Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
0

அத்தியாயம் - 26

January 30, 2026
சந்தோஷ் குணா
0
9 min read
அத்தியாயம் - 26
Hero - Music Director, Heroine - Music student

ஏதோ சூழ்நிலை காரணமாகதான் தன்னிடம் கூட சொல்லாமல் அவன் திருமணம் செய்துகொண்டான் என்று சற்று முன் சந்தோஷப்பட்டவரின் மனது அவன் கூறியதை கேட்டு சுனங்கிதான் போனது.

இருந்தும் நம்ப மாட்டாமல், “டேய் பொய்சொல்லாத.. என் ரிஷப் கண்டிப்பா லவ்-லா பண்ணியிருக்கவே மாட்டான். நான் அவன் பர்த்டேக்கு விஷ் பண்ணப்போ கூட மேரேஜ்-லலாம் சுத்தமா இன்ட்ரஸ்டே இல்லன்னு சொன்னவன் அவன்” என்றார் அவன் அப்படியில்லை என்பது போல் ஆணித்தனமாக.

“ஆ… அதுக்கப்புறமாதான் அந்த பொண்ண லவ் பண்ணான்.” என்றான் கவினும் விடாமல்.

“அவன் லவ் பண்ணானா..? இல்ல லவ் பண்ண வச்சாளா..?” என்றவரின் கேள்விக்கு,

“தோடா.. இருந்தாலும் மதர் சுப்பீரியர்க்கு இந்த அளவுக்கு பையன் மேல நம்பிக்கை இருக்க கூடாது.” என்று பதிலுக்கு அவரை கலாய்த்தவன்,

“எல்லாத்துக்கும் புள்ளையார் சுழி போட்டதே உங்க பையன் தான்” என்று முடிக்க, சுமதிக்கோ முகமே மாறிவிட்டது.

சொல்லப்போனால் அவன் திருமணம் செய்து கொண்டான் என்பதை விடவே இதை ஏன் தன்னிடம் அவன் மறைத்தான் என்பதைதான் சுமதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காரணம் அவரும் ஆறுமாதத்திற்குள் அவனுக்கு திருமணம் செய்யதானே ஆசைப்பட்டார். தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அவரே முன்னின்று இந்த திருமணத்தை வெகு விமர்சையாக நடந்தியிருப்பாரே.

இப்படி யாரும் இல்லாத அனாதைகள் போல் காதும் காதும் வைத்தாற்போல் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதைதான் அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

இத்தனைகாலம் பெற்று வளர்த்தவர்களுக்கு தன் மகனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்காதா..? அந்த கவலை இப்போது சுமதி-க்கு மட்டுமல்ல சுதாகரனுக்குமே.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் சுமதி மௌனமாகிவிட, அவரின் சோர்ந்து போயிருந்த முகத்தை வைத்தே அவர் மனைதில் இருப்பதை படித்த சுதாகரன்தான், அவர் அருகில் வந்தமர்ந்து அவர் கரத்தை ஆறுதலாக பற்றி,

“எப்படி பார்த்தாலும் நீ ஆசைப்பட்ட மாதிரி ஆறுமாசத்துல அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சிதன..” என்றார் அவரை தேற்றும் விதமாக.

“அது சரிதாங்க…” என்று ஒத்துகொண்டவர் “இருந்தாலும்…” என்று இழுக்க,

“என்ன பொண்ணுவீடு நம்ம தகுதிக்கு இருப்பாங்களா மாட்டாங்களான்னு யோசிக்கிறியா..?” என்றவரை விழிகள் விரித்து பார்த்தவர்,

“என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..? தகுதி என்னங்க தகுதி.. இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். கல்யாணமே வேண்டாம்னு சொன்னவனுக்கு ஒரு பொண்ண புடிச்சியிருக்குனா கண்டிப்பா அந்த பொண்ணு மனசளவுல கோடீஸ்வரியாதாங்க இருப்பா..” என்று மருமகளை உயர்த்தி சொல்ல,

“பாருடா.. மதர் சூப்பீரியர் மருமகளுக்கு வக்காலத்து வாங்குறத..” என்று அவரை கலாய்த்தான் கவின்.

“ப்ச்.. சும்மா இருடா..” என்று அவன் தொடையில் ஒன்று வைத்தவர்.

“என்ன.. நமக்கு இருக்கறது ஒரே பையன். அவன் கல்யாணத்த பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா..?” என்று தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கணவரிடம் கேட்டவர், “ஏன் உங்களுக்கு அந்த ஆசை இல்லையா..?” என்று கணவரின் முகத்தை பார்த்து கேட்டபோது, இருக்கிறதுதான் என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தார் சுதாகரன்.

ஆனால் நடந்தது என்னவோ நடந்துவிட்டதே.. இனி போனதை பேசி என்ன ஆக போகிறது என்று நினைத்தவர்,

சில கணங்கள் மோவாயை தடவியபடி யோசித்தவருக்கு இது ஒன்றுதான் சரியென்று பட்டது.

“சரி உன் கவலை போக நாம கிராண்ட்டா ரிசப்ஷன் வச்சிடுவோம். சரி தானே”  என்றவர் கேட்டபோது சுமதியும் சரி என்பது போல் புன்னகை புரிந்தவாறே தலையை அசைத்தார்.

“அப்பாடா… ஒரு வழியா பிரச்சனை முடிச்சிது” என்று கவின் நிம்மதி பெருமூச்சி விட,

“முடிஞ்சாலும்.. என் கிட்ட சொல்லாம மறைச்ச உன்ன நான் மன்னிக்கவே மாட்டேன் டா” என்று மீண்டும் ஆரம்பித்தார் சுமதி.

“இதென்னடா இந்த கவினுக்கு வந்த சோதனை” என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டவன்,

“தெய்வமே… உங்ககிட்ட சொல்ல நான் எவ்வளவோ டிரை பண்ணேன். உங்க பையன் தான் என் போன்-அ கூட புடுங்கிவச்சிக்கிட்டான்” என்றான் என் மீது தவறே இல்லை என்பது போல்.

“வேற யார்கிட்டயுமே போன் இல்ல பாரு..” என்று சுமதியும் அவனை பிடிக்க,

“பாயிண்ட் நோட்டட்” என்று சரணடைந்தவனை பார்த்து சுதாகரனுக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

தன்னை பார்த்து நகைப்பவரை பார்த்து, “ஹெல்ப் பண்ணலாம்-ல” என்றவன் சொன்ன போது,

சரி சரி என்பதுபோல் அவனை பார்த்து தலையை அசைத்தவர், “பாவம்டி அவன்” என்றார் அவனுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக.

“யாரு இவனா..?” என்று கேட்டவர், “நம்ம ரிஷப்-பாவது கீழ விழுந்தாலும் மீசையிலதான் மண்ணு ஒட்டலன்னு சொல்லாவன். ஆனா இவன் கீழயே விழலன்னு சாத்திக்கிறவன்” என்று அவரிடமும் அவனை வத்தி வைக்க,

“ஹலோ மதர் சுப்பீரியர் அவ்வளோ ஆயாச்சா..?” என்று தலையை ஆட்டி கேட்டவன்,

“இவ்வளோ ஆனதுக்கப்புறம் நான் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்.. நான் கோவமா இங்கிருந்து கிளம்புறேன்” என்றவன் எழுந்து வாசல்புறம் நோக்கி செல்ல,

“டேய்.. எங்கடா போற..? உனக்காக பக்கத்து ரூம்-அ கிளீன் பண்ணியிருக்கேண்டா.. அவசரப்பட்டு வீட்ட விட்டுலா போய்டாத” என்று சொல்லியபடியே சுமதியும் அவன் பின்னால் செல்ல,

“இதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்-லே இருந்திருக்கலாம்” என்று முனுமுனுத்துகொண்டார் சுதாகரன்.

சுமதியின் அழைப்பால் திரும்பி அவரை பார்த்தவன், “ஹலோ… மதர் சுப்பீரியர்… நான் ஒன்னும் கோவத்துல வீட்ட விட்டுலா போகல.. லக்கேஜ் எடுக்கதான் போனேன். அவன் எங்க இருக்கானோ அங்கதான் இந்த கவினும் இருப்பான்” என்று சிரிப்பை விழுங்கியபடியே சொல்ல, அவன் கூறியதை கேட்டு மற்ற இருவருமே வாய்விட்டு சிரித்துவிட்டனர்.

“சரியான போக்கிரிடா நீ..” என்று சொல்லி அவள் தோளில் அடித்தவர்,

“ஏண்டா அவனுக்கு கிடைச்சமாதிரி உனக்கு ஒரு தாலியும் ஒரு பொண்ணும் கிடைக்கலையா..?” என்று கேட்டவர், “ஆமா… அந்த வீடீயோல இன்னொரு பொண்ணும்தன இருந்தா..?” என்ற போது,

“ஐய்யோ மதர் சுப்பீரியர்… அவங்க சிஸ்டரோட சிஸ்டர்.” என்றான் பதறிப்போய் கவின்.

“அதுக்கென்ன டா..? அவ தங்கச்சி உனக்கு முறைதானே” என்று சுமதியும் விடாமல் சொல்ல,

“அதுக்கென்னாவா..? அவ பிளஸ் டூ தான் படிக்கிறா..” என்றான் அவன்.

“ஓ… மைனர்-ஆ.. அதனாலதான் நீ தாலி கட்டல” என்றவர் சொன்ன தோணியில் கவினும், சுதாகரனும் சிரித்துவிட, சுமதியும் அவர்கள் சிரிப்பில் இணைந்துகொண்டார்.

இங்கு இவர்கள் நிலை இப்படியென்றால்.. அங்கே அவர்கள் இருவரின் நிலைமையுமே வேறு மாதிரியாக இருந்தது.

பால்கனியில் நின்றவாறு அவன் தீவிரமாக புகைத்துகொண்டிருக்க, அவளோ ஆடை கிழிந்திருந்த முதுகுபுறத்தை ஷாலால் மூடியபடி முட்டிகாலில் முகம்புதைத்து அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

அவளை அறைக்கு அழைத்து வந்தவன் ரெஸ்ட் எடுக்க சொன்னபோது அவளோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

கைகளை பிசைந்தப்படியே அவள் நின்றுகொண்டிருக்க பின் ரிஷப் தான் அவளுக்கு அவன் அறையை சுற்றி காண்பித்தான்.

அவள் வீட்டின் மொத்த அளவை விடவே அவன் அறை பால்கனி மற்றும் சகல வசதிகளுடன் பெரிதாகவும் ஆடம்பரத்தில் கொழுத்தும் போயிருந்தது.

அவன் அறைக்குள்ளே இன்னொரு படுக்கை அறையும் சகல வசதிகளுடன் இருந்தது.

அதில் முழுக்க முழுக்க அவன் இசை சம்மந்தபட்டவைகள் தான் இருந்தது.

இசைமீதான ஆர்வத்தில் பெரும்பாலும் அவன் இருக்கும் இடம் அங்கு தான். சிலசமயங்களில் அங்கேயே அவன் உறங்கியும் போய்விடுவான்.

அதனாலே சுமதி அவனுக்காக அதையும் படுக்கை அறையாகவே மாற்றி இருந்தார்.

இப்போது அவள் அழுது கரைந்து கொண்டிருப்பது கூட அந்த அறையில்தான்.

ஆடம்பரத்தில் அவன் அறை கொழுத்து போயிருக்க, அவள் விழிகளில் ஆச்சரியமோ பிரம்மிப்போ துளி கூட இல்லை.

காரணம் இந்த மாதிரியான சுக போகங்களுக்கெல்லாம் அவள் என்றுமே ஆசைப்பட்டது கிடையாது. அதில் அவளுக்கு பெரிதாக விருப்பங்களும் இருந்தது இல்லை.

மனதிற்கு நிம்மதி தரும் ஒரு இடம். அது குடிசையாக இருந்தாலும் அதுவே அவளுக்கு சொர்க்கம் தான்.

ஒவ்வொன்றையும் காண்பித்து அவன் அவளுக்கு விளக்கம் கொடுத்து கொண்டிருக்க, அவள் தான் அவன் சொல்லும் எதையும் காதில்  வாங்காமல் அவன் பின்னாலேயே சென்றாள்.

அனைத்தையும் சுற்றிகாட்டி முடித்தவன், “நம்ம ரூம் உனக்கு பிடிச்சியிருக்கா இதழ்..?” என்று கேட்டபோது அவள் தான் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி போனாள்.

தடுமாறி கொண்டிருப்பவளையே சில கணங்கள் பார்த்திருந்தவன்,

“புது இடம்-ன்ற தயக்கம்-லாம் உனக்கு வேண்டாம் இதழ். இங்க உனக்கு என்ன வேணும்னாலும் நீ என் கிட்ட தயங்காம கேட்கலாம்.” என்றான் மென் புன்னகை புரிந்தவாறே.

“என்ன கேட்டாலும் கிடைக்குமா…?” என்றாள் இப்போது அவனை ஆழ்ந்து பார்த்து அவள்.

தன்னை ஆழ்ந்து பார்ப்பவளின் விழிகளையே சில கணங்கள் ஊடுருவி பார்த்தவன், ”டிவோர்ஸ்-அ தவிர..” என்றான் அவள் மனதை படித்தவன் போல்.

அவன் அவ்வாறு சொன்னது அவளுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்க,

“ஏன் டிவோர்ஸ் தரமாட்டீங்க..? அதான் உங்க பிரச்சனை எல்லாமே முடிஞ்சிடுச்சே.. அப்புறம் என்ன..?” என்று ஆத்திரம் அடைக்க அடிதொண்டையில் கத்தியவளுக்கு அதுவரையும் இழுத்துபிடித்திருந்த பொறுமையெல்லாம் காற்றோடு பறந்துதான் போனது.

“உங்க பேர்-அ காப்பாத்திக்கதன சுயநினைவில்லாம இருந்த என் கழுத்துல இத கட்டுனீங்க..?” என்றவள் கழுத்திலிருந்த மங்கள நாணை தூக்கிபிடித்து கேட்க அவனிடமோ மௌனம் தான்.

“ச்சீ.. என்ன மனுஷ ஜென்மம் நீங்க.. உங்க சுயநலத்துக்காக யார் அவமானபட்டாலும் சரி.. யார் குடும்பம் அழிஞ்சி போனாலும் சரி.. அத பத்தியெல்லாம் உங்களுக்கு கவலையே இல்லல்ல.. ஏன்னா உங்களுக்கு உங்க பிராண்ட் நேம் தன முக்கியம். அந்த நேம்-அ காப்பாத்துறதுக்காக யார்-அ வேணும்னாலும் காவு கொடுப்பீங்க.. இதோ என்ன கொடுத்தமாதிரி.” என்று சொல்லும் போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென உதிர்ந்தது.

அப்போதும் அவனிடம் மௌனம் தான். இதையெல்லாம் அவனும் எதிர்பார்த்துதானே அவள் கழுத்தில் தாலி-யை கட்டினான். அத்தோடு தான் செய்தது தவறே இல்லை என்று அவன் ஒன்றும் அவளிடம் வாதிடவில்லையே.

தன் மீதும் தவறு இருப்பதால்தான் அவன் இப்போது அமைதியாக இருப்பது.

அத்தோடு அனைத்தையும் மனதிற்குள்ளே வைத்திருக்காமல் கொட்டி தீர்க்கட்டும் என்றுதான் அவன் அமைதி காப்பது கூட.

“என் கழுத்துல இத கட்டுறதுக்கு முன்னாடி என் மனசுல என்ன இருந்திருக்கும்.. என் ஆசை என்னவா இருக்கும்-னு கொஞ்சமாவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா..? உங்க சுய நலத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் என்னையும் என் குடும்பத்தையும் இப்படி அழிச்சிட்டீங்களே..” என்று மீண்டும் மீண்டும் என்னவோ அவன் தன் சுயநலத்திற்காக மட்டும்தான் அவள் கழுத்தில் தாலி கட்டினான் என்பது போல் அவள் பேசிக்கொண்டே போக,

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனோ “வில் யூ ஷட் அப் இதழ்..” என்று சொல்லும் போதே அவன் குரலிலும் கோவம் தெறித்தது.

“ஏன் உண்மை-அ சொன்னா கோவம் வருதா..?” என்று அவளும் பதிலுக்கு கேட்டு விட,

“ஏய்… எது உண்மை.. ? எதுடி உண்மை..?” என்று கேட்டவாறே அவன் அவளை நெருங்கியிருக்க அவன் கோவத்தால் அவள் தான் திடுக்குற்று போனாள்.

அவள் விழிகள் முழுவதும் ஒருவித பதற்றம் நிறைந்திருக்க, “ஷிட்” என்றவாறே முன்னுச்சியை கோதிவிட்டு கொண்டவனுக்கு தன்னை சமன் படுத்தவே சிலகணங்கள் பிடித்தன.

ஓரளவு அவன் கோவம் கட்டுக்குள் வந்த பிறகே, அவளின் இரு தோள்களையும் பற்றி “இங்க பாரு இதழ்.. நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ரீசன் நீ நினைக்கிறமாதிரி எதுவும் இல்ல“ என்று அவள் விழிகளை பார்த்து ஆணித்தனமாக சொல்ல,

அவன் இருவிழிகளையும் மாறி மாறி பார்த்தவளின் விழிகளோ, ‘அப்போ வேற என்ன ரீசன்..?’ என்பது போல் அவனை பார்த்தது.

அவள் விழிகளை பார்த்தவாறே ஒரு ஆழ்ந்த பெரு மூச்சி எடுத்து கொண்டவன், “எனக்கு உன்ன புடிச்சியிருந்தது.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று முதன் முறையாக தன் மனதிலிருந்த காதலை அவளிடம் சொல்லியிருந்தான் ரிஷப் நந்தன்.

அவன் அவ்வாறு கூறியதை கேட்டவளின் இதழ்களோ நம்பமாட்டாமல் கசப்பான புன்னகையை உதிர்க்க, அது இன்னும் அவனுக்கு கஷ்டமாகித்தான் போனது.

“டிரஸ்ட் மீ இதழ்” என்று மீண்டும் நம்பிக்கை மிகுந்த குரலில் அவன்  சொல்ல, அவன் கையை விலக்கிவிட்டு தள்ளி நின்றுகொண்டவள்,

“இதென்ன புது கதை-ஆ இருக்கு. சார்-க்குதான் பொண்ணுங்கனாலே பிடிக்காதே… பொண்ணுங்க மேல இண்ட்ரஸ்டும் வராதே” என்றாள் அன்று அவன் சொன்ன வார்த்தைகளையே அவனிடம்.

“ஆமா… இதழ் சொன்னதான்… ஆக்ச்சுவலி எனக்கும் ஆரம்பத்துல உன் மேல இன்டரஸ்ட் இல்லதான். ஆனா என்ன மியூசிக் தாதா-ன்னு  தலையில தூக்கி வச்சி கொண்டாடுறவங்களுக்கு மத்தியல என்ன ஒரு நார்மல் பர்சன்-ஆ பார்த்த முதல் ஆள் நீ மட்டும்தான் இதழ். உன்னோட அந்த ஆட்டிடியூட் எனக்கு ரொம்ப புடிச்சியிருந்தது. அப்புறம் என் மேல உரிமையா கோவப்படுற உன் கோவம், உன் திமிர், உன் சிரிப்பு எல்லாமே எனக்கு புடிச்சியிருந்தது. காதலிச்சேன்.. உன்ன கட்டிக்கணும்-னு ஆசைப்பட்டேன்” என்று காதலோடு சொன்னவனை அறுவெறுப்போடு பார்த்தவள்,

“இந்த கதையெல்லாம் நம்பற அளவுக்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை” என்றாள் நீ சொல்லும் எதையும் நான் நம்ப மாட்டேன் என்பது போல்.

அவளை எப்படி நம்பவைப்பது என்று தெரியாமல் அவளையே பார்த்திருந்தவனுக்கு தன் கைபேசியின் நினனைவு வர,

“இங்க பாரு இதழ்..” என்று தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பர்சனல் போனை  எடுத்து காட்டியவன்,

“இந்த போன் தொலைஞ்சதா பொய் சொல்லிதான் நான் உன்ன என் பிளாட்டுக்கும், ஸ்டுடியோவுக்கும் வரவச்சேன்.. ஏன்னா நினைச்ச நேரத்துக்கு என்னால உன்ன பார்க்க முடியாது. அதனால தான் நான் இருக்கற இடத்துக்கு உன்ன வரவச்சேன்” என்றவனின் வார்த்தைகளை கேட்டவள் உள்ளுக்குள் ஆடிபோய் விட்டிருந்தாள்.

எந்த அளவிற்கு தான் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்று நினைத்தவளுக்கு பேச்சே வரவில்லை. ஆனால் அவள் விழிகளிலிருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

அவன் மட்டும் இப்படியெல்லாம் பொய் சொல்லி அவளை பிளாட்டிற்கு வரவைக்கவில்லையென்றால் அவளுக்கும் அவள் குடும்பத்தார்க்கும் ஏன் இன்று இந்த நிலை வரப்போகிறது.

தன் அனுமதியில்லாமல் தன்னை அவன் திருமணம் செய்தது, காதலிப்பதாக சொன்னது.. அதையெல்லாம் விட, அவன் தன்னை மிரட்டி பொய்சொல்லி வரவழைத்தான் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

விழிகள் நிறைய கோவத்தோடு அவனை பார்த்தவள்,

“பொய் சொல்லி என் வாழ்க்கை-அ நாசம் பண்ண உன்ன பார்க்கறது கூட எனக்கு பாவம் தான். இனி நீ இருக்கற இடத்துல ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன்.. நான் என் வீட்டுக்கு போறேன்.” என்று அழுகையும் ஆத்திரமும் அடைக்க சொன்னவள், அங்கிருந்து நகரவும் செய்ய,

செல்லும் அவளை தடுக்கும் விதமாக, “இதழ் நில்லு” என்றவாறே, சென்றுகொண்டிருந்தவளின் தோளை பற்றி அவன் இழுத்த வேகத்தில் எதிர்பாராதவிதமாக அவளின் சுடிதாரின் பின்பக்கம் கிழிந்திருந்தது.

சற்றும் எதிர்பாராத நிகழ்வுதான் இருவருக்குமே.

எங்கே ஆடை கிழிந்ததில் தன் மேனி தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் முதுகை பிடித்தபடியே சட்டென்று அவள் திரும்பி நின்று கொள்ள,

அவனோ அவள் ஆடையை கிழித்த தன் வெற்றுகரத்தை பார்த்தான்.

நிச்சயம் அவன் வேண்டுமென்று இதை செய்யவில்லை.

இருந்தும் அவனுக்குள் ஒருவித குற்ற உணர்வு.. எங்கே அவள் தன்னை தவறாக நினைத்துவிடுவாளோ.. மொத்தமாக வெறுத்து விடுவாளோ.. என்று.

“ஐம்… ஐம்… சாரி இதழ்.. நான் வேணும்னு..” என்றவன் தயங்கி தயங்கி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்திருந்தாள் இதழினி.

அவளின் தன்மானம் அவன் யார் என்று கூட பார்க்காமல் அவனை அறைய வைத்திருந்தது. அவளை பொறுத்தமட்டில் இப்போதும் தவறு அவன் மீதுதான்.

எதிர்பாராமல் அவள் அறைந்த அறையில் அவனோ கண்களை மூடியிருந்தான். கண்களை திறக்க முடியாத அளவிற்கு அவள் அறைந்த அறையில் கன்னம் மட்டும் அல்ல அவனுக்கு இப்போது முகமே வலித்தது.

எத்தனையோ முறை அவளிடம் அத்துமீறும் போதெல்லாம் அவளிடம் மன்னிப்பு கேட்காதவன், இன்று முதன்முறையாக தன் செயலுக்கு மனம் வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்டிருந்தான். ஆனால் அதையும் அவள் புறக்கணித்திருந்தாள்.

அந்த புறக்கணிப்பு அவளுக்குள் ஒருவித சந்தோஷத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதுநாள் வரை அவனால் அவள் அனுபவித்த அத்தனை கஷ்டங்களுக்கும் ஒட்டுமொத்தமாக அவனை பழித்தீர்த்து விட்டது போல் இருந்தது அவளுக்கு.

அவன் இமைகளை திறப்பதற்கே சில கணங்கள் பிடித்திருக்க, அவளும் அவனையேதான் பார்த்துகொண்டிருந்தாள்.

அவள் அறைந்ததில் எரிந்துகொண்டிருந்த தன் கன்னத்தை தடவிகொடுத்தபடியே, இப்போது அவன் அவளை எரிப்பது போல் பார்க்க, அவளும் சளைக்காமல் அவனை எரிப்பது போல் பார்த்தாள்.

சில கணங்கள் இப்படியே நீள, பின் என்ன நினைத்தானோ அவள் சற்றும் எதிர்பார்க்காவண்ணம் சட்டென்று அவளை கட்டியணைத்தவன் அத்தோடு நில்லாமல் அவள் எதிர்ப்பையும் மீறி அவள் முகம் முழுக்க முத்த தடங்களை பதித்தவன், அவள் இதழ்களிலும் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டுதான் அவளை விட்டு விலகினான்.

அவனின் திடீர் முத்த தாக்குதலால் பெண்ணவள் தான் அதிகம் நிலைகுலைந்து போனாள். சற்று முன் அவளிடமிருந்த தைரியமெல்லாம் இப்போது பயமாக உருமாறியிருக்க, அவளின் கட்டுப்பாட்டையும் மீறிக்கொண்டு அவள் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்திருந்தன.

அவன் முகத்தை பார்க்க கூட முடியாமல் தலைகுனிந்தபடியே அவள் நின்றிருக்க,

“இப்பதான் நீ கொடுத்த தண்டனைக்கு என் தப்பு சரியா இருக்கு.” என்றவன், அங்கிருந்து வெளியேறியும் இருக்க,

அவளோ அந்த அறைக்குள்ளே இருந்த இன்னொரு அறைக்குள் சென்று தன்னை சிறைவைத்திருந்தாள்.

அங்கிருந்து வெளியேறியவன் நேராக பால்கனி பகுதிக்குதான் சென்றான்.

அவளிடம் அப்படி ஏன் நடந்துகொண்டாய் என்று கேட்பது போல் சில்லென்ற காற்று அவன் முகத்தில் அறைந்து செல்ல, அவள் அறைந்த கன்னத்தை தொட்டுபார்த்தான் ரிஷப்.

இன்னமுமே கன்னத்தில் எரிச்சல் அடங்கவில்லை.

சற்றுமுன் நடந்த நிகழ்வை நினைத்து நெற்றிபொட்டை தேய்த்துகொண்டவனுக்கு உள்ளுக்குள் அப்படியொரு வலி அவளை கஷ்டப்படுத்திவிட்டு வந்திருப்பதை நினைத்து.

அவனும் வேண்டுமென்று அவளிடம் அப்படி நடந்து கொள்ளவில்லையே.  ஏன் காதலிக்கும் போது எத்தனையோ முறை அவளுடன் நெருக்கத்தில் இருக்கும் போதுகூட எல்லைமீறி விட கூடாது என்பதில் கவனமாக இருந்தவன் தானே அவன்.

அப்பட்டவனை அவன் கோவம் இன்று அவளிடம் எல்லை மீற வைத்திருந்தது.

“ஷிட்” என்று முன்னுச்சியை கோதிவிட்டு கொண்டவன் மனதை சாந்தபடுத்தும் விதமாக அடுத்து சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பித்தான்.

அவன் அப்படி புகைத்துகொண்டிருக்கும் போதுதான், அவன் கதவை தட்டிய கவின், “டார்லிங்” என்றவாறே அவன் அறைக்குள்ளும் பிரவேசித்திருந்தான்.

9 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels