விஷயத்தை தினேஷிடம் நான்சி சொன்னபோது, தினேஷ் ஹரிஹரனுக்குதான் போன் செய்தான்.
சத்யன் இங்கு படிக்க வந்ததிலிருந்தே தினேஷிற்கு ஹரிஹரன் நன்கு பரிட்சயம்.
சத்யன் அழைப்பை ஏற்கவில்லை என்றால் ஹரிஹரனும் உடனே தினேஷைற்குதான் அழைத்து பேசுவான். அந்த அளவிற்கு அவர்களுக்குள் நல்ல நட்பும் கூட.
அந்த நம்பிக்கையை மனதில் வைத்து தான் தினேஷ் ஹரிஹரனுக்கு அழைத்தது.
தினேஷ் மூலம் அனைத்தையும் கேட்ட ஹரிஹரன், தான் நேரில் வந்து பேசுவதாக சொல்லிவிட்டு போனை வைக்க,
நான்சியும் தினேஷ்-ம் நம்பிக்கையோடு அவன் வருகைக்காக காத்திருந்தனர்.
ஆனால் ஹரிஹரனோ வந்த வேகத்திலே ஏழு வருடங்களுக்கு முன்பே சத்யனுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அதற்கான மேரேஜ் சர்டிஃபிக்கேட்டையும் காட்ட இருவருமே அதிர்ந்து போய் விட்டனர்.
ஆம் சத்யன் இதுநாள் வரை தனக்கு நடந்த பிள்ளை வயது திருமணத்தை பற்றி யாரிடமும் வாய்திறந்தது கிடையாது.. ஏன் நான்சியிடம் கூட.
அவனுக்கு திருமணமான ஆதாரத்தை காட்டியவன் அத்தோடு நிறுத்தவில்லை.
“உன் வயித்துல வளர்ற குழந்தை-அ காட்டி குடும்பத்துக்குள்ள நுழையணும்னுலா பிளான் பண்ணாத. ஏன்னா உங்களுக்குள்ள இருந்தது ஒரு இல்-லீகல் ரிலேஷன்ஷிப். சட்டப்படி தப்பும் கூட” என்றவனின் குத்தல் வார்த்தைகளால் நான்சிக்குதான் இப்போது உடல் கூசி போனது.
அவனை நிமிர்ந்து பார்க்க கூட முடியாமல் தலையை தாழ்த்திக்கொண்டவளுக்கு அழுவதை தவிர வேறு வழியும் இல்லாமல் போனது.
அனாதை இல்லத்தில் வளர்ந்து டிரஸ்ட்களின் உதவியால் அவள் இந்த அளவிற்கு வந்திருப்பதே மிகப் பெரிய ஆச்சரியம்தான்.
தன் தேவையை சொல்வதற்கு கூட வாய் திறக்க பயப்படுபவள், இப்போது மட்டும் எப்படி அவனிடம் எதிர்த்து கேள்விகேட்பாள்.
தவறு அவள் மீதும் இருக்கிறதே.. மனதை பறிக்கொடுப்பதற்கு முன் அவளும் அவன் பற்றி அறிந்திருக்க வேண்டாமா..
என்ன செய்ய கிடைக்காத அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் சிறுவயது முதலே ஏங்கி தவித்தவளுக்கு சத்யன் காட்டிய அக்கறையும், அன்பும் பிடித்திருந்தது.
அந்த பிடித்தம் காதலாக மாற வெகுநாட்கள் எடுத்துகொள்ளவும் இல்லை.
அவசர அவசரமாக ஆரம்பித்த காதல் அதே அவசரத்தோடே முடிந்தும் போனது.
அழுதவண்ணமாகவே நின்றிருந்தவளை சொடுக்கிட்டு அழைத்த ஹரிஹரன்,
“கல்யாணம் பண்ணத மறச்சி என் தம்பி பண்ணது தப்புதான்.” என்றவனின் பார்வை இப்போது அவள் அடிவயிற்றின் மீது படிய, அதை நான்சியும் கவனிக்கவே செய்தாள்.
“அவன் பண்ண தப்ப சரி பண்ண நான் உனக்கு ஒரு கோடி தரேன்.. அத வாங்கிக்கிட்டு சத்தமில்லாம கலைச்சிடு” என்று நாக்கில் நரம்பே இல்லாமல் சொன்னவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அதுவரையும் நடப்பதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த தினேஷ்ற்கு ஹரிஹரனின் செயல் இப்போது கோவத்தைதான் ஏற்படுத்தியது.
ஆனால் இது கோவப்படுவதற்கான நேரம் இல்லை என்பதால் வெகு சிரமப்பட்டு கோவத்தை அடக்கியவன்,
“ப்ரோ.. இதெல்லாம் ரொம்ப தப்பு..” என்று ஆரம்பித்ததுதான் தாமதம்,
“டேய்…” என்று ஆக்ரோஷமாய் கத்திய ஹரிஹரன், ஆள்காட்டி விரலை அவன் முன்னால் நீட்டியபோது நான்சி அதிகமாகவே பயந்துவிட்டாள்.
அந்த பயத்தின் வெளிப்பாடாய் “பிளீஸ் தினேஷ்… எதுவும் வேண்டாம்” என்று சத்தமில்லாமல் அவனிடம் இரைஞ்சியவளின் கரங்கள் தினேஷின் கரத்தையும் பற்றி இருந்தது.
“என் குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அந்த மரியாதை-அ யாராவது கெடுக்கணும்னு நினைச்சீங்க… யாரு என்னன்னு கூட பார்க்காம அறுத்து போட்டு போய்ட்டே இருப்பேன்.” என்றவனின் அனல்பறக்கும் வார்த்தைகளால் தினேஷிம்-மே பேச்சற்றுதான் போனான்.
என்ன செய்ய சத்யனுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லையென்றால் கூட சண்டையிட்டோ… கோர்ட், கேஸ் சென்றோ நான்சி-க்கான நியாயத்தை போராடி வாங்கி விடலாம். ஆனால் இப்போது அதற்கும் வழியில்லையே. அதனால் தினேஷ்-ம் அமைதியாகி விட்டான்.
இனி தன்னையோ தன் குடும்பத்தாரையோ எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள கூடாதென்று காட்டமாக சொல்லிவிட்டு ஹரிஹரன் அங்கிருந்து கிளம்ப, நான்சிதான் கற்சிலையாக சமைந்து போய் நின்றாள்.
பின் தினேஷ்-ம் அவர்களின் நட்பு வட்டாரமும் தான் நான்சியை கொஞ்சம் கொஞ்சமாக அத்தனையிலிருந்தும் மீட்டது.
என்னதான் திருமணம் ஆனதை மறைத்த சத்யன் மீது அவளுக்கு கோவம் இருந்தாலும், அந்த கோவத்தின் எல்லை குழந்தையை கலைக்கும் அளவிற்கெல்லாம் செல்லவில்லை.
குழந்தையை சுமந்துகொண்டே மேற்படிப்பை முடித்தாள். கிடைக்கும் வருவாயை கொண்டு கஷ்டப்பட்டு யார் துணையும் இன்றி குழந்தையை வளர்த்தாள்.
மீராநந்தன் மூலம் அனைத்தையும் அறிந்த பிரதீப்பிற்கோ இந்த பிரச்சனையை இப்போது எப்படி கையாள்வதென்றே தெரியவில்லை.
யாரை பிடித்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி கிடைக்கும் என்று சற்றுமுன் நினைத்திருந்தானோ, அவனே பிரச்சனையின் ஆரம்பபுள்ளியாக இருக்க இனி யாரிடம் சென்று உதவி கேட்பதென்றும் அவனுக்கு தெரியவில்லை.
சத்யன் வீட்டில் பிரதீப்பிற்கு நன்கு பழக்கமென்றால் அது சத்யன் மற்றும் ஹரிஹரனோடு மட்டும்தான். ஜெயசீலன் எல்லோருக்கும் மூத்தவன் என்பதால் மரியாதை நிமித்தமாக அவனிடம் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான்.
அதனாலே “சார்.. இப்போ என்ன தான் சார் பண்றது..?” என்று நேரிடையாக மீராநந்தனிடமே கேட்டுவிட்டான் பிரதீப்.
அவனின் கேள்வியால் சில கணங்கள் அமைதிகாத்தவன், பின் ஒரு முடிவு எடுத்தவனாய் பிரதீப்பை பார்க்க, பிரதீப்பும் அவனையேதான் பார்த்து கொண்டிருந்தான்.
“எனக்கு என் மீரா வேணும்.” என்று சொன்னவனை, ‘எந்த மீரா..?’ என்பது போல் புரியாமல் பார்த்தான் பிரதீப்.
அவன் நிலை மீராநந்தனுக்கு புரிய “ஐ மீன் எனக்கு என் பிரதிக்ஷா வேணும்.” என்று பிரதீப்பிற்கு புரியும் பொருட்டு திருத்தி அவன் சொன்னபோது பிரதீப்பிற்குதான் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
அவனின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தால் அதிர்ந்து போன பிரதீப் இப்போது “சார்…” என்று அதிர,
“யெஸ் பிரதீப்.. ஐ லவ் ஹெர்.. ஐ வாண்ட் டூ மேரி ஹெர்..” என்று உறுதியான குரலில் சொன்னவன்,
“இது நான் என் மீரா மேல உள்ள அனுதாபத்துல எடுத்த முடிவு கிடையாது பிரதீப். அட் த சேம் டைம் என்னோட இந்த காதல் எங்க இருந்து எப்படி ஆரம்பிச்சிதுன்னு என்னால இப்போ எக்ஸ்பிளைனேஷனும் கொடுக்க முடியாது.” என்று நிறுத்திவிட்டு பிரதீப்பை பார்த்தவன்,
“உங்களுக்கு ஸ்டார்ட்டப் ஃபண்ட் கொடுத்தது கூட என் மீரா-வ சுத்தி உள்ளவங்ககிட்டயிருந்து காப்பாத்துறதுக்காகத்தான்.” என்றவனை மேலும் அதிர்ந்துபோய் பார்த்தான் பிரதீப்.
“அன்னைக்கு மீரா கார்-அ ஃபாலோ பண்ணும் போதுதான் இந்த ஆக்சிடண்ட் கூட” என்று மெலிதாக சிரித்துகொண்டே சொன்னவன்,
“எனக்கு அந்த ஃபேம்லி குள்ள நுழையறதுக்கு ஐ நீட் யுவர் ஹெல்ப் பிரதீப். செய்வீங்களா..?” என்று கேட்டவனுக்கு சட்டென்று என்ன பதில் சொல்வதென்றே பிரதீப்பிற்கு தெரியவில்லை.
காரணம் இங்கு வந்தது முதலே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான் அவனுக்கு.
அவன் சொல்லாவிட்டாலும் அவன் நிலை மீராநந்தனுக்கு புரியவே செய்தது.
“உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல பிரதீப். டேக் யுவர் ஓன் டைம்.” என்று மென்சிரிப்புடனே சொன்னவனை பார்த்து தலையாட்டிவிட்டு வீட்டிற்கு வந்த பிரதீப் ஒருவாரகாலம் தன் அலுவலகத்திற்கு கூட செல்லவில்லை.
பிரதீப் நிச்சயம் தனக்கு உதவுவான் என்ற நம்பிக்கையில் மீராநந்தன் காத்து கொண்டிருக்க, சோமசுந்தரத்திற்கோ பிரதீப் உதவுவான் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை.
அதேசமயம் அவளை தொடர்புகொள்ள அவர்களுக்கு வேறு வழியும் கிடைக்கவில்லை.
மீனாட்சியும் தன் பங்கிற்கு முயன்று பார்த்துவிட்டார். சுபத்ராவை பிடித்தால் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தவருக்கு அதிலும் ஏமாற்றம் தான்.
என்னவென்றே தெரியவில்லை மூன்று மாதகாலமாகவே சுபத்ரா லேடிஸ் கிளப் பக்கமே வரவில்லை.
அவள் தோழிகளிடம் விசாரித்த போது, அவர்கள் சொன்ன பதிலும் பெரிதாக அவருக்கு திருப்திகரமாக இல்லை.
ஒருவார காலம் இப்படியே சென்றது.
மீராநந்தனின் காத்திருப்பு வீண்போகாமல் அடுத்தவாரமே பிரதீப் அவனை தேடிக்கொண்டு வந்திருக்க, சோமசுந்தரத்திற்கு ஆச்சரியம் தான்.
“சாரி சார்…. ரொம்ப காக்கவச்சிட்டேன்…” என்றவாறே உள்ளே வந்த பிரதீப்பை, வரவேற்கும் விதமாக எழுந்து சென்று கைகுலுக்கியவன்,
“ஈட்ஸ் ஓகே பிரதீப்..” என்றவாறே அமருமாறு அவனுக்கு இருக்கையை காட்டியவன் தானும் அவன் அருகில் சென்று அமர்ந்துகொள்ள, சோமசுந்தரமும் அவர்களுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
“எப்படி இருக்கீங்க சார்..?” என்று அவரையும் நலம் விசாரிக்க பிரதீப் தவறவில்லை.
“என்ன குடிக்கிறீங்க.. பிரதீப்…? காஃபி, டீ, ஜீஸ்..?” என்றவனை பார்த்து,
புன்னகைத்து கொண்டே “அதெல்லாம் எதுவும் வேண்டாம் சார்..” என்று பிரதீப் மறுத்தாலும், இண்டர்காமில் வேலையாளை அழைத்து மூவருக்கும் ஜீஸ் எடுத்துவர சொல்லியிருந்தார் சோமசுந்தரம்.
“டீட்டயில்ஸ் கலெக்ட் பண்ண கொஞ்சம் டிலே ஆகிடுச்சி சார்.” என்று தன் தாமதத்திற்கான காரணத்தை சொன்னவன்,
அதன்பின்னே தன் கையோடு எடுத்துவந்திருந்த கோப்புகளை மீராநந்தனிடம் கொடுக்க, மீராநந்தனும் அதை வாங்கி ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தான்.
சத்யனின் மொத்த குடும்ப விவரங்களும் அதில் இருந்தது.
“அப்புறம் சார்… உங்கள பர்மிஷன் இல்லாம நான் ஒரு விஷயம் பண்ணிட்டேன்.” என்றவனை என்ன என்பது போல் பார்த்தான் மீராநந்தன்.
“சார்.. இரண்டு மாசத்துக்கு முன்னாடி அவங்க கோல்ட் ஷோரும் ஒன்னு எரிஞ்சிடுச்சி.. பெரிய அளவுல நஷ்டமும் கூட. மத்த ரெண்டு ஷோரும்-அ விட எரிஞ்சிபோன ஷோரும்தான் அவங்களுக்கு அதிக பிராஃபிட் கொடுத்த ஷோரும். ஸோ எரிஞ்சி போன ஷோரும்-அ புதுப்பிக்க பார்ட்னர்ஷிப் தேடிக்கிட்டு இருக்கறதா கேள்விபட்டேன். நானும் ஹரி மாமா-க்கு போன் பண்ணி அரசல்புரசலா கேட்டப்போ அவரும் அப்படித்தான் சொன்னாரு. எனக்கென்னவோ… அந்த ஃபேம்லி-குள்ள நீங்க நுழைய இது நல்ல சான்சா இருக்குமோன்னு தோணுச்சி. ஸோ வித் அவுட் யுவர் பர்மிஷன் அப்பா பத்தியும் உங்கள பத்தியும் சொன்னேன். நீங்க மும்பை-ல பெரிய அளவுல கோல்ட் ஷோரும் ஓப்பன் பண்ண பிளான் பண்ணிட்டு இருக்கறதாவும் சொன்னேன்.” என்றவனை,
“குட் மூவ்.” என்று தட்டிகொடுத்த மீராநந்தன்,
அதேசமயம் பார்ட்னர்ஷிப்பிற்கு ஒத்துக்கொள்வார்களா..? என்ற கேள்வி அவனுக்குள்ளும் எழாமல் இல்லை.
அது பற்றி பிரதீப்பிடம் கேட்டபோது, அவனுக்குள்ளும் இதே கேள்விதான் ஹரிஹரனிடம் பேசியது முதல் ஓடிகொண்டிருந்தது.
இருவரும் யோசனையோடே ஒருவரையொருவர் பார்த்திருக்க, அதுவரையும் அங்கு அமர்ந்து அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த சோமசுந்தரம், “ஒத்துப்பாங்க.” என்றார் நம்பிக்கை மிகுந்த குரலில்.
“ஹவ் ஈஸ்ட் பாசிபுள் டேட்.. யாரோட பார்ட்னர் ஷிப் வைக்கணும்றது அவர்களோட விருப்பம் இல்லையா..?” என்றான் மீராநந்தனும் பதிலுக்கு.
ஆம் பார்ட்னர்ஷிப் யாரோடு வைப்பததென்பதை அவர்கள்தானே முடிவுசெய்ய வேண்டும்.
“யெஸ் விருப்பம் அவங்களோடதுதான்… பட் நாம பிரஷர் பண்ணலாம் இல்லையா…?” என்று சோமசுந்தரம் முடிக்கும் முன்பே…
“நோ… டேட்..” என்றான் அவர் யோசனையை மறுக்கும் விதமாக அவன்.
பொதுவாகவே பிஸ்னஸ் உலகில் போட்டி பொறாமைகள் கொஞ்சமல்ல நிறையவே இருக்கும். அதுவும் எந்த அளவிற்கு என்றால் தன்னை எதிர்ப்பவர்களை, தனக்கு போட்டியாக வர நினைப்பவர்களை தடமே இல்லாத அளவிற்கு அழித்துவிடும் அளவிற்கு இருக்கும் என்பதை மீராநந்தனும் நன்கு அறிவான்தான்.
இதில் இன்னும் சிலர் ஒரு படி முன்னே சென்று தங்களுடைய பணபலத்தையும், செல்வாக்கையும் வைத்து உருட்டி மிரட்டி தாங்கள் நினைத்ததை சாதிப்பதும் உண்டு.
அம்மாதிரி அவர்களை பணியவைக்க மீராநந்தன் விரும்பவில்லை. அது ஒரு நல்ல பிஸ்னஸ்மேனிற்கு அழகு இல்லை என்பது அவன் வாதம்.
அவன் எதை மனதில் வைத்து மறுக்கிறான் என்பதை சோமசுந்தரமும் கணிக்க தவறவில்லை.
“சீ நந்தன்… பிரஷர் மீன்ஸ் நீ நினைக்கிறமாதிரியெல்லாம் இல்லை. பிரதீப் நாம மும்பையில புது கோல்டு ஷோரும் ஓப்பன் பண்ண பிளான் இருக்கறதாதா சொல்லியிருக்கான்..?” என்று கேட்டவர் இப்போது பிரதீப்பை பார்த்து,
“அம் ஐ கரெக்ட் பிரதீப்..?” என்க, ஆமாம் என்பது போல் பிரதீப்பும் தலையை மட்டும் ஆட்டிவைக்க, மீண்டும் சோமசுந்தரமே தொடர்ந்தார்.
“நானும் எஸ்.ஆர் ஜீவல் ஷோரும் பத்தி விசாரிச்சேன்,” என்றவரை இப்போது மீராநந்தன் மட்டுமல்ல பிரதீப் கூட ஆர்வமாகத்தான் பார்த்தான்.
“எஸ்.ஆர் ஜீவல் ஷோரும்-க்கு மும்பை மக்கள் மத்தியில நல்ல வரவேற்ப்பு அண்ட் நல்ல பேர் இருக்கு. எந்த அளவுக்குனா… புதுசா அங்க யாராவது ஜீவல் ஷோரும் ஓப்பன் பண்ணா கூட அவங்களுக்கு எந்தவிதத்துலயும் பாதிப்பு வராதுன்ற அளவுக்கு.” என்று நிறுத்தியவர், இப்போதும் இருவரையும் பார்த்து,
“ஆனா நான் சொன்னதெல்லாம் ஷோரும் எரியாத பட்சத்துல. ஷோரும் எரிஞ்சி போயிருக்கற இந்த நிலமையில நாம அங்க புது ஷோரும் ஓப்பன் பண்ணா அது எஸ்.ஆர் ஜீவல்-க்கு எவ்வளோ பெரிய நெருக்கடின்றது கண்டிப்பா அவங்களுக்கும் தெரியும்.
ஸோ முதல்ல அவங்க நம்மள அங்க எந்த வேலையும் ஆரம்பிக்க முடியாதபடி தடுப்பாங்க.. ஆனா அது நிச்சயம் அவங்களால முடியாத காரியம்.” என்று நம்பிக்கை மிகுந்த குரலில் சொன்னவர்,
“அடுத்து வேற வழி இல்லாம அவங்களே நம்ம கிட்ட பார்ட்னர்ஷிப்-க்கு வருவாங்க. வர வைக்கணும். அதுக்கு நாம அங்க இம்மீடியட்-ஆ வொர்க்-அ ஸ்டார்ட் பண்ணி யோசிக்க கூட டைம் கொடுக்காத அளவுக்கு அவங்களுக்கு பிரஷர் கொடுக்கணும். ஐ மீன் புத்தியால மிரட்டுறது.” என்றவரின் யோசனை இருவரையுமே பிரம்மிக்கதான் வைத்தது.
“அவங்களும் நம்மள பத்தி விசாரிப்பாங்க.. விசாரிக்கட்டும்.. விசாரிக்கறது நமக்கும் ஒரு வகையில பிளஸ்தான்.. அவங்களுக்கு நாம கொடுக்கப்போறது இரண்டே ஆப்ஷன் தான் நந்தன்.” என்று இருவிரலை நீட்டி சொன்னவர்,
“ஒன்னு வேற யார்கூடயோ பார்ட்னர்ஷிப் வச்சி நம்மள எதிர்க்கிறது. அது நடக்க வாய்ப்பே இல்ல.. இன்னொன்னு நம்மள எதிர்க்காம அவங்களா தேடி வந்து நம்ம கூட கைக்கோக்கறது.” என்றவர் முடிக்க மற்ற இருவரின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்துதான் போயின.
அவரின் இந்த யோசனையும் கணிப்பு முற்றிலுமே புதுவிதமாக இருந்தது மீராநந்தனுக்கு.
வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை உருவாக்கி அந்த பிரச்சனைக்கான தீர்வை தனக்கு சாதமாக மாற்றும் அவரின் இராஜதந்திரைத்தை பார்த்து மலைத்துதான் போயினர் இருவரும்.
அதனால் தானே இன்றளவும் பிஸ்னஸ் உலகில் சோமசுந்தரம் கொடிக்கட்டி பறந்துகொண்டிருப்பது.
“பிர்லியண்ட் டேட்..” என்று தந்தையை மகன் மெச்சிக்கொண்டிருக்கும் போதுதான், மூவருக்குமான பழச்சாறுடன் மீனாட்சி அங்கு வந்து சேர்ந்திருந்தார்.
“வேலைக்காரங்க கிட்ட கொடுத்தணுப்ப கூடாதா ம்மா..” என்று தாயை கடிந்துகொண்டாலும் மீராநந்தன் தான் அவரிடம் இருந்த பழச்சாறை வாங்கி இருவருக்கும் கொடுத்தான்.
பிரதீப் பழச்சாறை அருந்தி முடிக்கும் வரை காத்திருந்த மீனாட்சியால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை.
“ஏம்ப்பா.. பிரதீப்.. என் மருமக நல்லா இருக்காளா..? நீயாவது என்ன என் மருமகள பார்க்க கூட்டிட்டு போக கூடாத..?” என்றவரின் வருத்தம் நிறைந்த கேள்வியால் பிரதீப்பிற்குதான் சட்டென்று புரையேறி விட்டது.
அவன் நிலையை பார்த்து “ஏய்…” என்று பதறியவாறே பிரதீப்பின் தலையை மெல்ல தட்டிகொடுத்த மீராநந்தன் ‘ஏன் ம்மா…?’ என்பது போல் இப்போது மீனாட்சியை முறைத்தான்.
உன் முறைப்பிற்கெல்லாம் நான் அப்பாற்றபட்டவள் என்பது போல் பதிலுக்கு அவரும் அவனை முறைக்க தவறவில்லை.
முறைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் “எதுக்குடா என்ன முறைக்குற..? நானும் உன் கிட்ட எத்தனை தடவ கேட்டு இருப்பேன்.. ஒருதடவையாவது என் மருமகள பார்க்க கூட்டிட்டு போய் இருப்பியா..? அட்லீஸ்ட் தூரத்துலேந்தாவது பார்க்கவிட்டு இருப்பியா..? போடா..” என்று அவனிடம் போலியாக கோவப்பட்டவர்,
மீண்டும் பிரதீப்பை பார்த்து, “என்ன கூட்டிட்டு போறீயா பிரதீப்..?” என்று கெஞ்சும் குரலில் கேட்டபோது பிரதீப் தான் மேலும் விழி பிதுங்கி போனான்.
இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்பது போல் பிரதீப் இப்போது மீராநந்தனை பார்க்க, மீராநந்தனோ
“டேட்… நீங்களாவது மாம்-க்கு கொஞ்சம் சொல்லி புரியவைங்களேன் “ என்றான்.
“சாரி டா… நீயாச்சி.. உன் அம்மாவாச்சி… நடுவுல என் தலைய போட்டு உருட்டாதீங்க..” என்று சாமர்த்தியமாக இருவரிடமிருந்தும் விலகியவர்,
“நான் உன் அம்மா மாதிரி அடமண்ட்-லாம் கிடையாது நந்தன். பார்ட்னர் ஷிப் பேசும் போதும் நானே என் மருமகள பார்த்துக்கறேன்.” என்றவர் சொன்னபோது, ‘டாட் நீங்களுமா…’ என்பது போல் அதிர்ச்சியாய் அவரை பார்த்தான் மீராநந்தன்.
“ஏங்க.. பார்னர்ஷிப் பேசும் போது நானும் உங்க கூட வருவேன்..” என்று மீனாட்சி அடம்பிடிக்க, மீராநந்தனின் பொறுமை காற்றில்தான் பறந்துபோனது.
“என்ன… விளையாடுறீங்களா… இரண்டு பேரும்..?” என்று இருவரையும் மாறி மாறி பார்த்து கேட்டவன்,
“நானே என் லவ் அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கேன்-ற வருத்தத்துல இருக்கேன்.. இதுல நீங்க இரண்டு பேரும் சேர்ந்து மொத்தமா முடிச்சிவிட்டுடலாம்-ன்னு பார்க்குறீங்களா..?” என்று என்ன தான் அவன் கோவத்தில் சொன்னாலும், அவன் சொன்ன தோணியில் பெற்றவர் இருவருக்கும் சிரிப்புதான் வந்தது.
இருவரும் கஷ்டப்பட்டு சிரிப்பை மென்றுவிழுங்க அதையும் அவன் கவனிக்கவே செய்தான்.
“டேட்… என்ன பழக்கம் இது..?” என்று அதற்கும் அவன் கோவப்பட,
“ஏங்க.... நம்ம நந்தனுக்கு கோவம் வருதுங்க..” என்றவாறே வெடித்து சிரித்த மீனாட்சியின் சிரிப்பில் சோமசுந்தரமும் இணைந்துகொள்ள, பிரதீப்பிற்குதான் இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
இடுப்பில் கைவைத்தப்படி இருவரையும் அவன் முறைத்து பார்த்தபடியே நின்றிருக்க, அவர்களும் சிரிப்பதை நிறுத்தவே இல்லை.
ஓரளவு சிரிப்பு கட்டுக்குள் வந்தபின் தான், “என்னடா ரொம்ப ரொம்ப கோவம் வருதோ… நான் கோவமாக இருக்கும் போது சம்மந்தமே இல்லாம நீ கெக்க பெக்கேன்னு சிரிக்கும் போது எனக்கும் இப்படித்தான் இருக்கும்.” என்று மீனாட்சி சிரித்து கொண்டே சொன்னபோது, “எனக்கும்தான்” என்றார் சோமசுந்தரமும் உன்னால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது போல்.
இது பொதுவாகவே அவர்கள் வீட்டில் நடக்கும் ஒன்றுதான்.
யார் கோவமாக இருந்தாலும் சரி அவர்கள் முன்னால் எதையாவது பேசி சிரித்து, அவர்கள் மனநிலையை அப்படியே மாற்றிவிடுவதில் மீராநந்தனை அடித்துகொள்ளவே முடியாது.
இன்று அவன் பாணியைதான் அவனிடமே அவர்கள் கையாண்டிருந்தனர்.
அவர்கள் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம் இப்போது அவனுக்கும் தெளிவாக புரிய, அவனாலும் அதற்குமேல் கோவத்தை இழுத்து பிடித்து கொண்டிருக்க முடியவில்லை.
“ம்மா…” என்று சிணுங்கியபடியே இருவரின் மத்தியில் வந்து அமர்ந்தவனிடம்,
“உனக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா டொமேட்டோ சார்ஸ்-ஆ..” என்று மீனாட்சி கேட்ட தோணியில் அவனுமே இப்போது வெண்பற்கள் காட்டி சிரித்துவிட்டான்.
பிரதீப் இங்கு வந்தது முதல் சீரியஸாக இருந்த இடம் இப்போது சிரிப்பலைகளால் நிறைந்திருந்தது.
கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கு பின் மனதிலிருந்து சிரிக்கும் மகனை பார்த்து பெற்றவர்களின் மனம் பூரித்துதான் போனது.
அவன் சிரிப்பதையே சிலகணங்கள் பார்த்திருந்தவர் அவன் தலையை வாஞ்சையாக வருடிவிட்டதோடு, “இப்டியே இருடா கண்ணா… உடைஞ்சி போய் நீ உட்கார்ந்து இருக்கறத பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குடா..” என்று சொல்லும் போதே அவர் கண்கள் மெல்ல கலங்கவும் செய்ய, “ம்மா..” என்றவாறே அவரை கட்டியணைத்துகொண்டான் மீராநந்தன்.
அவன் முதுகை வாஞ்சையாக தட்டிகொடுத்த சோமசுந்தரம், “நல்ல அம்மா.. நல்ல பையன்.. இல்ல” என்று பிரதீப்பை பார்த்து கேட்டபோது, பிரதீப்பின் இதழ்களிலும் இப்போது மென் புன்னகை எட்டி பார்க்கவே செய்தது.




