Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
0

அத்தியாயம் - 3

January 04, 2026
சந்தோஷ் குணா
0
9 min read
அத்தியாயம் - 3
Hero - Music Director, Heroine - Music student

வீட்டு வாசலை அடையும் முன்பே வீட்டுக்குள்ளிருந்து கேட்ட டி.வி சத்தம் அவள் காதுகளை எட்டியிருக்க,

“இந்த நேரத்துல சித்தி டி.வி பார்க்க மாட்டாங்களே… அதுவும் இவ்வளோ சவுண்ட் வச்சா…” என்றுயோசித்தவாறே வாயிலை நெருங்கியவளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்த ஷீ-வை பார்த்ததும் புரிந்துவிட்டது டி.வி பார்த்துகொண்டிருப்பது சித்தி இல்லை ஆரண்யா-தான் என்று.

இருந்தும் பள்ளி நேரத்தில் அவள் எப்படி இங்கு என்றுதான் இதழினிக்கு விளங்கவில்லை.

அவள் யூகம் சரி என்பதுபோல்இதழினி வந்தது கூட தெரியாமல் சோஃபாவில் மல்லாக்க படுத்துகொண்டுஆரண்யா டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்த பாடலில் ஒன்றிபோய் இருக்க, அவள் அருகில் சென்ற இதழினி அவள் தலையில் லேசாக தட்டி,

“நீ இன்னைக்கு ஸ்கூல்-க்கு போகலையாடி..?” என்றாள்.

அவள் கேள்வி கேட்டது என்னவோ ஆரண்யாவிடம்தான் ஆனால் பதில் வந்தது என்னவோ கிச்சனில் இருந்த இலக்கியாவிடம் இருந்துதான்.

“நீயே என்னன்னு கேளு இதழினி.. ஜீரம் அடிக்குதுன்னு மதியமே வீட்டுக்கு வந்துட்டா. கை-அ வச்சிபார்த்தா உடம்பு பச்சதண்ணி கணக்கா ஜில்லுன்னு இருக்கு. ஒரு வேளை உள்காய்ச்சலா இருக்குமோன்னு பக்கத்துல உள்ள மெடிக்கலுக்கு ஊசி போட கூப்பிடா அதுக்கும் வரமாட்டிங்குறா.. வந்து யூனிஃபார்ம்-அ கூட மாத்தாம டி.வி முன்னாடி உட்கார்ந்தவதான் இன்னும் அந்த இடத்த விட்டு எழுந்திரிக்க கூட இல்ல இதழினி” என்றவாறே அவளுக்கு தேநீரையும், மசாலா வடையையும் கொண்டுவந்து கொடுக்க,

“ஐ மசால் வடையா..?” என்று கேட்டவாறேதட்டில் இருந்த வடையை ஆரண்யா எடுக்க, இலக்கியாவோ அவள் கரத்தின் மேல் சுள்ளென்றுஒன்று வைத்தாள்.

வலிதாங்க மாட்டாமல்கையை உதறியவாறே ஆரண்யா“அம்மா..” என்று சிணுங்க,

“பாவம் அவளே கலைச்சி போய் வந்திருக்கா.. நீ சும்மாதனடி இருக்க.. போ..போய் நீயே கிச்சன்-ல எடுத்துக்கோ” என்றாள் இலக்கியா.

பின் இதழினிதான் “இருக்கட்டும் சித்தி” என்றதோடு வடையை எடுத்து ஆரண்யாவிடம் கொடுக்க, அதை வாங்கிகொண்டள் இலக்கியாவை பார்த்து பழிப்பு காட்டிவிட்டு உண்ண,

“என்னவோ இதழினி.. நீ கொடுக்கற செல்லத்துல அவ ரொம்ப ஓவராதான் போய்ட்டு இருக்கா… இன்னைக்காவது உன் கூட எழுந்து பூஜை பண்ணாலா இல்லையா..?” என்றவரின் கேள்வியால் ‘அக்கா.. என்ன காப்பாத்தேன்’என்பது போல் ஆராண்யா இதழினியை பார்க்க,

இதழினியோ “ஏண்டி எப்பப்பாரு என்னையே இழுத்துவிடுற” என்பது போல் ஆரண்யாவை பார்த்தாள்.

அதுவரையும் பெண்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்த இலக்கியா விளக்குமாற்றை கையில் எடுத்தபடி, “என்ன இதழினி எழுந்தாளா..? இல்லையா..?” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு.

இலக்கியா நின்றநிலையை பார்த்த இதழினி-க்கு தொண்டை வறண்டு போன நிலைதான்.

காரணம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இதே காரணத்திற்காக இலக்கியா அவளை விளக்குமாற்றால் விளாசினாள்.

உண்மையை சொன்னால் நிச்சயம்இன்றும் அவளுக்கு விளக்குமாற்று பூசை உறுதி. அதனால்தான் அவள் இப்போது தயங்கி நிற்பது கூட.

அதற்காக அவளால் உண்மையை சொல்லாமலும் இருக்க முடியாதே. காரணம் மரகதாம்பாளின் வளர்ப்பு அப்படியாயிற்றே.

“சொல்லு இதழினி எழுந்தாளா..? இல்லையா..?” என்று இலக்கியா அதே இடத்தில் வந்து நிற்க, இதற்கு மேல் அமைதிகாப்பது சரியன்றுதான் தோன்றியது அவளுக்கு.

“இல்ல சித்தி.. அவளுக்கு எக்ஸாம் நடந்துட்டு இருக்கு இல்லையா..? அதனால அவ…” என்று இழுத்தவளின் பார்வை ஒரு கணம் ஆரண்யாவின் மீது படிந்து விலக, அதை கவனித்த இலக்கியாவும் கவனிக்கவே செய்தாள்.

“சொல்லு இதழினி… அதனால அவ..” என்று இலக்கியாவும் விடாமல் கேட்க,

“அவ படிச்சி முடிச்சிட்டு படுக்கவே லேட் நைட் ஆகிடுச்சி சித்தி” என்றவள் முடித்ததுதான் தாமதம்.

“அப்போ நீ இன்னைக்கும் எழுந்திரிக்கல.. அப்படித்தன..?” என்றுகேட்டவாறே இலக்கியாகையில் இருந்த விளக்கமாற்றைஓங்கினாள் ஆரண்யாவை அடிப்பதற்காக.

ஆரண்யாவோ “ஐய்யோ… அக்கா… காப்பாத்த சொன்னா.. எப்பவும் போல போட்டு கொடுத்துட்டியே..” என்றவாறே தன் மீது அடி விழாதவாறு இதழினியில் பின்னால் சென்று ஒளிந்துகொள்ள, இலக்கியாவும்விடாமல் அவளை துரத்த ஆரம்பித்தாள்.

இருவரும் இப்படியே இதழினியை சுற்றி சுற்றி வந்த படி இருக்க, இலக்கியா ஆரண்யாவிற்கு கொடுத்த அடியில் பெரும்பாலான அடியை வாங்கிகொண்டது என்னவோ இதழினிதான்.

ஒருகட்டத்தில் வலிதாங்க முடியாமல் போகவே, “சித்தி… சித்தி…” என்றவாறே இலக்கியாவை பிடித்து நிறுத்தியவள்,

“நாளைக்கு கண்டிப்பா அவ எழுந்திருச்சிவா சித்தி. அதுக்கு நான் கியாரண்டி” என்றவள் இப்போது ஆராண்யாவை பார்த்து, “எழுந்திருச்சிருவதனடி” என்க,

அவளோ வாய்க்குள் இருந்த வடையை விழுங்கியவாறே தலையை மட்டும் ஆட்ட, அவள் மீது நம்பிக்கையற்று போன இலக்கியாவோ,

“ஆ… கிழிச்சிருவ… நானும் ஆறு வருஷமா பார்த்துட்டு தானேஇருக்கேன் நீ எழுந்திரிக்கற இலட்சணத்த..” என்று கோவமாக சொன்னதோடு, கையிலிருந்த விளக்குமாற்றையும் கீழே போட்டவர்,

“என்னவோ பண்ணுங்க” என்று சொல்லிகொண்டேஅவள் குடித்து முடித்த டீ-கிளாசை எடுத்துகொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அவள் சென்று மறையும் வரை காத்திருந்த இதழினியோ, “இவ்வளோ அடி வாங்குறீயே.. ஒரு நாளாவது எழுந்தாதான் என்னடி..?”

“எனக்கு மட்டும் ஆசையா-க்கா அடிவாங்க.. நான் என்ன பண்ண எனக்கு அந்த நேரம்தான் அப்படி ஒரு தூக்கம் வருது. அந்த நேரத்துல போய் பூஜை பண்ணு புனஸ்காரம் பண்ணுனா எப்படி-க்கா..? எல்லாம் இந்த கிழவியாலதான்” என்று எரிச்சல் பட்டுகொண்டவள்,

“ஆரண்யா..” என்று இதழினி பார்த்த பார்வையில் வாயை மூடிகொண்டாள்.

அவளுக்கும் தெரியும்இதழினிக்கு மரகதாம்பாள் எவ்வளவு பிடித்தம் என்று.

அதனாலே மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அவள் அமைதியாகவே நிற்க,

பின் இதழினிதான், “எதுக்குடி பொய் சொல்லிட்டு வீட்டுக்கு வந்த..?” என்று அவளை பிடித்தாள்.

“ஐய்யோ.. அக்கா.. எப்படி கண்டுபிடிச்சீங்க..?” என்றவள் விழிகள் விரித்து கேட்க,

“ம்.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா..?” என்றவள், “பொய்சொல்லிட்டு வீட்டு வர வேண்டிய அவசியம் என்ன வந்தது ஆரண்யா..?” என்றாள் நீ காரணத்தை சொல்லிதான் ஆக வேண்டும் என்பது போல்.

“அக்கா. மறந்துட்டியா.. நேத்து நைட் படுக்கும் போது கூட உன் கிட்ட சொன்னேனே… ரிஷப் அண்ட் கவின்-னோட ஆடியோ லாஞ் இன்னைக்குன்னு” என்றவளை,

புரியாமல் பார்த்தவள், “அதுக்கும் நீ பொய் சொல்லிட்டு வந்ததுக்கும் என்ன சம்மந்தம் ஆரண்யா” என்றாள் இதழினி.

“ஐய்யோ அக்கா..” என்று தலையில் அடித்துகொண்டவள், “இன்னைக்கு ஈவினிங் ஃபைவ்-க்கு ஆடியோ லாஞ்ச். இந்த மேக்ஸ் மிஸ் வேற காலையிலே சொல்லிட்டு போய்டுச்சி.. இன்னைக்கு ஈவ்னிங் ஃபோர் தெர்ட்டி டூ செவென் தெர்ட்டி ஸ்பிஷல் கிளாஸ் இருக்குன்னு. கிளாஸ் முடிஞ்சி நான் வீட்டுக்கு வர்றதுக்குள்ள புரோகிராம்மே முடிஞ்சிடும்.

அதான் நானும் புனிதாவும் தொண்டைவலிக்குது, தலை வலிக்குது.. ஜீரம் வர்றமாதிரி இருக்குன்னு சின்னதா ஒரு பிட் போட்டோம்.. எங்க கொரோனாவா இருக்குமோன்னு மிஸ்-ஸே வீட்டுக்கு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க” என்றவள் சிரித்து கொண்டே சொல்ல,

இன்று முழுமையும் கல்லூரியில் திரும்பும் பக்கமெல்லாம் அவன் பெயரையே கேட்டு சலித்துபோயிருந்தவளுக்கு இப்போது ஆரண்யாவும் அதே பெயரையே சொல்ல, இதழினிக்கு எரிச்சல்தான் வந்தது.

அந்த எரிச்சலோடே “அவன் அவன் அவனோட பொழப்ப பார்த்துட்டு இருக்கான். நீ என்னடான்னா மேக்ஸ் கிளாஸ்-அ கட் பண்ணிட்டு வந்திருக்க. மேக்ஸ்-அ விட அவன் ஆடியோ லான்ஞ்தான் உனக்கு முக்கியமா..? நீ இந்த வருஷம் பிளஸ்-டூ. அது உனக்கு நியாபகம் இருக்கா..?” என்றவள் கோவமாய் கேட்க,

“அதெல்லாம் நியாபகம் இருக்குக்கா” என்று கேஷ்வலாக சொன்னவளின் பார்வை டி.வி-யின் மீதே பதிந்திருக்க, அதை இதழினியும் கவனிக்கவே செய்தாள்.

இருந்தும், “நியாபகம் இருந்தா மட்டும் போதாது ஆரண்யா.. அதுக்காக நீயும் கொஞ்சமாவது எஃபோர்ட் போடணும்” என்றவளின் வார்த்தைகள் எதையும் காதில் வாங்காமல், ஆரண்யா டீ.வி-யில் ஓடிக்கொண்டிருந்த பாடலை ஹம்மிங் செய்த படி இருக்க,

“ஆராண்யா..” என்று பற்களை கடித்தவாறே, வலுக்கட்டாயமாக அவள் மோவாயை பற்றி தன்னை பார்க்க வைக்க,

“ஐய்யோ.. அக்கா. நல்ல சாங்” என்று சிணுங்கியவள் இதழினி பார்த்த பார்வையில் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

“நீ ஆசைபடுற படிப்ப பணம் கட்டி படிக்கிற அளவுக்கு நம்ம நிலமை இல்லைன்னு உனக்கே நல்லா தெரியும். நீ நல்ல மார்க் எடுத்தாதான் நீ ஆசைபடுற இன்ஜினியரிங் காலேஜ்-ல உனக்கு சீட் கிடைக்கும். சீட் கிடைச்சாதான் படிச்ச கையோடே ஒரு நல்ல ஜாப்-ல ஜாயின் பண்ண முடியும். இல்லன்னா பேருக்கு எதாவது ஆர்ட்ஸ் எடுத்து படிச்சிட்டு சித்தி,சித்தப்பா காட்டுற இடத்துல கழுத்த நீட்டிட்டு கஷ்டப்பட வேண்டியதுதான்.” என்று தங்கள் குடும்ப நிதர்சனத்தை இதழினி அவளுக்கு புரியவைக்க,

“ஐய்யோ.. அக்கா.. இன்னைக்கு ஒரு நாளாவது கருத்து ஊசி போடாமா இர்றேன்” என்றாள் சின்னவள்.

“அடிப்பாவி… நான் உன் நல்லத்துக்கு சொல்றது உனக்கு கருத்து ஊசி போடுற மாதிரி இருக்கா..?” என்று விழிகள் உருட்டி இதழினி கேட்டபோது.

“பின்ன என்னக்கா.. நீயும் நாலு வருஷமா தேஞ்சி போன ரெக்கார்ட் கணக்கா க்,ச்-க்கு கூட மாறாம இதையேதான் சொல்லிட்டு இருக்க.. உங்க அட்வைஸ்-அ கேட்டு கேட்டு எனக்கு இயர் அலர்ஜியே வந்துடுச்சின்னா பார்த்துகோங்க.” என்றவள் சொன்ன தோணியில் இதழினிக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

இருந்தும் சிரிப்பை அடக்கிகொண்டு இதழினி அவளை முறைத்து பார்க்க,

ஆரண்யாவோ அவளை சமாளிக்கும் விதமாக ”மை சுவீட் அக்கா...” என்றதோடு, அவளின் கன்னங்களை கிள்ளி முத்தமிட்டவள்,

“நம்ம குடும்ப நிலைமை-அ பத்தி நீங்க சொல்லிதான் எனக்கு தெரியணுமாக்கா.. உங்களுக்கே நல்லா தெரியும் இதுவரைக்கு எல்லா எக்ஸாம்-லயும் நான் தான் ஸ்கூல் ஃபஸ்ட்-ன்னு. எதோ இந்த ஆடியோ லாஞ்-க்காக இன்னைக்கு ஒரு நாள் கட் அடிச்சிட்டேன். தப்புதான் ஐ நோ-க்கா.” என்று பாவமாக முகத்தை வைத்துகொண்டு சொன்னவள்,

“அண்ட் ரிஷப், கவின் அவங்க சாங்ஸ் எனக்கு எவ்வளோ புடிக்கும்-னு உங்களுக்கும் தெரியும் தன.” என்று இதழினியின் மோவாயை பற்றி பாவமாய் முகத்தை வைத்துகொண்டு அவள் கேட்டபோது, இதழினியால் அதற்கு மேலும் கோவத்தை இழுத்து பிடித்து கொண்டிருக்க முடியவில்லை.

ஆரண்யா சொல்வது போல் அவளும் படிப்பில் கெட்டிகாரிதான். ஆனால் என்ன விளையாட்டு புத்தியும், துடுக்குதனமும் அதிகம்.

எங்கே இந்த விளையாட்டு தனத்தால் கடைசி நேரத்தில் படிப்பில் கோட்டை விட்டுவிடுவாளோ என்ற பயத்தில்தான் இதழினி அவ்வப்போது அவளுக்கு அட்வைஸ் செய்வது.

அதை தான் சின்னவள் இப்போது கருத்து ஊசி என்று கலாய்ப்பது கூட.

பதில் எதுவும் சொல்லாமல் இதழினி அமைதியாகவே இருக்க, “பிளீஸ்.. அக்கா.. இந்த ஒரே ஒரு தடவ மட்டும்” என்றவள் விடாமல் கெஞ்ச,

சரி என்பது போல் தலையை அசைத்தவள், “இந்த ஒரு தடவ மட்டும்தான் ஆரண்யா” என்று சிறு கண்டிப்புடன் சொல்ல, சின்னவள் முகத்தில் அதன் பின் தான் தெளிவு பிறந்தது.

எப்போதும் போல் கல்லூரிக்கு அணிந்து சென்ற ஆடைகளை துவைத்து முடித்த கையோடு குளித்து முடித்து, டியூஷன் எடுப்பதற்காக கிளம்பி வெளியில் வந்தவளுக்கு ஏமாற்றம் தான் இன்னும் மாண, மாணவிகள் யாரும் வராததை கண்டு.

“மணி அஞ்சாக போகுது.. ஏன் இன்னும் யாரும் வரல..?” என்று தனக்குதானே கேட்டுகொண்டவாறே கரும்பலகையை சுத்தம் செய்தவளின் பார்வை, நொடிக்கொருதரம் வாயிலை பார்க்க தவறவில்லை.

இலக்கியா மூலம் விஷயம் கேள்விபட்டு அப்போதுதான் வெளியில் வந்தாள் ஆரண்யா.

நொடிக்கொருதரம் கைகடிகாரத்தையும் வாயிலையுமே இதழினி மாறி மாறி பார்த்திருக்க,

“அக்கா… நீ இன்னும் எவ்வளோ நேரம் வெயிட் பண்ணாலும் சரி. யாரும் இன்னைக்கு வரபோறது இல்ல“ என்றவளை திரும்பி பார்த்தவள்,

”ஏன்.. யாரும் வரமாட்டாங்க..? உன் கிட்ட எதாவது சொல்லிட்டு போனாங்களா ஆரண்யா..?” என்று அப்பாவியாக கேட்பவளை பார்த்து ஆரண்யாவிற்கு பாவமாகத்தான் இருந்தது.

“அக்கா… இன்னும்மா உனக்கு புரியல..? எங்க தலையோட புதுபட ஆடியோ லாஞ்ச்-காக தமிழ்நாடே டீ.வி முன்னாடிதான் உட்கார்ந்து இருக்க. நீ என்னடான்னா இது தெரியாம டியூஷன் எடுக்க கிளம்பி வந்துட்ட..” என்று நக்கலாய் சொல்லிவிட்டு ஆரண்யா சிரிக்க, அவளின் வார்த்தைகளை கேட்டு இதழினிக்கு கோவம்தான் வந்தது.

அந்த கோவத்தோடே, “போடி” என்று எரிந்துவிழுந்தவள், வந்த கோவத்திற்கு கையிலிருந்த பிரம்பையும் ஆரண்யாவை நோக்கி வீச,

அவளிடமிருந்து இதை எதிர்பார்த்திராத ஆரண்யாவோ, “ஆத்தாடி..?”என்றவாறே, நொடிபொழுதில் அந்த இடத்தையும் காலி செய்திருந்தாள்.

“இந்த மக்களுக்கெல்லாம் என்ன மர கழண்டுடுச்சா..? அவன் கோடி கணக்குல பணம் சம்பாதிக்கறத இவங்க பொழப்ப விட்டுட்டுதான் பார்க்கணுமா.. என்ன..? பசங்களோட படிப்ப பத்திலாம் இவங்களுக்கு கவலையே இல்லையே..? எக்சாம் டைம்-ல ஆடியோ லாஞ்ச் ரொம்ப முக்கியமா..? முதுகுல நாலு போட்டு டியூஷனுக்கு அனுப்பறத விட்டுட்டு இவங்களும் சேர்ந்து ஆடியோ லாஞ்ச் பார்த்துட்டு இருக்காங்க.. ஏன் மார்க் கம்மியாச்சின்னு பேரண்ட்ஸ் யாராவது வந்து கேட்கட்டும்.. அப்படியே வாய்-அ கிழிச்சிடுறேன்” என்று அவளால் கோவப்படத்தான் முடிந்தது.

ஊராரை கோவப்பட்டு என்ன பயன்.. அவள் வீட்டினரே இப்போது அந்த நிகழ்ச்சியை பார்க்கத்தானே டீ.வி முன் அமர்ந்திருக்கிறார்கள்.

எப்படியும் இன்று டியூஷன் இல்லை என்று முடிவாகிவிட, அடுத்து பரதம் வகுப்பிற்காக அவள் தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கு போதுதான் அவளிடம் பரதம் பயிலும் மாணவிகள் தலைவலி, கால்வலி, வயிற்றுவலி, வயிற்று போக்கு என்று ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி விடுப்பு எடுக்க, இதழினியின் மொத்த கோவமும் இப்போது அந்த ரிஷப் நந்தன் மீது தாவியது.

“டேய்…யார்ரா நீ.. நான் என்னடா பாவம் பண்ணேன் உனக்கு..? எதுக்காக என் சந்தோஷத்துல மொத்தமா மண்ண அள்ளி போட்ட.. யூ இடியட்… நீ மட்டும் என் கையில சிக்குன எனக்கு இருக்கற கோவத்துக்கு உன்ன மென்னு துப்பிடுவேன்.” என்றவள் அந்த கோவத்தோடே இரண்டு கரங்களையும் இறுக மூடி மேஜையின் மீது குத்தினாள் என்னவோ அவனையே குத்துவதாக நினைத்து.

காரணம் இசைக்கு அடுத்து அவளின் சந்தோஷம், ஆறுதல், பிடித்தம் எல்லாமே இந்த இரண்டு வகுப்புகள் தான்.

அதனால்தானே எத்தனையோ நெருக்கடிகள் வந்த போது கூட, ஏன் அவள் டைஃபாய்டு காய்ச்சலில் அவதி பட்டபோது கூட இரண்டு வகுப்புகளுக்கும் அவள் விடுமுறை விட்டது கிடையாது.

தன் மனதிலிருக்கும் வலி, அழுத்தம், எதிர்காலம் பற்றிய பயம் என்று அனைத்தையும் கல்லூரிக்கு அடுத்து அவள் மறப்பது இந்த இரண்டு வகுப்புகளில்தான். சொல்லபோனால் தன் மனநிம்மதிக்கா மட்டும்தான் அவள் இந்த வகுப்புகளை எடுப்பது கூட.

அதனால் தானே இலக்கியா எத்தனையோ முறை சொன்னபோது கூட இதழினி கடந்த இரண்டாண்டு காலமாக ஃபீஸ் அமௌன்டை உயர்த்தாமல் இருப்பது.

தன்னுடைய மனநிம்மதியை வியாபாரம் ஆக்க இதழினி விரும்பவில்லை.

ஆனால் இன்று யாரோ ஒருவனால் அனைத்தும் தலைகீழாய் மாறியிருக்க, அதைத்தான் அவளால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

நினைக்க நினைக்க அவளுக்குள் அத்தனை கொதிப்பு.

அவளின் சந்தோஷத்தை நிம்மதியை யாரோ வலுகட்டாயமாக அவள் கைகளிலிருந்து பிடுங்கியது போன்ற ஒரு உணர்வு.

அவளுக்குள் வலித்தது.

அந்த வலியில் வீரியத்தால் அவள் விழிகள் இப்போது கலங்க, அப்படியே அமர்ந்துவிட்டாள் இதழினி.

அப்படியே அமர்ந்திருந்தவளின் சிந்தையை கலைத்தது என்னவோ, டீ.வியிலிருந்து கேட்ட, “குட் ஈவ்னிங் டூ ஆல்” என்ற ரிஷப் நந்தனின் குதூகலம் நிறைந்த குரல்தான்.

அவன் குரலில் இருந்த குதூகலம் அவளுக்குள் மேலும் கோவத்தை ஏற்படுத்த,

அமர்ந்த நிலையிலேயே, “ஆரண்யா.. டி.வி வால்யூம்-அ கம்மி பண்ணு” என்று கத்தினாள் என்னவோ அவள் கத்தல் ஆரண்யா காதிற்கு விழும் என்பது போல்.

அவன் மாலை வணக்கம் சொல்லிமுடித்ததுதான் தாமதம், அவனை பார்க்க குழுமியிருந்த அவன் இரசிகர், இரசிகைகள் அவனை பார்த்த சந்தோஷத்தில், “ரிஷப்… ரிஷப்.. ரிஷப்..” என்று கோரசாக கத்தஆரம்பித்துவிட்டனர்.

கடல் அலைகள் எழுப்பும் பேரிரைச்சல் சத்தம் கூட அவன் இரசிகர் எழுப்பிய பேரிரைச்சல் முன் தோற்றுபோனது என்றுதான் சொல்லவேண்டும்..

அந்த பேரிரைச்சல் சத்தம் கூட இதழினிக்கு மேலும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தியது.

அந்த சத்தம் கேட்க பிடிக்காமல், “பெருமாளே..” என்றவாறேதன் இரண்டு காதுகளையும் பலம் கொண்டவரை மூடிக்கொண்டாள். ஆனால் சத்தத்தின் அளவு கூடிகொண்டு போனதே தவிர குறைந்த பாடில்லை.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு பின் தான் அவன் இரசிகர்கள் அமைதியாயினர். அதுவும் அமைதி காக்கும் படி அவன் கை உயர்த்தி கேட்டு கொண்டதால் மட்டும்.

பின் தன் இரசிகர்களை பார்த்து “எல்லாரும் எப்படி இருக்கீங்க..?” என்றவனின் கேள்வியால் மீண்டும் அவன் இரசிகர்கள் சத்தம் எழுப்ப,

பொறுமை இழந்து போன இதழினியோ வேக எட்டுகளுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவள் உள்ளே வந்ததை கவனித்த ஆரண்யா, “அக்கா… எனக்கு தெரியும் நீ கண்டிப்பா வருவன்னு..” என்று சிரித்துகொண்டே சொன்னவளின் முகம் அப்படியே மாறிபோனது இதழினி பார்த்த கனல் பார்வையில்.

“உனக்கு என்ன காது டமாரா..? எதுக்கு இவ்வளோ சவுண்ட் வச்சியிருக்க..? வால்யூம்-அ கம்மி பண்ணுடி” என்றவள் அதட்ட,

ஆரண்யாவும் ரிமோட்டில் வால்யூம் குறைக்கும் பட்டனை அழுத்தினாள்.

ஆனால் ரிமோட்டோ குறைக்க மாட்டேன் என்பது போல் சண்டித்தனம் செய்ய,

“ப்ச் இதுவேற நேரம் பார்த்துதான் காலவாரும்” என்று வாய்க்குள் முனுமுனுத்தவாறே ரிமோட்டை உள்ளங்கையில் இரண்டு தரம் தட்டிவிட்டு மீண்டும் அழுத்தினாள்.

ஆனால் அப்போதும் அது வேலை செய்யாமல் போக, ஆரண்யா சங்கடத்துடன் இதழினியை பார்த்தாள்.

அதுவரையும் அவளையே முறைத்து கொண்டிருந்த இதழினி கோவத்தோடே, “இங்க குடு” என்று வெடுக்கென்று அவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி, வால்யூமை குறைக்க முயன்றாள்.

9 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels