந்தவனின் பார்வையோ கவின் இருக்கும் அறையைதான் கோவத்தோடு பார்த்தது.
“யூ இடியட்” என்று முனுமுனுத்தவன் தன் கைபேசியில் மணியை பார்த்தான். அது பத்தென்று காட்டியது.
“இவ்வளோ அதிகாலையிலே யாரு டிஸ்ட்ரப் பண்றது” என்று முனுமுனுத்தவாறே எழுந்து சென்று கதவை திறந்தவன் தன் முன்னால் நின்றவளை எரிச்சலோடு பார்த்தான்.
அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒருவித பயத்துடனே கதவை தட்டிய இதழினிக்கு அவனை பார்த்த மாத்திரத்திலேயே நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது.
இதுநாள் வரை அவனை தொலைகாட்சி மற்றும் செய்திதாள்களில்தான் பார்த்திருக்கிறாள்.
அப்படி பார்க்கும் போதெல்லாம் கோட் சூட், ஃபார்மல் மற்றும் ட்ரெடிஷ்னல் உடையில் ஸ்டைலிஷ்-ஆக வலம் வருபவனை இந்த கோலத்தில் பார்த்தவளுக்கு இன்னும் அதிர்ச்சிதான்.
புகழ்பெற்ற இசையமைப்பாளர், பாடகன் என்று பல்முக திறமைகளை ஒருங்கே பெற்றவனை இப்படி மேலாடை இன்றி வெறும் ஷாட்சில் பார்த்தவளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் எங்கு சென்று ஒளிந்ததென்றே தெரியவில்லை.
“யார் நீ..? எதுக்கு சும்மா தட்டிக்கிட்டே இருக்க..?” என்றவனின் கோவம் தெறிக்கும் வார்த்தைகளை கேட்டு அவளுக்கு உடலும் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்த எரிச்சலும் அவன் வார்த்தைகளில் இருந்த கடுமையும்.. நேற்று சிரித்த முகமாக டி.வி-யில் பார்த்தது இவனைத்தானா என்ற சந்தேகத்தையும் அவளுக்குள் எழுப்பியிருந்தது.
கையில் கிடைத்தால் மென்று துப்பிவிடுவேன் என்ற நேற்று ஏகவசனம் பேசிய தைரியசாலி இதழினி இப்போது எங்கு சென்று ஒளிந்தாள் என்றே தெரியவில்லை.
அதிலும் அவனின் கடுகடு முகத்தைபார்த்த பின் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்றே இதழினிக்கு தெரியவில்லை.
இருந்தும் அவனிடம் பேசியாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிகொண்டு “நா… நா…” என்று ஆரம்பித்தவளுக்கு அடுத்த வார்த்தை காற்றாகதான் வெளி வந்தது.
நேற்று கோவத்தில் கண்டமேனிக்கு அவனை திட்டியவளுக்கு இன்று வார்த்தைக்கு கூட பஞ்சமாகி போனதுதான் நிஜம்.
தான் கேள்வியை கேட்டுமுடிக்கும் முன்பே பதிலை எதிர்ப்பார்ப்பவனுக்கு அவள் செயல் மேலும் எரிச்சலை தர, “இடியட்” என்று முனுமுனுத்தவன்,
“கெட் லாஸ்ட்” என்று அதிர கூறியவாறே அவள் முகத்தில் அறைவது போல் கதவை டொம்மென்று சாற்ற அவளும் பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
இறுக்கமாக மூடிக்கொண்டவளின் கண்களிலிருந்து பயத்தில்கண்ணீர் வழிந்தோட, இமைகளை திறப்பதற்கே அவளுக்கு சில கணங்கள் பிடித்தன.
இமைதிறந்து வழிந்தோடிய கண்ணீரை துடைத்தவள் அடுத்து அழைத்தது என்னவோ தாரிகாவிற்குதான்.
அழைப்பை தாரிகா ஏற்றகணமே “தாரிகா என்னால முடியாதுடி” என்று அழுதேவிட்டாள் இதழினி.
“ஏய் பிளீஸ் டி.. இந்த ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுடி. நேத்து நைட்லேந்து நாங்களும் பால ஊத்திக்கிடேதான் இருக்கோம். ஒரு லிட்டர் பாலையும் முழுங்கிட்டு இந்த கிழவி இன்னும் இழுத்து கிட்டேதான்டிஇருக்கு.. இந்த நிலமையில என்ன விடமாட்டாங்கடி. புரிஞ்சிக்கோ.. பிரின்சி வேற போன் பண்ணி என்ன கேட்டுகிட்டே இருக்காங்க. பிளீஸ் டி எப்படியாவது அவர்கிட்ட பேசி கன்ஃபார்ம் பண்ணிடுடி” என்று போனிலேயே அவளிடம் கெஞ்சியவள், அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் போனை வைத்துவிட, இதழினிக்குதான் பெரும் சங்கடமாகி போனது.
கைகளை பிசைந்தவாறே நின்றுகொண்டிருந்தவளுக்கு இன்னும் அழுகை நின்றபாடில்லை.
இந்நிலையில்அவளால் எங்கிருந்து அவனிடம் பேசமுடியும்.. அத்தோடு பேசி சம்மதிக்க வேறு வைக்க வேண்டுமாம்.
முதலில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை கேட்பதற்கே அவன் தயாராக இல்லை எனும் போது அவளால் எப்படி தான் வந்த காரியத்தை அவனிடம் சொல்ல முடியும்.
“தாரிகா” என்று பற்களை கடித்துகொண்டவளின் மனம் முதன் முதலாக வருந்தியது அவளுடன் நட்பு வைத்துகொண்டதை எண்ணி.
கைகளை பிசைந்தவாறே நின்றிருந்தவள் மீண்டும் அந்த அறைகதவை பார்த்தாள். கோல்டன் நிறத்தில் பளபளத்துகொண்டிருந்தது ரிஷப் நந்தன் என்ற பெயர்.
மீண்டும் கதவை தட்டுவதற்காக சென்றவளின் கரங்கள் பயத்தில் அப்படியே நின்றுவிட்டன.
கதவையே அறைவது போல் சாற்றியவன் இம்முறை முகத்துலேயே அறைந்துவிட்டால் என்று நினைத்தவளுக்கு இங்கிருந்து சென்றுவிடலாம் என்று கூட தோன்றியது.
ஆனால் அவ்வாறு செல்ல முடியாத சூழ்நிலை. காரணம் இது கல்லூரி சம்மந்தபட்ட விஷயம் என்பதால் சட்டென்று அவளால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை.
அன்னார்ந்து பார்த்து நெஞ்சில் கைவைத்தபடி “பெருமாளே..” என்று வேண்டிக்கொண்டவள் மீண்டும் கதவை தட்டினாள்.
தூக்கம் கண்களை இழுத்து செல்லும் நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட, “ஆ..” என்று கத்தியவாறே எழுந்து சென்று கதவை திறந்தவனுக்கு அவளை பார்த்ததும் மீண்டும் கோவம்தான்.
“சார் நான்..” என்ற ஆரம்பித்தவளின் வார்த்தைகள் எதையும் காதில் வாங்காமல், “ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாது..?” என்றவாறே பக்கவாட்டில் அழகுக்காக வைக்கபட்டிருந்த பூஜாடியை கையில் எடுத்தவன்அதை அவளை நோக்கிஓங்கியும் இருக்க,
அவனின் அதிரடி செயலால் அதிர்ந்த பெண்ணவளோ, “ஐய்யோ பெருமாளே..” என்று கத்தியவாறே பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, ஓங்கிய அவன் கரங்களோ அப்படியே நின்றுவிட்டது அவள் கூறிய பெயரை கேட்டு.
“இந்த பெருமாளுக்கும், கவினுக்கும் வேற வேலையே இல்ல” என்று உள்ளுக்குள் சிடுசிடுத்து கொண்டவன்.
“ஏய் இடியட்… இத மொதல்லே சொல்லி தொலைக்க வேண்டியதுதன..?” என்றவனின் கடுகடு வார்த்தைகளை கேட்டு கண்களை திறந்தவளுக்கு விளங்கவில்லை அவன் எதற்காக அப்படி சொல்கிறான் என்று.
ஏதோ சரியில்லை என்று யூகித்துகொண்டவள் தலையை இடவலமாக அசைத்தவாறே,
“சார் நான்” என்று மீண்டும் ஆரம்பித்தவளை மேற்கொண்டு பேசவிடமால் கை உயர்த்தி தடுத்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான் யாரேனும் பார்க்கிறார்களா என்று..
நல்ல வேளை அங்கு யாரும் இல்லாமல் போக, “உள்ள வந்து தொல” என்றவனின் மரியாதையற்ற வார்த்தைகளை கேட்டு ஆணி அறைந்தாற் போல் அப்படியே நின்றுவிட்டாள் இதழினி.
தமிழ்பண்பாடு, கலாச்சாரம், மரியாதை என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவளுக்கு அவனின் மரியாதையற்ற வார்த்தையும், செயலும் முகம்சுளிக்க வைத்ததோடு அவள் மனதை சங்கடபடவும் வைத்தது.
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று அடிக்கடி பாட்டி சொல்வது இப்போதும் அவள் நினைவிற்கு வந்து போகாமல் இல்லை.
உள்ளே செல்ல மனம் இல்லாமல் அவள் சங்கடத்துடன் வாயிலிலேயே நின்றுகொண்டிருக்க,
“சொன்னது உன் காதுல விழலையா..? காதுல என்ன ஈயத்தையா காய்ச்சி ஊத்தியிருக்காங்க” என்று அதற்கும் அவளிடம் எரிச்சல் பட்டுகொண்டவன், அவள் சற்றும் எதிர்பார்க்கா வண்ணம் சட்டென்று அவள் கரத்தை பற்றி உள்ளேயும் இழுத்திருந்தான்.
அவனின் செயலால் அதிர்ந்த பெண்ணவள் அவன் பிடிக்குள் இருந்த தன் கரத்தை விலுக்கென்று இழுத்துகொள்ள, அவனோ சோஃபாவை சுட்டி காட்டி “உட்கார்ந்து தொல” என்றான் கொஞ்சமும்எரிச்சல் குறையாமல்.
“தொலையா..? இது என்னமாதிரியான உபசரிப்பு?” என்றுதான் தோன்றியது இதழினிக்கு.
அத்தோடு மதுரகானம் பொழியும் அவன் வாயிலிருந்து மரியாதையற்ற வார்த்தைகளை கேட்கவே இதழினிக்கு காது கூசியது.
“இல்ல இல்ல… இனியும் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது. வந்த விஷயத்த சொல்லிட்டு உடனே கிளம்புறதுதான் நமக்கு நல்லது” என்று நினைத்தவாறே..
“சார் நான்..” என்று ஆரம்பித்தவள் அதிர்சியில் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள்அவன் சுட்டிகாட்டியசோஃபாவில் மேல் கிடந்த பெண்களின் உள்ளாடைகளை பார்த்து.
பின் ரிஷப்தான் “ப்ச் உட்காருடி” என்று சலித்துகொண்டவாறே அவள் தோள் மீது அவன் கை வைத்து தள்ள அவளோ பொத்தென்று அந்த சோஃபாவின் மீதே விழுந்திருந்தாள்.
விழுந்தவள் அடுத்தகணமே “ச்சீ..” என்றவாறே அந்த சோஃபாவிலிருந்து எழுந்து வேறொரு இருக்கையில் சென்று அமர, அவனோ “என்ன குடிக்கற..?” என்று கேட்டவாறே ஃபிரிட்ஜை நோக்கி விரைந்திருந்தான்.
தலையை இருபுறமும் ஆட்டியபடி “எனக்கு எதுவும்..” என்று ஆரம்பித்தவளின் கோலிகுண்டு விழிகள் மேலும் ஒரு சுற்று விரிந்துதான் போயின.. அவளுக்கு முன்னால் இருந்த டீபாயின் மேல் கிடந்த காண்டம்களை பார்த்து.
குளிசாதன பெட்டியை திறந்தவாறே “என்ன பதிலே காணோம்..?” என்றவனின் குரல் கேட்டு அவளுக்கு தூக்கி வாரி போட்டதோடு பயத்தில் விக்கலும் எடுக்க ஆரம்பித்திருந்தது
விக்கல் சத்தம் கேட்டு அவளை திரும்பி பார்த்தவன், “சொல்லிதொல.. ஹாட்-ஆ பியர்-ஆ..” என்றவனின் கேள்வியால் அவளுக்கு வந்த விக்கல் எங்கு சென்றதென்றே தெரியவில்லை.
அனுதினமும் துளசி தீர்த்ததை குடித்து தன் நாளை ஆரம்பிப்பவளிடம் போய் கேட்க வேண்டிய கேள்வியா இது..?
அவளிடமிருந்து பதில் வராவிட்டாலும் கூலிங் பியர்-ஐ எடுத்து வந்து அவள் முன்னால் வைத்தவன்,
“எதிரியே வீட்டுக்கு வந்தாலும் உபசரிக்கணும்னு அம்மா சொல்லுவாங்க.. குடி நல்லா கூலிங்க்-ஆதான் இருக்கு” என்றவன் எரிச்சலோடே சொல்ல,
“ஒத்தரோசா பையன்-அ ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்கம்மா” என்று அந்த நிலையிலும் அவன் வளர்ப்பை அவள் மனம் கேலி செய்ய தவறவில்லை.
“எனக்கு எப்பவும் ஷாம்பியன்தான்” என்றவாறே அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் சென்றுஅமர்ந்தவன் கையோடு எடுத்து வந்திருந்த ஷாம்பியனை அருந்தவும் செய்ய, ‘காலையிலேவா’ என்பது போல் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள் இதழினி.
அவள் தன்னை பார்ப்பதை கவனித்தவன், “யூ வாண்ட்” என்று குடித்து கொண்டிருந்த கிளாசை நீட்டி அவளிடம் கேட்க, வேண்டாம் என்பது போல் வேக வேகமாக தலையை அசைத்தவளால் மேற்கொண்டு மேலாடை இல்லாமல் தொடை தெரியுமாறு அமர்ந்திருந்தவனை பார்க்க முடியவில்லை.
“ஒரு பொம்பள புள்ள முன்னாடி இப்படி சட்டையே இல்லாம உட்கார்ந்து இருக்கானே.. இவனுக்குலாம் கொஞ்ச கூட கூச்சமாவே இருக்காதா... அட்லீஸ்ட் அந்த தொடைய மறைக்கிற மாதிரி டிராக் பேண்டாவது போட்டிருக்கலாம் இல்ல.. தொடையழகி ரம்பா மாதிரி இப்பதான் தொடையகாட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கான்” என்று உள்ளுக்குள் அவனை காய்ந்தவள்,
அவனை பார்க்க பிடிக்காமல் மீண்டும் தன் பார்வையை டீபாயின் புறம்பாய்ச்சினாள்.
அவள் கண்கள்தான் டீபாய் புறம் இருந்ததே தவிர அவள் மனமோ
‘பெருமாளே… இவனும் சரியில்ல.. இவன் இருக்கற இடமும் சரியில்ல.. என்ன எப்டியாவது இங்க இருந்து சேஃபா வெளியில கூட்டிட்டு போய்டீங்கனா போதும்.. உங்களோட ஆயிரம் சகஸ்ரநாமத்த நான் ஆயிரம் தடவ சொல்றேன்..” என்று உள்ளுக்குள் வேண்டிக்கொண்டிருந்தது.
பார்வையால் அவளை அளந்தவாறே அவன் ஷாம்பியன் அருந்திகொண்டிருக்க, இதற்கு மேல் அமைதி காப்பது சரியன்று தான் தோன்றியது இதழினிக்கு.
“ச…. ச… சார்.. நான்..” என்று தான் வந்த காரியத்தை தட்டுதடுமாறி சொல்ல ஆரம்பித்தவளையும்,
“உனக்கு பியர் வேண்டாம் காண்டாம்தான் வேணும் அதானே..?” என்றுகேட்டு மேலும் அவளை அதிர்ச்சிகுள்ளாக்கினான் ரிஷப் நந்தன்.
பாவி கேட்டதோடு நிறுத்தினானா… “சரி.. உனக்கு என்ன ஃப்ளேவர் புடிக்கும்.. ஸ்டாபெர்ரி, மேங்கோ, பனானா.. ஆர் சாக்லேட், வெண்ணிலா..” என்றவன் ஃபேளர் பெயர்களை சொல்லிகொண்டே போக,
‘இதுக்கெல்லாமாடா ஃப்ளேவர் இருக்கு..?” என்ற நிலைதான் இதழினிக்கு.
‘ஐய்யோ கருமம்.. கருமம்.. என்ன இவ்வளோ நாராம்சமா பேசுறான்.. இவன் வாய்ஸ்-அயா இவ்வளோ நாள் இரசிச்சோம்… அம்மா கலைவானி இப்படிபட்டவன் வாயில எப்படிம்மா குடியிருக்கீங்க..? உங்க கையில இருக்கற வீணையால இவன் வாயில ஒன்னு இல்ல இரண்டு போட்டுங்களேன்” என்று அவள் மனம் உள்ளுக்குள் குமுறிகொண்டிருக்க,
காண்டம்களை கையில் எடுத்தவாறே “ஆர் யூ வெர்ஜின்..?” என்றவன் கேட்ட கேள்வியில்பாவம் அவளுக்குதான்புரையேறிவிட்டது.
தலையில் தட்டிவிட்டபடி அவள் விடாது இருமிக்கொண்டே இருக்க,
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து போன ரிஷப் நந்தனோ,
“ஹே.. இடியட் அதான் முன்னாடி பியர் இருக்கு இல்ல அத எடுத்துதான் குடியேன்.” என்று அதட்டியவன், அதை எடுத்து அவள் முன் நீட்டவும் செய்ய, அவளுக்கு வந்த இருமல் எங்கு சென்று மறைந்ததென்றே தெரியவில்லை.
அவன் நீட்டியிருந்த பியரை வாங்காமல் “இ.. இல்ல சார் ஐம்.. ஐம்.. ஓகே” என்று தட்டு தடுமாறி அவள் சொல்லிகொண்டிருக்கும் போதுதான்,
“டார்லிங்” என்று ஹஸ்கி வாய்சில் பெண்குரல் கேட்க, சத்தம் கேட்ட திசை நோக்கி இருவருமே திரும்பி பார்த்தனர்.
உடல் முழுமையும் அறைகதவில் மறைத்துகொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டிவிழிகளில் கிரக்கத்துடன் பெண்ணொருத்தி அவனை பார்த்து சிரித்தபடி இருக்க,
அதை பார்த்த இதழினிக்கோ “ஆமா இவ யாரு..? இவ எதுக்கு காமபார்வையோட இவன்-அ அப்படி பார்க்குறா.. ஒருவேளைஇவன் வொய்ஃபா இருக்குமோ…” என்று யோசித்தவளுக்கு, இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று என்றோ தாரிகா சொன்னது நினைவிற்கு வர,
“ஐய்யய்யோ… அப்போ இவ யாரு… ஒருவேளை தப்பான இடத்துக்கு வந்துவிட்டோமோ” என்றுதான் தோன்றியது
அதேநேரம் “ஏய் நீ இன்னும் கிளம்பலயா..?” என்று அந்த பெண்ணிடமும்ரிஷப் நந்தன் எரிந்துவிழ.
“எப்படி கிளம்புவேன்..?” என்று பதிலுக்குசிணுங்கியவள், விழிகளாலேயே சோஃபாவில் இருக்கும் தன் ஆடைகளைசுட்டிகாட்ட,
அதை கவனித்த இதழினியோ “ஐய்ய ச்ச.. கருமம் கருமம்.. இது இவளோடதுதானா… இங்க டிரஸ்-அ அவுத்து போட்டுட்டு அங்க என்ன பண்றா..?” என்ற அருவெறுப்புடன் தலையை தாழ்த்தி கொண்டாள்.
அவள் காட்டிய சோஃபாவை பார்த்து “ப்ச்… இது வேறயா..?” என்று எரிச்சல் பட்டுகொண்டவன்,
அந்த எரிச்சலோடே இதழினியை பார்த்து “ஏய் பொண்ணே..அந்த டிர்ஸ்-அ எடுத்து அவ கிட்ட கொடு” என்று கட்டளை போல்சொல்ல,
இதழினியோ “நானா..?” என்று நெஞ்சில் கைவைத்தபடி அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
தன்னை அதிர்ந்து பார்ப்பவளை பார்த்து “பின்ன நானா..?” என்று பதிலுக்கு புருவமத்தியை உயர்த்தி தோரணையாக கேட்டவன்,
“இப்ப நீ கொண்டு போய் கொடுக்கிறீயா..? இல்ல உன் டிரஸ்-அயும் உருவி ஒரு ஓரமா உட்காரவைக்கட்டுமா..?” என்றவன் கேட்டு முடித்ததுதான் தாமதம்,
அவசரஅவசரமாக சோஃபாவில் கிடந்த ஆடையை எடுத்துசென்று அடுத்தகணமே அந்த பெண்ணின் கைகளில் கொடுத்தவளுக்கு பயத்தில் இதயம் அதி வேகத்தில் துடிக்க ஆரம்பித்து விட்டது.
வந்தது முதல் அவளிடம் அவன் நடந்துகொண்டவிதமும், அவனின் மரியாதையற்ற பேச்சும், அறையில் பார்த்ததையும் வைத்து அவன் நல்லவன் அல்ல என்று யூகித்திருந்தவள், இப்போதுஅந்த பெண் நின்ற கோலத்தையும், சற்றுமுன் அவன் பேசிய பேச்சையும்வைத்து அவனை காமகொடூரன் என்று ஒரு முடிவே கட்டிவிட்டிருந்தாள்.
“காலேஜ்ஜாவது கீலேஜாவது.. இவங்க ஆண்டுவிழா கொண்டாடலன்னு யாரு இப்போ அழுதா..? இந்த காமகொடூரன் இருக்கற இடத்துல இனி ஒரு நிமிஷம் இருந்தாலும் அது உனக்குதான் ஆபத்து.. உடனடியா இங்க இருந்து கிளம்பிடு இதழினி” என்று அவள் மூளை வேறு அவளுக்கு எச்சரிக்கை மணி அடிக்க, இதற்கு மேல் இங்கிருப்பது சரியன்றுதான் அவளுக்கும் தோன்றியது.
அவனை பார்க்காமலேயே “நான் கிளம்பறேன் சார்” என்றவாறே பையை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பியவளின் கால்கள் முன்னேற முடியாமல் அப்படியே நின்றுவிட்டன தன் முன்னால் வந்து நின்றவனை பார்த்து.
“வந்த வேலை முடியறதுக்குள்ள அப்படி என்ன அவசரம்டி..” என்று கேட்டவாறே மேலும் அவளை அவன் நெருங்க, அவனின் அருகாமையால் அவளுக்குதான் இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது.
மிக அருகாமையில் அவனின் திரண்ட மார்பகங்களையும், முறுக்கேறிய புஜங்களையும் பார்த்தவளுக்கு பயத்தில் கை, கால்கள் டைப் அடிக்க ஆரம்பித்து விட்டன.
“ச… சார்… நான் போகணும்” என்று திக்கி திணறி சொல்லும் போதே பயத்தில் அவளுக்கு விழிகள் கலங்கி விட,
உட்காரு” என்றவன் சொன்ன தோணியில் தானகாவே இருக்கையில் அமர்ந்து விட்டாள் பெண்ணவள்.




