Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)

அத்தியாயம் - 28

September 01, 2026
சந்தோஷ் குணா
5.0(1 reviews)
11 min read
அத்தியாயம் - 28
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவிட்டால் தான் என்ன என்று கூட அவனுக்கு தோன்றியது.

 

ஆனால் அவள் உடைந்துவிடுவாளே.. அதற்காகத்தான் அவன் இப்போது வரை அமைதி காப்பது கூட.

 

“வரும் போது யூஸ் பண்ணிக்கோ மீரா” என்றவன் அடுத்து அந்த போனை மறைத்து வைப்பதற்கான இடத்தையும் அவள் அறையில் தேடினான்.

 

குழலூதும் கிருஷ்ணன் சிலை முன் இரண்டு பகவத்கீதை புத்தகம் இருப்பதை கவனித்தவன்,  அதில் வாசிக்காமல் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை கையில் எடுத்தான்.

 

அதை ஏன் எடுக்கிறான் என்பது போல் அவள் அவனையே பார்த்திருக்க,

 

“இந்த வீட்ல உன்னதவிர வேற யாராவது பகவத்கீதை படிப்பாங்களா மீரா..?
என்றான் அவளைப் பார்த்து.

 

அவனின் கேள்விக்கு இல்லை என்பது போல் யோசனையோடே அவள் தலையை அசைக்க,

 

அடுத்த கணமே அந்த போனை அதில் மறைத்துவைப்பதற்கு ஏற்றார் போல், அதிலிருந்த பக்கங்களை வெட்டி எடுத்தவன், போனை அதில் மறைத்து வைத்து அங்கிருந்த புக் ஸ்டேண்டில் இருந்த புத்தங்களுக்கு இடையில் வைத்தவன்,

 

“இப்போ பிரச்சனையில்லையே..?” என்று கேட்டவனை இவனால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்பது போல் மலைத்துபோய்தான் பார்த்தாள் பிரதிக்ஷா.

 

“நான் போன் பண்ணும் போதெல்லா போன்-அ எடுக்கணும்.” என்று கட்டளைப்போல் வேறு சொல்ல,

 

“எடுக்கலனா.. பை-அ புடிச்சி பால்கனிக்கு வந்துடுவன அதானே..” என்றாள் அவனைக் கணித்தவன் போல்.

 

“ச்சீசீ… பால்கனிக்குலாம் வரமாட்டேன்.. எல்லாரும் பார்க்கறமாதிரி மெயின் டோர ஓப்பன் பண்ணி உள்ள வந்துடுவேன்.” என்றவன் சிரித்துக்கொண்டே சொல்ல,

 

“அடப்பாவி..” என்று அதிர்ச்சியாய் வாயில் கைவைத்தவள், “நீ செய்ய கூடிய ஆளுதான். ஆமா.. இந்த பயம் பயம்-னு ஒன்னு சொல்லுவாங்களே.. அதுலாம் உனக்கு இல்லவே இல்லையா..?” என்றவள் கேட்டபோது.

 

“அது எந்த கடையில கிடைக்கும்.” என்றவன் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்ட தோணியில் அவள் சிரித்துவிட, அவனும் அவள் சிரிப்பில் இணைந்துகொண்டான்.

 

சிரித்து முடித்தவள் காலையில் நடந்த நிக்ழவை நினைத்து “தேங்கஸ்” என்று அவனிடம் சொன்னபோது, அவனோ “ஏன்..?” என்றான்.

 

“ம்.. ஏன்னா..” என்று இழுத்தவள், “சொல்லணும்னு தோணுச்சி.” என்று சொல்லிவிட்டு மெலிதாய் சிரிக்க,

 

“தேங்கஸ் மாதிரி.. இந்த லவ் யூ-லாம் சொல்லணும்னு தோணாதா மீரா..?” என்றவன் கேட்ட கேள்வியால் மீண்டும் அங்கே சிரிப்பலைதான்.

 

வெகுநாட்களுக்கு பின் மனதார சிரித்ததால் பிரதிக்ஷாவிற்கும் மனது லேசானது போல் இருந்தது.

 

அதன்பின் அவன் பேச அவள் பேச என்று அவர்கள் பேச்சி நீண்டுகொண்டே போனது.

 

“நிஜமாலுமே உனக்கு சத்யன் அத்தான்-அ தெரியுமா..?” என்றாள் உறங்குவதற்கு முன் மீராநந்தன் மற்றும் சத்யன் நட்பு குறித்து ரோஷினி தன்னிடம் சொன்ன தகவலை மனதில் வைத்து.

 

அவள் கேள்விக்கு மெலிதாக சிரித்தவாறே, “அதுல மீரா-க்கு என்ன சந்தேகம்..?” என்றவன், அவளின் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு

 

தினேஷின் பிறந்தநாள் அன்று தினேஷின் வற்புறுத்தலுக்காக அவன் நட்புக்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டினான்.

 

அந்த புகைப்படத்தில்  சத்யனும் மீராநந்தன் அருகருகே நின்றிருக்க, இந்த விஷயத்தில் அவன் பொய் சொல்லவில்லை என்று அவளுக்கு புரிந்தது.

 

போனை அவளிடம் கொடுத்தவள், “அத்தான் நிஜமாலுமே கல்யாணம் ஆனத பத்தி யார்கிட்டயுமே சொன்னது இல்லையா..?” என்று கேட்டவளைப் பார்த்து அவன் இல்லை என்பது போல் தலையை அசைக்க, மேற்கொண்டு அவள் எதுவும் கேட்கவில்லை.

 

ஆனால் அவன் தான், “எனக்கென்னவோ நடந்த கல்யாணத்துல உங்களுக்கு எப்படி விருப்பம் இல்லையோ, அதே போல சத்யனுக்கும் விருப்பமில்லையோன்னுதான் தோணுது. மே பீ அதனால கூட எங்கிட்ட சொல்லாம மறச்சியிருக்கலாம்” என்றவன் சொன்னபோதும் அவளிடம் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

 

அவள் மௌனமாக இருந்தாலும் மீராநந்தனின் பார்வை அவள் மீதேதான் இருந்தது.

 

சத்யனுக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லையென்பதை அவள் எப்படி எடுத்துக்கொள்கிறாள் என்பதை அறியும் பொருட்டு.

 

ஆனால் எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் அவள் அமைதியாய் இருக்க,

 

“மீரா..” என்று அவளை அவன் அழைக்கவும், எப்போதும் நான்கு மணிக்கு அடிக்கும் அலாரம் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

 

அலாரம் சத்தம் கேட்டு திடுக்குற்றவள், “போச்சி.. நல்லா மாட்டுனேன்... எல்லாரும் எழுந்திரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. உன்ன இங்க பார்த்தா அவ்வளோதான்.” என்று சொல்லும்போதே அவள் குரலில் பயமும் பதற்றமும் அப்பட்டமாய் தெரிய,

 

“ரிலாக்ஸ் மீரா..” என்றான் அவளை அவன் சமாதானப்படுத்தும் விதமாக.

 

“என்ன ரிலாக்ஸ்..? முதல்ல இங்க இருந்து கிளம்பு.” என்று அவளை அவன் அவசரப்படுத்த,

 

அவனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான்.

 

பால்கனியில் இருந்த கம்பியை பற்றிகொண்டு இறங்க முயற்ச்சித்தவன், பின் என்ன நினைத்தானோ

 

“மீரா..” என்று அவளை அழைக்க,

 

“இன்னும் என்ன..?” என்றாள்  கோவத்தில் அவள்.

 

“ஒன்னு சொல்ல மறந்துட்டேண் டி..” என்றவனை , மறுபடியும் “டீ-யா..?” என்பது போல் அவள் அவனை முறைத்துப் பார்க்க, அவனோ அவள் முறைப்பையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.

 

“லவ் யூ டீ.” என்றவன், சற்றும் அவள் எதிர்பார்க்கா வண்ணம் அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிடவும் செய்ய, அவனின் செயலால் அவள் தான் அதிர்ச்சியின் உச்சதிற்கே சென்றுவிட்டாள்.

 

அவன் கிள்ளிய கண்ணத்தில் கைவைத்தப்படி அதிர்ச்சியில் உறைந்து போய் அவள் நின்றிருக்க, மீராநந்தனோ பைப் லைனை பிடித்து கீழிறிங்கி சிட்டாக அங்கிருந்து காணாமல் போயிருந்தான்.

 

அவன் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே பிரதிக்ஷாவிற்கு அரைமணிநேரம் ஆகிவிட்டன.

 

பூஜைக்கு செல்வதற்கான ரோஷினியையும் எழுப்பி பார்த்தாள். ஆனால் அவளிடம் இப்போதும் குறட்டை சத்தம் தான் பதிலாக வந்தது.

 

சோப்பு கூட போடாமல் பெயருக்கென்று மேலே தண்ணீர் ஊற்றிகொண்டவள், வேக எட்டுகளுடன் கீழே இருக்கும் பூஜை அறைக்கு செல்ல, அப்போதுதான் அவள் குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொருவராக பூஜை அறைக்கு வந்து கொண்டிருந்தனர்.

 

யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு தனக்கான இடத்தில் அமர்ந்து கையோடு எடுத்துவந்திருந்த பகவத்கீதையை அவள் படிக்க, கௌசல்யா பூஜை அறையிலிருந்த விளக்குகளை ஒவ்வொன்றாக ஏற்ற ஆரம்பித்தார்.

 

“ரோஷினி வரலையா..?” என்று கேட்ட ஹரிஹரனிடம் அவள் உறங்குவதாக பிரதிக்ஷா சொல்ல, அவனும் நேரில் சென்று அவளை எழுப்பி பார்த்தான்.

 

ஏன் அவள் முகத்தில் தண்ணீர் கூட ஊற்றிப் பார்த்தான். ஆனால் அவள்தான் எதற்கும் அசைந்து கொடுக்காமல் உறங்கி கொண்டே இருந்தாள்.

 

“என்னாச்சி இவளுக்கு.. எழுப்ப எழுப்ப எழுந்திரிக்காம பன்னி கணக்கா தூங்கிட்டே இருக்கா..” என்ற யோசனையோடே  அறையிலிருந்து வெளியேறியவனின் பார்வை ஒரு கணம் மீராநந்தன் இருக்கும் அறை மீது படிந்து மீளவே செய்தது.

 

பூஜையை முடித்துவிட்டு அறைக்கு வந்தபின் தான் பிரதிக்ஷாவால் நிம்மதி பெருமூச்சி விட முடிந்தது.

 

விட்டத்தைப் பார்த்தப்படி படுக்கையில் படுத்திருந்தவளுக்கு நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் படமாக ஓட, “இருந்தாலும் உனக்கு இவ்வளவு தைரியம் இருக்க கூடாது.” என்றவளின் இதழ்களில் மென்புன்னகை அரும்பவே செய்தது அவனை நினைத்து.

 

ரோஷினி எழுந்திரிக்காததால் இன்று குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பி விடும் மொத்த பொறுப்பும் ஹரிஹரனின் தலையில்தான் விழுந்திருந்தது.

 

இரண்டு குழந்தைகளையும் குளிக்கவைத்து, உண்ணவைத்து, புத்தகங்களை எடுத்து வைத்து அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்குள் ஹரிஹரனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.

 

“எல்லாம் இவளால தான்.” என்று ரோஷினியை உள்ளுக்குள் காய்ந்தவாறே வரவேற்பறைக்கு வந்தவன் அப்போதுதான் டைனிங் அறையில் தனியாக உண்டுகொண்டிருந்த மீராநந்தனை கவனித்தான்.

 

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே நேற்று அவன் போட்ட சபதம் ஹரிஹரனின் நினைவிற்கு வர,

 

“என்னாச்சி..? எதோ பில்டப்-லாம் பயங்கரமா கொடுத்த.. நைட் அவ ரூம்க்கே போய் அவகிட்ட பேசப்போறன்னு… பருப்பு வேகலையா..?” என்று நக்கலாய் கேட்டவனை பார்த்தவாறே, வாயில் உணவை வைத்த மீராநந்தன்

 

தன் பாக்கெட்டிலிருந்த கைப்பேசியை எடுத்து அவனிடம் நீட்ட,

 

இதுல என்ன இருக்கு என்பது போல்..? அதை வாங்கி பார்த்த ஹரிஹரனின் கருவிழிகள் அதிர்ச்சியில் ஒரு சுற்று விரிந்துதான் போனது உறங்கிகொண்டிருக்கும் பிரதிக்ஷாவோடு அவன் எடுத்திருக்கும் செல்பியை பார்த்து.

 

உறங்கொண்டிருந்த அவளோடு செல்பி எடுப்பதற்காகத்தானே மீராநந்தன் அவள் அருகில் சென்றது.

 

அந்த செல்பி எடுத்து முடிக்கும் போதுதானே அவனின் சூடான மூச்சிகாற்றின் தீண்டலால் அவள் கண்விழித்தது கூட.

 

அதிர்ச்சியில் அந்த புகைப்படத்தை பார்த்தவாறே ஹரிஹரன் இருக்க,

 

“என்ன ஹரி ப்ரோ பருப்பு குழஞ்சிடுச்சி போல..” என்று நக்கல் சிரிப்பு சிரித்தவன், வெடுக்கென்று அவன் கையிலிருந்த தன் போனையும் பிடுங்கி பாக்கெட்டில் வைத்திருந்தான்.

 

“ஆக்சுவலி என் டார்லிங்கூட பேசறதுக்காகத்தான் அங்க போனேன். ஆனா பாருங்க.. என் செல்லம் தூங்குற அழக பார்த்ததுக்கப்புறம் அவள எழுப்பவே மனசுவரல. அதான் நாலு மணிவரைக்கும் அங்கயே இருந்து அவ தூங்கற அழக பார்த்துட்டு கிளம்பிட்டேன்.” என்றவனின் வார்த்தைகள் ஹரிஹரனை மேளும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்தது.

 

அவள் அறைக்குள் அவன் சென்றதையே ஹரிஹரனால் இப்போது வரையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் நான்கு மணி வரை அங்கிருந்ததாக சொல்ல ஹரிஹரன் அதிர்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றுவிட்டான்.

 

“என்ன ஹரி ப்ரோ சிஸ்டர் இன்னும் எழுந்திரிக்கலப் போல.” என்று கேட்டுவிட்டு தன் ரிஸ்ட் வாட்ச்சை பார்த்தவன்,

 

“மணி ஒன்பதாகபோகுது. இனிமே எழுந்திரிச்சிடுவாங்க. ஃபஸ்ட் டைம்-ஆ போதை சாக்லேட் சாப்ட்டு இருக்காங்கள்ல அதான். நத்திங் டூ வொரி.” என்று கேஸ்வலாக மீராநந்தன் சொன்னபோதுதான் ரோஷினியின் தூக்கத்திற்கான காரணம் என்னவென்று ஹரிஹரனுக்கு புரிந்தது.

 

“டேய் எவ்வளவு தைரியம் இருந்தா.. என் பொண்டாட்டிக்கு போதை சாக்லேட்  கொடுத்திருப்ப..?” என்று கோவத்தில் ஹரிஹரன் பற்களைக்கடிக்க,

 

“உனக்கும் எவ்வளோ தைரியம் இருந்திருந்தா சத்யனோட குழந்தைதான்னு தெரிஞ்சியிருந்தும் அந்த குழந்தை-அ அபாஷன் பண்ண சொல்லியிருப்ப..?” என்று கேட்டு மீராநந்தனும் வசமாக ஹரிஹரனைப் பிடிக்க, ஹரிஹரன் தான் பேச்சற்றுப்போனான்.

 

“என்ன பேச்ச காணோம். உனக்கு வந்தா மட்டும் இரத்தம் நான்சிக்கு வந்தா டொமேட்டோ சார்ஸ்-ஆ..” என்று கேள்வியெழுப்பியவன்

 

“இப்பகூட ஒன்னும் பிரச்சனை இல்ல ஹரி. சத்யன் நான்சி பத்துன உண்மை-அ நீயே உன் வாயால சொல்லிடு. இல்ல என் ஸ்டைல்-ல நான் ஹேண்டில் பண்ற விதமே வேற மாதிரி இருக்கும். அதுல அதிகமா சஃப்ர் ஆக போறது ரோஷினி மாதிரி இந்த குடும்பத்துல  யாரா வேணும்னாலும் இருக்கலாம்.” என்று அழுத்தம்திருத்தமாக சொல்லிவிட்டு மீராநந்தன் அங்கிருந்து கிளம்ப, செல்லும் அவனையே பார்த்துகொண்டிருந்த ஹரிஹரனுக்கோ அவனை எப்படி கையாள்வதென்றே தெரியவில்லை.

 

நேற்று போல் சரிக்கு சமமாக பேசி அவனை உசுப்பேற்றி விட கூடாது என்று தான் முடிந்தஅளவு ஹரிஹரன் இப்போது அமைதி காத்தது கூட.

 

பிஸ்னஸ் உலகில் எத்தனையோ ஜாம்பவான்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தவனுக்கு, உண்மையில் மீராநந்தனை எப்படி கையாள்வதென்றே தெரியவில்லை.

 

அதற்கு காரணம் அவனிடம் மாட்டிக்கொண்டிருக்கும் சத்யன் நான்சி குறித்த போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் தான். அந்த ஆதாரங்கள் அவன் கையில் இருப்பதால் தான் ஹரிஹரன் அவனிடம் அடக்கிவாசித்து கொண்டிருப்பது கூட.

 

தலையை பிடித்தப்படி எழுந்து அமர்ந்த ரோஷினிக்கு தூக்க கலக்கம் குறைந்தபாடில்லை.

 

பின் பிரதிக்ஷாதான் கைதாங்கலாய் அவளை அவர்கள் அறைக்கு அழைத்து சென்று விட்டாள்.

 

போதையில் இருந்தவளுக்கு ஹரிஹரன் தான் மோர், லெமன் என்று கொடுத்து அவளை சகஜநிலைக்கு கொண்டு வந்தான்.

 

அவன் செய்த செயலுக்கு அவளிடமும் அவனால் கோவப்படமுடியவில்லை.

 

மீராநந்தன் பற்றி பிரதிக்ஷாவிடம் சொல்லிவிடலாமா..? என்று கூட ஹரிஹரன் நினைத்தான்.

 

ஆனால் அவனைப் பற்றி அவளிடம் சொல்லபோய், அதுவே அவள் மனதில் ஒரு புள்ளியாக விழுந்துவிட்டால் என்ன செய்வது.

 

அதனாலே தூரத்திலிருந்தபடி பிரதிக்ஷாவை மீராநந்தன் நெருங்காதவாறு பார்த்துகொள்வதென்று முடிவு செய்தான் ஹரிஹரன்.

 

அத்தோடு எந்த ஆதாரங்களை வைத்துகொண்டு அவன் இந்த ஆட்டம் ஆடுகிறானோ அந்த ஆதாரங்களை எப்படியாவது அவனிடமிருந்து எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் அதற்கான சந்தர்ப்பத்திற்க்காக காத்திருப்பதென்றும் முடிவு செய்தான்.

 

அதற்கடுத்து வந்த நாட்களில் பிரதிக்ஷா அவள் அறையில் தனியாகத்தான் உறங்கினாள்.

 

ஹரிஹரனும் ரோஷினியை அவள் அறைக்கு அனுப்பவில்லை.

 

கௌசல்யா துணைக்கு தான் வந்து படுத்துகொள்வதாக சொன்னபோது,

 

“ம்மா.. அப்பா ஹெல்த் இருக்கற கண்டிஷன்-ல நீங்க அப்பா கூட இருக்கறதுதான் அப்பாக்கு சேஃப்.” என்று சொல்லி அவரையும் தடுத்து நிறுத்தினான் ஹரிஹரன்.

 

ரோஷினி-க்கு போதை மிட்டாய் கொடுத்தது போல் வேறு யாருக்காவது எதையாவது அவன் கொடுத்துவிட்டால் அதற்கு பயந்தே ஹரிஹரன் யாரையும் பிரதிக்ஷாவோடு தங்க அனுமதிக்கவில்லை.

 

வெகுநாட்களுக்கு பின் யார் தொந்தரவும் இல்லாமல் சுதந்திரமாக  அவள் இரவுகள் இருந்தன.

 

அவன் சொல்லிச்சென்றது போல் அவ்வப்போது அவளுக்கு போன் செய்ய அவளும் அவன் அழைப்பை ஏற்று பேசினாள்.

 

காதல்.. கீதல்… என்று அவளை தொந்தரவு செய்யாமல் நட்பு ரீதியாக அவளிடம் பேசினான், அவளையும் பேச வைத்தான், அவளை சிரிக்க வைத்தான், கேலி செய்தான், அவளையும் கேலி செய்ய வைத்தான்.

 

அவனின் குட்மார்னிங் மெசேஜில் ஆரம்பித்து குட்நைட் மேஜில் முடிந்தன அவளின் ஒவ்வொரு நாளும்.

 

பார்க்கும்போதெல்லாம் விழிகளால் அவளிடம் பேசியவன், பார்க்காத நேரங்களில் மேசேஜில் அவளிடம் பேசினான்.

 

முழுநேரமும் அவளோடு அவன் தொடர்பிலேயே இருக்க, அவளுக்கும் அது பிடித்திருந்தது.

 

அதேசமயம் யாருக்கும் எந்தவிதத்துலயும் தன் மீது சந்தேகம் வராத அளவிற்கும் பார்த்துக்கொண்டாள்.

 

இத்தனை வருடங்கள் ஒரு சிறைச்சாலை போல் இருந்த வீடு இன்று அவளுக்கு சுதந்திர வானமாக விரிந்துபோயிருந்தது அவனால்.

 

நான்சியும் அவளிடம் நெருங்கி பழகினாள். பிரதிக்ஷாவும் தயக்கமின்றி அவளிடம் பேசினாள்.

 

அன்று இரவு உணவு முடித்துவிட்டு எல்லோரிடமும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்த சதய்மூர்த்தி திடீரென மூச்சி பேச்சின்றி சரிய, மொத்த குடும்பமுமே பதறித்தான் போனது.

 

பின் நான்சிதான் தக்க சமயத்தில் அவருக்கு கொடுக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை கொடுத்து பெரிதாக அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் தடுத்ததோடு, ஒரு மருத்துவர் என்ற ரீதியில் மருத்துவமனையிலும் அவரை அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள்.

 

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பின்னும் ஒரு மருமகள் என்ற ரீதியில் அவரை அவள் கவனித்துக்கொள்ள, இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த ஹரிஹரனால்தான் எதையும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

 

“ம்மா.. அவங்க நம்ம பிஸ்னஸ் பார்ட்னர்தான்.. ஃபேம்லி மெம்பர்ஸ் இல்ல. எதோ அந்த டைம் அப்பா-வ காப்பதுனதுக்காக எல்லா நேரமும் அப்பா-வ கூட இருந்து கவனிச்சிகணும்னு அவசியமில்ல. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல ம்மா. எதுக்காக இப்போ அந்த ஹோம் நர்ஸ்-அ வேலை-அ விட்டு நிறுத்துனீங்க..?” என்று இது குறித்து கௌசல்யாவிடம் அவன் முறையிட்ட போது,

 

“நீ ஏண்டா இதுக்கு இவ்வளோ கோவப்படுற.?” என்று கேட்டு அவன் கன்னத்தை மிருதுவாக தட்டிக்கொடுத்த கௌசல்யாவால் அவனைப்போல் நான்சியையும், மீராநந்தனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

 

சத்யமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து ஏற்பட்ட பிஸ்னஸ் லாஸால் அவர்கள் குடும்பமே நிம்மதியை இழந்து போயிருந்தது.

 

இதில் இவர்கள் இங்கு வந்த பின்தான் குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் ஓரளவு சிரிப்பு எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.

 

அதிலும் ஷியாம் வந்த ஒரே நாளில் கௌசல்யாவின் மனதில் நிறைந்துவிட்டான்.

 

என்னதான் மருத்துவம் படித்திருந்தாலும் அனைவரிடமும் தன்மையாக பழகும் நான்சியின் குணமும் வீட்டினர் அனைவரையும் கவரவே செய்தது.

 

இதில் சத்யன் வயதை ஒத்த மீராநந்தன் எங்கிருந்தாலும் சரி.. யாரோடு பேசினாலும் சரி.. அந்த இடமே கலகலப்பாக மாறி போனது.

 

இந்த இளம் வயதிலே பிஸ்னஸ் குறித்து அவன் எடுக்கும் முடிவுகளும், யாருக்கும் பயப்படாமல் நடுநிலையாக இருந்து தன் கருத்தை அவன் சொல்லும் விதத்தாலும் சத்யமூர்த்திக்கு அவன் பிரியமானவனாகவே இருந்தான்.

 

காலை மாலை வாக்கிங் கூட இருவரும் சேர்ந்துதான் சென்றார்கள்.

 

அந்த அளவிற்கு இருவரும் நெருங்கி பழக, அவர்களின் நெருக்கம் கூட ஹரிஹரனை அதிகம் பாதித்தது.

 

இதில் ஜெயசீலன் வேறு மீராநந்தன் இங்கு வந்தது முதல் பிஸ்னஸ் குறித்த முக்கிய முடிவுகளை பெயருக்கென்று கூட ஹரிஹரனிடம் கலந்தோசிக்காமல் மீராநந்தனிடம் மட்டுமே பேசி  முடிவெடுத்தான்.

 

வந்த இரண்டு வாரத்திலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் மீராநந்தன் இழுத்திருக்க,

 

சொந்த குடும்பத்திலேயே அனாதையாகிவிட்ட உணர்வுதான் ஹரிஹரனுக்கு.

 

அதிலும் தக்கசமயத்தில் சத்யமூர்த்தியின் உயிரை காப்பாற்றியதிலிருந்து நான்சியை அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்.

 

நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஹரிஹரனுக்கு உள்ளுக்குள் அப்படியொரு கோவம்.

 

அந்த கோவத்தில் தான்  அவன் இன்று கௌசல்யாவிடம் கேட்டது கூட.

 

“வேணும்னுலா நிறுத்தல டா கண்ணா.. அன்னைக்கு உங்க அப்பா அவ்வளோ நேரம் இருமிட்டு இருக்காரு. அந்த நர்ஸ் பொண்ணு காதுல இயர்பட்ஸ்-அ போட்டு ரீல்ஸ் பார்த்துட்டு இருக்கா. அப்புறம் அந்த பக்கமா போன நான்சிதான் சத்தம் கேட்டு அவருக்கு தண்ணி எடுத்து கொடுத்தா. அந்த பொண்ணையும் பயங்கரமா திட்டிட்டா.” என்றவர் சொன்னபோது,

 

“ஓ.. அப்போ அவ சொன்னத கேட்டுதான் அந்த பொண்ண வேலையிலிருந்து தூக்குனீங்களா..?” என்றான் அதற்கும் அவன்.

 

“டேய் நானே இரண்டு மூணு தடவ அந்த பொண்ண பார்த்து வார்ன் பண்ணியிருக்கேன் டா. உங்க அப்பாவுக்கும் ஆரம்பத்துலேந்தே ஹோம் நர்ஸ் வச்சதுல சுத்தமா விருப்பம் இல்ல. அதான் வேலை-அ விட்டு நிறுத்திட்டேன்.” என்றவர்,

 

“நான்சி எவ்வளோ கேர்ரோட அப்பா-வ பார்த்துக்கறா தெரியுமா..? டைம்-க்கு டேப்ளட் போடுங்க ப்பா, ஜீஸ் குடிங்க ப்பா, எழுந்து கொஞ்ச நேரம் வாக் பண்ணுங்க ப்பா, யோகா பண்ணுங்கப்பா-ன்னு ஒரு குழந்தை-அ பார்த்துக்கறமாதிரி பாத்துக்கறா..” என்று அவரும் அவனிடம் நான்சி புகழ் பாட, “நீங்களுமா..?” என்பது போல் அவரை ஒரு பார்வை பார்த்தவன், வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியும் இருந்தான்.

 

ஒரு நல்ல நாள் பார்த்து பூமி பூஜை செய்து கன்ஸ்டிரக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட, மீராநந்தனும் ஜெயசீலனும் அதிக நேரம் சைட்டில்தான் இருந்தனர்.

 

அவன் அதிகம் வீட்டில் இல்லாததே ஹரிஹரனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

 

அன்றும் சைட்டிற்கு செல்வதாக கிளம்பி உண்பதற்காக மீராநந்தன் கீழே வர, பிரதிக்ஷாவும் உண்பதற்காக டைனிங் டேபுள் முன் அமர்ந்திருந்தாள்.

 

குடும்பத்தார் ஒவ்வொருவராக உண்பதற்கு வந்து அமர்ந்தவண்ணம் இருக்க, பிரதிக்ஷாவிற்கு அருகில் இருந்த இருக்கையோ காலியாக இருந்தது.

 

அதை கவனித்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்து உண்ணும் ஆசையில், வேக எட்டுகளும் அங்கு சென்று, அவளுக்கு பக்கத்திலிருந்த இருக்கையை அமர்வதற்கு வாகாக இழுக்க போன நேரம், எங்கிருந்து வந்தானோ ஹரிஹரன்,

 

“நீங்க அங்க உட்காருங்க ப்ரோ” என்று சொல்லியவாறே அந்த இருக்கையில் அமரவும் செய்திருக்க, மீராநந்தன் முகமோ மாறிவிட்டது.

 

அமர்ந்ததோடு நில்லாமல் ‘எப்புடி’ என்பது போல் இல்லாத காலரை தூக்கிவிட்டு ஹரிஹரன் கேலியாய் அவனை பார்த்து சிரிக்கவும் செய்ய, சிலகணங்கள் அவனையே புருவம் சுருக்கி பார்த்த மீராநந்தன், அவன் காட்டிய இடத்தில் அமராமல் பிரதிக்ஷாவிற்கு நேராக மறுபுறம் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

அமர்ந்து கொண்டவனின் பார்வை பிரதிக்ஷா மீதே இருக்க, ஹரிஹரனுக்கோ தேகமே பற்றி எரிவது போன்ற உணர்வுதான்.

 

இருந்தும் பிரதிக்ஷா அருகில் அவனை அமரவிடாமல் தடுத்து முதன் முறையாக அவனை வெற்றி பெற்றதே இப்போதைக்கு ஹரிஹரனுக்கு  போதுமானதாக இருந்தது.

 

உண்டு முடித்தவள் எப்போதும் போல் இறுதியாக குளோப்ஜாமூன் உண்பதற்காக குளோப்ஜாமூன் பவுலில் இருந்த கரண்டியை எடுத்தாள்.

 

 எடுத்தவளின் கரத்தை மீராநந்தன் பற்றியிருக்க, அவனின் இந்த செயல் அங்கு உண்டுகொண்டிருந்த அனைவருக்குமே அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியிருந்தது.

 

அதிர்ச்சியில் அனைவரும் அவனையே பார்த்திருக்க, ஷியாமிற்கு உணவு  ஊட்டிக்கொண்டிருந்த நான்சிக்கோ பயத்தில் இதயமே நின்றுவிட்ட உணர்வுதான்.

 

அவனின் செயலால் அதிகம் அரண்டுபோன பிரதிக்ஷா யாரும் அறியாமல் விழிகளால் அவனிடம் கெஞ்சியபோது கூட, மீராநந்தன் அவள் கரத்தை விடவே இல்லை.

 

அவள் நிலை அப்படியென்றால் ஹரிஹரனுக்கோ அவள் கரத்தை பற்றியிருக்கும் அவன் கரத்தை வெட்டிவிடும் அளவிற்கு கோவம் தான்.

11 minreading time
1comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

28 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →
அத்தியாயம் - 26
Blog
நாவல்…வேங்க…
Aug 11, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 26

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்ன...

Read more →
அத்தியாயம் - 25
Blog
நாவல்…வேங்க…
Aug 06, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 25

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

என்ன சொல்லப்போகிறானோ..? என்ற பயம் பிரதிக்ஷாவிற்கு என்றால், ஹரிஹரனுக்கோ அப்படி என்னத்தான் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels